• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 37(Final Episode)

ஓம் சாயிராம்

அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' நிறைவு பகுதி மிக மிக தாமதமாக பதிவிடுவதற்கு, மன்னிச்சிருங்க.
எபிசோடின் அளவு, இன்னும் கொஞ்சம் பெட்டரா திட்டமிட்டிருக்கணும்னு தோணுது. எங்க, எப்படி பிரிச்சு போடுறதுன்னு தெரியல. ரொம்ப குழம்பிட்டேன். கடைசி எபிசோடுன்ற பதற்றம் வேற. எழுதினத எல்லாம் பகிர்ந்துக்கணும்னு நெனச்சேன்.

கண்டிப்பா நிறைகுறைகளை என்கிட்ட வெளிப்படையா சொல்லுங்க. அது என் எழுத்து பயணம் மேம்பட உதவும்.



Heartful thanks to each and everyone for reading and sharing your thoughts. Please share your feedbacks and suggestions about the story on the whole.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:
அன்பின் ஆழம் !!¡! மிக மிக அருமை...👌👌 ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் 💐💐
முழு கதையும் படித்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு, என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அன்பின் ஆழம்
ஆழமான அன்பின் வழியே செல்லும் மென்மையான காதல் கதை!!!!!
நட்பின் ஆழம் வழியில் சென்று
வெற்றி காணும் நம்பிக்கை கதை!!
பொறுத்து சென்று காதலில் வெற்றி பெறும் காதல் கதை!!
தோற்று தான் போகிறோம் பெற்றவர்களிடம்- அன்பிற்காக
பிடிவாதமாக இருந்து பார்க்கிறார்கள் ஆனால் அன்பே பிரதானம், அன்பால் வெற்றி பெற்ற குடும்ப கதை!!!
நண்பர்கள் சேர்ந்து
கை கொடுத்து தூக்கி, வழி நடத்தி சென்று வெற்றி பாதை அமைத்து கொடுக்கும் நட்புக் கதை!!!
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி பெற்று விடும் தன்னம்பிக்கை கதை!!!



வாழ்வின் அனைத்து கட்டத்திலும் எங்கையோ எப்போதோ நாம் தயங்கி தடுமாறும் போது நாங்களும் இருக்கோம் என்று பல கைகள் வரும்
பெற்றோர் கைகள்
நட்பின் கைகள்
காதல் மொழி பேசும் காதலர் கைகள்
நம்மை சுற்றி இருக்கும் முக்கியமாக வாழ்க்கை பற்றி புரிதல் கொண்ட நிதானமான மனிதர்களின் கைகள்
சுற்றத்தார் கைகள்!!!
அப்படி நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை கதை!!!
 
@Apsareezbeena loganathan
Thank You so much for your unconditional love and encouragement:love:🙏

புது முகம் என்று பாராமல், கதையின் முதல் அத்தியாத்தில் தொடங்கி, ஒவ்வொரு முறையும் அன்பான வார்த்தைகள் சொல்லி ஊக்குவித்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா! ஒவ்வொரு முறை உங்க Comments படிக்கும் போதும், இன்னும் சிறப்பாக எழுதணும்னு ஒரு தனி உற்சாகம் வரும்.

அதுவும், நான் மனசுல என்ன கற்பனை செய்து எழுதினேனோ, அதையே உங்க கருத்துல நீங்க சொல்லும் போது, மனசுக்கு ரொம்பவே நெகிழ்வா இருக்கும். உங்க அன்புக்கு நான் தலை வணங்குறேன்.

உண்மையிலேயே உங்களை போன்ற வாசகர்கள் பொழியும் அன்பில் தான் பல ஆழமான சிந்தனைகள் அடங்கிய நல்ல கதைகள் உருவாகின்றன.
 

vashi

Member
Member
விமர்சனம் தாமதமாக எழுதுவதற்காக வருந்துகிறேன்.
மிக மிக ஆழமான புரிதல் இருந்தால் தான் இது சாத்தியம் என்று புரியவைத்திருக்கிறீகள்.இன்றைய தலைமுறையினர்களுக்கு அன்பாலும்
,பொறுமையாலும் நினைப்பதை அடைய முடியும் என்று புரிதல் வரும்.
இன்னும் நிறைய உங்கள் கதைகள் படிக்க காத்திருக்கிறோம்.....
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom