• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 15

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 15


7 மணி நெருங்கியிருக்க ஆனந்த் அந்த மண்டபத்தில் நுழைந்தான்.


மெல்லிய இசை ஒரு புறம் நடந்து ரசிக்க வைக்க, மறுபுறம் இருந்த அறையில் விருந்து நடந்து கொண்டிருந்தது.


மத்தியில் அழகான லெஹன்காவில் ஜொலித்து கொண்டிருந்தாள் லாவண்யா. அதற்கு ஏற்றார் போல விக்ரம் கோட்சூட்டில் அவனுடைய தேவதை கைப்பற்றிய சந்தோசத்தில் நின்றிருந்தான்.


ஆங்காங்கே சேரில் சிலர் அமர்ந்து இருக்க ஆனந்த் இடது பக்கம் நடு வரிசையில் ஒரு ஓரமாக அமர்ந்தான்.


அவனை முதலிலேயே பார்த்த விக்ரம் அவனை பார்த்து சிரித்து கை அசைக்க, அவனோ ஒரு முறைப்புடன் அமர்ந்து கொண்டான்.


விக்ரம் ஓரளவு யூகித்திருந்தான். ஆனந்த் தன் அழைப்பை மறுத்த போதிலே தெரிந்து கொண்டான். அவனுக்கு இதில் விருப்பம் இல்லையென. பேசி புரிய வைத்து விடலாம் என அமைதிகாத்தான்.


அப்போது ரிது, சுகன்யா மற்றும் ரகு உள்ளே வர ஆனந்த் பார்வை முழுதும் ரிதுவை சுற்றியே இருக்க அவனை சுற்றி இரண்டு கண்கள் இருந்தது.


தனது குடும்பம் மேடையில் ஏறுவதை கண்டவன் தானும் அவர்களுடன் சென்று நின்று கொண்டான்.


ஆனால் ஆனந்த்தை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. எல்லாம் அவன் செய்ததின் விளைவு.


ஆனால் ஆனந்த் இது எதையும் கண்டுகொள்ளவில்லை.


'இவள் விக்ரமை எப்படி எதிர்கொள்வாள்? விக்ரம் இதை எப்படி எடுத்து கொள்வான்?' என்றே இருந்தது அவனுக்கு.


தனக்கு மட்டும் தான் இப்படி இதயம் வேகமா துடிக்குதோ! அவளை பார்த்தால் ஏதோ சந்தோஷத்தில் இருக்கிற மாதிரி தெரியுதே? என அவன் அவளை பார்த்து கொண்டிருக்க, அவள் கன்னத்தில் இவனின் கைரேகை தெரிந்தது.


தன்னை நினைத்து அவனே வெட்கினான்.


வீட்டில் இருந்து கிளம்பியது முதல் இப்போது வரை அவன் இவளை தான் நினைத்து கொண்டிருக்கிறான்.


'எவ்வளவு பெரிய தவறு! எப்படி ஒரு பெண்ணை கை நீட்டும் அளவு முரடன் ஆனேன்' என எண்ணி எண்ணி அவனை அவனே வெறுத்தான்.


கவனமாக சுகன்யா கொடுத்த நகைகளை தவிர்த்துவிட்டே வந்திருந்தாள் ரிது.


அவள் சொல்லாமல் போனாலும் அது உறுத்தலாகவே இருந்தது சுகன்யாவிற்கு.


மேடையில் ஏறிய ஆனந்த் தன் தாய் அருகில் நின்று கொண்டான். அவர் இவன் நிற்பது தெரிந்தும் கண்டு கொள்ளவே இல்லை.


அனைவரும் வாழ்த்து சொல்ல ஆனந்த் ஏதும் பேசாமல் இறங்க சென்றவன் கை பிடித்து தடுத்த விக்ரம்,


"போயிடாத டா. பேசணும் ப்ளீஸ்" என்றான். ஏதும் சொல்லாமல் ஆனந்த் இறங்கிவிட்டான்.


அவனுக்கு எண்ணம் எல்லாம், 'ரிது விக்ரமிற்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததையும், சந்தோசத்துடன் அதை ஏற்று கொண்ட விக்ரமுமே'.


ரிது விக்ரமுடன் பேசியது ஆனந்த் காதுகளில் விழவில்லை. ஆனால் இருவர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த சந்தோசம்.


மேலும் சிறிது பேசிவிட்டே அவள் கீழே சென்றாள். என்ன நடக்கிறது என்ற பாவனையில் ஆனந்த் குழப்பதுடன் நடக்க யார் மேலோ மோதி நின்றான்.


ரிதுவிற்கு உள்ளே நுழையும் வரை அது விக்ரம் வீட்டு விழா என்றே தோன்றவில்லை.


வெளியில் "விக்ரம் வெட்ஸ் லாவண்யா" பார்த்தும் ஏதோ ஒரு விக்ரம் என்று நினைத்து தான் உள்ளே சென்றாள்.


அங்கே முதலில் அவள் பார்த்தது முகம் கொள்ளா புன்னகையுடன் மேடையில் நின்ற விக்ரமை தான்.


ஆனந்த அதிர்ச்சி தான் அவளுக்கு. பின் பார்வையால் அவள் ஜோதியை தேட, அவளோ அங்கு ஒருவனிடம் மாட்டிக் கொண்டு 'எப்போதடா தப்பிக்கலாம்' என அவஸ்தையுடன் நின்றிருந்தாள்.


அவளை காணாமல் ஜோதி அம்மாவை தேட அவரும் கல்யாண பிஸியில் இருந்ததால் கண்ணில் படவில்லை.


சரி விக்ரம் அண்ணாவிடமே பேசி விடலாம் என அவள்தான் சுகன்யா ரகுவை மேடைக்கு அழைத்து சென்றாள்.


ஆனந்த் அவர்களுடன் வந்து நின்றதை அவள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.


விக்ரமிடம் சென்று கை கொடுத்த பின் தான் அவன் அவளை பார்த்ததே. விக்ரமும் எதிர்பார்க்கவில்லை.


அவள் வீட்டிற்கு திருமணம் மற்றும் ரிசெப்சன் அழைக்க சென்றபோது அங்கு யாரும் இல்லாமல் போக வேறு வழி இன்றி பக்கத்து வீட்டில் தான் சொல்லி விட்டு வந்தான்.


இன்று அவளை பார்த்ததும் கேள்விகளை அடுக்க,


"அண்ணா நான் இங்க தான் இருப்பேன். என்கிட்ட அப்புறம் பேசலாம். நீங்க வந்தவங்களை கவனிங்க" என்று சொல்லி இறங்கிவிட்டாள்.


விக்ரம் லாவண்யா இருவரையும் பார்த்ததும் புரிந்தது அவர்களின் மன ஒற்றுமை.


மனநிறைவுடன் இறங்கியவள் ஜோதியை தேட கண்களில்பட்டாள் அவள்.


ஆனந்த் தன் மேல் இடித்தவனை "சாரி! சாரி!" என்றவாறு பார்க்க, கேலியுடன் சிரித்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த்தை அந்த புதியவன்.


"டேய் சுரேஷ்! நீ எப்படா வந்த யூஎஸ்லேர்ந்து? ஒரு போன் கூட செய்யாம? உனக்கு எப்படி இன்னிக்கு ரிசெப்சன் தெரியும்?" என அனைத்தையும் மறந்து கேள்விகளால் தாக்க,


"ரிலாக்ஸ் மச்சி! பேச விடு. அடுத்த ட்ரெயின புடிக்க போற மாதிரி போயிட்டே இருக்க?" என்றவன் "வந்து மூணு நாள் ஆகுது" என்றான்.


"மூணு நாளா? தென் ஏன்டா வீட்டுக்கு வரல? நீ அவனுக்கு மட்டும் தான் ப்ரெண்டா? என்னை பார்த்தா எப்படி இருக்கு?" என மீண்டும் ஆனந்த் ஆரம்பிக்க,


"டேய் இதெல்லாம் அநியாயம் டா. இவளோ பேசுறவன் உன் கையில் இருக்கு பார்த்தியா மொபைல் மொபைல்னு ஒன்னு அதை ஆபரேட் பண்ண தெரியணும். தெரியலையா தெரிஞ்சவங்ககிட்ட கேட்கணும். மொபைல் ரிங் ஆகும் போதெல்லாம் அதையே பார்த்துட்டு இருந்தா அது எப்படி நான் வர்ற விஷயத்த உனக்கு சொல்லும்?" என அவன் நீளமாக கூறவும்,


யார் அழைப்பையும் பார்க்காமல் எடுக்காமல் இருந்த தன் மேல் இப்போது வெறுப்பு தான் கூடியது.


அவன் மும்மரமாக எண்ணிக் கொண்டிருக்க, "டேய் இப்பவாச்சும் வந்தவன கவனி டா" என சொல்லவும் சிரித்து கொண்டே இருவரும் தனியாக அமர்ந்தனர்.


மேடையில் இருந்து பார்த்தவனுக்கோ, "ஆஹா, ஒன்னு கூட்டிட்டாய்ங்கய்யா ஒன்னு கூட்டிட்டாங்க!" என்றே தோன்றியது.


'ஐயோ! அவனுக்கு என் லவ் மேட்டர் தெரியாது. இவனுக்கு என் கல்யாண மேட்டர் தெரியாது. இவனுங்க சேர்ந்தால் இந்த இடத்துலயே டைவர்ஸ் வாங்கி தந்தாலும் தந்திடுவானுங்களே' என்று நினைத்தவனால் மேடையில் இருந்து நகர மட்டும் முடியவில்லை.


மூவரும் ஒரே கல்லூரியில் படித்து இன்றுவரை நட்பை தொடர்கின்றனர்.


சுரேஷ் கல்லூரி முடித்த கையோடு U.S சென்றவன் இப்போது தான் வந்திருக்கிறான்.


கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஒன்பது மணிக்கு பின் லாவண்யா அப்பா, அம்மா, உறவினர் என ஐவரும் விக்ரம் குடும்பத்தினரும் இருந்தனர்.


ரிதுவை ஜோதி கேட்டுக் கொன்டதற்காக அவளை மட்டும் விட்டு சென்றனர் ஆனந்த் குடும்பத்தினர். அவளுக்கு கார் அனுப்புவதாக சொல்லியும் தான் வந்து விடுவதாக சொல்லி விட்டாள்.


ஆனந்த்தை சுரேஷ் வீட்டிற்கு அழைக்க, அவன் விக்ரம் காத்திருக்க சொன்னதாக சொன்னதோடு ஆனந்த் கேட்டுக் கொண்டதற்காக சுரேஷும் அமர்ந்து கம்பெனி கொடுத்தான்.


விக்ரம் திருமணம் குறித்த தகவல்களை ஜோதி ரிதுவிற்கு தர, விக்ரம் மனமாற்றம் அவளுக்கும் சந்தோசத்தையே கொடுத்தது.


அவளும் அப்பாவின் உடல்நலம் அதனால் திடிர் திருமணம் என்று அனைத்தையும் ஜோதியிடம் கூறினாள். ஆனந்த் செய்கை தவிர்த்து.


ஒருவழியாக அனைத்தையும் முடித்து விக்ரம் ஆனந்த் அருகில் வந்து அமர, ஆனந்த் முகத்தை திருப்பினான்.


விக்ரம் பற்றி நடந்த அனைத்தையும் ஆனந்த் சொல்ல சொல்ல சுரேஷ் கேட்டுக்கொன்டவன் அமைதியாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.


சுரேஷிற்கு தெரியாது என நினைத்து தான் ஆனந்த் கூறியது. ஆனால் இந்த திருமணம் நடக்கவே சுரேஷ் தான் காரணம் என்பது தன்னவளையும் லாவண்யாவையும் தவிர இன்னும் யாருக்கும் தெரியாதே!


வந்து ஐந்து நிமிடமாய் ஆன பின்பும் ஆனந்த் திரும்பி பார்க்காமல் இருக்க கடுப்படைந்தான் விக்ரம்.


சுரேஷிடம் திரும்பி, "டேய் இவன் என்னவோ என் லவ்வர் மாதிரியும் இவனை கழட்டிவிட்டு நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ண மாதிரியும் ரொம்ப பிகு பண்றான்டா இவன்" என அவன் தோணியில் பேச,


அப்போது தான் ஆனந்த் ஒன்றை உணர்ந்தான்! விக்ரம் பழைய விக்ரமாய் மாறியிருந்ததை.


அவன் ஆச்சர்யமாக விக்ரமை திரும்பி பார்க்க விக்ரமோ சுரேஷிடம் அவன் பார்வையை காட்டி, "பாரு டா கான்போர்ம் பன்றான்" என கூற சுரேஷ் வாய் மூடி சிரித்தவன் பின் சத்தமாகவே சிரித்தான்.


"அடேய் போட்டு கொடுக்காதடா மித்ர துரோகி" என அவன் பதுங்க பார்க்க, ஆனந்த் முகத்திலும் சிறு புன்னகை.


அதை பார்த்து தைரியம் வந்தவனாக, "ஸ்ஸப்பா சாமி மலை ஏறிடுச்சி" என்றான்.


மீண்டும் ஆனந்த் முறைக்க, "ஏன்டா கெஸ்ட் ரோலுக்கு (guest role) வந்தா மாதிரி ஆ'னு பார்த்துட்டு இருக்க? ஏதாச்சும் பேசேன்!" என ஆனந்தை திசை திருப்ப எண்ணி சுரேஷை வம்பிழுக்க பார்க்க, அதில் இருவரும் நன்றாகவே சிரித்தனர்.


ஒரு வழியாக பேசியே இருவரையும் கரெக்ட் செய்த விக்ரம் "சரி நான் கிளம்புறேன்" என எழ, அவனை உட்கார சொல்லி சுரேஷ் கூறினான்.


விக்ரம் திருமணம் முடிந்து இரண்டு வாரம் முடிந்து இருந்தாலும் ஜாதகம் தோஷம் என இருவருக்கும் இடையில் தடை போட்டு விட்டிருந்தார் விக்ரம் அன்னை.


இன்று தான் விக்ரமின் முதலிரவு ஏற்பாடு என நாள் நேரம் குறிக்கப்பட்டிருந்தது.


"டேய் லாவி வெயிட் பண்ணுவா டா" என்கவும் அங்கிருந்த பெண்கள் கூட்டணியை காட்டினான் சுரேஷ்.


அதில் லாவண்யா மற்றும் ஜோதி உடன் ரிதுவும் இருக்க இப்போது மறுபடி முகத்தில் சோகத்தை கொண்டு வந்தான் ஆனந்த்.


"நேரங்காலம் தெரியாம இவ வேற படுத்துறாளே! இப்ப என்ன அங்க குரூப் டிஸ்கஸன் வேண்டி கிடக்கு" என விக்ரம் முணுமுணுத்து கொண்டே அமர சுரேஷ் சிரித்தான்.


லெஹன்காவில் சிரித்து பேசிக் கொண்டிருந்த ஜோதி கண்ணில்படவும் காதலாய் சுரேஷ் அவளை கண்களால் படம் எடுத்து கொண்டிருந்தான்.


தற்செயலாய் அவன் திரும்ப அருகில் ரிதுவை பார்த்ததும் ஞாபகம் வந்தவனாய் திரும்பி கிளம்புகிறேன் என்ற விக்ரமை கைகாட்டி அமர வைத்தான்.


ஆனந்த் மண்டபம் வந்ததில் இருந்து சுரேஷ் ஆனந்த்தை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.


ரிதுவை அவன் பார்த்த பார்வையில் காதல், கோபம், சோகம், பதட்டம், என அனைத்தையும் கண்டவனுக்கு யார் அந்த பெண் என தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவல்.


சுரேஷ் சிரிப்பை பார்த்த விக்ரம், "நேரம் டா! நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை வரும் அப்ப பாத்துக்கிறேன்" எனவும் ஆனந்த் சுரேஷ் இருவரும் சிரித்து விட தலையில் அடித்து கொண்டான் விக்ரம்.


மீண்டும் சுரேஷ் பெண்கள் கூட்டணியை நோட்டம் விட அதை பார்த்த விக்ரம்,


"வகுந்து போடுவேன் வகுந்து!" என்றான்.


அவனை சிரிப்போடு பார்த்த சுரேஷ், "லூசு டா நீ ".


"ஆமா டா! லூசா தான் உங்களுக்கு தெரிவேன். இன்னேரம் நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்" என அவன் மறுபடி புலம்ப ஆரம்பிக்க,


"ஐயோ போதும் டா அறுக்காதே" என்றான் சுரேஷ்.


அப்போது மீண்டும் சிரித்து கொண்டே ஆனந்த் தற்செயலாக திரும்ப, "ரிது லாவண்யாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்".


மீண்டும் அவனுக்கு குழப்பம் வர, சிரிப்பை தொலைத்தவன் "ப்ச்" என்று கண்ணை மூடி டேபிள் மேல் சாய்ந்தான்.


இதை விக்ரம் கவனிக்கா விட்டாலும், சுரேஷ் மீண்டும் கவனித்துவிட்டான்.


காதலா என்று எல்லாம் தெரியவில்லை. ஆனாலும் அந்த பெண்ணால் நண்பன் நடவடிக்கையில் மாற்றத்தை கண்டவன்,


"யாருடா அந்த பொண்ணு?" என ஆனந்த்தை பார்த்து கேட்க,


அதை கவனிக்காமல் ஆனந்த் யாரையோ கேட்கிறான் என தலை கவிழ்ந்தபடியே இருக்க,


இந்த கேள்வி ஆனந்த்திற்கு என அறியாத விக்ரம்,


"அது என் சிஸ்டர் டா. உனக்கு தான் தெரியுமே?" என்றான்.


'என் கண்மணியையா கேட்டேன்' என சுரேஷ் கூறினான். அட வாய்க்குள்ள தாங்க. வெளில சொன்னா விக்ரம் வாயில விரலை விட்டு வெண்ணை எடுத்துடுவானே?


"ப்ச் அது தெரியும் டா" எனவும்,


"என்ன? 'அதுவா'" என விக்ரம் கொந்தளிக்க,


"ஸ்ஷப்பா! முடியல டா" என முறைத்த சுரேஷ்,


"அதான் டா. அந்த க்ரீன் சாரி" என்றதும் தான் தாமதம் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான் ஆனந்த்.


பின்னே தான் கேட்க முடியாததை ஒரு வழியாக கேட்டே விட்டானே அவன்!.


க்ரீன் சாரி என்றதும் ஆனந்த் மூளைக்குள் பல்ப் எரிய வேகமாக எழுந்ததை கண்டு புன்னகைத்து கொண்டான் சுரேஷ்.


கண்டிப்பா லவ்வே தான் என நினைத்து சுரேஷ் விக்ரம் என்ன சொல்ல போகிறான் என பார்க்க, ஆனந்த் இதயம் துடித்த துடிப்பில் எங்கே அது வெளியே வந்து விடுமோ என்று பயந்து போனான்.


இதெல்லாம் நடந்தது ஒரு நொடி தான் அதற்குள் விக்ரம் பேச ஆரம்பித்திருந்தான்.


"அட நம்ம ரிது!" என்றானே பார்க்கலாம். அவ்வளவு தான் மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏற போக அதற்குள் அடுத்த ஆட்டம்பாம்மை போட்டான் விக்ரம்.


"அதுவும் என்னோட சிஸ்டர் தான் டா. பேரு ரிது. ஜோதி கூட படிச்ச பொண்ணு. எனக்கு நீங்க எப்படியோ அதே மாதிரி என் பேமிலிக்கும் அவ ரொம்ப க்ளோஸ்" என்றது தான் தாமதம் விக்ரம் சட்டையை கொத்தாக பிடித்திருந்தான் ஆனந்த்.


காதல் தொடரும்..
 

Rajam

Well-known member
Member
ஆனந்த் அவசரகாரன்.
விக்ரம் சொல்லவரதை முழுச்
கேட்காம முடிவு எடுக்கறான்.
ரிதுவ சிஸ்டர் னு சொன்னத நம்பலை போல.
 

ரித்தி

Active member
Member
ஆனந்த் அவசரகாரன்.
விக்ரம் சொல்லவரதை முழுச்
கேட்காம முடிவு எடுக்கறான்.
ரிதுவ சிஸ்டர் னு சொன்னத நம்பலை போல.
நம்பி தான் ஆகணும் sis
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom