• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 13

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 13


விக்ரம் லாவண்யா திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் உடனே கல்யாண ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டார் சந்திரன்.


மகன் எதனால் சம்மதம் சொன்னான் என்று தெரியாத விக்ரம் தாய் எங்கே எப்போது மனம் மாறுவானோ என்ற பயத்தில் அடுத்த பத்து நாட்களுக்குள் திருமணத்தை முடிவு செய்தனர்.


திருமண வேலைகளுக்கு நடுவில் விக்ரம் ஒருமுறை ஆனந்த் வீட்டிற்கு சென்றிருக்க அங்கே சுகன்யா மட்டுமே இருந்தார்.


அவர் மூலம் ரகுவின் நண்பர்க்கு உடல்நலம் சரி இல்லை என்றும் ஆனந்த் அங்கே இருக்க வேண்டிய கட்டாயம் என்றும் அவர் கூறியிருக்க, அதனால் தான் பிஸியில் தன் போனை அட்டன் செய்யவில்லை போல என நினைத்து கொண்டான் விக்ரம்.


அப்போது ஆனந்த் திருமணம் முடிந்திருந்தது ஆனாலும் தக்க சமயத்தில் முறைப்படி அதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று சுகன்யா அதை விக்ரமிடம் மறைத்துவிட்டார்.


அவர் ரகுவின் நண்பர் என்று கூறியதால் ரிதுவின் அப்பா என்று விக்ரமிற்கு தெரியாமல் போனது.


மேலும் அப்பாவின் உடல்நிலை, தன் திடிர் திருமணம் இதையெல்லாம் நினைத்து கொண்டிருந்த ரிது, ஜோதியிடம் பேச மறந்திருந்தாள்.


அண்ணனின் திருமணத்திற்கு ஜோதி ரிதுவை அழைக்க வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டி இருந்தது.


ஆனந்த் ஆபீஸ்ல் வேலை செய்வது தெரிந்தபடியால் அங்கே அவள் தொடர்பு கொள்ள ரிது பர்ணா ஆபீஸ் வந்து பத்து நாட்களுக்கு மேலாக ஆகிறது என்ற பதில் மட்டுமே கிடைத்தது.


தோழி எங்கு சென்றாள் என்று தெரியாமல் விக்ரமிடமும் புலம்பி இருந்தாள் ஜோதி.


திருமணத்திற்கு முன் ரகுவை மொபைலில் அழைத்து கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் எளிமையாக நடத்துவதால் பத்திரிக்கை கூட அச்சடிக்கவில்லை என்றும் கூறினான் விக்ரம்.


மேலும் ஆனந்த் போனை எடுக்காததால் அவனிடம் கூறி கண்டிப்பாக வர சொல்ல வேண்டும் என்றும் கூறி வைத்தான்.


ஏற்கனவே ரிதுவுடன் தன் திருமணத்தை விக்ரம் எப்படி எடுத்து கொள்வான் என ஆனந்த் அவனிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டிருக்க, அப்பா விக்ரம் திருமணம் பற்றி கூறியதும் முதலில் குழம்பியவன் பின் கொதித்து போனான்.


எப்படி இது சாத்தியம்? ஒரு பெண்ணை காதலித்து அவள் அதை மறுத்து காதல் தோல்வியில் சாகவும் துணிந்தவன் ஒரு மாதத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளான். இதற்கு அர்த்தம் என்ன? இவ்வளவு தான் அவன் காதலா?


அதற்கு பின் அவன் யோசித்தது அதைவிட மோசம். ரிது! இவள் எந்த மாதிரியான பெண்? விக்ரமை காதலித்தாள். பின் யாரோ பணக்காரனுக்காக அவனை கைவிட்டாள். இப்போது அப்பாவிற்காக என்னை திருமணம் செய்திருக்கிறாள்.


இவளுக்காக நான் ஏன் என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்தேன்? அவளை மணந்தால் போதும் என அப்போது தாலி கட்டியவன், இப்போது சிறிய விஷயத்தில் அனைத்தையும் தவறாக யோசிக்க ஆரம்பித்தான்.


ரகு ராஜ்குமாரிடம் இனி நீயும் என் வீட்டில் தான் இருக்க போகிறாய். இனி அது நம் வீடு என்றார். அதற்கு அறவே மறுத்தார் ராஜ்குமார்.


எவ்வளவு பேசியும் அவர் பிடி கொடுக்காமல் இருக்க சுகன்யா, "சரி அண்ணா நீங்க அங்க வந்து இருக்க உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும். அதனால் நீங்கள் சொல்றது சரி தான். ஆனால் ரிதுவை நினைத்து பார்த்திங்களா?. அவள் எப்படி உங்களை விட்டு இப்போது இருக்கும் நிலையில் அங்க வந்து சந்தோசமா இருப்பது? இல்லை புதுசா கல்யாணம் ஆனவங்களை எப்படி பிரிப்பது?" என்றார்.


இதை எப்படி மறந்தேன் என ராஜ்குமார் யோசிக்க, ரகுவும் சுகன்யாவும் அவருக்கு தெரியாமல் அர்த்தத்துடன் சிரித்து கொண்டனர்.


"நீங்கள் அங்கேயே வந்துவிட வேண்டாம். ஆனால் ரிதுவிற்காக கொஞ்ச நாள் எங்க கூட இருங்க. அவளையும் தவிக்க விட வேண்டாம். உங்களுக்கும் உடல்நலம் சரியாக வரை நாங்க கூட இருந்து பார்த்து கொள்வோம்" என்றார் சுகன்யா.


இப்போது மறுக்க முடியவில்லை அவரால். மகளுக்காக சம்மதித்தார்.


அனைவரும் கிளம்பி இருக்க, ரகு அனைத்து பில்களையும் செட்டில் செய்து டாக்டரிடம் பேசிவிட்டு அறைக்கு வந்தார்.


ஆனந்த் கார் எடுத்துகொண்டு வர அனைவரும் அதில் கிளம்பினர். ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பும் போது ரிதுவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் அதன்பின் அவள்புறம் திரும்பவே இல்லை.


நேராக ஆனந்த் தன்னுடைய வீட்டிற்கு வர, முதலில் இறங்கிய சுகன்யா முதன்முதலில் திருமணம் ஆகி இருவரும் ஒன்றாக வருவதால் ஆரத்தி எடுக்க வேண்டும் என வெளியில் நிற்க சொல்லிவிட்டு உள்ளே சென்று வேலைக்கார பெண்ணிடம் ஆரத்தி கரைக்க சொல்லி கொண்டு வந்தார்.

இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்தவர் பின் ராஜ்குமார்க்கும் தனியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார். இதில் நெகிழ்ந்து போனாள் ரிது.


ராஜ்குமார்க்காக தனி அறை ஒதுக்கி அதில் அவருடைய பொருட்களை வைக்க சொன்னார் சுகன்யா.


பின் ரிதுவிடம் திரும்பி உங்களுடைய அறை என்று மாடியில் ஒரு அறையை காட்ட அது ஆனந்த் அறை என்று புரிந்தது.


பின் தன் பொருட்களை அங்கு எடுத்து சென்றவள் அவன் உள்ளிருப்பதை மறந்து கதவை திறந்தாள்.


உள்நுழைந்ததும் அவனை கண்டவள் முகம் அதிர்ச்சியை காட்ட அவனோ எதுவும் நடக்காத பாவனையில் கண்களை மூடி கட்டிலில் சாய்ந்து கொண்டான்.


அவன் முகத்தின் கவலைக்கோடு அவளை தாக்கியதாக உணர்ந்தாள். ஆனால் இந்த சில நாட்களில் தேவைக்கு கூட தன்னிடம் பேசாதவனிடம் என்னவென்று கேட்பது என்று மூளை கூற பேசாமல் அதை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அப்பாவின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


ஆனந்த் பலவகை உணர்வுகளுக்கு ஆட்கொண்டிருந்தான். அவனுக்குள் எழுந்த குழப்பம் கோபமாக மாறி இப்போது வருத்தம் கவலை என அனைத்தையும் ஏற்றியிருந்தது.


என்னவோ தன் வாழ்க்கையே முடிந்து போனது போல இருந்தது. இதுநாள் வரை அவன் எதற்கும் வருந்தியதில்லை. சில நிமிடங்களுக்கு மேல் கோபத்தை இழுத்து பிடித்ததில்லை.


அவனுடைய கோபம் பெரும்பாலும் ஆபீஸ் தவிர வேறெங்கும் இருந்ததில்லை. அதுவும் அவனுடைய வீட்டில் இதுவரை இப்படி இருந்ததே இல்லை.


அம்மாவும் மகனும் எப்போதும் எதாவது வம்பு பேசி அப்பாவை கோர்த்து விடுவது போன்ற சின்ன சின்ன சந்தோசம் எப்போதும் இருக்கும்.


ஆனால் அவளை பார்த்த நாள் முதல் இன்று வரை நான் நானாக இல்லை. எங்கே இப்படியே தான் மாறி விடுவேனோ? என்று பல சிந்தனை அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
இதில் மீண்டும் கோபம் அவள் மீது அவனுக்கு.


அனைவரையும் சாப்பிட அழைத்த சுகன்யா ஆனந்த் அறைக்கு சென்றார். அங்கு அவன் கட்டிலில் சாய்ந்து ஏதோ யோசித்து கொண்டிருந்தான்.


அவரும் அவனை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்.


ஒருநாள் இறங்கி போகிறான். மறுநாளே முகத்தை தூக்கி வைத்து கொள்கிறான்.


இவனை என்ன தான் செய்வது? என்று கோபம் வந்தாலும் நடந்ததை ஏற்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் அவன் தவிப்பு ஒரு தாயாய் அவருக்கு புரிந்தது.


அவன் அருகில் சென்று தலை கோதியதில் கண் விழித்தான் ஆனந்த்.


"அம்மா".


"சாப்பிட வரலையேனு கூப்பிட வந்தேன் பா".


"இப்போது சாப்பிட்டு மட்டும் என்ன ஆக போகுது மா" என்று சலிப்புடன் கூறியவனை கூர்ந்து பார்த்தார் சுகன்யா.


"ஆனந்த் நான் உன்கிட்ட அன்னைக்கு என்ன கேள்வி கேட்டேன் நியாபகம் இருக்கா?"- சுகன்யா


"திடிர்னு கேட்டா? என்னைக்கு? என்ன கேள்வி மா? " என்ன சம்பந்தம் இல்லாமல் கேட்கிறார் என்று தோன்றியது.


"உனக்கும் ரிதுக்கும் கல்யாணம் நடந்த அன்று" தெளிவாக கூறினார்.


அவன் புரியாமல் பார்க்க, அவரே பேசினார். "அவளை கல்யாணம் செய்ய முழு சம்மதமானு கேட்டேன்" என்று அந்த 'முழு' என்பதை அழுத்தி கூறினார்.


அவன் பதில் கூறாமல் நிற்க, "ரிது இப்ப உன் மனைவி. உன்னோட ஒவ்வொரு அசைவுகளும் அவளையும் பாதிக்கும். அது சந்தோசம் ஆனாலும் கவலை ஆனாலும்".


அவன் மீண்டும் கவலையாக பார்க்க, "உன் மனசுல என்ன நினைக்கிறன்னாவது சொல்லு டா. உனக்கு அவளை ஏத்துக்க கொஞ்சம் டைம் வேணுமா? அதை வாய் விட்டு பேசு. அவகிட்ட எடுத்து சொல்லு. அதைவிட்டு தாலி கேட்டிடேன். அவ்ளோ தான் என் வேலை முடிஞ்சதுனு இருந்தா என்ன அர்த்தம்?" என்று கெஞ்சலாக கேட்டவர் கோபமாக முடித்தார்.


இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவர் முகத்தை பார்த்தவன் முகத்தில் அடிபட்ட வலி.


தாயின் மடியில் படுத்து கொண்டான். அவர் தட்டிக் கொடுக்க அந்த ஆறுதல் அவனுக்கு தேவையானதாக இருந்தது.


குளித்து உடை மாற்றிவிட்டு சாப்பிடலாம் என அறைக்கு வந்த ரிது வாசலில் இதை கேட்டு அப்படியே நின்றாள்.


எத்தனை நேரம் நின்றாளோ முதலில் சுகன்யா பார்த்து அவளை உள்ள அழைத்தார்.


உள்ளே சென்றவள் குளித்து விட்டு வருவதாக பாத்ரூம் சென்று விட்டாள். இப்போது அவளுக்கு தெளிவானது ஒன்றே ஒன்று தான்.


அவனுக்கு இந்த திருமணம் அவ்வளவு விருப்பமானதாய் இல்லை.


ஆம் அன்று கூட அத்தை சொன்னார்களே, 'உன் அப்பாவும் ஆனந்த் அப்பாவும் சேர்ந்து எடுத்த முடிவு!'.


அப்பாவிற்காக இதை செய்துள்ளான். இப்போது அவனுக்கு இதில் விருப்பம் இல்லை போல. அதனால் தான் அத்தை இப்போது அவனிடம் பேசி கால அவகாசம் கேட்க சொல்கிறார் என்று நினைத்தவள், இதில் தான் முடிவு செய்ய ஏதுமில்லை.


அவன் முடிவெடுத்து தன்னிடம் பேசும்போது அவன் முடிவுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.


ரகு அடுத்த வாரம் ஒரு நல்ல நாளில் ரிசெப்சன் வைத்து ரிதுவை அனைவருக்கும் அறிமுகம் செய்துவிட வேண்டும் என்று கூற அதுவே சரி என்றுபட்டது அனைவருக்கும்.


மேலும் ஹாஸ்பிடலில் திருமணம் முடிந்ததால் ஒரு நல்ல நாளில் சம்பிரதாயப்படி முதலிரவு ஏற்பாடு செய்ய வேண்டும் என சொல்லி ரிது, சுகன்யா அறையில் தங்கியிருந்தாள்.


இதற்கும் நல்ல நாள் கேட்ட போது இன்று நல்ல நாள். சடங்கினை இன்றே வைத்து கொள்ளலாம் என ஜோசியர் கூறிட, சடங்கு ஏற்பாடு இன்று என்று முடிவு செய்தனர்.


அன்று காலை விக்ரம் அவன் தாயுடன் ஆனந்த் வீட்டிற்கு வந்திருந்தான். திருமணம் எளிதாக நடந்ததால் கண்டிப்பாக வரவேற்பு நடத்த வேண்டும் என லாவண்யா அப்பா சந்திரன் கூறிவிட அதற்கு அழைப்பதற்காக வந்திருந்தனர்.


அன்றும் ஆனந்த் வெளியில் சென்று விட்டான். மேலும் ரிது, தந்தை அருகே இருந்ததாலும் அவர்கள் திருமணம் அறியாத விக்ரமிற்கு பார்க்க இயலவில்லை.


"கண்டிப்பாக அனைவரும் நாளை மாலை ரிசெப்ஷனில் கலந்து கொள்ள வேண்டும்" என கூறி விடைபெற்றனர்.


இப்போதும் கூட சுகன்யா ஆனந்த் திருமணம் பற்றி விக்ரமிடம் பேசவில்லை. விக்ரம் ரிசெப்ஷன் முடிந்ததும் ஆனந்த் ரிசெப்ஷன் ஏற்பாடு செய்துவிட்டு அனைவரையும் வரவேற்கலாம் என்பது அவரின் எண்ணம்.


அதற்குள் என்ன செய்து விடுவான் ஆனந்த்?


காதல் தொடரும்...
 

Rajam

Well-known member
Member
சந்தர்ப்பம் சதி செய்கிறது.
யாரும் வெளிப்படையாக பேசலை.
ஆனந்த் ஒன்று நினைத்தால்,
ரிது வேறு நினைக்கறா.
மனம் திறநது பேசங்கப்பா.
 

பிரிய நிலா

Well-known member
Member
இப்படியே இழுத்துட்டு போய் கடைசியில் பெருசா ஆப்பு வைக்கப் போறீங்க. அந்த ஆப்பு பெரிய சைஸ் அணுகுண்டா மாறி ஆனந்த் தலையில் வெடிக்கப் போகுது

கண்டிப்பா ஆனந்த் தாய் அண்ட் தாரத்திடம் உதை வாங்கப் போறான். அடி கன்பார்ம் ..
 

ரித்தி

Active member
Member
இப்படியே இழுத்துட்டு போய் கடைசியில் பெருசா ஆப்பு வைக்கப் போறீங்க. அந்த ஆப்பு பெரிய சைஸ் அணுகுண்டா மாறி ஆனந்த் தலையில் வெடிக்கப் போகுது

கண்டிப்பா ஆனந்த் தாய் அண்ட் தாரத்திடம் உதை வாங்கப் போறான். அடி கன்பார்ம் ..
அப்படி வாங்கினா தானே புத்தி வரும்
 

ரித்தி

Active member
Member
சந்தர்ப்பம் சதி செய்கிறது.
யாரும் வெளிப்படையாக பேசலை.
ஆனந்த் ஒன்று நினைத்தால்,
ரிது வேறு நினைக்கறா.
மனம் திறநது பேசங்கப்பா.
இதோ வந்துட்டே இருக்கு sis
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom