• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அனார்கலி ( முழுவதும் )

அனார்கலி ( முழுவதும் )

அனார்கலி நம் நாயகியின் பெயர் அல்ல. நம் நாயகன் விஜய் அவனின் ஆசை காதலிக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்.
மூன்று வருடங்களாக விஜய் அனார்கலியை உருக உருக காதலிக்கிறான். ஆனால் ஒருநாளும் அவளிடம் தன் காதலை சொல்ல எண்ணியதே இல்லை.

"டேய் விஜய் எப்ப உன் காதலை அவ கிட்ட சொல்ல போற. நம்ம ஆபீஸ்க்கு புதுசா வந்திருக்கிற டீம் லீடர் சவின், அவளை வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறதா ஆபீஸ் முழுவதும் செய்தி பரவிருக்கு. ஆபீஸ் முழுசும் அந்த செய்தி தான் ட்ரெண்டிங்." நண்பனிடம் அவளிடம் காதலை சொல் காலம் தாழ்த்தாதே என்று எடுத்துச் சொன்னான் அர்ஜுன்.

விஜய் தொலைபேசியில் உள்ள அனார்கலியின் புகைப்படத்தை எடுத்து அர்ஜுனிடம் காட்டி "பாருடா அவள் கலர் என்ன?. என் கலர் என்ன?. நான் காதலை சொல்லி அவள் என் காதலை மறுத்து விட்டாள் என் உள்ளம் தாங்காது."

விஜய் கருப்பான இளைஞன், ஒல்லியான தேகம், அவனின் கை விரல்களுக்கு அடங்காத கேசம், ஆறடி உயரம், சிரித்தாள் கன்னத்தில் விழும் குழியினால் அனைவரையும் கவருபவன், வட்ட முகம்.
அலுவலகத்தில் உள்ள நண்பர்களோ எலும்பன், கருவாயன் என்று விஜயை பலவித பெயர்களில் அழைத்து. அவனிற்குள் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்க செய்திருந்தனர்.

"டேய் விஜய் காதல். அழகு, கலர், பணம், வசதி எதுவும் பார்க்காது கண்டிப்பா உன்னுடைய அனார்கலி உன் காதலை ஏற்றுப்பா."

"ஒருவேளை அவள் என் காதலை எற்றுக்கலைனா?."

"மீன் போன்ற கண்களும் அதை மேலும் அழகேற்றும் வகையில் பூனை விழிகளை கொண்டவள்...
கிளி போன்ற மூக்கும் அவள் கோபத்தில் அழகாய் சிவக்கும்...
செதுக்கி வைத்தாற்போல் உதடுகள்...
மருதாணி பூசாமல் சிவந்த கூந்தல்...
பார்க்கும் எவரும் விழி அகலாது பார்க்க வைக்கும் அழகி...

அலுவலகத்தில் நுழையும் போது அவளை பல ஜோடி கண்கள் பார்த்தாலும், அதில் ஒரு ஜோடி கண்கள் மட்டும் அனார்கலியின் மனதை அலையாய் வந்து தொட்டு செல்ல. யார் அந்தக் கண்கள் என்று மனது எழுப்பும் கேள்விக்கு இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகள்.

என்றுமே சுடிதார் சல்வார்யில் பார்க்கும் அனார்கலியை ஒருமுறையேனும் புடவையில் பார்க்க வேண்டும். என்ற ஆசையை எப்பொழுதும் போல் விஜய் அவனது டைரியில் எழுதி மறைத்து வைத்துக் கொள்ள.

தன் நண்பனின் பைத்தியக்காரத்தனத்தை பார்த்து அர்ஜுன் தலையில் அடித்துக் கொண்டான்.

"இதெல்லாம் கண்டுக்க கூடாது மச்சி. நீ உன் வேலைய பாரு." என்று சொல்லிவிட்டு விஜய் அனார்கலியை பார்ப்பதை தொடர. சுழலும் நாற்காலியில் சுழன்றபடி அனார்கலி செல்லும் திசையெல்லாம் விஜயின் கண்களும் செல்ல.
சற்று பக்கத்தில் இருக்கும் அனார்கலிக்கு காற்றோடு கலந்த முத்தத்தை அவளுக்கு தூதாக அனுப்பினான் விஜய்.

விஜய் என்ற ஒரு ஜீவன் அலுவலகத்தில் இருப்பதையே அவள் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில் எப்படி விஜய்யின் காதல் கைகூடும்?.

தன் தோழியின் மூக்கை பிடித்து கிள்ளி கொஞ்சி விளையாடும் அனார்கலியை "இதேபோல் என்னுடனும் விளையாடுவாயா?." என்ற ஆசையை டைரியில் எழுதி மறைத்து வைத்தான் விஜய்

"ஹாய் சாரா." (அனார்கலி) என்று சாரலை அழைத்தபடி புன்னகை மயமாய் சாரலை நோக்கி வந்தான் சவின்.

"ஹாய் சார்." என மரியாதை நிமித்தமாக இருக்கையிலிருந்து எந்திரிக்கும் சாரலை "பார்மாலிட்டிஸ் எல்லாம் வேணாம். நீங்க என்னை பெயர் சொல்லியே அழைக்கலாம்."

"இன்னைக்கு ரொம்போ அழகா இருக்கீங்க. உங்களுக்கு புடவை கட்டினால் அழகா இருக்கும்." என்று சவின் மட்டுமே பேசிக் கொண்டு வழிந்து கொண்டே போக அவளிடம் எந்த பதிலும் இல்லை.

"என்ன சாரல் மௌன விரதமா?." கேலியாக வினவும் சவினிற்க்கு சின்ன புன்னகையை மட்டும் சிந்தினாள் சாரல்.

விஜய்க்கு சவின் சாரலிடம் பேசிக்கொண்டிருப்பது பார்க்கவே மனது வலிக்க. கேபினை விட்டு நகர்ந்து கேண்டி நோக்கிச் சென்றான்.
நண்பனை தொடர்ந்து அர்ஜுனும் செல்ல. விஜய் உணவருந்தும் மேஜையில் தலையில் இருகைகளையும் வைத்தபடி சோர்ந்து போய் அமர்ந்திருக்க. அர்ஜுனுக்கு விஜய் பார்க்க பாவமாய் இருக்கவும்.
"என்னடா விஜய் இங்கே வந்து உட்கார்ந்து இருக்க. என்னைய விட்டுட்டு வந்து தனியா சாப்பிடலாம்னு நினைச்சியா?." பேசியே தன் நண்பனின் கவனத்தை திசை திருப்ப நினைத்தான் அர்ஜுன்.

விஜய், "கேபினில் இருந்து அவன் போய்ட்டானா டா?."

"அவன் அனார்கலி கூட பேசும் போதே உன்னால தாங்கிக்க முடியலையே. அனார்கலி அவனை காதலிச்சுட்டா?." என்று கேள்வியாய் பார்க்கும் நண்பனுக்கு வெற்றுப் புன்னகையை பரிசாக சிந்தினான் விஜய்.

"என்னைய விட அவளுக்கு சரியான ஜோடி சவின் தான்." வார்த்தையால் சொன்னாலும் தன் நண்பனின் வலி அர்ஜுனுக்கு புரியாதா என்ன?.

"ம்ப்ப்ச்ச் இப்படி எல்லாம் பேசாத. அவ கிட்ட எப்படி காதலை சொல்லலாம் என்று யோசி?."

"மாட்டேன் டா நான் சொல்ல மாட்டேன்." என்று விருட்டென்று கேண்டினைவிட்டு வெளியேறும் விஜயின் முன் எதிரில் நின்று இருந்தால் அனார்கலி.

விஜயை துரத்திக் கொண்டே வந்த அர்ஜூனும். அனார்கலி விஜயின் எதிரில் நின்றிருப்பதை பார்த்து சிரித்தபடி நின்றிருந்தான்.

தன் எதிரில் நிற்பவளை கண்களாலேயே நிறைத்துக்கொண்டான் விஜய்.

"கொஞ்சம் வழி விடுறீங்களா?" என்று சாரல் கேட்ட பிறகே வழியில் நின்று மறைத்துக் கொண்டிருப்பதால் அவளால் செல்ல முடியவில்லை என்பது புரிய. தன் மடத்தனத்தை எண்ணி நொந்தபடி வழியில் இருந்து நகர்ந்து சென்றான்.

அர்ஜுன், "என்ன மச்சான் நீ வேணாம் என்று விலகிப் போக நினைத்தாலும் விதி விடாது போல."

"விதி எல்லாம் இல்லடா எல்லாம் சவின் செய்த சதி."

"சவினா! அவன் என்னடா பண்ணான்?."

"அனார்கலி கிட்ட ரொம்ப வழிஞ்சிருப்பான். அதுல கடுப்பாகி அவன்கிட்ட இருந்து தப்பிக்க கேன்டீனுக்கு வந்திருக்கா."

"ஓ இப்படியும் இருக்குமோ?."

"இருக்குமோன்னு இழுக்காத இதுதான் உண்மை."

"ரொம்ப நல்ல பொண்ணு டா. அமைதியான பொண்ணும் கூட. தயவுசெய்து அவளை மிஸ் பண்ணிடாத. ஒரு முறை அவளிடம் உன் காதலை சொல்ல முயற்சி செய்து பாருடா."

அர்ஜுனின் பேச்சை ஆமோதிக்கும் விதமாக. "நண்பனின் நம்பிக்கைக்காக ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமோ?." என்று சிந்திக்கும் அடுத்த நொடியே அதை கலைக்கும் விதமாய் அவ்விடம் வந்து சேர்ந்தான் சவின்.

"என்ன விஜய், அர்ஜுன் வேலை இல்லையா?. இங்க நின்னு கதை அளந்து கிட்டு இருக்கீங்க."

"இல்லை சார் காபி குடிக்க வந்தோம். இப்ப கிளம்பிட்டோம்." அர்ஜுனும் விஜயும் கிளம்ப போக.
"விஜய் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்." என்று கிளம்பும் விஜயை தடுத்து நிறுத்தினான் சவின்.

"பேசிட்டு வாடா." என்று நண்பனுக்கு கண்களாலேயே சைகை காட்டிவிட்டு அர்ஜுன் சென்றிருக்க.

"சொல்லுங்க சார்."

"உங்களுக்கு சாரல் மேல் ஒருதலைக் காதலா?."

சவினின் இந்த கேள்வியை விஜய் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சவினின் இந்த திடிர் கேள்வியில் அரண்டே போயிருக்க. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் "அது அது வந்து சார்." என பதில் சொல்ல முடியாமல் விஜய் திணறிக் கொண்டிருக்க.

"அப்படி ஒரு நினைப்பு இருந்தா மறந்துடுங்க. நானும் சாரலும் காதலிக்கிறோம். ஆமா எந்த தைரியத்தில் சாரலை நீங்க காதலிக்க ஆரம்பிச்சீங்க. அவளுக்கும் உங்களுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது." ஏற்கனவே நண்பர்களின் கேலியில் நொந்து போயிருந்த விஜய்யின் மனதை மொத்தமாய் உடைத்திருந்தான் சவின்.

"நானும் சாரலும் காதலிக்கிறோம் ஆமா! எந்த தைரியத்தில் சாரலை நீங்க காதலிக்க ஆரம்பிச்சீங்க?." சவின் சொன்ன விடயத்திலும் கேட்ட கேள்வியிளும் விஜய் திகைத்துப்போய் தன்னிலை மறந்து சிலையென அதே இடத்தில் உறைந்து நிற்க.

சவின்னே கேபினுக்கு வந்துட்டான். தன் நண்பன் இன்னும் வரவில்லையே என்று விஜயை தேடி அர்ஜுன் வர. சவின் எந்த இடத்தில் விஜயை சந்தித்து பேசிச் சென்றானோ அதே இடத்தில் கலங்கிய கண்களுடன் உடைந்து போய் விஜய் நின்றிருக்க.

"டேய் விஜய் டேய் டேய்." அர்ஜுனின் எந்த அழைப்பிற்கும் விஜயிடம் பதில் இல்லாமலும் அசைவில்லாமல் சிலையாய் நிற்க. பொறுமை இழந்த அர்ஜுன் விஜய்யின் முன்நின்று அவனின் இரு தோள்களை பிடித்து உழுக்க. நொடியில் தன்னுணர்வு பெற்ற விஜய் "ஹான் என்னாச்சுடா அர்ஜுன்."

"அதை நான் கேட்கணும். என்னாச்சுடா உனக்கு? ஏன் இப்படி சிலை மாதிரி நின்னுட்டு இருக்க. முகமெல்லாம் வாடி இருக்கு. அந்த சவின் எதுவும் உன்னை மிரட்டிநானா?." விஜய்யின் கண்களை உற்று நோக்கியபடியே அர்ஜுன் விசாரிக்க.

"அவன் எதுவும் சொல்லல டா." சவின் சொன்ன விடயத்தை மறைத்து தன் நண்பனிடம் விஜய் பொய்யுரைக்க.

"என்கிட்டயே பொய் சொல்லாத. இப்ப நீ உண்மையை சொல்ல போறியா இல்லையா?." அர்ஜூனின் கோபம் சிறிதாகத் துளிர் விட. கோபத்தில் விஜய்யை முறைத்து பார்த்தபடியே பதில் சொல் என்றபடி முறுக்கிக் கொண்டு அர்ஜுன் நின்றிருக்க.

அர்ஜூனின் கோபத்திற்கு பயந்து சவின் சொல்லிச் சென்ற அனைத்து வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் விஜய் ஒப்புவித்திருந்தான்.

"அடச்சே இதுக்குத்தான் இப்படி நீ நின்றுருந்தியா?." விஜயைப் பார்த்து அர்ஜுன் கேலியாக சிரிக்க.

"ஏண்டா சிரிக்குற?."

"பின்ன சிரிக்காம என்ன செய்ய சொல்லுற. நீயும் உன் காதலை சொல்ல மாட்ட. அடுத்தவன் அவளை காதலித்தாலும் உன்னால் தாங்கிக்க முடியாது. என்னடா உன் பிரச்சனை?." அர்ஜுனின் கேள்வியில் கேலி இழைந்தோட. விஜயின் முகம் மீண்டும் சோகத்தை தத்தெடுத்துக் கொண்டது.

"மறுபடியும் உன் முகத்தை தூக்கி வச்சுகாத டா. நீதானே சொன்ன சவின் ஜொல்லுவிட்டதுனால தான் அவ கடுப்பாகி கேண்டீனுக்கு வந்திருப்பான்னு. அப்புறம் எப்படி சாரா அவனை காதலிப்பா?" அர்ஜூனின் கேள்வியில் விஜய் சற்று தெளிந்திருந்தாலும். அவன் மனதில் குடிகொண்ட புதிதான பயம் சிறிதும் குறையவேயில்லை.

விஜய்க்கு ( சாரல் )அனார்கலி கிடைப்பாளா?

"என்ன சாரல் தேடிட்டு இருக்க." ஏதோ தீவிரமாக பதற்றத்துடன் தேடும் சாரலின் அருகில் நெருங்கி வந்தபடி கேட்டால் சாரலின் தோழி சரண்யா.

"என்னுடைய மோதிரம் காணோம் டி."

"மோதிரம் தானே இங்கதான் எங்கேயாவது விழுந்திருக்கும். வா மீட்டிங் போயிட்டு வந்து தேடிக்கலாம்."

"அது எனக்கு ரொம்ப முக்கியமான மோதிரம் சரண்." மூக்கை உறிஞ்சியபடி கண்கள் இரண்டிலும் வழியும் கண்ணீரை அடக்க வழி தெரியாது மோதிரத்தை தேடி அங்கும் இங்கும் அலைந்தோடியது சாரலின் கருவிழிகள்.

"ஒரு மோதிரத்துக்கா சாரல் நீ இப்படி அழுதுட்டு இருக்க."

"உனக்குத் தெரியாது சரண். என் அப்பா சாகும் தருவாயில் நான் உன்கூட இல்லைன்னு நீ எப்பவும் நினைக்கக்கூடாதுடாமா. கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டி சாரலுக்கு அணிவித்து நான் எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்." என்று அவர் சொல்லிச் சென்றதை மனம் முழுவதும் வலியுடன் கவலையாக சொன்னாள் சாரல்.

"வருத்தப்படாத சாரல் கண்டிப்பா மோதிரம் கிடைச்சுடும். இம்பார்டன்ட் மீட்டிங் நடந்துட்டு இருக்கு. முதல்ல மீட்டிங் போயிட்டு வந்துடலாம்."

"நான் வரலை சரண். நீ வேணும்னா போயிட்டுவா." சரண்யாவிற்கு சாரலை விட்டு தனியாக செல்ல மனம் வராததால் சாரலுடன் அவளும் மோதிரத்தை தேட தொடங்கியிருந்தாள்.

"ஹே மோதிரம் கிடைச்சுடுச்சுடி." விஜய்யின் மேசைக்கு கீழ் மோதிரம் கிடக்க சட்டென சாரலின் விழிகளில் தென்பட்டுவிட்டது.

"அப்பாடி மோதிரம் கிடைச்சுடுச்சா." நிம்மதி பெருமூச்சு ஒன்று விட்ட சரண்யா "அப்ப வா சீக்கிரம் மீட்டிங்கு போகலாம்."

தன் கைவிரலில் மோதிரத்தை அணிந்தபடி மேசையின் மேல் இருக்கும் விஜய்யின் டைரியை சாரல் பார்க்க. டைரியை திறந்து பார் என சாரலின் மனம் உந்த. மூளையோ அடுத்தவர் டைரியை பார்ப்பது அனாகரிகம் என்று எடுத்துரைக்க. மூளையா மனமா என்ற குழப்பத்தில் மனமே வென்றது. அடுத்த கணம் விஜயின் டைரியை கையில் எடுத்திருந்தாள் சாரல்.

விஜய்யின் டைரி சாரலின் மனதிற்கு ஏதோ இதம் அளிப்பது போல் இருக்க. தன் சாயம் பூசாத பிஞ்சு விரல்களால் மென்மையாக டைரியை ஒரு முறை வருடிவிட்டு முதல் பக்கத்தை திருப்ப போக, விதி சரண்யா ரூபத்தில் விளையாடியது.

"ஏய் இப்ப எதுக்கு அந்த டைரியை எடுத்து வச்சிட்டு இருக்க. உனக்கு மோதிரம் கிடைச்சிடுச்சு தானே. இப்ப வா மீட்டிங்கிற்க்கு போகலாம். ரொம்ப முக்கியமான மீட்டிங்ன்னு இரண்டு மூன்று முறை புலனம் (வாட்சப்) செயலியில் செய்தி வந்திருந்தது." சாரல் கையிலிருந்த டைரியை பிடுங்கி விஜயின் மேஜையின் மீது வைத்துவிட்டு, சாரலை விடாப்பிடியாக இழுத்துச் சென்றிருந்தால் சரண்யா.

சரண்யாவின் கை பிடியில் சிக்கிய புறாவைப் போல் விஜயின் டைரியை ஒரு ஏக்கப் பார்வை பார்த்தபடி சரண்யாவுடன் மீட்டிங்கிற்கு பறந்திருந்தால் சாரல்.

"டேய் அர்ஜுன் எல்லோரும் மீட்டிங்கு வந்துட்டாங்க. எங்கடா சாரலை மட்டும் காணேம்?." சுற்றிலும் பார்த்தவாறே பத்தாவது முறையாக இதே கேள்வியை கேட்டு அர்ஜுனுக்கு கண்களில் கொலைவெறியை ஏற்றிக்கொண்டு இருந்தான் விஜய்.

கண்களில் அனல் பறக்க விஜய்யை ஒரு நொடி முறைத்துவிட்டு "வருவா டா. எங்க போகிற போறா? ஒரு பக்கம் மீட்டிங் வச்சு அவன் கொல்லுறான். இன்னொரு பக்கம் நீ பாடாய் படுத்தி எடுக்கிற."அர்ஜுன் புலம்பிக் கொண்டிருக்கும் போதே சாரல் மீட்டிங் நடக்கும் நீண்ட பொது அறைக்குள் நுழைந்திருந்தாள்.

"இதோ வந்துட்டா டா உன்னுடைய புண்ணியவதி. உனக்கு புண்ணியமா போகும். சிறிது நேரம் என்னைய தொந்தரவு பண்ணாம இருடா ராசா. எனக்கு மண்டை வலிக்குது." விஜய்யிடம் கெஞ்சி சந்தித்தல் கலந்துரையாடலில் தன் கவனத்தை திசை திருப்பினான் அர்ஜுன்.

"சிறந்த பணியாளர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது நீங்கதான் விஜய்." சவின் வேண்டுமென்றே விஜய்யை கோர்த்துவிட்டு கேலிப் புன்னகையுடன் உங்களுக்கு சம்மதமா விஜய் என கேட்க.
அதற்குள் கலந்துரையாடல் கூட்டத்தில் ஒருவன் "மேடைக்குன்னு ஒரு மரியாதை இருக்கு சார். அழகும் திறமையும் இருக்கவுங்க தொகுத்து வழங்கினா தான் நல்லா இருக்கும்."

கூட்டத்தில் அனைவரின் முன்பும் கேலி கிண்டலுக்கு ஆளானதையும் சாரலின் முன்பு அவமானப்பட்டதையும் எண்ணி விஜய் கூனிக்குறுகி போக. தன் நண்பனின் கையை ஆறுதலாக பற்றி அழுத்திக்கொண்டான் அர்ஜுன்.

"அப்ப சாரலும் விஜய் கூட சேர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கட்டும். அழகும் திறமையும் நிறைந்தவள் தானே சாரல்." சாரலிடம் வழிந்தபடி சவின் "என்ன சாரல் உங்களுக்கு விஜய் கூட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சம்பந்தமா?."
சாரல் ஒருபோதும் விஜயுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விரும்பமாட்டாள் என சவின் நினைத்திருக்க. அவள் அதற்கு மாறாக எனக்கு "சம்மதம் சார்."

"விஜய் உங்களுக்கு சம்மதமா?." அனைவரின் முன்பு அவமானப்பட்டதில் உடைந்து போய் அமர்ந்திருந்த விஜயிடம், திடீரென்று இந்தக் கேள்வியை சாரல் கேட்க.

சாரலின் எதிர்பாரா கேள்வியில் திகைத்திருந்தான் விஜய்.

சாரலின் திடீர் கேள்வியில் திகைத்திருந்த விஜய் சாரலுக்கு பதில் அளிக்க முடியாமல் நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள. தலையை மேலும் கீழும் ஆட்டி தன் பதிலை செய்கையில் தெரிவித்திருந்தான் சக்தி.

சாரல் விஜயின் பதிலிற்க்கு இதழ் விரியாமல் அழகாய் புன்னகைக்க விஜய்க்கு வெட்கம் வந்து தொற்றிக் கொண்டது.

"ஏண்டா! இவ்வளவு நாள் அந்த பொண்ணு கண்ணுக்கு நீ தெரிய மாட்டியான்னு வருத்தப்பட்ட. இப்ப சாரலே உன்கிட்ட வலிய வந்து பேசுறா. நீயும் பதிலுக்கு பேசலாம்ல. அத விட்டுட்டு தலையை ஆட்டிட்டு இருக்க." விஜயிடம் ஒழுங்காக வாய் திறந்து பதில் பேசுடா என்று அறிவுரை வழங்கினான் அர்ஜுன்.

"நான் என்னடா பண்ணட்டும். அவ திடீர்னு இப்படி கேட்பான்னு நினைக்கல. அதான் எனக்கு பேச்சே வரல. மறுபடியும் பேசினா அப்ப நல்லபடியா பேசுறேன்." சிறு பிள்ளையாய் விஜய் பதில் சொல்ல. விஜயின் மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டான் அர்ஜீன்.

"அவன் அவன் ஒரு பொண்ணு டைம் கேட்டா கூட அந்த கேப் யூஸ் பண்ணி போன் நம்பர் வாங்கிருறானுங்க. இவன் என்னடான்னா." அர்ஜுன் விஜயிடம் பேசிக்கொண்டிருந்தாலும் சாரலின் மேல் ஒரு கண்ணு பதிந்திருக்க. சாரல் அடிக்கடி தன் கைபேசியில் வரும் செய்தியை பார்த்து மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் ஒன்றாய் அவள் கண்ணில் பிரதிபலிக்க.

"டேய் விஜய்?."

"என்னடா?."

"சாரலை பார்த்தியா டா நீ."

"ம்ம் பார்த்துட்டே தானா இருக்கேன்."

"டேய் கிறுக்கா சாரலோட நடவடிக்கை புதுசா இருக்கு."

சாரல் அடிக்கடி கைபேசியில் வரும் மெசேஜ் (செய்தியை) பார்த்து. "வெட்கப்படுறா சிரிக்குறா ஆளே மாறி இருக்கா டா."

"என்னடா சொல்லுற?." அர்ஜுன் சொன்ன பிறகுதான் சாரலின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கியிருந்தான் விஜய்.

கைபேசியில் வரும் செய்திகளை பார்த்து சாரலின் கண் இமைகள் அழகாய் விரிய, இதழில் ஒரு வெட்க புன்னகை குடிகொண்டது. அதே கணம் விஜயின் கண்கள் சவினை நோக்கிச் செல்ல சவினும் கைபேசியில் வரும் செய்தியே கண்ணாக இருந்தான்.

விஜய் அர்ஜுனை அழைத்து சவினை கண்களால் சுட்டிக்காட்டி.
"டேய் அவனும் கைப்பேசியில் செய்தி அனுப்பிட்டு இருக்கான். ஒருவேளை சவினும் சாரலும் தான் பேசிக் கொண்டு இருப்பார்களோ?." என்று சந்தேகமாய் வினவினான்.
"கண்டிப்பா இருக்காது டா." என்று ஆணித்தனமாக அடித்துச் சொன்னான் அர்ஜுன்.
"எப்படிடா சொல்லுற?." விஜய் சுவாரசியமாக கேட்க.
"சவின் சாதாரணமாகத்தான் கைப்பேசியில் செய்தி அனுப்புகிறான். அவன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லை. ஆனா சாரலை பாருடா செய்தி அறிவிப்பு தொனி ( நோட்டிபிகேஷன் டோன்) கேட்டாலே அவ கண்ணில் ஆர்வம் தெரிகிறது." என்றான்.
அப்ப சாரல் யார் கூட பேசுறா என்பது இருவருக்கும் புரியாமல் போகவே.
நாட்களும் அதன் போக்கில் சுழல அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அந்நாளும் வந்தது.
விஜய் வெள்ளை நிற பட்டு வேஷ்டியில் ப்ளூ நிற காட்டன் சட்டையில், ஆண்களுக்கே உரிய கம்பீர தோரணையில். மேடையில் ஏறி ஒலிபெருக்கியை சரிசெய்தப்படி சாரல் இன்னும் வரவில்லையே?. வருவாளா?. மாட்டாளா?. என்னுடன் மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அவளுக்கு விருப்பம் இருக்குமோ?. இல்லையோ?. என்று எண்ணிலடங்கா கேள்விகள் விஜயின் சிந்தையில் ஓடிக்கொண்டிருக்க. விஜய் சிறிதும் எதிர்பார்க்காத அந்நேரம் அவனுக்காக ஒலிபரப்பப்பட்டது அப்பாடல்.
அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி
சந்தித்தேன் அடி உன் கண்களால் சுவாசித்தேன் அடி உன் பார்வையால்

சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய்மரம் நதி காற்று நீ நான் தாவரம்
இயந்திர மனிதனை போல் உன்னை செய்வேனே
இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைத்தேனே...
அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
கவிஞனுக்கெல்லாம் குறும்பு அதிகம் கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
நடை நடந்து போகையில் நீ இலக்கணமே
ஞானம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே

நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதர்க்கு முகவரி நீ தானே
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி என்னிடம் சேரும் முகவரி நீதான்
மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ

இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தே

பாடலின் ஒவ்வொரு வரிகளும் சாரலுக்கு தகுந்தார்போல் இருக்கவும் விஜய் இந்தப் பாடலை மிகவும் நேசிக்க தொடங்கி இருந்தான். அனார்கலி பாடலின் வரிகளை அலைபேசி தொனியாகவும் மாற்றியிருக்க. யார் இந்தப் பாடலை ஒளிபரப்பியது எனச் சுற்றிலும் பார்வையைச் சுழல விட அவன் கண்ணில் தென்பட்டால் சாரல்.
மெரூன் நிற அதிக தங்க ஜரிகை வேலைப்பாடு செய்த புடவையில், நெற்றியில் அடர்த்தியான இரு புருவங்களுக்கு மத்தியில் கருமை நிறத்தில் சிறிய பொட்டிட்டு, புடவைக்கு சரியாக பொருந்த கூடிய நேரத்தில் காதணி அணிகலன் அணிந்து, கருமை நிற கூந்தலில் மல்லிகை பூ சூடி, உதட்டுச் சாயம் பூசாத எடுப்பான இதழில் சக்தியை பார்த்து கள்ளப் புன்னகை ஒன்று உதிர்த்துவிட்டு, மேடையில் நின்று இருக்கும் சக்தியை நோக்கி அன்னநடையிட்டு சக்தியின் அருகில் வந்து நின்றாள் சாரல்.

சக்தி தன் எதிரில் நின்றிருக்கும் சாரல் இடமிருந்து கண்களை மீட்டெடுக்க முடியாமல் நின்றிருக்க. சக்தியின் கை பிடித்து உலுக்கி நிஜ உலகிற்கு மீட்டு வந்தால் சாரல்.
"எனக்கு இந்தப் புடவை எப்படி இருக்கு விஜய்?. நல்லா இருக்கா?." விஜயின் பதிலுக்காக சாரல் ஆவலாக காத்திருக்க.
ஒரு முறையேனும் அனார்கலியை புடவையில் பார்த்துவிட வேண்டும் என்ற விஜயின் ஆசை இன்று நிறைவேறிவிட்ட சந்தோசத்தில். சவின் கேட்டதற்கிணங்க புடவை கட்டி வந்தாலோ என்ற சந்தேகம் தோன்றவும் சாரலை மிரட்சியுடன் பார்த்தான்.
"என்னாச்சு விஜய் பதில் சொல்லுங்க நல்லா இருக்கா?."
"ஹீம்ம் நல்ல இருக்கு சாரல்." அவன் சொன்ன பதிலில் காற்றுகே வலித்து விடுமோ என மென்மையாக பதில் சொன்னான்.
"என்னை புடவையில் பார்க்க வேண்டும் என்ற உங்களின் ஆசை நிறைவேறிவிட்டது." சாரல் தலையை அழகாக ஒரு பக்கம் சாய்த்து இதழ் விரியாமல் அழகாய் புன்னகைக்க.
விஜய் அதிர்ச்சியாகி "உங்களுக்கு எப்படி தெரியும்." என சாரலை ஆழ்ந்து பார்த்தான்.
"பதில் சொல்லவா?." விஜய்யிடம் விளையாட நினைத்து சாரல் கேட்க.
"ஹீம்ம் சொல்லுங்க."
"உங்களுடைய எல்லா ஆசையும் எனக்குத் தெரியும்." என்று மேடையிலேயே விஜய்யின் கையுடன் தன் கையைக் கோர்த்து ஒட்டி நின்றால் சாரல்.
"என்னைய கல்யாணம் பண்ணிக்கறீங்களா விஜய்?." விழிகளில் நீர் திரள விஜயை ஏக்கத்துடன் பார்த்து கேட்டாள் சாரல்.
சாரலின் காதலுக்காக காத்திருந்த விஜய்க்கு இன்று தன் காதல் கைகூடி விட்ட எல்லை இல்லா மகிழ்ச்சியில்.
விஜய் சற்று தயக்கத்துடன் சாரலின் தோளில் கை போட்டு மென்மையாக சாரலை அணைத்துக் கொள்ள. மேடையின் கீழே நின்று இருக்கும் நண்பர்கள் கூட்டம் சந்தோசத்தில் ஆரவாரம் செய்ய. அர்ஜுன் சரண்யா இருவரும் வெற்றி குறியை காட்டி மகிழ்ந்தனர்.

மீட்டிங் நடந்த நாள் அன்று:
சாரலுக்கு விஜய்யின் டைரியை படித்தே ஆக வேண்டும் என்று சாரலின் மனம் உந்த. சரண்யாவுடன் மீட்டிங்கிற்க்கு செல்ல மனம் வராமல் சரண்யாவின் கையை உதறிவிட்டு விஜய்யின் கேபினை நோக்கி ஓடினால் சாரல். சாரலை தொடர்ந்து சரண்யாவும் ஓடிவர. சாரல் விஜயின் கேபின் அருகில் வந்து மூச்சிறைக்க நின்றிருக்க.
"எதுக்குடி இப்படி ஓடி வந்த." சரண்யாவும் மூச்சிரைக்க வந்து நின்றாள்.
"இந்த டைரியை படிக்க சொல்லி மனசு ஏதோ சொல்லிட்டே இருக்கு." விஜயின் மேசையின் மீது இருக்கும் டைரியை சாரல் எடுத்து ஓபன் செய்ய. சாரலுடன் சரண்யாவும் அந்த டைரியை படிக்க தொடங்கியிருந்தாள்.
ஒவ்வொரு பக்கத்திலும் சாரலை அவன் தத்ரூபமாக வரைந்து வைத்திருக்கும் ஓவியமும். விஜய்யின் ஆசைகளும். சாரலின் மேல் விஜய் வைத்திருந்த காதலை மொத்தமாய் அவன் உருகி வடித்திருக்க. சாரலிற்க்கு விஜய்யின் காதல் திக்குமுக்காட செய்தது.
சாரலுடன் சேர்ந்து படித்த சரண்யாவிற்கு மெய்சிலிர்க்க "சாரல் உன்னை உருகி உருகி காதலிக்கிறான் டி. ச்சே என்ன லவ் பா. சான்சே இல்ல." என்று விஜய்யை புகழ்ந்து தள்ளினாள்.
சாரலிற்க்கு விழிநீர் படலத்தில் நீர் கோர்க்க "என் அப்பா எனக்கு சரியான வாழ்க்கைத் துணை இவன் தான் என்பதை காட்டி விட்டார்." என்றால்.
"சரண்யா எனக்கு ஒரு உதவி செய்யறியா?." கெஞ்சலாக கேட்டாள் சாரல்.
"ம்ம் சொல்லு டி."
"இந்த டைரியை இப்ப முழுசா படிக்க முடியாது. நம்ம படிச்சதும் விஜய்க்கு தெரியக்கூடாது. அதனால் விஜயுடைய ஒவ்வொரு ஆசையும் வாட்ஸ் அப் செயலியில் போட்டோ எடுத்து நீ எனக்கு அனுப்பு. நான் மீட்டிங் நடக்கிற இடத்துக்கு விஜயை பார்க்க செல்கிறேன். விஜய் உடைய காதலை அவர் கண்ணில் பார்க்கணும்." என்று ஆவலாக விஜயை பார்க்க மீட்டிங் ஹாலிற்கு விரைந்திருந்தாள் சாரல்.
சரண்யா அனுப்பிய ஒவ்வொரு செய்திக்கும் தான் சாரலின் கண் இமைகள் அழகாய் விரிந்தன.
விஜயின் அணைப்பில் இருந்த சாரல் விஜயிடம் இருந்து சிறிது விலகி தன் கையில் அணிந்திருந்த அப்பாவின் மோதிரத்தை விஜய்க்கு அணிவித்து அழகாய் விஜயை பார்த்து புன்னகைக்க.
நண்பர்களின் கரகோஷம் ஆரவாரமும் விசில் சத்தமும் காதை கிழித்தது. சவினும் இவர்களின் காதலுக்கு பச்சைகொடி காட்டி விட. விருது வழங்கும் நிகழ்ச்சியுடன் இவர்களின் காதல் பயணம் இனிதே ஆரம்பமானது.

Last edited:

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom