• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 25 (Final) - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
ஆதி முடிக்கும் வரையில் குறுக்கிடாமல் இருந்த பிரயுவின் முகம் இப்போது இன்னும் வேதனையை காட்டியது. அவளால் சற்று நேரம் எதுவும் பேசவே முடியவே இல்லை.

அவளின் முகத்தை பார்த்த ஆதி, அவள் கையை அசைத்து,

“ப்ரயு. .என்னடா..? நீ என்ன நினைக்கிற சொல்லு?”

“நம் திருமணம் அரேஞ்சுடு மேரேஜ்தானே. இதில் சில நிகழ்வுகள் நாம் எதிர்பாராதது நடக்கும். அதை தவிர்க்க முடியாது. ஆனால் நீங்கள் காதலித்தேன் என்று சொல்லும் போது எனக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.”

“ஏன் என் காதலை நம்பவில்லையா?”

“இதுவரைக்கும் எனக்கு உங்கள் மேல் வருத்தம் இருந்தது தான். நான் அனுபவித்த இந்த மனவலிகளுக்கு நான் வாங்கிய பேச்சுக்கள் தான் காரணம். மற்றபடி இருவருக்கும் பிரிந்து இருக்கும் வேதனை ஒன்று போல் தான் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இப்போதோ என்னுடைய மொத்த வேதனைக்கும் நீங்கள் மட்டுமே காரணம் என்று தோன்றுகிறது.. “

“ப்ரயு என்னடா சொல்கிறாய். ? “

“என்னுடைய இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்க. திருமணம் இரண்டு வருடம் கழித்து செய்து கொள்கிறேன். என்று எண்ணம் வைத்து இருந்ததை என் அப்பா சொன்னார் இல்லியா ?

“ஹ்ம்ம். .ஆமாம்..”

“அப்போ அதை பற்றி தெரிந்து இருந்தும், நீங்கள் என் அப்பா மூலமாக எனக்கு கிட்டத்தட்ட நெருக்கடி கொடுத்து தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் .. ஒரு வகையில் கட்டாய கல்யாணம் தானே. “

“அப்படி இல்லை ப்ரயு. “

“நான் என் அப்பா வீட்டில் இரண்டு வருடம் இருப்பதும், உங்கள் மனைவியாய் உங்கள் வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இல்லியா?”

“புரியவில்லை ப்ரயு”

“என் அம்மா வீட்டில் நான் இருந்தால் அது நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்கேதான் . இங்கே நான் இருப்பது என்றால் அது வேறு . உங்கள் அம்மாவை பார்த்துகொள்வது, வித்யாவை கவனித்து கொள்வது என்பது எல்லாம் இந்த கல்யாணம் மூலம் எனக்கு கொடுக்கப்பட்ட கமிட்மென்ட். தானே. அதுவும் நீங்கள் உடன் இல்லாத போது. அதை எனக்காக முடிவு செய்ய அப்போது நீங்கள் யார்?”

அவளின் கேள்வியில் ஆதி திடுக்கிட்டான். அவள் சொல்வதும் சரிதானே என்று தோன்றியது ஆதிக்கு.. அவனுடைய பொறுப்பு தான் அது. அதைப் பகிர்ந்து கொள்வது தான் மனைவி என்பவளின் கடமை. .அதுவும் கல்யாணத்திற்கு பிறகுதானே தவிர. மனைவிக்கே முழுப் பொறுப்பு ஆகாது அல்லவா?

இப்போது என்னுடைய பொறுப்பை ப்ரயு மேல் ஏற்றுவதற்குதான் கல்யாணம் என்ற மாதிரி ஆகிவிட்டது.

அவனின் மௌனத்தை கவனித்தாலும், ப்ரயு மேலும் கேள்விகள் கேட்டாள்.

“இதையே நான் வெளிநாடு போக வேண்டும் . என் அப்பா அம்மாவை பார்த்துக் கொள்வதற்காக என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள். நான் திரும்பி வந்த பிறகு நம் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்டால் அப்போ என் மீது உங்கள் அபிப்ராயம் என்னவாக இருக்கும் ? “

இந்த கேள்வி அவனை கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. உண்மைதானே. இதையே ப்ரயு என்று இல்லை எந்த பெண் கேட்டாலும் தன்னுடைய எண்ணம் என்னவாக இருந்து இருக்கும்.? நான் என்ன இளிச்சவாயனா? என்று தானே தோன்றி இருக்கும்.

பிரயுவும் சற்று நேரம் மெளனமாக இருக்கவும், ஆதி

“எனக்குத் தெரியவில்லை ப்ரயு. என்னுடைய செயல்கள் இப்படி ஒரு கோணத்தை கொடுக்க கூடும் என்று தோன்றியதில்லை. நீ சொல்லும் போது தான் எனக்கு புரிகிறது. நீ சொல்வது போல் அன்றைக்கு நான் உனக்கு யாரோ தான்”

“அது மட்டும் இல்லை. நீங்கள் என்னிடம் காதலை சொல்லி. நான் ஒத்துக் கொண்டிருந்தால் கூட. நான் திருமணத்திற்கு இரண்டு வருடம் அவகாசம் கேட்டு இருந்தால் , காதலியிடம் நீங்கள் என் அம்மாவிற்காக உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தியிருக்க முடியாது. ஆனால் யாரென்றே எனக்கு தெரியாத உங்களுக்காக நான் ஒத்துக் கொண்டிருப்பேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்?”

“இல்லை. ப்ளீஸ் ப்ரயு. நம் கல்யாணம் அவசரமாக நடக்க அது ஒரு காரணமே தவிர, உன்னைப் பிடித்து இருந்ததால் தான் கல்யாணம் செய்தேன்..”

“அப்படி அதை தவிர நம் திருமணத்திற்கு என்ன அவசரம் ஏற்பட்டது.?”

“எனக்கு சொல்லத் தெரியவில்லை ப்ரயு. என்னவோ நான் ஊருக்கு செல்வதற்குள் நீ என் மனைவியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விட்டது. அதற்கு எனக்கு சாதகமாக எல்லாவற்றையும் மாற்றி கொண்டேன்.. ஆனால் அது இப்படி மாறும் என்று எண்ணவில்லை. நீ இப்போ சொன்ன பின் தான் தெரிகிறது.. “

அவன் இப்படி சொன்னவுடன் அவளுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லோருக்கும் அவரவர் செய்வது சரி என்று தான் தோன்றுகிறது. அதன் விளைவு அவர்களுக்குப் பாதகமாகும் போதுதான் அதை பற்றி யோசிக்க தோன்றுகிறது.

ப்ரயு இப்போதும் மெளனமாக தான் இருந்தாள். ஆதிதான்,

“ப்ரயு. ப்ளீஸ். நான் சாரி சொல்வதால் நான் செய்தது சரி ஆகி விடாது. ஆனால் “everything is fair in love and war” என்னுடைய காதலினால் நான் செய்ததாக எண்ணி என்னை மன்னித்து விடேன். ப்ளீஸ்..”

“இல்லை. தப்பு என் மேலும் இருக்கிறது. அப்பா உங்களைப் பற்றி சொல்லும் போது கேட்டுவிட்டு, நீங்கள் பெண் பார்க்க வரும்போது, பிடிக்கவில்லை என்று சொல்லி விடலாம் என்றுதான் எண்ணி இருந்தேன். ஆனால் உங்களை பார்த்தவுடன் பிடித்து விட்டதால் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டேன். மேலும் நீங்கள் அப்போதே மற்ற விவரம் எல்லாம் சொல்லி தான் மணக்க கேட்டீர்கள்.. நானும் அப்போது பிரச்சினைகள் வரும் என்று எல்லாம் யோசிக்கவில்லை. இன்றைக்கு உங்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. நான் நம் திருமணம் முழுக்க முழுக்க திடீர் திருமணம் என்று எண்ணியிருந்தேன். அப்படி இல்லை எல்லாமே உங்கள் பிளான் படி தான் என்றவுடன் , நீங்கள் சுயநலமாக, என் மனம் பற்றி சிந்திக்கவில்லையோ என்று தோன்றிவிட்டது. “

“அப்படி எல்லாம் இல்லடா. ப்ரயு. எனக்கும் உன் மனம் முழுதும் என்னை விரும்ப வேண்டும் என்ற எண்ணம் தான். ..

“ஹ்ம்ம்”

“ப்ரயு . ஒருவேளை நான் உன்னிடம் காதல் சொல்லியிருந்தால் நீ என்ன பதில் சொல்லியிருப்பாய்”

“ஹ்ம்ம். கண்டிப்பாக சம்மதம் சொல்லியிருக்க மாட்டேன் என்றுதான் தோன்றுகிறது”

“நானும் அப்படிதான் எண்ணினேன். ஒருவேளை நான் அம்மாவிற்கு வேறு எதாவது ஏற்பாடு செய்து விட்டு, உன்னை திருமணம் செய்யாமல் போயிருந்தால் . எனக்கு பயமாகவே இருந்திருக்கும். இந்த நான்கு வருடங்களில் உனக்கு வேறு யாருடனாவது திருமணம் நடந்து விடுமோ. என்று. தவித்து இருப்பேன். இந்த எண்ணங்கள் எல்லாம் சேர்ந்துதான் என்னை இப்படி நடந்து கொள்ள தூண்டியிருக்கிறது. . என்னை மன்னித்துவிடுடா. “

பிரயுவிற்கு அவனைப் பார்த்து பாவமாகிவிட்டது. என்னதான் அவனின் நோக்கம் நிறைவேற செயல்படுத்திய வழி தவறு என்றாலும், அதுவும் முழுக்க தவறு என்று சொல்ல முடியாது. அவளுக்கு தெரியும் அவன் எண்ணம் இப்படி எல்லாம் இருந்து இருக்காது. இப்போது சொல்லும் போது வேண்டும் என்றால் அவன் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது அவளும் அவனை நேசித்தாளே. அதனால் அவனை இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. திருமணத்திற்கு பின் நடந்தது எல்லாம் அவளே சொன்ன மாதிரி இருவருமே எதிர்பாராதது. இதற்கு அவனை வாட்டி என்ன பயன் . ? ஆனால் வேறு சில கேள்விகள் இருந்தன.

“நான் உங்களிடம் ஒன்று கேட்கட்டுமா?” ப்ரயு கேட்க, ஆதி தலையசைத்தான்.

“உங்களுக்கு என்னை பிடித்து இருக்கிறது என்பதற்கு நான் ப்ரியாவுடன் பேசிய அந்த ஒரு சம்பவம் மட்டும் போதுமாக இருந்ததா?”

“இல்லைமா. பிரியாவிடம் நீ பேசியது, உன்னை கவனிக்க ஒரு காரணம் ஆகியது. ஆனால் அதற்கு பின் உன்னைப் பின் தொடர்ந்து உன்னை பற்றிய எல்லா விவரமும் தெரிந்து கொண்டேன். உன்னுடைய செயல்கள் இயல்பாக இருந்தது. சில சமயங்களில் உன் தங்கைகளோடு உன்னை பார்த்து இருக்கிறேன். அப்போது அவர்களிடம் பாசம் என்ற பெயரில் அவர்களை கெடுக்கவும் இல்லாமல், கண்டிப்போடு கூடிய கனிவு காட்டுவதை பார்த்து இருக்கிறேன். சம்பாதிக்கிறேன் என்ற தைரியத்தில் அனாவசியமான அலட்டல்கள் இல்லாமல், அதே சமயம் ஒரு நிமிர்வான தோற்றம் உன்னுடையது. அதை நான் ரசித்திருக்கிறேன்.”

“என்னை காதலிப்பதாக சொன்னீர்கள்.. ஆனால் உங்களால் என்னை பிரிந்து எப்படி இருக்க முடிந்தது. ?’

“ரொம்ப கஷ்டமாக இருக்கும் ப்ரயு. இதுவரை உன்னிடம் சொன்னது இல்லை. நான் எப்படி எல்லாம் தவித்து போவேன். தெரியுமா? சில நேரங்களில் வேலையாவது ஒன்னாவது என்று விட்டு ஓடி வந்து விடலாம் போல் இருக்கும்.. ஆனால் உன் விருப்பம் மதிக்காமல் திருமணம் தான் சீக்கிரம் முடித்து விட்டோம். அட்லீஸ்ட் நீ இந்த கல்யாண வாழ்க்கையை ஏற்று கொள்ளவாவது அவகாசம் கொடுப்போம் என்று எண்ணி என்னை கட்டுப்படுத்திக் கொள்வேன்,”

“ஹ்ம்ம். “ என்று மட்டும் சொன்னாள்.

“அதோடு . சென்ற முறை நான் வந்த போதே நீ என்னை விரும்ப ஆரம்பித்து விட்டதை உணர்ந்தேன். அதனால் தான் நான் ஒரு வருடம் என்னுடைய காண்ட்ராக்ட்டை முன்னதாக முடித்துக் கொண்டேன்..”

“ஹ்ம்ம். ரொம்ப கஷ்டபட்டீர்களா?”

அவளை அணைத்து அவன் கன்னத்தை அவள் தலை மீது வைத்து . “ரொம்படா. வேலை முடிப்பது, அங்குள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பது, அதோடு என் மேனேஜ்மெண்ட் ஆட்களிடம் பேசுவது என்று ஓடிக் கொண்டிருந்தேன். அந்த நேரங்களில் எனக்கு எனர்ஜி கொடுப்பது உன்னை பற்றின நினைவுகள் . உன்னுடைய ரசனைகள் பற்றி எல்லாம் உன்னோடுப் பேசி தெரிந்து கொள்வேன். “ என்றான்.

அந்த இதமான அணைப்பில் இருவரும் சற்று நேரம் கட்டுண்டு கிடக்க, தன் நிலைக்கு வந்த ஆதி,

“ப்ரயு. ரொம்ப நேரமாகி விட்டது. நீ தூங்கு ரதிம்மா. என் செயல்களை மன்னிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை . ஆனால் இனிமேல் இதுபோல் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கேட்டு விடு. சண்டை வேண்டுமானாலும் போட்டுக் கொள். எனக்கு நீ வாழ்நாள் முழுதும் வேண்டும். “

“நீங்கள் இன்று எத்தனை முறை சாரி கேட்டு விட்டீர்கள். நான் உங்களை கஷ்டபடுதியதற்கு ரொம்ப சாரி ஆதிப்பா..” எனவும்

“இத்தனை நேரமா குட்டிம்மா. ஆதிப்பா என்று சொல்ல? நான் பயந்து விட்டேன். நீ என்னை வெறுத்து விட்டாயோ என்று” அவளை இறுக்கி அணைத்தான். பிறகு அவள் முகம் முழுதும் முத்தமிட்டவன், இதழில் அழுந்த முத்தமிட்டான். அவள் மூச்சுக்கு திணறுவதை பார்த்து,

“ம். குட்டிம்மா. என்னை சோதிக்காதே. பேசாமல் படு. மற்றதெல்லாம் பிறகு பார்க்கலாம்.”

பிரயு சிரித்துக் கொண்டே கட்டிலில் படுக்கவும், ஆதியும் அவளருகில் படுத்தான். என்னதான் ஆதியின் மேல் கோபம் இருந்தாலும், அவளால் அதை வெளிப்படுத்த முடியவில்லை. அவளுடைய எண்ணங்களை வெளிப்படையாக சொன்ன பின் அவள் கோபம் குறைந்து இருந்தது. இத்தனை நாட்கள் அனுபவித்த கஷ்டங்கள் கூட அவளுக்கு பெரிதாக தோன்றவில்லை.

மறுநாள் காலை எழுந்து வழக்கமான வேலைகள் முடிக்கவும். ஆதியும் டிபன் சாப்பிட அமர்ந்தான்..

ப்ரயு மாமியாரும் அமர, இருவரும் அவளையும் சாப்பிட அமர சொன்னார்கள்..

சாப்பிட்டுக் கொண்டே. “ப்ரயு. உன் ட்ரைனிங் என்னாச்சு?”

“அது அப்பா உடம்பு சரியில்லாமல் போனதல்லவா. அன்றோடு முடிந்து விட்டது. அதனால் தான் நீங்கள் சீக்கிரம் வரச் சொன்ன போது கூட என்னால் வர முடியாது என்றேன்.”

“ஒஹ். அப்படி என்றால் நீ இப்போ உங்கள் ஹாஸ்பிடலுக்குத் தான் வேலைக்கு போக வேண்டுமா ?”

“ஹ்ம்ம். ஆனால் நேற்று டாக்டர் என்னை சத்தம் போட்டு ஒரு மாதம் என்னை ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள் . “

“ரொம்ப நல்லதா போச்சு. “

அப்போது வித்யாவும் , அவள் கணவரும் வர, இருவரையும் வரவேற்றனர்..

சாதாரண விசாரிப்பிற்கு பின் வித்யா தன் அண்ணனிடம். “அண்ணா. எனக்கு ஒரு ஹெல்ப் வேண்டும் “ என்றாள்..

“சொல்லும்மா”

“இவருக்கு மறுபடியும் இரண்டு வருடம் யு.கே செல்ல வாய்ப்பு வந்து இருக்கிறது. சென்ற முறை வந்த வாய்ப்பை தான் இவர் எனக்காக ஒத்துக் கொள்ளவில்லை . இந்த முறை குடும்பத்தோடு செல்லவும் அனுமதி இருக்கிறது. ஆனால் குழந்தையை தனியாக என்னால் சமாளிக்க முடியுமா என்றுதான் யோசிக்கிறோம். நாங்கள் நம் அம்மாவை கொஞ்ச நாட்கள் எங்களோடு அழைத்து கொண்டு போகிறோமே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்று வினவினாள்..

“நல்ல விஷயம் தான் வித்யா. ஆனால் உன் மாமியாரை அழைத்து போகலாமே. ? அவர்களுக்கும் ஆசை இருக்கும் அல்லவா?” என்றான் ஆதி..

“இல்லை மச்சான். இந்த ப்ரோபோசல் வந்து இருவது நாட்கள் ஆகிவிட்டது. நாங்கள் முதலில் அம்மாவிடம் தான் கேட்டோம். ஆனால் அப்பா ரிடயராக ஆறு மாதம் தான் இருக்கிறது. .இந்த நேரம் அப்பா லீவ் போட்டு வரமுடியாது. அம்மாவும் அப்பாவை விட்டு வர முடியாது. அத்தையை கூப்பிடலாம் என்றால் சிஸ்டர் தனியாக இருக்க வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்தோம். நீங்கள் வரவே , சரி கொஞ்ச நாட்கள் கழித்து உங்களிடம் கேட்கலாம் என்று எண்ணி இருந்தோம். சிஸ்டர்க்கு உடம்பு சரியில்லாமல் போகவே அப்படியே விட்டோம். இப்போ இந்த வாரம் நான் பதில் சொன்னால்தான் . அவர்கள் விசா ப்ரோசெச்ஸ் எல்லாம் பண்ண முடியும். உங்கள் பதிலை வைத்து தான் நான் ஆபீசில் சொல்ல வேண்டும்’ என்று நீளமாகக் கூறி முடித்தார் வித்யா கணவர்.

ஆதி தன் அம்மாவை பார்த்து “அம்மா. உங்கள் முடிவு என்ன? எதுவாக இருந்தாலும் நீங்களே சொல்லுங்கள். “

ஆதி அம்மா கொஞ்சம் தயங்கியபடி “இல்லை அந்த ஊர் தட்பவெப்பம் எல்லாம் எனக்கு ஒத்துக் கொள்ளுமா தெரியவில்லையே . நான் உங்களுக்கு உதவி செய்ய வந்து தொந்தரவு கொடுக்கக் கூடாது இல்லையா ?”

“இல்லை அத்தை. .நீங்கள் முதலில் ஆறு மாத விசாவில்தான் வருவீர்கள். இப்போ அங்கே சம்மர் தான். அதனால் இங்கே உள்ளது போல் தான் இருக்கும். அங்கே குளிர் காலம் வரும் போது நீங்கள் இங்கே வந்து விடலாம். அப்பா, அம்மாவை அதன் பிறகு கூப்பிட்டு கொள்கிறேன். “

‘ப்ரயு நீ என்னம்மா சொல்கிறாய் “ என்று அவளிடமும் அபிப்ராயம் கேட்டார்..

“அத்தை நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால், நம் உதவி தேவைப்படும்போது நீங்கள் போய் விட்டு வரலாம் . வித்யாவிற்கு உதவுவது போலவும் இருக்கும். இடமாற்றம் உங்களுக்கும் நல்ல மாறுதலாக இருக்கும்”

“அப்படி என்றால் சரி. “ எனவும் ,

“மாப்பிள்ளை, அம்மா எப்போ கிளம்புவது போல் இருக்கும்?” என்று வினவினான் ஆதி.

“இன்னும் பதினைந்து நாட்களில் இருக்கும் “ என்றார்,

“அப்போ ப்ரயு உங்கள் அப்பா, அம்மாவையும் கிளம்பி நான் சொல்லும் அட்ரஸ்க்கு இப்போ கிளம்பி வரசொல்லு. நாமும் கிளம்பலாம் . “ என்றான்.

“எங்கே. “ என்று எல்லோரும் கேட்க,

“போனவுடன் தெரிந்து விடும்” என்றபடி . தன் நண்பன் பிரபுவையும் வர சொன்னான்..

எல்லோரையும் ப்ரயு வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு அடுத்த ஏரியாவிற்கு அழைத்து சென்றான். அங்கே புதிதாக கட்டப்பட்ட பில்டிங் ஒன்றிற்கு சென்று, அங்கே முதல் தளத்தில் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றான்.

“அம்மா, ப்ரயு. உங்களுக்கு சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று எண்ணி இதை பற்றி சொல்லவில்லை. இந்த வீட்டை நான் வாங்கி விட்டேன். நான் ஊரிலிருந்து வந்த பின் ரிஜிஸ்டிரேசன் முடித்தேன். பிரபுதான் வாங்க ஹெல்ப் செய்தான்..”

“இப்போ என்னடா தீடிரென்று?’

“இல்லைமா. .இவ்ளோ நாள் பரவாயில்லை. இனி நம் குடும்பம் பெரிதாகும். உங்களுக்கும் தனியாக ரூம் வேண்டும். வித்யா வந்தாலும் தங்குவதற்கு தனி ரூம் வேண்டும். அதனால் நாலு பெட் ரூம் உள்ள வீடாக பார்த்தேன். அம்மா நீங்கள் ஊருக்குச் செல்லப் போவதால் அதற்குள் நாம் இங்கே பால் காய்ச்சி விடலாம். பிறகு நாங்கள் வீடு ஷிபிட் செய்து கொள்கிறோம்”

ஆதி இந்த விஷயத்தைப் பற்றி சொல்லாதது ப்ரயு, ஆதி அம்மா இருவருக்கும் சின்ன வருத்தம்தான் என்றாலும், ஒருவகையில் இதுவும் நல்லது தான் என்று எண்ணி கொண்டனர்..

அப்போது அங்கே வந்த ப்ரயு அப்பா, அம்மாவிற்கும் விஷயம் சொல்லப்பட, எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு செல்ல, மாலையில் ஆதி பிரயுவிடம்

“ரதி . நாம் உன் அப்பா வீட்டிற்கு போய் வரலாம். வா . “ என்றான்.

அவளும் சரி என, தன் கப்போர்டில் வைத்து இருந்த ஒரு பாக் எடுத்துக் கொள்ள சொன்னான்.

இருவரும் அவர்கள் வீட்டிற்கு சென்று வாசல் கதவில் கையை வைக்க, உள்ளே இருந்து வந்த பேச்சுக் குரலில் பிரயுவின் பேர் கேட்க, தட்டாமல் விட்டார்கள்.

பிரயுவின் பெற்றோர் வீட்டில் அவள் தங்கைகள் வந்திருக்க, அவள் அப்பா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ஏம்மா பவி, தாரிணி . நீங்கள் ஏன் பிரத்யாவிடம் அப்படி நடந்து கொண்டீர்கள்? என்னதான் மற்றவர்கள் சொன்னாலும். ப்ரதயா உங்களையோ, குழந்தைகளையோ பார்த்து பொறமைப்படுவாளா? மற்றவர்களுக்கு அவளை பற்றித் தெரியாவிட்டாலும், உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ப்ரயு மேலே உள்ளே சொல்ல எட்டு வைக்க, ஆதி தடுத்தான்..

“அப்பா. நீங்கள் கூட தவறாக புரிந்து கொண்டீர்களே. எங்களுக்கு முதலில் எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. எங்களுக்கு திருமணம் ஆன பின் தான் . அக்கா தன் வாழ்க்கையில் எதை இழந்து கொண்டிருக்கிறாள் என்று புரிய ஆரம்பித்தது. அதைப் பற்றி நாங்கள் எங்கள் கணவர்களிடம் அடிக்கடி புலம்பி கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் தான் இந்த ஐடியா கொடுத்தார்கள்.”

“ஆமாம். மாமா. இவர்கள் மிகவும் வருத்தபடவும், நாங்கள் தான். நீங்கள் உங்கள் அக்காவை வெறுப்பு ஏற்றுங்கள். மற்றவர்கள் சொல்வதை விட, சொந்த தங்கைகளே தன்னை மதிக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும். அப்போதுதான் ஒன்று அக்கா மாமாவோடு அங்கே செல்வார்கள். .இல்லை மாமாவை பிடித்து நச்சரித்து அவர்களை இங்கே வரவழைப்பார்கள் என்று கூறினோம். அத்தைக்கும் அது புரிந்ததால் தான் எங்களோடு ஒத்துழைத்து, இவர்கள் இருவரையும் கண்டுக்காமல் விட்டார்கள்,,”

ப்ரயு ஆதியின் முகத்தை பார்த்தாள்..

பிறகு இருவரும் உள்ளே சென்றனர். அவர்களை பார்த்த நால்வரும் சற்று தடுமாறி பிறகு ஒன்று போலே “சாரி என்றனர்’

ஆதிதான் “அதெல்லாம் எதற்கு? நான் நேற்றுதான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். நாம் நினைப்பது எல்லாம் செயல் வடிவில் வரும்போது நாம் எதிர்பார்த்த விளைவுகளை கொடுப்பதில்ல என. இன்றைக்கு உங்களுக்கு அந்த பாடம் கிடைத்து இருக்கும்’” என்றான்.

எல்லோரும் திரு திருவென முழிக்க, ப்ரயு “ஒன்றும் இல்லை விடுங்கள். நானும் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். எந்த ஒரு செயலுக்குப் பின்னும் செய்பவர்களின் நியாயத்தை கேட்க வேண்டும் என்று”

ஆதியின் சகலைகள் “சுத்தமா ஒன்னும் புரியவில்லை” என,

பிரயுவின் தங்கைகள் “ அக்கா. மாமா. எங்களை மன்னித்து விடுங்கள். என்னதான் நடிப்பு என்றாலும் நாங்கள் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டோம். “

ப்ரயு இருவரையும் பார்த்து “எனக்குத் தெரியும் உங்களை பற்றி. என்ன கொஞ்சம் வருத்தம் தான் இருந்தது. இப்போ எதுவும் இல்லை. “என்று இருவரையும் சமாதானம் செய்தாள்.

அப்போது அவர்கள் கொண்டு வந்த பாக்கை பிரிக்க சொன்ன ஆதி, ப்ரயு தங்கைகள் இருவருக்கும் சின்ன சின்ன நகைகள், மேக்கப் செட், அவர்கள் கணவன்மார்களுக்கு வாட்ச் எல்லாம் எடுத்து கொடுத்தான். குழந்தைகளுக்கு ரெண்டு மூன்று டாய்ஸ் .. டிரஸ் எல்லாம் கொடுத்தான்.

ப்ரயு அப்பா அம்மாவிற்கும் நல்ல ஷால், சில பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து இருந்தான்..

எல்லாரோடும் பேசி சிரித்து விட்டு, இரவு உணவும் அங்கேயே முடித்துக் கொண்டு தங்கள் வீடு திரும்பினர்..

தங்கள் வீட்டிற்கு வந்தவுடன் ஆதி பிரயுவிடம் மருந்தெல்லாம் சாப்பிட சொல்லி கொடுத்தான்.

“ஆதிப்பா. நீங்கள் எனக்கு ஒண்ணுமே வெளிநாட்டிலிருந்து வாங்கி வரவில்லையே ?” என வினவ,

“ஏன் வாங்கலை. ? “

“அப்போ கொடுக்கலை. “

“ம். அது கொடுக்க நேரம் வரும்போது தரப்படும்” என்றான். அவனுக்கு அழகு காட்டினாள் அவனின் ரதி.

“குட்டிமா. இப்படி எல்லாம் சீண்டினால் நான் கிளீன் போல்ட் ஆகி விடுவேன். கொஞ்சமே கொஞ்ச நாள் என்னை நல்ல பையனாக இருக்க விடேன்.” என்றபடி அவளின் தலையில் செல்லமாய் முட்டினான்.

மறுநாள் பிரயுவின் தங்கைகள் வீட்டிற்கு ஆதியோடு சென்று, தங்கைகள் மாமியார், மாமனார் எல்லோரையும் நேரில் பார்த்து விட்டு வந்தனர். வித்யாவையும் இருவரும் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

ஒரு நல்ல நாளில் புது வீட்டில் பால் காய்ச்சி வந்தனர் ஆதியின் குடும்பம். பெரிய அளவில் இல்லாமல், இவருடைய குடும்பத்தினர், பிரபு பிரியா மட்டும் அழைத்து இருந்தனர்.

இப்படியே நாட்கள் நகர, ஆதியின் அம்மா, தங்கை அவள் குடும்பம் லண்டன் கிளம்ப, எல்லோரும் அவர்களை வழியனுப்ப சென்றனர். அன்று மாலை பிரயுவை மறுத்துவமை அழைத்து சென்றான் ஆதி.

பத்து நாட்கள் கழித்து அவளை மறுபடி வரச்சொல்லியிருந்தார். டாக்டர் பிரயுவை செக் செய்து நார்மலாக இருப்பதாக சொன்னார்.

இருவரும் கிளம்பும் போது

“ப்ரயு. நீ எப்போ டியூட்டி ஜாயின் பண்றமா?”

ப்ரயு ஆதியை பார்க்கவும், ஆதி

“டாக்டர் இன்னும் பதினைந்து நாட்கள் கழித்து சேரட்டும். “ என்றான். அவரும் சரி எனவே, இருவரும் கிளம்பினர்.

“ஏன். ஆதிப்பா . நான் நன்றாக இருப்பதாக டாக்டர் சொல்லிட்டாங்களே. பிறகு ஏன் பதினைந்து நாட்கள் கழித்து ஜாயின் பண்ணனும்?”

“ஹ்ம்ம். ஏன் குட்டிம்மா. என்னை பற்றி நினைச்சு பார்க்கவே மாட்டியா..?

“ஏன்? என்னாச்சு?”

“நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு. இன்னும் நமக்குள்ளே ஒண்ணுமே நடக்கலே? அத பத்தி யோசி ..” என்றவன், அவள் முகம் சிவக்கவும் சிரித்து விட்டு அழைத்து சென்றான்.

கார் நேராக வீட்டிற்கு செல்லமால், விமான நிலையம் சென்றது.

“ஆதி. இப்போ நாம எங்கே போறோம்?”

“ஹனிமூன் போறோம் ..”

“என்ன தீடீர்னு. ? “

“நீயும் நானும் வேலைக்கு சேரும் முன் போய் வரலாம் என்று தான்?”

“ஆனால் டிரஸ் எல்லாம் எடுத்து வைக்காமல்? யார்கிட்டயும் சொல்லவே இல்லியே?”

“எல்லோருக்கும் தெரியும். டிரஸ் எல்லாம் நான் எடுத்து வச்சிட்டேன்.” என்று சொல்லும் போதே..

பிரயுவிற்கு போன் வர,

“ஹேய். ப்ரியா. சொல்லு. பா “

“ஹாப்பி ஜெர்னி . ப்ரத்யா டியர். “ என்றாள்.

“ஹேய். உனக்கு எப்படி தெரியும்? எனக்கே இப்போதான் சொன்னார்..?”

“ஹலோ. மேடம். நான் உன் ஃப்ரெண்ட் மட்டும் இல்ல. ஆதி அண்ணாவின் தங்கையும் கூட. அதோட என் பெட்டெர் ஹாஃப் எங்கிட்ட சொல்லிட்டாங்க..”

“ஹ்ம்ம். சரி.”

“ப்ரத்யா. நடந்ததெல்லாம் மறந்து விட்டு அண்ணாவோட நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா. மனசுலே இருக்கிற எல்லாத்தையும் அவர்கிட்ட பேசு. சரியா?”

“சரிம்மா“ என, பிரபுவும் ஆதியிடம் பேசி வாழ்த்தினான்..

அடுத்து பிரயுவின் பெற்றோர், தங்கைகள் எல்லோரும் வாழ்த்தி முடிக்கவும், ஏர்போர்ட் வரவும் சரியாக இருந்தது.

சென்னையிலிருந்து பகோதரா சென்றனர். அங்கிருந்து டாக்ஸியில் டார்ஜிலிங் சென்றனர்.

நேராக புக் செய்திருந்த ஹோட்டல்க்கு சென்றனர். அங்கே இருவருக்கும் சற்று ஒதுக்குபுறமாக இருந்த காட்டேஜ் கொடுக்க பட்டிருக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

ரூமின் அழகு அற்புதமாக இருந்தது. இவர்கள் காலையில் வந்து இருந்ததால், உடனே ஒரு டூரிஸ்ட் பஸ் தயாராக இருப்பதாக கூற, இருவரும் அதில் புக் செய்து இருந்தனர்.

அதனால் முதலில் குளிக்க கிளம்பிய ப்ரயு, தன் உடைகளை பெட்டியில் தேட,

அங்கே முழுக்க முழுக்க வெஸ்டேர்ன் அவுட் பிட்ஸ் உடைகளே இருக்க ப்ரயு முழித்தாள்.

ஆதி சிரித்துக் கொண்டே அதில் ஒரு டிரஸ் எடுத்துக் கொடுக்க, ப்ரயு அதை அணிய மறுத்தாள்..

“குட்டிமா. இந்த டிரஸ் போடுடா. .உனக்கு என்ன வாங்கி வந்தேன் என்று கேட்டாய் அல்லவா. இது எல்லாம் தான் வாங்கி வந்தேன். “

“வேணாம். ஆதிப்பா. இது எல்லாம் நான் போட்டது இல்லை. ப்ளீஸ் “

“ப்ரயு ப்ளீஸ்டா. இது எல்லாம் இங்கே தான் போட முடியும். அப்புறம் ஊருக்கு போனால் சாரி, சல்வார் தான் போட்டுக் கொள்வாய். ப்ளீஸ் . ப்ளீஸ் என்று கெஞ்ச.

அவளும் அரை மனதாக தலையாட்டினாள். அவள் குளித்து அந்த டிரஸ் அணிந்து வர, ஆதி அவளை பார்த்து விசிலடித்தான்.

ப்ரயு. அவள் கால்களை அழகாக எடுத்துக் காட்டும் ஸ்கின் கலர் லெகீன்ஸ் அணிந்து மேலே பிங்க் கலர் பனியன் டாப் அணிந்து இருந்தாள். அவளின் அழகை எடுத்துக் காட்டும் அந்த உடை அவளுக்கு பொருத்தமாக இருந்தது.

அவளை அள்ளி அணைக்க வந்தவன், அவள் அவனை பிடித்து குளியல் அறையில் தள்ளி விடவும் . சிணுங்கி கொண்டே குளிக்க போனான்.

அவன் வெளியே வந்த போது உடைக்கு பொருத்தமாக தலையை உயர்த்தி வாரி ரப்பர் பேண்ட் போட்டு இருந்தாள்.

ஆதியும் ஸ்டோன் வாஷ் பாண்டும் , போலோ டி ஷர்ட்டுமாக அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்த மாணவன் போல் இருந்தான்..

ரூமில் ஹீட்டர் இருந்ததால் தெரியவில்லை. வெளியே காலடி எடுத்து வைக்கவும், குளிரில் இருவரும் நடுங்கினர். இரண்டு பேரும் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டனர். ஆதி ஏற்கனவே ஷூ அணிந்திருக்க, பிரயுவின் ஹீல்ஸ் குளிரை தாங்குவேனா என்றது. ஆதி அவளுக்கும் எடுத்து வந்திருந்த ஷூ எடுத்துக் கொடுத்தான்.

இருவரும் ரெடி ஆகி டூரிஸ்ட் பஸ்சுக்கு செல்ல, அங்கே. இருந்த எல்லாரும் பொருத்தமான ஜோடி என்று அவர்களை பாராட்டினர்.

அவனோடு பேசும் போது அவளுக்கு அந்த பனி படர்ந்த மலைகளை பார்க்க மிகவும் பிடிக்கும் என்று சொன்னதை நினைவு வைத்து இந்த இடம் தேர்ந்தெடுத்து இருந்தான். அவள் அந்த அழகை ரசிக்கவும் , அவனுக்கு அவளை ரசிக்க்கவுமாக இருவரும் அன்றைய நாளை கழித்தனர்.

இரவு அறைக்கு வந்த பின், முதலில் சாப்பிட்டு விட்டு ..பிறகு இருவரும் கனப்பு அருகே அமர்ந்தனர். தன் மொபைல் போனில் 80-90 களில் வந்த மெலடி பாடல்களை போட்டு விட்டான் ஆதி.

பிரயுவின் அருகில் வந்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்து,

“ப்ரயு. நீ என்னை மன்னிசிட்டியா? என் மேல் உனக்கு இன்னும் கோபம் இருக்கா?”

அவள் இப்போ இது என்ன என்பது போல் பார்க்க, அவனின் முகபாவங்கள் அவளை பதில் சொல்ல வைத்தது.

“கோபம் இல்லை. ஆதிப்பா..”

“அப்போ உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”

“ஹ்ம்ம். இது என்ன கேள்வி..?”

“பதில் சொல்லு.”

“பிடிச்சு இருக்கு “

“எப்போலேர்ந்து ..?”

“என்ன திடீர்ன்னு?”

“இல்லை. நான் உன்கிட்ட நடந்தது எல்லாம் சொன்னப்புறம் தான் உனக்கு என்னை பிடிச்சதா?”

“இல்லை. அதுக்கு முன்னாடியே பிடிக்கும் தான்.. நீங்கதான் ஏற்கனவே கண்டுபிடிச்சதா சொன்னீங்களே?”

“ஹ்ம்ம். அப்போ ஏன் நான் ஊரில் இருந்து வந்ததுக்கு அப்புறம் என்னை விட்டு விலகி போன?”

அவனின் கேள்வி புரியாமல் பார்த்தாள்

“அந்த ட்ரைனிங் வேலை இருக்குன்னு. சொல்லிட்டு ஹால் இல் படுத்து தூங்கினியே ஏன்? நான் உன்னை கட்டாயபடுத்துவேன்னு நினைச்சியா? இல்லை. என்னை பிடிக்காமல் அப்படி நடந்து கிட்டியா?’

“அது..” என்று தயங்கியவள் “நான் ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு இருந்தேன். இல்லியா? அது எல்லாமே என்னோட தூக்கத்திற்கு கொடுத்த மருந்து. நீங்க வரது எனக்குத் தெரியாதே? டாக்டரிடம் அந்த மருந்துகளை நிப்பாட்டிடவான்னு கேட்டதற்கு. அவங்க உடனே நிறுத்த வேண்டாம். அது எதாவது சைடு எபக்ட் கொடுக்கும்னு சொன்னாங்க. கொஞ்சம் டோஸ் குறைச்சு கொடுத்தாங்க. உங்க யார்கிட்டயும் அதப் பத்தி சொல்லலியே. இனிமேலும் ஏன் சொல்வானேன்னு தான் அங்கியே படுத்துட்டேன்.” என,

ஆதி அவளை தன்னோடு சேர்த்த அணைத்தான்.

‘குட்டிம்மா. அப்போ நம் வாழ்க்கையை ஆரம்பிப்பதில் உனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?”

தன் சிவந்த முகத்தை அவன் மார்பில் மறைத்தவள் , இல்லை என்றாள்.

அப்போது சரியாக ஆதியின் மொபைல் போனில் ஒலித்த பாடல் ..

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

நமது கதை புது கவிதை , இலக்கணங்கள் இதற்கு இல்லை

நான் உந்தன் பூமாலை ஓஹ் …




கங்கை வெள்ளம் பாயும் பொது கரைகள் என்ன வேலியோ

ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாறக் கூடுமோ

மனங்களின் நிறம் பார்த்த காதல் , முகங்களின் நிறம் பார்க்குமோ

நீ கொண்டு வா காதல் வரம்

பூ தூவுமே பன்னீர் மரம்

சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட .


பூவில் சேர்ந்து வாழும் வாசம் காவல் தனை மீறுமே

காலம் மாறும் என்ற போதும் , காதல் நதி ஊருமே

வரையறைகளை மாற்றும்போது தலைமுறைகளும் மாறுமே

என்றும் உந்தன் நெஞ்சோரமே

அன்பே உந்தன் சஞ்சாரமே

கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக




பாடல் முடியும்போது ஆதியும், பிரயுவும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.



இனி வரும் காலம் இருவருக்கும் வசந்த காலமாக மாறும் என்று நம்புவோம்.


முற்றும்
 
Last edited:

kothaisuresh

Well-known member
Member
அருமையா இருந்துது.இனிமேல் வாழ்க்கையில் அன்பின் சஞ்சாரமே
நிலைக்கட்டும்
 

Rajam

Well-known member
Member
இனிமையான முடிவு.
பிரயூ ஆதியின் வாழ்க்கையில்
அன்பும்,புரிதலும் நிலைக்கட்டும்.அருமையா பிரயூவின் உணர்வுகளை சொன்னது சிறப்பு.
 

sugan

Active member
Member
Azhagana mudivu.prayuvoda emotions atha Adarsh purinjukida vidam nice...itha kadhaiya madum paka mudiyala ethoe kudavae vazhnda feel aagudu... story ah miss panren... happy ending....
 
இந்த கதையைப் படிச்சு வெளிநாட்டு மாப்பிள்ளை என்ன...வெளிநாடு போக வாய்ப்பு இருக்கிற மாப்பிள்ளைக்கு கூட என் பொண்ணை கொடுக்க மாட்டேன்😏
 

Devi Srinivasan

✍️
Writer
இந்த கதையைப் படிச்சு வெளிநாட்டு மாப்பிள்ளை என்ன...வெளிநாடு போக வாய்ப்பு இருக்கிற மாப்பிள்ளைக்கு கூட என் பொண்ணை கொடுக்க மாட்டேன்😏
உங்கள் கமெண்ட் பாராட்டா ? திட்டா எப்படி எடுத்துகிறது தெரியலையே? கருத்துகளுக்கு மிக்க நன்றி மா
 
உங்கள் கமெண்ட் பாராட்டா ? திட்டா எப்படி எடுத்துகிறது தெரியலையே? கருத்துகளுக்கு மிக்க நன்றி மா
ஹாஹா...திட்றதுனா ஹீரோவ தான் திட்டனும்...உங்கள திட்ட மாட்டேன்...என்ன... ப்ரயு அவ மாமியார் நாத்தனார எதிர்த்து கூட பேசிருக்க வேண்டாம்..ஜஸ்ட் என் நிலைல இருந்து பாருங்கனு கூட சொல்லல...யாருமே அவளுக்கு நியாயம் செய்யலேனு தோனுச்சு...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom