• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 12

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 12


மனதில் பாரம் மட்டுமே ஏறியிருக்க என்ன நடக்கிறது என்று அறியாமல் ஓரமாய் அமர்ந்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள் ரிது.


அவள் அருகே வந்த ரகு அவளிடம் ஏதும் கூறாமல் அவளை அழைத்து கொண்டு ராஜ்குமார் அறைக்குள் நுழைந்தார்.


அங்கு ஆனந்த் நிற்க, தன் கணவன் கூறியது போல மஞ்சள் கலந்த மஞ்சள் கயிற்றுடன் பின்னே நுழைந்தார் சுகன்யா.


அப்போது தான் ஆனந்த் வீட்டில் வந்த யாரும் இன்னும் செல்லவில்லை என்று உணர்ந்த ரிது அம்மா வந்த பிறகும் இவன் ஏன் செல்லாமல் இருக்கிறான் என ஆனந்தை பார்த்தாள்.


இவர்கள் வந்த அரவத்தில் கண் விழித்த ராஜ்குமார் ரகுவை பார்க்க, ரகு சுகன்யாவிடம் திரும்பி தாலியை கையில் வாங்கினார்.


ஒரு நொடி யோசித்தவர் பின் ராஜ்குமாரிடம், "ராஜ் உன் பொண்ணுக்கு இப்ப கல்யாணம் நடந்தா உனக்கு சந்தோசமா?" என்றார்.


இதில் அதிர்ந்தது ரிது மட்டுமே.


"தான் கேட்டது சரி தானா?" என்று விழி விரித்து பார்த்தவள் முன் தாலியை காட்டினார் ரகு.


"ரகு என்ன சொல்ற? இப்பவேவா?" என்று ராஜ்குமார் கேட்க,


"நான் பேசிட்டேன் டா இப்ப நல்ல நேரம் தான்" எனவும் ராஜ்குமார் மகளை பார்த்தார்.


அவள் இன்னும் அதிர்ச்சி விலகாமல் தாலியை பார்த்துக் கொண்டிருக்க, ரகு தான் அவளை உலுக்கி சுயநினைவுக்கு கொண்டு வந்தார்.


"டாக்டர்கிட்ட கேட்டோம். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியா நடந்தால் அவருக்கும் ஹாஸ்பிடலுக்கும் எந்த பிரச்சனையும் இல்லையாம்"


"என்னை பேசுறீங்க? எனக்கு இப்ப கல்யாணமா? அதுவும் அப்பா இப்படி இருக்கும் நிலமையில்?" எனும்போது அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.


வேகமாக நீண்ட தன் கையை ஒரு நொடியில் சுதாரித்து அடக்கிக் கொண்டான் ஆனந்த்.


அவள் கண்களில் எந்த கல்மிஷமும் இல்லை எந்த பொய்யும் இல்லை. ரிது இந்த பெயரை உச்சரித்தபின் வேறொரு பெண் பெயர் அவன் நாவில் வருமா என யோசித்த மூளையை தலையில் தட்டி அடக்கினான்.


'பிடிக்குதோ இல்லையோ இனி இந்த குழப்பம் தேவையற்றது. அனைவர் விருப்பம் எதுவோ அது நடக்கட்டும்' அமைதியானான் ஆனந்த்.

சுகன்யா அவளை தனியாக சில அடி தூரம் அழைத்து சென்றவர் "ரிது! இது முழுக்க உன் அப்பாக்காக தான் டா" என்றார்.


குழப்பத்துடன் பார்த்தவளை "உனக்கு கல்யாணம் நடந்தா அதைவிட பெரிய சந்தோசம் உன் அப்பாக்கு என்ன இருக்கும் சொல்லு?" என்றார்.


ஏதும் சொல்லாமல் நின்றவளை பார்த்து, "அதுமட்டும் இல்ல, ஆனந்த் உன்னை நல்லா பார்த்துக்குவான்" என்றதும் தான் அவளுக்கு திருமணம் அவனுடன் என்பதே தெரிந்தது.


அதில் அதிர்ந்து அவள் முழிக்க, "உன்கிட்ட சம்மதம் யாரும் கேட்கலைனு நினைக்காதே. உன் அப்பா சொன்னா நீ கேட்பனு தெரியும். உன்னை பத்தி நல்லா தெரிஞ்சி தான் உன் அப்பாவும் ஆனந்த் அப்பாவும் சேர்ந்து இந்த முடிவு எடுத்திருகாங்க" என்றாள்.


அப்பாவின் முடிவா? என்று அவள் கேட்க, "ஆமா! முதலில் ரெண்டு பேரும் பேசிட்டு தான் எல்லார்கிட்டையும் சொல்லியிருக்காங்க" என்றாள்.


"ஆனந்த்க்கும் இதில் விருப்பம் தான்" என்று சுகன்யா சொல்லிக் கொண்டே அவனை திரும்பி பார்க்க, அவன் எதிலும் தலையிடமால் போனை நோண்டிக் கொண்டிருந்தான்.


திருமணம் முடிந்தால் எளிதில் அப்பாவை ஆபரேஷன் செய்ய சொல்லி சம்மதித்துவிடலாம் எனவும் அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.


ஏற்கனவே ராஜ்குமாரிடம் ரகு பேசிவிட்டார் தான். ஆனால் அப்போதே திருமணம் என்று சொல்லவில்லை. ஒருவேளை ஆபரேஷன் நடக்க தான் இப்படி ரகு அவசரப்படுகிறானோ என்று அவரை பார்த்தார் ராஜ்குமார்.


சுகன்யா நிலைமையை எடுத்து சொல்ல ரிது புரிந்து கொண்டாலும் ஏனோ பயமும் தொற்றி கொண்டது.
அப்பாவை காப்பாற்ற இது ஒரு முயற்சி என்று புரிந்தது.


மேலும் ஆனந்த் பற்றி இப்போது தான் அவள் நினைக்க ஆரம்பித்திருந்த நேரம் உடனே திருமணம். அதுவும் அவனுடன் என்றதும் அவளையும் மீறி மனதில் ஒரு நிம்மதி.


இவர்கள் யார் பேச்சையும் கவனிக்கும் நிலை இல்லாமல் ஆனந்த் மொபைலை கையில் வைத்து மனதுடன் போராடிக் கொண்டிருந்தான்.


ஒருவழியாக அனைத்தையும் எடுத்து சொல்லி ரிதுவை அழைத்து வந்தார் சுகன்யா.


ராஜ்குமார் மகளை ஆராய அவள் ஏதும் சொல்லாமல் தலை குனிந்து நின்றதில் அவள் சம்மதம் புரிய மன நிறைவுடன் கண்களை அழுந்த மூடி திறந்தார் ராஜ்குமார்.


பின் அந்த ஹாஸ்பிடல் அறையிலேயே தந்தை முன்னே அவள் நிற்க, ரகு ஆனந்தை அழைத்து அவன் கையில் அந்த மஞ்சள் கயிற்றை கொடுத்தார்.


சுகன்யா ஆனந்த் கையை ஒருமுறை இறுக பற்றி ஆதரவாக அழுத்தி ரிது அருகில் நிறுத்தினர்.

தன் தந்தை கண் அசைக்க, தாலியை பார்த்துவிட்டு ஒருமுறை விழிகளை மூடி திறந்தவன் அவள் முகத்தை பார்த்தான்.


பின் அதை அவள் கழுத்தில் கட்டி தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான்.


யார் கண்டதோ?
அதை யார் கண்டதோ?


முதல் முறை மனதில்
எந்த முகம் பதியும்
யார் கண்டதோ?


எந்த விழி பார்க்க
எந்த விழி ஏங்கும்
யார் கண்டதோ?


நிஜம் எது நிழல் எது
விடை
யார் கண்டதோ?


அதே முகம் அதே மனம்
உண்மை
யார் கண்டதோ?


அட நாளை இந்த நிமிடம்
என்ன?
யார் கண்டதோ?

யார் கண்டதோ?
அதை யார் கண்டதோ?


கண்கள் அருகேதான் கண்ணிமைகள் இருக்கும்
யார் கண்டதோ?


கைகள் அருகேதான் தென்றல் கூட இருக்கும்
யார் கண்டதோ?


யார் கண்டதோ?
அதை யார் கண்டதோ?



அடுத்த நாள் ஆபரேஷன் நல்ல படியாகவே முடிந்தது. 2 நாட்கள் தொடர்ந்து ICU வில் இருந்தவர் அடுத்த மூன்றாவது நாள் நார்மல் வார்டுக்கு மாற்றப் பட்டிருந்தார்.


பதினைந்து நாட்கள் தொடர்ந்து ஹாஸ்பிடலில் இருந்தவர் இனி எந்த பிரச்சனையும் இல்லை. வீட்டில் இருந்தே பத்திரமாக பாத்துக்கலாம். அதிக அதிர்ச்சி அதிக சந்தோசம் ஏதும் கேட்க கூடாது போன்ற பல நிபந்தனைகளுடன் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என டாக்டர் அறிவுறுத்தினர்.


ராஜ்குமார்க்கு உறுத்தலாகவே இருந்தது. ஹாஸ்பிடல் மொத்த செலவையும் ரகுவே ஏற்றிருந்தார்.


நண்பனாக இருக்கும்போதே எதையும் எதிர்பார்க்காதவர் இப்போது சம்மந்தி வேறு.


இதனால் மகள் வாழ்வில் பிரச்சனை வந்திடக் கூடாதே. இதை எப்படி சரி கட்டிட முடியும் என்ற நினைவே அவருக்கு.


ஆனந்த் இதில் எல்லாம் தலையிடவே இல்லை. அனைத்தும் ரகுவே பொறுப்பு. ஆனந்த் இதற்கு மறுப்பதற்கு எதுவுமில்லை.


அவனுக்கு ராஜ்குமார் ரகு உறவு தெரிந்ததால் அவரின் மேலான மதிப்பு இன்னும் உயர்ந்து இருந்தது.


ஹாஸ்பிடலில் இருந்த நாட்களில் சுகன்யா தான் தினமும் சமைத்து ரிதுவிற்கும் ராஜ்குமார்க்கும் கொண்டு வருவார்.


ரிதுவை அவருக்கு மிகவும் பிடித்து போனது. ரிதுவும் அவருடன் ஒட்டிக் கொண்டாள்.


தினமும் ஹாஸ்பிடலில் இருந்து ஆனந்த் தான் ரிதுவை அவள் வீட்டிற்கு அழைத்து சென்று வந்தான்.


அவள் குளித்து முடித்து அப்பாவிற்கு தேவையான பொருட்களையும் எடுத்து வரும்வரை காத்திருந்து அழைத்து செல்வான்.


காரில் செல்லும்போதும் அவர்களிடையே அமைதி மட்டுமே. அவள் வீட்டினுள் நுழைந்ததும் இவன் தோட்டதிலேயே இருந்து கொள்வான். அவளும் உள்ளே அழைத்ததில்லை.


மொத்தத்தில் இருவருக்கும் பிடித்தும் பிடிக்காத நிலை. அவர்கள் மனதின் குழப்பத்தில் எதையும் ஆராய மனமில்லை.


ஆனால் அருகில் இருப்பது மனதுக்கு பிடித்தது. அதுவே போதும் என்ற மனநிலை இருவருக்கும் ஒத்து போனது.


அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றதும் ராஜ்குமார் அவரின் வீட்டிற்கு செல்ல தயாராகினார்.


இப்போது ரிதுவிற்கு தான் பெரும் பாரம் ஆனது. இனி தான் அப்பாவோடு இருக்க முடியாதே என்று.


அப்பாவை பிரிந்து இன்னொரு வீட்டிற்கு எப்படி செல்வது என்று. அதில் கண்ணீர் கரை புரண்டோட அமர்ந்திருந்தாள்.


அங்கே வந்த ஆனந்த் அவளை பார்த்து யோசனையுடன் அவளருகே சென்றவன் பின் திரும்பி தன் அன்னையை அனுப்பி விட்டான்.


அவள் அருகே சுகன்யா அமர அவர் தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள். அவள் மனம் விட்டு அழட்டும் என வருடி கொடுத்தார்.


சிறிது நேரத்தில் தெளிந்தவள் நிமிர்ந்து அமர, சுகன்யா சிரித்து "என்ன ரிது இப்போது எதற்கு இந்த அழுகை?" என்றார்.


அவரிடம் எப்படி சொல்வது என்று யோசித்தவள் ஒரு முடிவுடன், "நான் கொஞ்ச நாள் அப்பா கூட இருந்துக்கறேன் அத்தை ப்ளீஸ்" என்றாள்.


"இதுக்கு தான் இந்த அழுகையா! சரியா போச்சி போ. நான் கூட என்னவோனு நினச்சுட்டேன்". என்றவர் தொடர்ந்து,


"நீ கவலையேப்படாத இனி எப்பவும் உன் அப்பா உன் கூடவே தான் இருக்க போறாங்க" என்றார்.


இதற்கு என்ன சொல்வது, 'நீ அங்கேயே இருந்து கொள் என்கிறாரா? இல்லை, அவரும் நம்முடன் இருக்கட்டும் என்கிறாரா!' என்ற குழப்பத்தில் அவரை பார்த்தாள்.


அவளை சரியாக கணக்கிடும் அளவுக்கு இந்த பதினைந்து நாட்களில் பழகியிருந்தவர் சிரித்து அவள் தலை கோதினார்.


"நான் என்ன அர்த்தத்தில் சொல்றேனு கூட இன்னுமா உனக்கு புரியல ரிது?".


தெளிவாக இப்போது புரிந்தது. ஆனால் பதில் சொல்ல முடியாமல் அழுகையும் வந்தது.


கைகளை கூப்பி அழுதவளிடம், "இனி சும்மா சும்மா அழக்கூடாது டா. உன் அழுகை என் மகனையும் பாதிக்குது" -சுகன்யா


சட்டென்று அழுகை நிற்க என்னவென்று அவரையே பார்த்தாள்.


"நீ அழுறது தாங்காமல் ஆனந்த் தான் என்னை உன்கிட்ட பேச சொல்லி அனுப்பினான்" என்றதும், எங்கிருந்து அவ்வளவு வெட்கம் வந்ததோ அவள் முகமே செம்மையுற்றது.


அதில் திருப்தியான சுகன்யா இருவரும் நடந்ததை ஏற்றுகொள்ள பழகிவிட்டனர் என்று மகிழ்ந்தார்.


இவளின் மனநிலைக்கு சற்றும் பொருந்தாத எதிர்மனநிலைக்கு சில நிமிடங்களிலேயே ஆளாக்கப்பட்டிருந்தான் ஆனந்த்.


அவள் மீது மட்டுமல்லாமல் உயிர் நண்பன் விக்ரம் மேலும் குறைவில்லா கோபம். கண்களை மறைக்கும் அளவுக்கு.


காரணம் விக்ரம் திருமணம். விக்ரம் எவ்வளவு அழைத்தும் ஆனந்த் மொபைலை எடுக்காத காரணத்தினாள் ரகுவிற்கு அழைத்து திருமணத்திற்கு ஒரு வாரம் முன் சொல்லியிருக்கிறான்.


ஹாஸ்பிடலில் இருந்த ரகு அதை ஆனந்த்திடம் சொல்ல சுத்தமாக மறந்திருந்தார். இப்போது திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் தந்தை அவனிடம் கூறியிருக்கிறார்.


இதில் ரிது தவறு என்ன?
ஆனந்த் புரிந்து கொண்ட விதம் என்ன?
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..


காதல் தொடரும்...
 

பிரிய நிலா

Well-known member
Member
சொன்ன மாதிரி ரிது புள்ளைய ஆனந்துக்கு கட்டி வச்சுட்டீங்க...
ரிது மனசார தான் ஓ.கே சொல்லியிருக்கா. ஆனந்த் மனநிலை தான் அப்படியே இருக்கு...
சார் சொதப்புனது பத்தாதுனு விக்ரம் மேரேஜ் நெனச்சு அவன்மேல கோபமா இருக்கானா..
காலக்கொடுமை..
நியாயமா பார்த்தால் அவன் பண்ணியிருக்க வேலைக்கு மத்த எல்லாரும்தான் கோபமா இருக்க்கனும்...
 

ரித்தி

Active member
Member
சொன்ன மாதிரி ரிது புள்ளைய ஆனந்துக்கு கட்டி வச்சுட்டீங்க...
ரிது மனசார தான் ஓ.கே சொல்லியிருக்கா. ஆனந்த் மனநிலை தான் அப்படியே இருக்கு...
சார் சொதப்புனது பத்தாதுனு விக்ரம் மேரேஜ் நெனச்சு அவன்மேல கோபமா இருக்கானா..
காலக்கொடுமை..
நியாயமா பார்த்தால் அவன் பண்ணியிருக்க வேலைக்கு மத்த எல்லாரும்தான் கோபமா இருக்க்கனும்...
சீக்கிரமே காண்டாக போறாங்க
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom