• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 5 அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – 5​

அன்று மாலை வீட்டிற்கு சென்ற பிரத்யு எதுவும் மாமியாரிடம் பேச வில்லை. அவள் மாமியாரும் முதல் நாள் போல் தன் மகனிடம் பேசியது எதையும் அவளிடம் சொல்லவில்லை. அவளை கண்டு கொள்ளவில்லை.

இரவு வழக்கம் போல் ஆதி சாட் செய்ய வந்தவனிடம், அவள் வித்யா பேசியதை சொல்லலாம் என்று எண்ணியிருந்தாள்.

“ஹாய் டார்லிங் “ என்றான். நேற்று மாதிரி இல்லாமல் இருவருமே தங்கள் வருத்தங்களை மறைத்து வெளியே சிரித்தார்கள்.

“ஹாய். ”என்றவள், வழக்கம் போல் அவன் சாப்பாடு, வேலை பற்றி விசாரித்தாள். அவனும் அதையே கேட்க, அவளும் பதில் சொன்னாள்.

அவன் முதலில் தன் அம்மா பேசியதை அவளிடம் சொல்லலாம் என்று யோசித்தவன், பிறகு பிரயுவை கஷ்டபடுத்த வேண்டாம் என்று எதுவும் சொல்லாமல் விட்டான்.

பிரயுவும் வித்யா பேசியதை சொல்ல வந்தவள், பிறகு அந்த எண்ணத்தை கை விட்டாள்.

“ப்ரயு நான் ஒன்று சொல்வேன் கேட்பாயா?” என்றான்.

“என்ன ஆதிப்பா?” என்றாள். இப்போதும் இருவருமே அந்த ஆதிப்பாவை கவனிக்கவில்லை.

“இனிமேல் நீயோ நானோ வித்யா விஷயத்தில் தலையிட வேண்டாம். அம்மா என்ன செய்ய சொல்கிறார்களோ அதை மட்டும் செய்வோம். அதோடு தேவை இல்லாமல் நாம் இருவரும் யாரிடமும் கெட்ட பெயர் வாங்க வேண்டாம்.” என்றான்.

பிரயுவிற்கு தோன்றியது, அவன் இப்படி சொல்வதென்றால் இன்றும் ஏதோ நடந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டாள். அவள் ஒரு நிமிடம் யோசித்து விட்டு,

“சரி ஆதிப்பா” . அவள் யோசிக்கும் இடைவெளியில் அவன் உணர்ந்து கொண்டான். அவளுக்கும் ஏதோ பிரச்சினை என்று. அவள் சரி எனவும் விட்டு விட்டான்.

ஆனால் இப்போது அந்த ஆதிப்பவை கண்டு கொண்டவன் , மகிழ்ச்சியோடு,

“ஹே. இப்போ நீ என்ன சொன்ன ?”

“சரி ஆதிப்பா என்றேன் “ புரியாமல் விழித்தாள்.

“ஹே. பிரயும்மா. நீ இன்னிக்கு ஆதிப்பா சொன்னாய். எவ்வளவு நாள் கூப்பிட சொன்னேன். இன்னிக்கு கூப்பிட்டியே “ என்று விசிலடித்தான்

பிரயுவின் முகம் சிவக்க, “அது. அது . என்று திணறினாள்”

அதை வீடியோவில் பார்த்தவன் , அவளை அள்ளி அணைக்க துடித்தான். பிறகு தன்னை கட்டுபடுத்தியவனாக,

“ப்ரயு, நான் சொன்னதற்கு காரணம் நம் வாழ்க்கை யாராலும் சிக்கலாக மாறக் கூடாது. நாம் பேசும் வார்த்தைகள் தான் நம்மை புரிந்து கொள்ள உதவும். வார்த்தைகள் கொஞ்சம் வித்தியாசபட்டாலும், உணர்வுகளின் மூலம் புரிந்து கொள்ள நீயும் நானும் ஒரே இடத்தில் இல்லை.

கணவன் மனைவி உறவு என்பதுதான் கடைசி வரை கூட வருவது. அம்மாவாக இருந்தாலும் ஒரு எல்லை வரையே நிற்க வேண்டியவர்கள். அவர்களை பாசத்தோடு பாதுகாப்பது நம் கடமை. அதற்கு மேல் அவர்களுக்காக யோசித்து , நாம் நம் உறவில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

உனக்கு என்னை பற்றி எந்த குறை இருந்தாலும் நாம் நேரடியாக பேசிக் கொள்ளலாம். நானும் எனக்கு உன்னிடத்தில் பிடிக்காத விஷயத்தை நேரடியாக சொல்கிறேன். நம்மால் மாற்ற முடிந்ததை மாற்றிக் கொள்வோம். இல்லை அப்படியே ஏற்றுக் கொள்வோம்.

இதில் வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம். மேலும் அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு. யாரும் நம்மிடம் கருத்து கேட்டால் சொல்வோம். அதை எடுத்துக் கொள்வதும், விடுவதும் அவர்கள் விருப்பம். நாம் அம்மாவிற்கும், வித்யாவிற்கும் நம் கடமையை செய்வோம்” என்று நீளமாக பேசி முடித்தான்.

சற்று நேரம் யோசித்த ப்ரயு “நீங்கள் சொல்வது சரிதான் ஆதிப்பா. யார் விஷயத்திலும் நாம் தலையிடாமல் ஒதுங்கலாம். ஆனால் அவர்கள் அப்படி இருப்பார்களா? அது சந்தேகம் தான்”.

பிரயுவிற்கு தன் அத்தையோ, வித்யாவோ அப்படி இருப்பார்கள் என்று தோன்றவில்லை.

“எனக்கும் புரிகிறது கண்ணம்மா. ஆனால் வீண் பிரச்சினைகளை தவிர்த்து விடலாமே என்று தான் யோசிக்கிறேன்”

“சரிப்பா” என்று முடித்தாள்.

“எனக்காக ஒன்றே ஒன்று செய்ய வேண்டும் கண்ணம்மா. நீ சொன்னது போல் இப்போதைய நிலையில் நாம் இருவரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அதனால் நான் திரும்பி வரும் வரை அம்மாவை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை நீ எனக்காக செய்ய வேண்டும். ப்ளீஸ்.”

“இது என்ன. ? அது என் கடமை. இப்படி ஒரு நிலையில் என் அம்மா இருந்தால் நான் விடுவேனா? அதே போலே தான் அவர்களும். தனியாக எக்காரணம் கொண்டும் விட மாட்டேன். அதே போல் அவமரியாதையும் செய்ய மாட்டேன். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்” என்று முடித்தாள்.

இதனால் ப்ரத்யா வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவிக்க போகிறாள் என்பதை அப்போது இருவருமே உணரவில்லை.

அன்று பேசி முடிக்கும் போது ஜோக் சொன்னான் ஆதி.

“What is check mate?”

You tell your wife “I saw a lady, looked exactly like you”

Wife asks “Was she beautiful or not?

You can’t say YES OR NO

This is check mate. .

இதை சொன்னவுடன் ப்ரயு கலகலவென சிரித்தாள்.

“ஆதிப்பா நீங்க சொல்லுங்க . அவள் அழகா இருந்தாளா?” என்று வினவ,

“அம்மா தாயே. ஆளை விடும்மா. அவ எப்படி இருந்தா எனக்கென்ன. நீதான் அழகுடி செல்லம். “ என்று பெரிய கும்பிடு போட,

ப்ரயு அழகு காமித்தாள்.

அன்றைய பாடலாக அவன் அனுப்பியது ,

“என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை. .
சொல்ல மொழி இல்லையம்மா . .கொஞ்சி வரும் தேரழகை.​

அதை கேட்ட ப்ரயு சிரித்தபடி தூங்க போனாள்.

மறுநாள் காலை எழுந்தவள், தன் மாமியாரை தேடி போனாள்

“அத்தை. நடந்தது நடந்து போச்சு. இனிமேல் வித்யா விஷயத்தில் நீங்கள் என்ன சொல்றீங்களோ அதை கேட்கிறேன். இதற்காக நாம் ஒருவரை ஒருவர் கஷ்டபடுத்திக்க வேண்டாம்” என்று சொல்ல,

“அந்த எண்ணம் இருக்கட்டும் “ என்று கெத்தாக சொன்னார். சொல்லி விட்டு அன்றைய வேலைகளில் பழைய படி அவளுக்கு உதவியும் செய்தார்.

பிரயுவிற்கு ஏமாற்றமே. அவள் பேசியவுடன், நானும் அது போல் பேசியிருக்க கூடாது என்று மட்டுமாவது சொல்வார் என்று நினைத்திருந்தவள், அவர் அவளை போனால் போகுது என்று மன்னித்த மாதிரி நடந்து கொண்டதை எதிர்பார்க்கவில்லை. எதுவும் காட்டிக் கொள்ளாமல் சாதரணமாக இருந்தாள்.

அவர்கள் பேசியபடி பதினைந்து நாட்கள் கழித்து, வித்யாவை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அது வரை மாமியாரும், மருமகளும் சிரித்து பேச வில்லை என்றாலும், எதிர்ப்பாக இல்லாமல் இருந்தார்கள்.

வித்யா வந்த மறுநாளே பிரச்சினை ஆரம்பமாகியது.

காலையில் ப்ரயு மதிய சமையல் முடித்து, காலை உணவிற்காக பொங்கலும், சட்னி , சாம்பாரும் செய்திருந்தாள்.

சாம்பார் கொதிக்கும் வாசனை தாளாமல் , வித்யாவிற்கு வாந்தி வந்தது.

அதற்கு “சாம்பார் வாசனை ஒத்துக் கொள்ளவில்லையே. எதற்காக அதை செய்கிறீர்கள்? ஏன் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு சமைக்க மாட்டீர்களா? எல்லாம் உங்கள் இஷ்டம் தானா இந்த வீட்டில்?”

இத்தனைக்கும் அன்று காலை மாமியாரிடம் கேட்டு தான் சமைத்தாள். அவருக்கும் அவளுக்கு வாந்தி வரும் விஷயமெல்லாம் தெரியாது. அதனால் அவர் தான் சொன்னார்.

இப்போது வித்யா கோபப்படவும், “சரி. சரி. வித்யா விடு . உனக்கு என்ன வேணுமோ சொல்லு. நான் செய்து தருகிறேன். ப்ரத்யா நீ நாளையிலிருந்து அவளை கேட்டு செய். இப்போ நீ கிளம்பு“ என்றார்.

வித்யாவிடம் நான் தான் சொன்னேன் என்றும் சொல்லவில்லை. அதே சமயம் பிரத்யாவை காப்பாற்றுவது போல் அவளை கிளப்பியும் விட்டார்.

பிரத்யாவிற்கு இதெல்லாம் புதுசாக இருந்தது. அவள் சரியோ, தவறோ தான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வாள். பிறகு தலையை குலுக்கி தன்னை சரி செய்து கொண்டாள்.

இரவுகளில் ஆதியோடு கொஞ்சம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் இருவருக்கும் ப்ரீயாக இருக்கும் என்று. இதனால் அவள் தூக்கம் என்பது கொஞ்சம் குறைவாக இருந்தது.

வித்யா வந்த பிறகு வீட்டில் பிரத்யவிற்கு வேலைகள் அதிகமாக இருந்தது. அவளுக்கு பிடித்தது என்று சமைத்து, வீட்டில் வேலைகளும் பார்த்து, ஆபீஸ் வேலைகளும் பார்க்க பர்த்யாவிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டாள்.

கொஞ்ச நாட்களில் இருவரும் பேசுவதற்கும் தடங்கல் ஏற்பட ஆரம்பிக்க, அது அவர்களின் வாழ்க்கையையே கேள்வி குறி ஆக்கியது.

-தொடரும் -
 

பிரிய நிலா

Well-known member
Member
என்ன கொடுமை சிஸ்..
பிரத்யுவிற்கு எவ்ளோ கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்து சீக்கிரமா வெளிநாடு போயிட்டான்.
ஆனா எவ்ளோ பெருந்தன்மையா வீட்டை பார்த்துட்டு வேலைக்கும் போறா..
தவறு யார் மேல இருந்தாலும் மரியாதை கொடுத்து அமைதியா போறா..

இதைக்கூட மாமியாரும் நாத்தனாரும் புரிந்து கொள்ள முடியவில்லையா..

தங்கத்தட்டில் வைத்து தாங்க வேண்டாம்.. சக மனுஷியாய் மதிக்கலாமே...

நான்கூட ப்ரத்யுவின் புரிதல் இப்படியே தொடருமா என நினைத்தேன். ஆனால் இவளிற்கு தான் மற்றவர்களால் பிரச்சனை வரும் போல...
 

Rajam

Well-known member
Member
விட்டுக்கொடுத்தலும்
பொறுத்துப்போவதும்
நீடிக்குமா.
கணவன் மனைவிபேச்சும்
சுருங்கினால்
இடைவெளி வருமே.
பிரத்யுபாவம்.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom