• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் 23 - அன்பே உந்தன் சஞ்சாராமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் - இருபத்தி மூன்று

ஆதிக்கு பிரயுவை எண்ணி கொஞ்சம் கவலையாக இருந்தது. அவன் பிரயுவிடம் மனம் விட்டு பேசி, அவளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்றால், அவள் மருத்துவமனையில் தங்கி விட்டாள்.

தன் மாமனாருக்கு அட்டாக் வந்த அன்று பிரயுவின் தங்கைகள் இருவரும் அவளை குறை சொல்லி பேசியது அவனுக்கு அதிர்ச்சி அளித்தது. ப்ரயு ட்ரைனிங் போவதை பற்றி சொல்லாதது அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அதிர்ச்சிதான். ஆனால் அது மட்டுமே அவரின் உடல்நிலைக் குறைவிற்கு காரணம் என்று தோன்றவில்லை. மேலும் பிரயுவின் தங்கைகள் அன்றைய அதிர்ச்சியில் பேசியதாகவும் தெரியவில்லை. அவளை ஏற்கனவே குறை சொல்லி கொண்டிருப்பதாக தோன்றியது. ப்ரயு இதை பற்றியெல்லாம் அவனிடம் எதுவுமே சொன்னதில்லை.

அப்போதுதான் அவனுக்கு தோன்றியது. அவள் எல்லோரிடம் இருந்தும் விலக ஆரம்பித்து விட்டாளோ என்று. ஏன்? அவளை யார் என்ன சொன்னார்கள்? இதை பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.

அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்ற பிறகு பிரயுவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டான். ஆனால் பிரயுவும் அங்கே செல்வாள் என்று எண்ணவில்லை. முதலில் மறுக்க எண்ணியவன், அவளின் ஆதிப்பா என்ற அழைப்பில் அவனால் மறுக்க இயலவில்லை.

மூன்று வருடங்கள் அவளை விட்டு தனியாக இருந்த ஆதிக்கு, இங்கே வந்த பிறகு மூன்று நாட்கள் அவளை விட்டு இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், அவள் அவனோடு அவன் வீட்டில் இருக்கிறாள் என்பதே அவனுக்கு நிறைவாக இருக்கும். மேலும் இங்கே இருக்கும் பொழுதுகளில் அவனின் தேவைகளை அவள் செய்து கொடுப்பாள் என்பதால் அவளை மிகவும் மிஸ் செய்தான்.

இந்த மூன்று நாட்களாக போனில் அழைத்தாலும் அவள் அதிகமாக பேசுவதில்லை. யாராவது உறவினர் வந்து கொண்டிருப்பதால், அவர்களை கவனிக்க நேரம் சரியாக இருந்தது. தந்தையை பார்க்க வந்தாலும், அவர் அதிகம் அலட்டாதபடி , அவளோ அவள் அம்மாவோ தான் உறவினர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. அவர்களின் அக்கறையை நாம் மதிக்காமல், கிளம்புங்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அவர்கள் கிளம்பும் வரை அவர்களோடு டைம் ஸ்பென்ட் செய்ய வேண்டியிருந்தது. அதனால் ஆதி அவளை அழைக்கும் போது பேசி உடனே வைத்து விடுவாள்.

மூன்று நாட்கள் கழித்து இனி தாங்காது என்று எண்ணியவனாக , வேலை முடிந்து வரும்போது அவரை பார்த்துவிட்டு வருவதாக தாயிடம் தெரிவித்து விட்டு, நேராக மாமனார் வீட்டிற்கு சென்றான்.

வீட்டு கதவு லேசாக திறந்திருக்கவும் அவன் பெல் அடிக்காமல் உள்ளே வந்து விட்டான். மாமனார் அறையில் பேச்சு குரல் கேட்கவும் முதலில் அவரை பார்த்து வர எண்ணி அங்கே சென்றான். உள்ளே பிரயுவின் அம்மா, அவள் அப்பாவிடம்

“ஏங்க உங்களுக்கு திடீரென்று இப்படி ஆச்சு? நீங்க அவ்ளோ சீக்கிரம் தைரியம் இழக்க மாட்டீங்களே? என்ன ஆச்சு?”

“ப்ரத்யா எங்கே?”

“அவள் மாடியில் துணி எடுத்து வர போய் இருக்கிறாள்?”

“ஏன்மா. உனக்கு ப்ரயு செஞ்சது அதிர்சியா இல்லியா?”

“அதிர்ச்சிதான். அதனால் தான் எங்கே இருக்கிறோம், என்ன செய்யறோம்ன்னு தெரியாமல் அவளை அடித்து விட்டேன். ஆனால் எனக்கு அதிர்ச்சி ட்ரைனிங் செல்வதை அவள் மாப்பிள்ளையிடம் கூட சொல்லவில்லை என்பதுதான்”

‘தெரியும். அதை நினைத்து கொண்டே தான் நான் வீட்டிற்கு வந்தேன்”

“நம்ம மாப்பிள்ளை இதை பெரிய பிரச்சினை ஆக்கவில்லை. இல்லை என்றால் அவள் வாழ்க்கை என்ன ஆகும்?” என்று கவலையோடு பேச,

அப்போது அவர்கள் கவலையை போக்க எண்ணி, உள்ளே செல்ல எட்டு எடுத்தவன் , தன் மாமனாரின் பேச்சால் நின்றான்.

“இப்போ அவ நல்ல இருக்கான்னு நினைக்கறியா?” என்றார்.

“ஏன் அப்படி சொல்றீங்க? அவர்தான் இங்கேயே வந்துட்டாரே? வந்தும் பத்து நாள் ஆச்சு. இனிமேல் என்ன பிரச்சினை அவளுக்கு?”

“உனக்கு புரியலையா? மாப்பிள்ளை வரது நமக்கு மட்டும் தெரியலன்னா பரவால்ல . பிரயுவிற்குமே தெரியல. அதோட அவள் வேலை விஷயத்தை நம்மகிட்ட மட்டும் இல்ல, அவங்க வீட்லேயும் சொல்லல. இதுலேர்ந்து என்ன தெரியுது? அங்கயும் அவ யார்கிட்டயும் பேசுறது இல்ல. நான் யோசிச்சது இதை தான். “

“ஹ்ம்ம். நீங்க சொல்றது புரியுது. நம்ம மேல தான் அவளுக்கு உடம்பு சரியில்லாதப்ப அவள இங்கே வச்சு பார்துக்கலன்னு கோபம். அவங்க கூட என்ன பிரச்சினைன்னு புரியலேயே?”

“அந்த சமயம் நாம பண்ணது சரியா?”

“அப்போ எனக்கு அது சரின்னுதான் தோணிச்சு. ஏன்னா ஏற்கனவே அவள் கணவனை விட்டு இருக்கிறாள், குழந்தைக்கு வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அதனால் பொறமை ஏற்படும் என்று எல்லாம் சொல்லி குழந்தை பார்க்க வந்தவங்க கஷ்டபடுத்தினாங்க. இப்போ உடம்பு சரி இல்லை என்றால் அதற்கும் அவளை எதாவது சொல்லி கஷ்டபடுத்துவாங்க .அதோட என்னதான் நம்ம பொண்ணுங்க தான் என்றாலும் இவளுக்கு உள்ள பாசமும், பொறுப்பும் மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் குறைவுதான். அவங்க சொகுசு குறையக்கூடாதுன்னு பார்ப்பாங்க. இவளை கூட்டிகிட்டு வந்து அவங்களும் இவளை எதாவது சொல்லிக் கூடாதுன்னு யோசிச்சேன். அதோட நானும் மனுஷிதானே. எத்தனை பேருக்கு செய்ய முடியும் சொல்லுங்க. அதான் அவங்க வீட்டில் என்றால் அவங்க ரெண்டே பேர்தானே. அங்கே அவள் ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு நினைச்சேன். அவங்க மாமியாரும் ஒத்துக்கவே தானே நானும் விட்டுட்டேன். “

“அங்கே தான் தப்பு பண்ணிடோமொன்னு தோணிச்சு. அவள் மயங்கி விழுந்தா சரி. அது பெரிய ப்ரோப்லேம் இல்லை ஓகே. ஆனால் அவளுக்கு அந்த அளவுக்கு என்ன பிரச்சினைன்னு யோசிச்சோமா? மாப்பிள்ளை வர நாலு வருஷம் ஆகும்ன்னு தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணிகிட்டா. சோ அவர் பிரிவு அவளுக்கு பெரிய விஷயம் இல்ல. அதத் தாண்டி ஏதோ விஷயம் இருக்குன்னு யோசிச்சென். அதோட இன்னொரு விஷயம் . இந்த ட்ரைனிங் முடிஞ்சு அவளுக்கு கூடுதல் பொறுப்பு தருவாங்கன்னா. அவள் வேலை செய்யறது செயின் ஹாஸ்பிடல். எங்கே வேண்டும் என்றாலும் அவளை மாற்றலாம் அல்லவா.. அப்போ அதுக்குதான் நம்ம யார் கிட்டயும் சொல்லலலியா? அப்போ அவ என்ன முடிவு எடுத்திருக்கா ? இத எல்லாம் யோசிச்சு தான் எனக்கு நெஞ்சு வலி வந்தது. “

பிரயுவின் அம்மா யோசனையோடு அவரை பார்க்க, “ப்ரயு மாமியார் என்னை பார்க்க வந்த போது , நான் தூங்கறதா நினைச்சு ப்ரயு கிட்ட பேசினாங்க

“இங்க பாரு ப்ரத்யா. இதுவரைக்கும் எப்படியோ. நான் உனக்கு நல்ல மாமியாரா இல்லாம இருந்திருக்கலாம். ஆனால் என் பையனுக்கு நல்ல அம்மாவா இருந்திருக்கேன். இருக்கணும்ன்னு நினைக்கிறேன். இனிமேல் என் பையன் வாழ்க்கை நல்லா இருக்கனும். சும்மா உப்பு பெறாத விஷயத்துக்கு கோபப்பட்டு என் பையன கஷ்டபடுத்துதாத.. உங்க அப்பா சரியனதுக்கு அப்புறம் அவனோட வந்து வாழப் பார்ன்னு சொன்னங்க. அதுலேர்ந்து எனக்கு ஒரே யோசனையா இருக்கு பிரயுவை பத்தி.”

“நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கும் புரியுது . அவ இங்க இருக்கிற நாட்கள்ல அவகிட்ட பேசி என்னன்னு தெரிஞ்சிக்கலாம்ங்க. நீங்க கவலைபடாதீங்க. அவ அந்த அளவுக்கு எல்லாம் யோசிச்சிருப்பன்னு தோனல. பார்துக்கலாம் விடுங்க.”

அவர்கள் பேச்சு முடியும் போது ஆதி யோசனையோடு வெளியே சென்றான். அவன் வந்தது யாருக்கும் தெரியவில்லை.

அவனின் எண்ணமெல்லாம் பிரயுவிற்கு என்ன பிரச்சினை. ? ஆரம்பத்திலிருந்து நடந்ததை யோசித்தவன், அவன் பேசுக்காக மட்டும் அவள் கோபப்பட்டு பேசாமால் இருக்கவில்லை. வேறு ஏதோ இருக்கிறது என்று புரிந்து கொண்டான். தன் அம்மா பேசியதை யோசித்தவன். இவள் அவர்களை எதிர்த்துக் கூட பேச மாட்டாளே. பின் ஏன் அம்மா இப்படி பேசினார்கள். இதுவும் புரியவில்லை.

அவன் மனசாட்சி “ஏன்டா. ஆதி. இதையே இவ்ளோ லேட்டா புரிஞ்சிக்கிரையே? அவள் கிட்ட எப்போ பேசி. அவளைப் புரிந்து சமாதானப்படுத்த போறே “ என்று கேட்க, உண்மையில் ஆதி பதில் தெரியாமல் முழித்தான்.

அவன் இதை எல்லாம் யோசித்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி பாதி தூரம் சென்றிருப்பான். அவன் போன் அடித்தது. ப்ரயு வீட்டில் இருந்து தான் வந்தது அவர்களுக்கு தெரிந்து விட்டதோ என்ற யோசனையோடு எடுத்தான். போனில் வந்த செய்தியை கேட்டவன் அப்படியே தன் மாமனார் வீட்டிற்கு வண்டியை திருப்பினான்.

அங்கே வீட்டில் மாமியார் பதறியபடி நிற்க, தரையில் மயங்கி கிடந்தாள் அவன் மனைவி ப்ரயு.

“அத்தை என்ன ஆச்சு ?

“தெரியல மாப்பிள்ளை. அவங்க அப்பாக்கு சாப்பாடு குடுத்துட்டு போனாள். அவர் சாப்பிட்டு, மாத்திரை எல்லாம் கொடுத்துட்டு வந்தேன். இவ ஹால்லே மயங்கி கிடக்கிறா. நான் தண்ணி தெளிச்சேன் எழுந்துக்கல. பயந்து உங்களுக்கு போன் பண்ணேன். “

அவனும் “ப்ரயு. ப்ரயு. “ ன்னு கூப்பிட்டு பார்த்தான். கை கால் தேய்த்து விட்டான். அவள் கண் திறக்கல..

“அத்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம். நீங்க கால் டாக்ஸி போன் பண்ணுங்க.” என,

“நான் ஏற்கனவே பண்ணிட்டேன். இன்னும் ஐந்து நிமிஷத்துலே வந்துரும். “ என அவர் கூறும் நேரம், டாக்ஸியும் வந்து விட, இவன் பிரயுவை பின் சீட்டில் கிடத்தினான்.

பின்னாடியே வந்த ப்ரயு அம்மாவை, “அத்த மாமாக்கு தெரியுமா? “

“இல்ல மாப்பிள்ளை. அவர் தூங்கிட்டார். “

“நீங்க அவர எழுப்ப வேணாம். நீங்களும் வீட்டில் இருங்க. “

“இல்ல. வீட்ட பூட்டிட்டு நான் வரேன்.”

“சொன்னால் கேளுங்க. நான் பார்த்துக்கறேன். நீங்க மாமாவ பார்த்துக்கோங்க. அவர் இப்போதான் மறுத்துவமனையிலேர்ந்து வீட்டிற்கு வந்துருக்கார். நான் அம்மாவை வரச் சொல்லிருக்கிறேன். அதோட காலையில் பக்குவமா மாமாகிட்ட சொல்லி கூட்டிட்டு வாங்க. “ என்று விட்டு வண்டியை எடுக்க சொல்லிவிட்டான்.

வழி முழுதும். “ப்ரயு..ப்ரயு “ என்று அவள் கன்னத்தை தட்டுவதும், தன் நெஞ்சோடு சேர்த்து அணைப்பதுமாக வந்தான்.

அவள் வேலை பார்க்கும் மறுத்துவமனைக்கே கூட்டிச் சென்று அட்மிட் செய்தான். அங்கே நல்ல வேளையாக பிரயுவை ஏற்கனவே பார்த்த டாக்டர் இருக்க, அவளை உடனே அட்மிட் செய்து ட்ரீட்மென்ட் ஆரம்பித்து விட்டார்.

ஆதி என்ன செய்ய என்று புரியாமல் ஐ.சி.யு. வாசலில் நின்று கொண்டிருந்தான். டாக்டர், நர்ஸ் வந்து வந்து போவது புரியாமல் திகைத்தான். வெறும் மயக்கம் தானே என்று எண்ண முடியவில்லை அவனால்.

டாக்டர் அவனிடம் “எத்தனை நேரமா மயக்கமயிருக்கா ப்ரத்யா?” என்று கேட்க,

“ஒரு அரை மணி நேரம் இருக்கும் டாக்டர்”

“ஒஹ். சரி நீங்க வெயிட் பண்ணுங்க “

“டாக்டர் என்னாச்சு. ? எப்போ மயக்கம் தெளியும் அவளுக்கு ?”

“இப்போ எதுவும் சொல்ல முடியாது . நீங்க வெயிட் பண்ணுங்க.”

இதை எல்லாம் கேட்ட அவனுக்கு எதுவுமே புரியவில்லை. அவனுக்கு யாரிடமும் சொல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை.

ஆனால் பிரயுவின் அம்மா, அவள் மற்ற இரு மகள்களுக்கு சொல்லியிருக்க அவர்கள் கணவன்மார் அங்கே வந்தனர். ப்ரயு மாமியாருக்கும் சொல்ல, அவரும் வந்து விட்டார்.

ஆதியின் தோற்றம் பார்த்து “ஆதி .ஒன்றும் இருக்காது. போன முறையும் இப்படிதான் ஆகி. மூன்று மணி நேரம் கழித்து விழித்தாள். அதனால். நீ கவலைபடாதே. “ என்றார்.

அவன் சகலைகளும் “அண்ணா . ஒன்னும் இருக்காது . இங்கே வேலை செய்யறவங்கதானே. டாக்டர்ஸ் நல்ல பார்த்துப்பாங்க. அவங்களே உங்ககிட்ட விவரம் சொல்லுவாங்க. “ என,

அப்போது தன் நண்பன் நினைவு வந்தது ஆதிக்கு .

போன் எடுத்து “ஹலோ, பிரபாகரன். சாரி தூங்கிட்டியா . “ என்று வினவ ,

“சொல்லுடா. என்ன விஷயம்.?”

“இல்ல. உன் மனைவி . “-----“ அந்த ஹாஸ்பிடலில் வேலை செய்தாங்க தானே. “

“ஆமாம். “ என

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே. என் மனைவிய இங்கே ஐ.சி.யூவில் அட்மிட் பண்ணியிருக்கோம். எனக்கு எதுவும் சரியாய் புரியல. யார் கிட்ட பேசலாம்ன்னு கேட்டு சொல்றியா?”

“டேய். என்னடா. நான் அவள கூட்டிகிட்டு வரேன். நேர்லே பார்த்துக்கலாம் “

“இல்லைடா. பாவம் அவங்கள நைட்லே டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்’

“டேய் என்னடா பேசற நீ ? ஒரு நாள் முழிக்கிறதால ஒன்னும் ஆகாது. நாங்க இதோ கிளம்பிட்டோம் “ என்று அவன் போன் வைத்தான்.

அதற்குள் டாக்டர் “இன்றைக்கு அவள் மாத்திரை போட்டாளா?”

“என்ன டாக்டர். சொல்றீங்க. ? எனக்கு எதுவுமே புரியல ?”

“ம். “ என்று அதிருப்தியோடு தலையாட்டி விட்டு சென்றார்.,

ஆதி ஒன்றும் செய்ய தோன்றாமல் அப்படியே நாற்காலியில் அமர்ந்தான்.

சற்று நேரத்தில் அவன் நண்பன் வர, “ஆதர்ஷ் . “ என்று அழைக்க, நிமிர்ந்தவன். அவன் பின்னால் நின்று கொண்டிருந்த அவன் மனைவியை பார்த்தான்.

“thank god . ப்ரியா. நீயே வந்துட்டியா. உனக்கு எப்படி தெரியும் ப்ரயு அட்மிட் ஆயிருக்கும் விஷயம். அத்தை சொன்னாங்களா?” என்று வினவ,

“அண்ணா பிரயுவா? என்னாச்சு அவளுக்கு “

“ஆதி. உனக்கு பிரியாவ தெரியுமா ? அவ தான் என் மனைவி.”

“அப்படியாஅவங்க உன் மனைவி ன்னு தெரியாது. என் மனைவியோட தோழி.. “

“அப்படினா. பிரத்யுஷா சிஸ்டர் தான் உன் மனைவியா. ஒஹ். என்னாச்சுடா .” என்று அவனும் வினவ,

அதற்குள் ப்ரியாவை பார்த்த டாக்டர் “ஹேய். ப்ரியா. பிரத்யாவ பார்க்க வந்தியா?”

அவரை பார்த்த பிரியா அதிர்ந்தாள். அவர் அந்த மருத்துவமனை நரம்பியல் மருத்துவர். அவரே வந்து பார்ப்பது என்றால், அவளுக்கு நெஞ்சம் பட பட என்று அடித்துக் கொண்டிருந்தது.

பிரியா டாக்டரிடம் விவரம் கேட்டுக் கொண்டே செல்ல, ஆதியும், பிரபாகரனும் தொடர்ந்தனர்.

“டாக்டர். என்ன ஆச்சு அவளுக்கு ?’

“ஹ்ம்ம். உனக்குத்தான் தெரியுமே. அவள் மூன்று முறைக்கு மேல் மயங்கி இருக்கிறாள் என்று ?”

“இல்லை டாக்டர். எனக்கு தெரியாது. என் கல்யாணத்திற்கு முன் ஒரு தடவை விழுந்தாள். ஆனால் உடனே விழித்து விட்டாள் தானே.”

“இல்லை. ப்ரியா. நீ திருமணம் முடிந்து சென்ற பின் இரண்டு முறை நடந்து இருக்கிறது.”

“ஆறு ஏழு மாசத்திற்கு முன் இதே போல் நடந்த போது கண் விழிக்க நேரம் ஆனவுடன் . எல்லா செக்கப் பண்ணச் சொன்னேனே. செய்தாள். ஆனால் வீட்டில் வெறும் பிரஷர் மயக்கம் என்று சொல்லச் சொன்னாள். சரி அவளே கொஞ்ச நாள் கழித்து சொல்லட்டும் என்று நினைத்தேன். “

‘என்ன டாக்டர். பிரஷர் மயக்கம் தானே? “ இது ஆதி .

“இல்லை. மிஸ்டர். ஆதர்ஷ். அவளுக்கு பிரஷர் அதிகமாகும் போது மூளையிலும், இதயத்திலும் ரத்த ஓட்டம் அதிகரித்து, அவளின் மூளை செயல்பாட்டை நிறுத்துகிறது. “

மூவரும் அதிர்ந்து விழிக்க, “இது அவளுக்குத் தெரியுமா ?” என்று சந்தேகத்தோடு கேட்டான் ஆதி.

“தெரியும். அவளிடம் இதை பற்றி முழுதுமாக சொல்லி இருக்கிறேன். இதற்கு ட்ரீட்மென்ட் என்றால் நிம்மதியான உறக்கமும், தெளிவான மன நிலையும் தான். அதோடு தொடர்ந்து வேலை செய்யாமல் கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டும். அவளும் கேட்டுக் கொண்டதோடு, இரவு நல்ல உறக்கத்திற்கு மருந்தும் கொடுத்து இருக்கிறேன். மேலும். அவளுக்கு என்ன பிரச்சினை என்ற கேட்ட போது ஒன்றுமில்லை என்று விட்டாள். நானாக ஒருவேளை அவள் கணவரை பிரிந்து இருப்பதால் இருக்குமோ என்று எண்ணி அவளை அவரிடம் நீ போ இல்லியா அவர இங்கே வரச் சொல் என்று கூட கூறினேன். ஆனால். இப்போ அவளுக்கு என்ன பிரச்சினை? அவள் கணவனும் வந்த பிறகு ?”

“இல்லை டாக்டர். அவரை பிரிந்திருப்பதால் அவள் அதிகம் பாதிக்கப்பட மாட்டாள். ஏன் என்றால் அது தெரிந்து தான் அவள் திருமணமே செய்து கொண்டாள். ஆனால் அவள் நிலையை பற்றியோ, இல்லை அவளை பற்றியோ யாராவது எதாவது சொன்னால் மனதை குழப்பி கொள்வாள்.”

“அதோடு இப்போ இரண்டு நாட்களுக்கு முன் அவள் அப்பாவிற்கு உடம்பு சரியில்லாமல் இருந்தார். அதுவும் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறன். ‘ என்றான் ஆதி.

“இப்போ அவள் எப்போ கண் விழிப்பாள் டாக்டர் “?

“தெரியவில்லை ப்ரியா. நார்மல் மயக்கம் என்றால் இதற்குள் விழித்து இருப்பாள். ஒருவேளை இது இரவு நேரமாக இருப்பதால் உறக்கம் தொடர்கிறதோ என்னவோ? நாளை காலை வரை பார்க்கலாம். “

“அப்படி விழிக்கவில்லை என்றால் ?”

“அவளோ கோமாவிற்கு சென்றிருக்க கூடிய வாய்ப்பு அதிகம் “

இதை கேட்ட மூவரும் அதிர்ந்து நின்றனர்.

“லெட் அஸ் ஹோப். “ என்ற படி டாக்டர் கிளம்ப,

மூவரும் வெளியே வந்தனர்.

ஆதியின் முகத்தில் கண்ணீர் இறங்க ஆரம்பித்தது. இவ்வளவு நேரம் கட்டுப்படுத்தி வைத்த வேதனை எல்லாம் வெடித்து வர, அழ ஆரம்பித்தான்.

பிரியா ஒரு பக்கம் அழ ஆரம்பிக்க, பிரபாவால், யாரை சமாதானபடுத்த என்று தெரியவில்லை.

ஆதி பிரியா வை அழைத்து “ப்ரியா. என்னை ஐ.சி.யூவில் கொஞ்ச நேரம் அனுமதிக்கச் சொல்லேன் “ என்று கேட்க, ப்ரியாவும் அங்கே உள்ள சிஸ்டர் இடம் பேசிவிட்டு ஆதியை உள்ளே அனுப்பினாள்.

வெளியில் நின்றவர்களுக்கு பிரபாவும், பிரியாவும் விவரம் சொல்ல எல்லோருமே அதிர்ந்து விழித்தனர்.

ஆதியின் சகலைகள் ப்ரயு அம்மாவிடம் சொல்லலமா என்று யோசிக்க, பிரபாதான் இல்லை. காலையில் சொல்லிக் கொள்ளலாம். என்று தடுத்தான்.

பிரயுவிடம் சென்ற ஆதி ,

“ப்ரயு. கண்ணம்மா. “ என்று அழ ஆரம்பிக்க, நர்ஸ் வந்து தடுத்தார்.

பிறகு தன்னை சற்று நிதான படுத்திக் கொண்ட ஆதி “ரதி. நான் பேசுறது உனக்கு கேட்குதா? ஏண்டா இப்படி இருக்க. ? எங்கிட்ட என்ன கோபமா இருந்தாலும் காமிச்சுடு குட்டிம்மா. நான் உன்கிட்ட என் அன்ப எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலம்மா. ? உன்னோடு நான் இருக்கணும் . உன்னை சந்தோஷமா வச்சிக்கணும் தானே நான் ஒரு வருஷம் முன்னாடியே இங்கே திரும்பி வந்தேன். என்னாலே இதுக்கும் முன்னாடி அந்த காண்ட்ராக்ட் விட்டு வர முடியலம்மா. நான் பண்ணது தப்புதான். போன தடவ வந்துட்டு உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணாதது, உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகாதது. அதோட உனக்கு உடம்பு சரியில்லன்னவுடன்னே உனக்கு என்ன பிரச்சினை ன்னு கேட்காமல், உன்ன திட்டனது எல்லாமே தப்புதான். அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை தருவியாடா.

நான் உன்னோட ஆதி தானே என்னை மன்னிக்க மாட்டியா.? எனக்கு நீ வேணும்டா. என்னோட வாழ் நாள் முழுக்க என்னோட மனைவியா, எனக்கு எல்லாமா நீ வேணும். இதுக்கு மேல என் அன்ப உனக்கு எப்படி சொல்ல தெரியல.

நீ எப்போ எழுந்து என்னை ஆதிப்பான்னு கூப்பிடுறியோ, அது வரைக்கும் நான் யாரோடையும் பேச மாட்டேன். நீ எங்கிட்ட எப்போ பேசுறியோ அப்போதான் நானும் பேசுவேன்.

நான் உன் மேல் வச்சிருக்கிற அன்பு , காதல் உண்மைன்னா, நீயே என்னை ஆதிப்பான்னு கூப்பிடுவ. அதுவரைக்கும் காத்திருப்பேன். உனக்கு ஒன்னும் ஆகாது என்ற நம்பிக்கையோட, உன்னோட இன்னும் நிறைய வருஷம் வாழ்வேன் என்ற நம்பிக்கையோட காத்திருப்பேன். “ என்று கூறியவன் முகத்தில் அதன் பின் உணர்ச்சி சுத்தமாக துடைக்க பட்டு இருந்தது.

வெளியில் யாரிடமும் எதுவும் பேசாமல் அமர்ந்தான். எல்லோரும் அவனிடம் என்னவென்று கேட்க, அவனுக்கு ஆறுதல் சொல்ல முயற்சிக்க, அவன் யாருக்கும் பதில் சொல்லவில்லை.

பிரியா அவனிடம் வந்து, “ஏன் அண்ணா ? அவளை விட உங்களுக்கு வேலை பெரிதா? இப்படி யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்திருக்காளே. அவள் எந்த அளவு வேதனை பட்டு இருந்தால், தனக்கு என்ன ஆனாலும் ஆகட்டும் என்று விட்டு இருப்பாள். ச்சே. நானாவது அவளோடு தொடர்பில் இருந்திருக்க வேண்டும். “ என்று அங்கலாயக்க, பிரபா அவளை தன்னோடு அழைத்து சென்றான்.

“பிரபு. அவள் இப்படி இருக்கிறாளே? அவள் நாளைக்கு கண் திறப்பாளா?”

“நம்பிக்கை வைடா. ரியா. யாருக்காக இல்லை என்றாலும் ஆதிக்காகவது அவங்க நல்லபடியா வருவாங்க. “

“உங்க பிரெண்ட் பத்தி பேசாதீங்க. அவருக்கு வெளிநாடு போகணும் என்றால் அவர் மட்டும் போகட்டும். அதற்கு அவர் அம்மாவிற்கு துணைக்கு என்று கல்யாணம் பண்ணி, அந்த பெண்ணை விட்டு செல்வாரா? அப்படி அவருக்காக ப்ரயு செய்ததற்கு பலன் இதுதானா?” என்று எல்லாம் கோபபட,

“ரியா. ப்ளீஸ் அவனை எதுவும் சொல்லாதே. அவன் நிலைமை அப்படி. .இப்போ கூட அவங்களுக்காகதான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துர்க்கான். அவன் அவங்களுக்காக என்ன செஞ்சிருக்கான்னு உனக்கு தெரியாது ?” என

“அப்படி என்ன செஞ்சாராம்?” என்ற ப்ரியாவிற்கு பதில் சொன்னான். பிரபா.

அவன் சொன்னதை கேட்ட பிரியா, ஆதியை பார்த்துவிட்டு

“எல்லாம் செஞ்சும் பிரயோஜனம் இருக்குமா பிரபா. நீங்க சொன்னதை பார்த்தா ஆதி அண்ணாவும் பாவம் தான். அவளும் அதைதான் சொல்லுவாள். ஆனால் அவள் நல்லபடியாக வர வேண்டுமே. “ என்று அழ,

பிரபா. “நிச்சயம் நல்லா வருவாங்க. நீ அழாதே.” என்று ஆறுதல் படுத்தினான்.

ப்ரயு கண் விழிப்பாளா? ஆதியை பார்த்து பேசுவாளா?

-தொடரும் -
 

kothaisuresh

Well-known member
Member
வருவா கண்டிப்பாக மீண்டு வருவா, ஆதி பிரயு அன்பே அவர்களை சேர்த்து வைக்கும்
 

Rajam

Well-known member
Member
பிரயூ மீண்டு வருவாள்.
ஆதியோடு ந்தோஷமா வாழ்வாள்.
சீக்கிரமே அடுத்த எபி போடுங்க.
டென்ஷன் தாங்கலை.
நல்ல செயதியோடு வாங்க.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom