• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 7 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – 7

ஆதி பிரயுவின் போனில் அழைத்த போது எடுக்காத ப்ரயு, ஹாஸ்பிடல் எண்ணில் அழைக்கவும் வேறு வழியில்லாமல் எடுத்து பேசினாள்.

“ப்ரயு ப்ளீஸ் கட் பண்ணாத உன் போன் எடுத்து என்கிட்டே பேசு ஹாஸ்பிடல் போனில் ரொம்ப நேரம் பேச முடியாது. ப்ளீஸ் டா” என்று கெஞ்சவும், சரி என்று வைத்தாள்.

அவள் வைக்கவும், அவளின் மொபைலுக்கு அழைத்தான். அவள் எடுத்து, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும்,

“ப்ரயு கோபப்படாதே நான் உன்கிட்ட பேசாம இருந்தது தப்புதான். ஆனால் அதுக்கு காரணம் இருக்கு. என்னாலே சாட் வர முடியாது நைட் உன்கிட்ட போன்லே பேசுறேன். ப்ளீஸ் போன் அட்டென்ட் பண்ணு” என்றான்.

அவள் பதில் பேசாமல் இருக்கவும், “ப்ரயு ப்ளீஸ் பேசுடா. போன் அட்டென்ட் பண்றியா “ என மீண்டும் ஒருமுறை கெஞ்சவும் சரி என்று பதில் மட்டும் சொன்னாள்.

“பாய் டா” என்று வைத்து விட்டான்.

போன் கட் செய்தவன் தன் நண்பன் பிரபுவிற்கு கால் செய்தான் பிரபுவும் ஆதியும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் ஒன்றாக படித்து, ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள்.

ஆதியும், பிரபுவும் சேர்ந்துதான் அந்த ஆன்சைட் வேலைக்கு அடிப்படை வேலைகளை பார்த்தார்கள். ஆதியின் திருமணத்தின் போது அந்த அடிப்படை வேலைகளுக்காக இப்போது ஆதி சென்றிருக்கும் பிரபு இடத்திற்கு சென்றிருந்தான்

“ஹலோ பிரபு “

“ஹே ஆதி சொல்லுடா. இப்போ எப்படி இருக்க ? “

“ஹ்ம்ம். பெட்டெர் டா“

“என்னடா சோகமா இருக்க ?”

“இல்லடா ப்ரயு ரொம்ப கோபமா இருக்கா போல போன் அட்டென்ட் பண்ணாமல் கட் பண்றா. ஹாஸ்பிடல் போன் அடித்து அவகிட்ட பேசியிருக்கேன். நைட் கண்டிப்பா போன் அட்டென்ட் பண்ணுனு. அவ கோபத்தை எப்படி சமாளிக்கிறதுனு தெரியல ”

“ஏண்டா நான் அன்னிக்கே சொன்னேன் வீட்டிலே பேசிடுன்னு நீ கேட்டியா ?”

“டேய் நீ வேற நான் தான் என் நிலைமை சொன்னேனே “

“அப்போ அனுபவி இன்னிக்கு நீ நைட் பேசினதுக்கு அப்புறம் இன்னும் கோபம் ஜாஸ்தி ஆக போகுது பார்த்துக்கோ ”

“சரி அத நான் பார்த்துக்கிறேன். இப்போ உன்கிட்ட நான் ஓகேன்னு சொல்லத்தான் பேசினேன். தேங்க்ஸ் டா. நீ நைட் பேசு”

பிரபுவும் பை சொல்லி விட்டு வைத்தான்.

பிரத்யுவிற்கு யோசனை. ஆதியின் மேல் எவ்ளோ கோபம் இருந்தது. அவன் பேசினவுடனே இறங்கி விட்டேனே. அவன் பேசாமல், ரிப்ளை பண்ணாமல் இருந்தது சரியா? என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் எங்கோ ஓடியது. அடக்கி வேலை முடித்தவள் அன்று இரவு அவன் பேசுவதற்காக காத்து இருந்தாள்.

இரவு முதலில் தன் அன்னைக்கு அழைத்தவன், அவர் எடுத்தவுடனே

“ஆதி மனசுலே என்னடா நினைச்சுகிட்டு இருக்க ? உன் மனைவிக்கு சப்போர்ட் பண்ணலேன்னு இப்படி போன் பண்ணாமல் இருப்பியா? இது வரைக்கும் என்னிக்காவது இப்படி நடந்திருக்கியா ? எல்லாம் அவள் சொல்லி குடுத்து செய்யறியா ? நீ அவளுக்கு என்ன வேண்டும் என்றாலும் வாங்கி கொடு. எங்கிட்ட எதுவும் கேட்காத ” என்று பொரிந்து விட்டார். ஆதியை பேசவே விடவில்லை அவர் நிறுத்த மாட்டார் என்றவுடன்

“அம்மா’ என்று சத்தமாக அழைத்தவன் அவர் பேச்சை நிறுத்தவும் “கொஞ்சம் நான் சொல்றத கேட்கறீங்களா ? எனக்கு இங்கே கொஞ்சம் உடம்பு சரியில்ல அதனால் பேசல. உங்ககிட்ட சொன்னால் நீங்க கவலைபடுவீங்கனு சொல்லலே அதோட இதுவரைக்கும் இப்படி இருந்தேனான்னு கேட்கற நீங்க, இது வரைக்கும் நான் சொல்லி ஏதாவது மறுத்து பேசியிருக்கீங்களா ? இப்போ நான் எது செய்தாலும் அதை ஏன் பிரயுவோட சம்பந்தப் படுத்தறீங்க உங்க கிட்ட நான் இத எதிர்பார்க்கல “ என்று அவன் நீளமாக பேசி முடிக்கவும், அவன் அன்னைக்கு பதில் வரவில்லை.

கொஞ்சம் கழித்து “என்னவோ சொல்லு அப்புறம் “

“வித்யா, நீங்க நல்லாருக்கீங்களா ? செக்கப் போயிட்டு வந்தீங்களா?’

“ஹ்ம்ம் எல்லாம் நார்மல் தான் அப்புறம் இந்த வார கடைசிலே அவள அவங்க வீட்டுலே கொண்டு விடனும் வெறுங்கையோட அனுப்ப முடியது. அவளுக்கும், மாப்பிள்ளைக்கும் டிரஸ் எடுத்துட்டு , கொஞ்சம் பலகாரம் செஞ்சு கொடுத்து அனுப்பனும்.”

“சரி நீங்க வேணுங்கறத எடுத்துக்கோங்க. வேற எதுவும் இல்லையே“ என்று கேட்டு வைக்க போனவன்,

“ஆதி “ என்ற தன் அம்மாவின் அழைப்பில், மீண்டும்

“சொல்லுங்கம்மா “ என்றான்

“இல்லை. உடம்பு சரியில்லைனு சொன்னியே என்னாச்சுடா ? “

“ஒண்ணுமில்லமா கிளைமேட் மாறினதுலே கொஞ்சம் காய்ச்சல் வேற ஒன்னும் இல்லை.”

“அதுக்கு ஏண்டா இத்தனை நாள் பேசாம இருந்த ?”

“இல்லமா இங்கே என்னை கவனிச்சிக்க யாரும் இல்லலயா. அதுனாலே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிட்டேன். அங்க போன்லாம் பேசக் கூடாது. அதோட சொன்னா நீங்க கவலைப்பட போறீங்கன்னு தான் சொல்லலே.”

“இப்போ எப்படி இருக்கடா ?”

“நல்லா இருக்கேன்மா. வீட்டுக்கு வந்துட்டேன் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்சுடுவேன் “

“சரிடா. உடம்ப பார்த்துக்கோ. சத்தானதா சாப்பிடு ரொம்ப கவலையா இருக்குடா. எதுனாலும் பேசாமல் இருக்காதா. சரியா ?”

“சரிம்மா நான் பார்த்துகறேன். நீங்க கவலைபடாதீங்க. பாய் மா” என்று வைத்தான் .

பிரயுவின் மாமியார் பேசியது அவள் காதிலும் விழுந்தது. அவன் அழைக்கும் போது எடுக்க மனமில்லை தான். இருந்தாலும் இந்த கோபத்தினாலும் எந்த லாபமும் இல்லை என்று எண்ணியவளாக எடுத்தாள்.

“பிரயும்மா “

“ஹ்ம்ம் ”

“சாரி டா உனக்கு போன் பண்ணாம விட்டதுக்கு “

“என் மேல என்ன கோபம்.? நான் பேசினதிலே என்ன தப்புன்னு தெரியல ?” என்று அவள் கூறும் போதே அவள் குரல் கலங்கவும், ஆதிக்கு துடித்தது.

“ஹேய் உன்கிட்ட கோபமெல்லாம் சத்தியமா கிடையாதுடா, அன்னிக்கு எனக்கு கில்டி பீலிங்க்ஸ் தான் வேற ஒண்ணுமில்ல “

“அப்போ ஏன் பேசல ? மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணல”

“அது நான் சொல்றது கேட்டு டென்ஷன் ஆகாத அன்னிக்கு மறுநாள் எனக்கு சின்ன ஆக்சிடென்ட் ஆயிடுச்சு ஹாஸ்பிடல் அட்மிட் ஆயிட்டேன். அங்கே போன் யூஸ் பண்ண விடல அதான் பேசல “

“ஹாஸ்பிடலில் அட்மிட் ஆயிருந்தீங்களா ? ஆனால் உங்க ஆபீஸ்க்கு மெயில் அனுப்பி கேட்டேனே. அவங்க ஆபீஸ் வந்ததா சொன்னாங்களே .”

“ஆமாம் கம்பெனி மெயில் ஐடி என் செகரட்டரி தான் ஓபன் பண்ணுவாங்க. நான் தான் அப்படி ரிப்ளை கொடுக்க சொன்னென்”

“ஏன் வீட்டுக்கு சொல்லலே. உங்களுக்கு ஏதோ ஒன்னுனா எங்களுக்கு எப்படி தெரியும்.? ஏன் இப்படி பண்றீங்க ?” என்று கிட்டத்தட்ட அழ ஆரம்பித்து விட்டாள்.

“ஹே குட்டிமா ப்ளீஸ் அழாதடா நீங்க எல்லோரும் பயப்படுவீங்கன்னுதான் சொல்லலே எனக்கு ஒன்னும் இல்லடா “

“அம்மா கிட்ட ஜுரம்ன்னுதானே சொன்னீங்க ஆனால் இப்போ விபத்துன்னு சொல்றீங்க”

“ஆக்சிடென்ட்ன்னு சொன்னால் அம்மா ரொம்ப பயப்படுவாங்கன்னு சொல்லலே ஜுரம்னா எல்லாருக்கும் வரதுன்னு கொஞ்சம் ஈசியா எடுத்துப்பங்கன்னு அப்படி சொன்னேன். ஆனால் உன்கிட்ட பொய் சொல்ல விரும்பல. “

“பெரிய அடியா ஒன்னும் பயமில்லியே . நான் வேணும்னா அங்கே வரவா ?”

“சின்ன பிராக்ச்சர் தான் கையில்தான் பயப்பட ஒண்ணுமில்ல இன்னிக்கு கட்டு பிரிச்சிட்டாங்க கொஞ்சம் வெயிட் மட்டும் தூக்காமல் பார்த்துக்க சொன்னங்க கைய ஸ்ட்ரெயின் செய்ய வேண்டாம்னு தான் சாட் பண்ணல ஒரு பத்து நாள் கழிச்சு சாட்டில் பேசலாம் ” .

போனில் பேசினால் பைசா அதிகம் என்பதோடு, வீடியோ சாட் செய்தால் ஒருவர் மற்றவர் முகம் பார்த்து பேசலாமே என்பதால்தான் அவர்கள் போனில் குறைவாக பேசுவது. இப்போ IMO போன்ற ஆப் மூலம் வீடியோ போன் பேசலாம் என்றாலும் என்னவோ சிஸ்டம் முன் உட்கார்ந்து செய்வது போல் அது எளிதாக இருப்பதில்லை.

கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ப்ரயு “சரி உடம்ப பார்த்துக்கோங்க ஆண்டிபயோடிக் டேபிலேட் கொடுத்துருக்கங்களா சாப்பாடு எப்படி சாப்பிடுறீங்க? எந்த கையில் அடிபட்டிருக்கு ?”

“லக்கிலி இடது கையில்தான் அடி பட்டிருக்கு. டேபிலேட் போட்டுட்டேன் சாப்பாடு இங்கே என்னோட கொலீக் ஒருத்தர் கொண்டு தறாங்க அது எல்லாம் ஓகே.”

“நான் விசா ட்ரை பண்ணவா?”

“முதலில் அப்படிதான் நினைச்சேன் ஆனால் இப்போ உனக்கு விசா ப்ராசெஸ் பண்ண என்னால முடியாது. அதோட இப்போ நீ வந்தா வித்யா டெலிவரி முடியற வரைக்கும் அம்மா தனியா இருக்கணும். இப்போ தான் வீட்டில் நீ நிறைய ப்ரோப்லேம் ஃபேஸ் பண்ணிருக்க. அதனால நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். வித்யா டெலிவரி முடிஞ்சு உன்னை என்னோட கூப்பிட்டுக்கிறேன்”

பிரயுவிற்கு வருத்தமாக இருந்தது. ஆதிக்கு விபத்து என்றவுடன் அவள் மனது பதற ஆரம்பித்து விட்டது. அவன் சொல்வது நியாயம் தான் என்றாலும் மனம் கேட்கவில்லை. அவளால் சரி என்றும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள்.

அவளின் அமைதியின் பொருள் அவனுக்கும் புரியாமல் இல்லை. அவளின் வருத்தம் தீர்க்க முடியவில்லையே என்று இருந்தது. ஆனால் அவனாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

“ப்ரயு” என்று அவன் மென்மையாக அழைக்கவும்,

மெதுவாக “சரி” என்றாள்

பிறகு மீண்டும் அவன் உடல் நிலையை பற்றி கவனிக்க சொல்லி வற்புறுத்தினாள்.

ஆதியின் உடல் நிலையில் கவனம் செலுத்திய ப்ரயு, தான் மயங்கி விழுந்ததை அவனிடம் சொல்ல மறந்து விட்டாள். உண்மையில் அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை. ஆதியிடம் சொல்லி விட வேண்டும் என்று எண்ணி இருந்தவள், அவனின் நிலையை பார்த்து விட்டு விட்டாள்.

அவனுக்கு ஒன்றும் ஆக கூடாது என கடவுளை வேண்டினாள்.

பிரயுவிடம் பேசி வைத்த ஆதி, தன் நண்பன் பிரபுவை அழைத்து,

“டேய் மச்சான் பிரயுவிடம் பேசிட்டேண்டா “ என்றான்.

“நல்லதுடா அம்மாகிட்ட சொல்லிட்டியா?”

“இல்லைடா பிரயுவை சமாளிக்கிறதே பெரிய பாடா ஆகிட்டுது இதுலே அம்மா வேறன்னா சமாளிக்கிறது கஷ்டம். அதான் “

“சரிடா எடுத்தவுடனே நல்ல திட்டு வாங்கினியா?”

“ஹேய் நான்தான் அவ ஸ்டார்ட் மியூசிக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சரண்டர் ஆயிட்டேனே. அதோட எனக்கு விபத்துன்னு தெரிஞ்சதும் நான் போன் அட்டென்ட் பண்ணாதது பத்தியே பேசல. சரி அத விடு. நீ உன் சிஸ்டர் விட்டு இங்கே என்ன பார்த்துக்க ஏற்பாடு செய்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்டா. ஹாஸ்பிடல் பில் வேலையும் அவங்க இருந்ததாலே ஈசியா முடிஞ்சுது.”

“இதுல என்னடா நான் இப்போதானே அங்கிருந்து வந்தேன் அங்க உள்ள ப்ரொசீஜர் எல்லாம் எனக்கு தெரியும். அதான் என் மச்சான் கிட்ட பொறுப்ப ஒப்படைச்சு உன்ன பார்த்துக்க சொன்னேன். “

“அதுக்குதான் தேங்க்ஸ் சரி. அடிக்கடி பேசு” என்று கூறி வைத்து விட்டான்.

ஆதியின் கை நன்றாக சரியாகவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். தினமும் பிரயுவின் ஆதி உடல் நிலை பற்றிய பயம் கலந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அவளை அமைதி படுத்தினான்.

அந்த வாரம் வித்யாவை அவள் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஏழாம் மாதம் வளைகாப்பு வைத்துக் கொள்ளலாம் என்று இரு வீட்டு பெரியவர்களும் முடிவு செய்தனர்.

ஆதியும், பிரயுவும் மீண்டும் இரவுகளில் சாட்டில் பேச ஆரம்பித்தனர். நடுவில் அவர்களுக்கு இடையே இருந்த மெல்லிய திரை விலகினார் போல் இருவரும் உணர்ந்தனர். இப்பொழுது எல்லாம் ஆதியின் பேச்சுக்கள் கூடுதல் நெருக்கத்தை காட்டியது. பிரயுவும் சற்று தயங்கினாலும் அவனின் பேச்சுக்களுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்து இருந்தாள்.

இந்த நிலையில் அன்று பிப்ரவரி பதினான்கு இவர்கள் திருமணத்திற்கு பின் வரும் முதல் காதலர் தினம் என்பதால் ஆதி அவளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பி இருந்தான்.

முதல் நாள் இரவு பேசும்போது

“ப்ரயு, நாளைக்கு காலையில் உனக்கு ஒரு கிப்ட் வரும். அதை பார்த்து விட்டு, அதில் சொல்லியபடி செய்ய வேண்டும். “ என்று சொல்லியிருந்தான்.

காலை சரியாக ஆறு மணிக்கு எல்லாம் அவன் அனுப்பிய பார்சல் கிடைத்தது. அதில் ஒரு ஆகாய வண்ண புடவையும், அதற்கு மேட்சிங் ரவிக்கையும் இருக்க, அதோடு ஒரு நல்ல பாக்கிங்கில் ஒற்றை ரோஜாவும், மல்லிகை பூவும் தனியாக இருந்தது.

ஒரு பேப்பரில்

”என் அழகு ரதிக்கு ஆதியின் வேலன்டைண்ஸ்டே பரிசு. இந்த புடவை கட்டி, நான் அனுப்பிய ரோஜா மற்றும் மல்லிகை பூவை தலையில் வைத்து எனக்கு சீக்கிரம் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்லே அனுப்பு. நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.” என்று எழுதியிருந்தது.

வெட்கத்தோடு அவன் சொன்ன மாதிரி செய்தவள், அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்

இவள் போட்டோ அனுப்பின அடுத்த நிமிடம் அவளை அழைத்த ஆதி

“ஹே செல்ல குட்டி சும்மா கலக்குற போ நான் மட்டும் இப்போ அங்கே இருந்தேன் ” என்று முடிக்காமல் விட்டவன்

“ஆதிப்பா.“ என்று அழைக்கவும்,

ரொம்ப நாள் கழித்து அவள் அப்படி கூப்பிடவும், மகிழ்ந்த ஆதி “ஹே ரதிம்மா ரொம்ப சந்தோஷம் டா” என்றான்

“அது என்ன ரதி தீடிரென்று ?” வினவவும்,

“நீ அழகு ரதிமா . அதான் பிரத்யுக்ஷாலேர்ந்து ரதிய சுட்டுட்டேன். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறப்போ உன்ன அப்படிதான் நினைச்சுப்பேன் அதுதான் அப்படி கூப்பிட்டேன். “

“சரி நல்லாருக்கேனா?”

“நல்லாருக்கியாவா ? நீ எப்படி இருக்கன்னு இப்போ வரும் பாரு .. இன்னிக்கு சண்டே தானே கொஞ்சம் கழிச்சு பேசலாமா ?” என்று கேட்டான்

“இல்லபா இன்னிக்கு வித்யாவிற்கு வளைகாப்பு புடவை எடுக்க போகணும் அதுனாலே எப்பவும் போல பேசலாம் “

“சரி இப்போ பாட்டு கேட்டுட்டு போ “ என்றவன் அனுப்பிய பாடல்

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ

மலர் சூடும் கூந்தலே மழைகால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

என்ற பாடல் கேட்டவள் மெய் சிலிர்த்து நின்றவள்​

சற்று நேரத்தில் அவள் மாமியார் அழைக்கவும் வெளியே சென்றாள். அங்கே அவளை ஏற இறங்க பார்த்தார் அவள் மாமியார். காலையிலேயே பார்சல் வந்தது அவருக்கு தெரிந்திருந்தது. ஆதி அனுப்பியது போலே என்று ஒன்றும் சொல்லவில்லை. பிரத்யாவின் முகத்தில் என்றும் இல்லாத மகிழ்ச்சி இருந்தது. அதற்கு ஆயுள் சில நேரமே என்று அவள் உணரவில்லை.

-தொடரும் -
 

Rajam

Well-known member
Member
உஷா உடல் நலம் கவனிக்கலை.
மாமியாரின் பேச்சும் அவளை நலிவுறச்செய்ய, அவளை நினைத்தால் பாவமா இருக்கு.
 

kothaisuresh

Well-known member
Member
இந்த மாமியார் என்றாலே இப்படி தான் இருக்கணுமா? இவ பொண்ணு கஷ்டப்பட்டா எப்படி இருக்கும். இவ உடம்ப கவனிச்சுக்காம விட்டுடப் போறா
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom