• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 4

Viswadevi

✍️
Writer
IMG-20210430-WA0029.jpg


இசைக்காதலி என்னைக் காதலி

அத்தியாயம் - 4

சிறுச்சேரியில் உள்ள தங்களது அப்பார்ட்மெண்டுக்கு வந்தவுடன்,அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து கொண்டு வந்தது யாழினிக்கு‌...

அருணின் சமாதானம் எதுவும் எடுபடவில்லை… " இங்கப் பாரு, யாழு எதுக்கு இப்படி அழுகுற? அவ தான் சின்னப் பொண்ணு... ஏதோ புரியாமல் பேசாமல் போறா… அதற்காக இப்படி அழுவாங்களா? முதலில் கண்ணைத் தொட... இன்னும் ஒரு வருஷம் தான். அப்புறம் இங்க வந்ததுக்கு அப்புறம் அம்ருதாவை அடிக்கடிப் போய் பார்த்துக் கொள்ளலாம் சரியா " என

" சரி " என தலையாட்டியவள், "அதற்காக அழலை அருண்… " என்றவள், தொடர்ந்து அம்மா ஞாபகம் வந்து விட்டது என்றாள் மெலிந்த குரலில்...


"சரி விடுடா… ஏதாவது வேலை இருந்தால் பாரு… இல்லை ஓய்வெடு… நான் போய் ஃப்ரெஷ்ஷப் ஆகிவிட்டு வரேன் என்று தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான் "அருண்.

சுகந்திகண்ணன் தான் அருண் மற்றும் அம்ருதவர்ஷினியின் தாய். அவரின் பேருக்கு பின்னால் இருப்பவரைப் பற்றி மட்டும் பேசினால், அருண் ருத்ர தாண்டவம் ஆடி விடுவான். அதனால் அவர்கள் வீட்டில் அருண் இருக்கும் போது கண்ணனைப் பற்றிய பேச்சே எடுக்க மாட்டார்கள். யாழினியும் அருண் மனது கோணாமல் நடந்துக் கொள்வாள்.சுகந்தியை அம்மா என்று தான் அழைப்பாள். சுகந்தியும், யாழினியை தன் மகள் போலத் தான் நடத்தினார்.

யாழினி தாய், தந்தையில்லாமல் ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள்… படிப்பில் படு சுட்டி… அவளது திறமைக்கு, சிறந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. படிப்பு முடியும் முன்பாகவே, வேலையும் கிடைத்தது, கூடவே காதலும் கிடைத்தது‌.

தன் தாய் போல, அமைதியுடன், அறிவுக்களையுடன் இருந்த யாழினியைப் பார்த்தவுடனே பிடித்து விட்டது அருணுக்கு...

எல்லோரிடமும் சகஜமாக பழகுவதற்கு தயங்கி, தயங்கி, யாழினி இருக்க… அவளது தயக்கத்தை யெல்லாம் இலகுவாக உடைத்து விட்டு சிநேகமாகப் பழகினான். அவள் படிப்பை முடித்து, வேலையும் கிடைத்ததால் ஆசிரமத்து விதிப்படி வெளியே வந்து தங்க வேண்டும். அதற்கு அனைத்து உதவிகளையும் அருண் தான் செய்தான். இவர்களது வீட்டிற்கு அருகில் இருந்த, நல்ல லேடிஸ் ஹாஸ்டல் பார்த்து சேர்த்தான்.

அவர்களது விருப்பத்தை ஆசிரமத்து அன்னையிடம் தெரிவித்து அவரது சம்மதத்தையும் வாங்கினான்.
வேலையில் கொஞ்சம் ஸ்டெடி ஆனவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதியளித்தவன், சொன்னது போல இரண்டு வருடம் வேலை பார்த்துவிட்டு, தன் வீட்டுக் கடனையும் முடித்தவுடன் தன் தாயின் சம்மதத்துடன் கரம் பிடித்தான்.

சுகந்தி தாய், தந்தை இல்லாதப் பெண் என்று எந்த குறையும் சொல்லாமல் யாழினிக்கு, தாயும், தந்தையுமாகவே இருந்தாள். அம்ருதாவிற்கு செய்த மாதிரியே இவளுக்கும் அவர்கள் சக்திக்குத் தகுந்த மாதிரி நகைகள் செய்து தந்தார்.

யாழினியோ, சிறு வயதிலிருந்து கிடைக்காத தாய் பாசத்தை ஒரு வருடம் திகட்டத் திகட்ட அனுப்பவித்தாள். பிறகு அருணுக்கு வெளிநாட்டுக்கு வேலை விஷயமாக கம்பெனியில் அனுப்ப…
அருண் மட்டும் தான் செல்வதாக இருந்தது.

சுகந்தி தான் சின்னஞ்சிறுசுகள் பிரிந்து இருக்க வேண்டாம் என்று யாழினியையும் அழைத்துக் கொண்டு போக சொன்னாள். மாட்டேன் என்று யாழினி அடம் பிடிக்க… ஆயிரம் சமாதானங்கள் சொல்லி, இரண்டு வருடம் தானே கண்ணை மூடித் திறப்பதற்குள் சென்று விடும். அதற்குப் பிறகு நான் எப்போதும் உங்களுடன் தானே இருப்பேன் என்று உறுதிக் கொடுத்து அவளை அனுப்பி வைத்தார்.

ஆனால் அவர்கள் சென்ற ஒரு வருடத்தில் சுகந்தி நிரந்தரமாக இவர்களை விட்டு பிரிந்து விட்டார்.

அம்ருதவர்ஷினியை விட யாழினி தான் ரொம்ப உடைந்து போய் விட்டாள். ஆனால் அம்ருதாவிற்காக தன்னை மாற்றிக் கொண்டாள். அம்ருதாவும் இந்த ஒரு மாத காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாள். திருமண விஷயத்தை கேள்விப் பட்ட பிறகு, இருவரிடமும், அவளால் முடிந்தளவு கெஞ்சிப் பார்த்தாள், பிறகு சொல்லக் கூடாததை சொல்லி விட்டாள். அதற்கு அப்புறம் மௌனம், மௌனம் மட்டுமே அவளது மொழியாகிப் போனது.

தாயாய் இருந்து தாங்கிய தன் அத்தைக்கு சின்ன கைம்மாறு. அவருடைய மகளை, தாயின் ஏக்கம் வராமல் பார்த்துக் கொள்ள
வேண்டும் என யாழினி நினைத்திருக்க… அவளோ, என் அம்மா இருந்திருந்தால், இப்படி என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் திருமணம் செய்வார்களா? என்று சொல்லி விட... சொல்லிய சொல், யாழினியின் இதயத்தை துளைத்தது.

டவலால் முகத்தைத் துடைத்தபடியே வந்த அருண், யாழினி போகும் போது எப்படி அமர்ந்து இருந்தாளோ, அப்படியே அமர்ந்து இருப்பதைப் பார்த்தவன், கையிலிருந்த டவலை அவள் மேல் வீசினான்.

திடுக்கிட்டு பார்த்த யாழினி, என்ன என்பது போல் அருணை பார்க்க...

"எவ்வளவு நேரம் உட்கார்ந்துக் கொண்டே தூங்குவ… பேசாமல் வந்து படு நாளைக்கு எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்" என.

"எனக்கு தூக்கம் எல்லாம் வரல அருண்..
நீங்கப் போய் கொஞ்ச நேரம் படுங்க…
நான் அம்ருவோட திங்ஸ்ஸெல்லாம் எடுத்து வச்சுட்டு வரேன். " என்றவள் அங்கிருந்த அம்ருதாவின் அறைக்குள் சென்றாள்.

அவளது பீரோவை திறந்து,அழகாக அடுக்கி வைத்திருந்த,அவளது குர்த்தி, ஜீன்ஸ், டாப் எல்லாவற்றையும் எடுத்து பேக் பண்ணினாள். சாரி அவ்வளவாக அவளுக்கு கட்ட பிடிக்காது. அதனால் சாரி கலெக்ஷன் ஒன்றுமில்லை. அது எல்லாம் இப்பொழுது திருமணத்திற்காக தான் பர்சேஸ் செய்தார்கள். அதற்கு கூட அம்ருதா வரவில்லை. யாழினி தான் பார்த்துப் பார்த்து வாங்கினாள்.

நேர்த்தியாக இருந்தத பீரோவில் இருந்து வெகு சீக்கிரமாகவே எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விட்டாள்.

அவளது லாக்கரில் இருந்த நகைகளையும் எடுத்து வைத்தவள், அங்கு ஒரு பைல் தென்படவே எடுத்துப் பார்த்தாள்‌. அதற்குள் அழகாக ஓவியம் வரையப்பட்டு, பைண்ட் செய்திருந்த கோப்பு இருந்தது. இசை ஸ்வரங்கள் வரையப்பட்டிருக்க இசைக்காதலன் என அழகுற எழுதி இருந்தது.

அதை எடுத்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்து பார்க்கத் தொடங்கினாள் யாழினி.

முதல் பக்கத்தில் மூன்று வயது குழந்தை பியானோ வாசிக்கும் படம் ஒட்டி இருந்தது கீழேயோ கவிதை என்று எழுதி இருந்தது.

"நீ வாசிப்பது பியானோவை மட்டும் அல்ல... என் இதயத்தையும் சேர்த்துத் தான்
இசைக் காதலா…"

அதைப் படித்த யாழினி, கலகலவென நகைக்க ஆரம்பித்தாள்‌. 'இது கவிதையா? யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்று தான் நம்ம குட்டிமா கவிதை என்று வேறு எழுதி வச்சிட்டா…' என நினைத்தவள் அடுத்த பக்கத்தைத் திருப்பினாள்.

அபிநயன், அபிநயன் என அபிநயனோட, ஒவ்வொரு அசைவையும், குறித்து வைத்திருந்தாள். சில பேப்பர் கட்டிங், சில குறிப்புகள், என அபிநயனின் அனைத்து விவரங்களும் பதிந்து வைத்திருந்தாள்.

அவனது வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அபிநயன் இருப்பதுப் போல உள்ள புகைப்படங்கள். அவனது அறை… அவனது கார்கள், பைக் எல்லாவற்றிலும் அபிநயன் இருப்பது போல ஃபோட்டோ.

"அதற்கு கீழே, வீடு அழகாக இருக்கிறது அழகான பால்கனி. ஆனால் அதில் ஊஞ்சல் இருந்திருந்தால் இன்னும் அழகு கூடியிருக்கும். ஃபோட்டோ உபயம் யூட்யூப். " என எழுதியிருந்தாள்.

அவனது ஒவ்வொரு பருவத்தில் உள்ள புகைப்படத்தையும் ஒட்டி வைத்திருந்தாள். அதற்கு கீழே அவளது கவிதையோ, இல்லை ஏதாவது வரிகளோ என எழுதியிருந்தாள்.

அவளது கைவண்ணத்தில் அபிநயன் ஓவியம் வரையப் பட்டிருந்தது. தத்ரூபமாக வரைந்திருந்தாள். அவளது ஓவியத் திறமை யாழினிக்கு தெரியும்... இருந்தாலும் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. பிரம்மித்து தான் போனாள்…

மெல்ல ஒவ்வொரு பக்கங்களாக புரட்டினாள். பதினைந்து வயதில், அபிநயன் ஒரு டிவி ப்ரோக்ராமில் ஜெயித்து, பிரபல மியூசிக் டைரக்டர் கையால் பரிசு வாங்கிய பேப்பர் கட்டிங். அதற்கு கீழே அம்ருதாவின் கையெழுத்தில் கிறுக்கப் பட்டிருந்தது.

" ஹலோ, மை டியர் ஹீரோ… மை ரோல் மாடல்… உனது வழியில் நானும் அடி எடுத்து வைக்க இரண்டு வருடமாக காத்திருந்தேன். ரத்தத்தில் ஊறிய சங்கீத திறமையை அண்ணனுக்காக தவிர்த்திருக்க… இப்பொழுது சின்னத்திரையில் அடியெடுத்து வைப்பதற்காக, பாட்டு கிளாஸுக்கு செல்வேன் என்று அண்ணனிடம் அடம் பிடித்து, முதல் முறையாக அடி வாங்கி... பேச மாட்டேன் என்று வீம்பு செய்த அண்ணனை சமாளித்து, அம்மாவின் முயற்சியுடன் பயிற்சி பெற்று சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் மூன்றாவதாக தேர்வாகி விட்டேன்‌. இந்த பரிசு உங்களுக்குத் தான். இதை விட நான் பெரிதாக எதிர்பார்ப்பது உங்கள் இசையில், உங்களுடன் பாடுவது. அப்துல்கலாம் சொல்லியிருக்கிறார் கனவு காணுங்கள்… நிச்சயம் என்றேனும் நிறைவேறும். நானும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்‌."

அதைப் படித்த யாழினி, முகத்தில் ரகசிய புன்னகை. அம்ருதா, சங்கீதம் கற்றுக் கொள்வதற்கு அவ்வளவு எதிர்ப்பு தெரிவித்த அருண், அவள் போட்டியில் மூன்றாவது பரிசை வென்றவுடன், எவ்வளவு சந்தோஷமாக இருந்தான் என்பது அவளுக்கு தானே தெரியும். காலேஜில் அவன் பண்ணிய அலம்பல் தான் எவ்வளவு… அவர்கள் அப்போது ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் டிபார்ட்மெண்டில் உள்ள அனைவருக்கும் இனிப்பு கொடுத்து சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டான்.

யாழினியை மதியம் காலேஜ் கட் அடித்து விட்டு அவனோடு, தங்கைக்கு பர்ச்சேஸ் செய்வதற்கு வர வேண்டுமென கட்டளையிட்டான். அருண், தங்கைக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும் என அவன் வாங்கி குவித்ததைப் பார்த்து இவள் தான் மலைத்துப் போனாள். போததற்கு, ட்ரீட் என்று இவளுக்கும் பரிசுகள் வாங்கிக் கொடுத்து, ஓட்டலுக்கும் அழைத்துச் சென்று என்ஜாய் பண்ணி ஒருவழியாக எட்டு மணிக்கு தான் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஏற்கனவே மதரிடம் அவன் பர்மிஷன் வாங்கியதால், அவர் வந்து அருணிடம் இருவார்த்தை புன்னகையுடன் பேசிச் சென்றார்." அதெல்லாம் நினைத்து பார்த்தவள், அதேப் புன்னகையுடன் அடுத்தடுத்த பக்கங்களைத் திருப்பினாள்.

அபிநயன் வாங்கிய விருதுகள், முதன் முதலாக இசை அமைத்த பாடல், புதிதாக இசையமைத்த ஆல்பங்கள், என வரிசையாக அதைப் பற்றிய குறிப்புகள் எழுதியிருந்தாள். குறுகிய காலத்தில் பிரபலமான அபிநயனின் பேட்டி பற்றிய பேப்பர் கட்டிங் வைத்திருந்தாள்.

"அதற்கு கீழே, என்னப்பா… இப்படி பண்ணிட்டீங்களே பா… உங்களோடு எப்படியாவது ஒரு ஜோடி பாடல் பாட வேண்டும் என்று காத்திருந்தேன். அதற்கு ஒரு ஆப்பு வச்சிட்டீங்களே அபிநயன் சார். சரி தான் அந்தக் கொடுப்பினை எனக்கு கிடையாது போல... ஆனால் எனக்கு பிடித்த பாடலையாவது உங்களை பாட வைப்பேன்… "என்று எழுதியிருந்தாள்.

அதைப் படித்தவுடன் தனது நாத்தனாரை எண்ணி மனதிற்குள் மெச்சிக் கொண்டாள். வறட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் அடுத்தவர்களுடைய உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் பண்பை எண்ணி வியந்தாள்.

ஆம் அந்த பேட்டியில் உங்களுடைய ஹாஃபி என்ன என்று நிருபர்கள் கேட்டதற்கு, பாடுவது பிடிக்கும் என்றார் அபி.

ஓ… எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்களேன் என்று ஒரு நிருபர் கேட்க... ஒரு பாடலை பாடினார் அபி.
உண்மையாகவே அருமையாக இருக்கிறது. பேசாமல் நீங்கள் சினிமாவில் இசையோடு சேர்ந்து பாடவும் செய்யலாம் என்றதற்கு, பொழுதுபோக்கிற்காக தான் பாடுகிறேன். அப்புறம் என்னுடைய வருங்கால காதல் மனைவியுடன் மட்டுமே டூயட் பாட ஆசைப்படுகிறேன், என அபிக் கூற…

ஓஹோ, என்ற நிருபர்கள்" அப்ப நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா?" என வினவ.

நான் நிச்சயமாக லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிப்பேன். பட் நான் லவ் பண்றது உங்களுக்கு தெரியும் போது,என் காதலி என் காதல் மனைவியாகிருப்பாள். நான் முன்னாடியே சொன்னேனா, நீங்க கேள்வியா கேட்டு என் லவ்வரை பயமுறுத்திடுவீங்க… அதனால கல்யாணம் வரைக்கும் தெரிய விடமாட்டேன் என்றுக் கூறி நகைக்க பேட்டி முடிந்திருந்தது. அதற்குத் தான் அம்ருதா அப்படி எழுதியிருந்தாள்.

வாவ், கிரேட் அம்ரு என்ற யாழினி, அடுத்தடுத்த பக்கங்களைத் திருப்பினாள்.

அதற்குப்பிறகு அம்ருவின் காலேஜில் நடந்த ப்ரோக்ராமிற்கு தலைமை தாங்கிய அபிநயனின் போட்டோவும், அதில் அபிநயனின் கையால் பரிசு வாங்கிய அம்ருவின் போட்டோவும் ஒட்டி இருந்தது.

அதற்கு கீழே ஐ அம் சோ ஹாப்பி டுடே. என் நீண்ட நாள் ஆசையான அபியின் கையால் பரிசு வாங்கிட்டேன். மற்றொன்று நான் ஆசைப்பட்ட படியே எனக்கு பிடித்த பாடலையும் அவரை பாட வைத்து விட்டேன். ஆனால் ஒன்று அவர் போட்டிருந்த ரேபான் க்ளாஸ் மட்டும் என் கையில் கிடைத்தால் போதும், அப்படியே அடித்து உடைத்து விடுவேன். அவ்வளவு கோபத்தில் இருக்கிறேன். அபியின் கண்களின் பாவத்தை என்னிடமிருந்து மறைத்து விட்டது. சூப்பரான பாடல் அவரது உணர்வுகளை கண்களில் பார்க்க, காத்திருந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது, என சோக ஸ்மைலியுடன் முடித்திருந்தாள்.

அப்படி என்ன பாட்டாக இருக்கும் என யோசித்துக் கொண்டு அடுத்த பக்கத்தை திருப்ப முயன்றாள் யாழினி.

'என்ன பண்ணிட்டு இருக்க." என்ற அருணின் குரலில் அந்த புத்தகத்தை தவற விட்டாள்.

" என்ன அருண்… இப்படி திடீர்னு ஏன் பயமுறுத்தினீங்க… நான் பார்த்துக் கொண்டிருந்த பேஜ் மிஸ்ஸாகிடுச்சி." என…
"ஏய், நீ எதுக்கு அம்ருவோடத பாத்துட்டு இருக்க?..."

"நான் அவளோட டைரியையா படிச்சேன். சும்மா அவளோட கலெக்ஷன் தானே பார்த்துட்டு இருந்தேன்,இன்ட்ரஸ்டான ஒரு இடத்துல நீங்க வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டீங்க."

"அதை நாளைக்கு கூட பார்க்கலாம்‌. இப்போ மணியைப் பாரு." என அருண் கூற...

மணியைப் பார்த்தவள்," ஐயோ!" எனப் பதறினாள். அப்புறம் வேகமாக ரிசப்ஷனுக்கு தயாரானாள். ஒரு பக்கம் கிளம்பிக் கொண்டே மனதிற்குள் என்ன பாட்டாக இருக்கும், என்று ஒரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அப்பொழுது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை, இன்னும் சற்று நேரத்தில் அதே பாடலைக் கேட்க போகிறோம் என்பதை…

தொடரும்…..
 

Rajam

Well-known member
Member
அம்ருவுக்கும் அபிக்கும் உள்ளது நட்பு தானே.
அந்த பாடல் என்ன.
அதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்ன.
 

Baby

Active member
Member
இவ்ளோ அவன் மேல பஐத்தியமா இருந்திருக்காளா... இப்டி வெறுக்குற அளவு என்ன நடந்துச்சு... ஓஹ் இந்த யூடியூப்ல தான் அவன் ரூம் எதுனு அவளுக்கு தெரிஞ்சிருக்கா...அப்ப அபிஅம்ரூவைக் காதலிச்சு தான் கல்யாணம் பன்னிருக்கானா....சூப்பர்...
 

Viswadevi

✍️
Writer
அம்ருவுக்கும் அபிக்கும் உள்ளது நட்பு தானே.
அந்த பாடல் என்ன.
அதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்ன.
இதோ வந்துட்டே இருக்கு. படிச்சிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க சிஸ்
 

Viswadevi

✍️
Writer
இவ்ளோ அவன் மேல பஐத்தியமா இருந்திருக்காளா... இப்டி வெறுக்குற அளவு என்ன நடந்துச்சு... ஓஹ் இந்த யூடியூப்ல தான் அவன் ரூம் எதுனு அவளுக்கு தெரிஞ்சிருக்கா...அப்ப அபிஅம்ரூவைக் காதலிச்சு தான் கல்யாணம் பன்னிருக்கானா....சூப்பர்...
ஆமாம் சிஸ்.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom