• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 21 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அன்று மயங்கி விழுந்து எழுந்ததில் இருந்து, பிரயுவிற்கு தன் உடல் நிலை பற்றி ஒரு கவலை இருந்தது. ப்ரயு ஹாஸ்பிடலில் வேலை பார்ப்பவள். மூன்றாவது முறை மயங்கி விழுந்தது என்பது சாதாரண விஷயம் அல்ல. டாக்டர் சொல்லிருக்கா விட்டலும் அவள் செக்கப் செய்திருப்பாள்தான்.

செக்கப் ரிசல்ட் என்னவாக இருக்கும் என்ற யோசனையில்தான் அவள் தன் அம்மா வீட்டிற்கு சென்று விடலாம் என்று எண்ணினாள். தன் மாமியார் தனியாக இருப்பதால், அவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என்று எண்ணம். தன் பெற்றோரே ப்ரயு அங்கே வருவதால் அவளுக்கு கஷ்டம் தான் என்று கூறவே வேறு வழியில்லாமல் தான் இங்கே வந்து இருந்தாள்.

அவளுக்கு தெரியும். எப்படியும் ஆதிக்கு அவன் அம்மா சொல்லி விடுவார் என்று. அவள் எண்ணியது ஆதி தன்னிடம் பேசும்போது , அவன் அம்மாவை தைரியமாக இருக்க சொல்ல வேண்டும். ஒருவேளை அட்மிட் ஆக வேண்டியிருந்தால் அவர்தான் நிலைமையை கையாள வேண்டும். இதெல்லாம் அவனிடம் பேச எண்ணியவள், ஆதி அவள் பேச வாய்ப்பு கொடுக்காததோடு , அவன் பேசிய வார்த்தைகள் , அவன் அம்மாவை தான் கஷ்டபடுத்துவதாக எண்ணிவிட்டான் என்று புரிந்து கொண்டாள்.

ப்ரயு மனதில் ஆதியின் மேல் ஒரு கசப்பு ஏற்பட்டது. எதுவுமே பேசாமல் கட் செய்தவள், மனதில் எதிலும் ஒரு பிடிப்பற்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

அவளை ஃபுல் செக்கப் செய்ய சொல்லியிருந்ததை அவள் யாரிடமும் இதுவரை சொல்லவில்லை. ஆதியிடம் மட்டுமே சொல்ல எண்ணியிருந்தவள் , இப்போது அவனிடமும் சொல்ல விருப்ப படவில்லை.

அன்றைக்கு டாக்டர் வைட்டமின் மாத்திரைகளை மட்டுமே கொடுத்திருக்க, அதை சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டாள்.

படுத்து வெகு நேரம் வரை தூங்காமல் மனதை வருத்திக் கொண்டிருந்தவள் அன்றைய அசதியில் தான் தூங்கினாள்.

மறுநாள் அவள் சற்று லேட் ஆக தான் எழுந்திருந்தாள். ஆனால் ப்ரயு மாமியாரே அன்றைக்கு சமையலை முடித்து விட்டு இருந்தார்.

அவரும் பெண்தானே. ப்ரயு நிலைமையை எண்ணி அவருக்கும் வருத்தமே. தனக்க்காகதான் ஆதியும், பிரயுவும் தனியாக இருக்கிறார்கள் என்றும் உணர்ந்தவரே. என்ன இன்னொரு வீட்டில் வாழ்பவள் என்பதால் தன் மகளின் மேல் பாசம் அதிகம்.

ஆதியின் அம்மா பிறந்த வீட்டில் அவருக்கு செல்வாக்கு கிடையாது. இரு சின்ன குழந்தைகளோடு அவர் கஷ்டபட்ட போது அவருக்கு அங்கிருந்து எந்த உதவியும் கிடைக்காது, பொருளாதாரம் அடிப்படையில் அவருக்கு பெரிய கஷ்டம் இல்லை என்றாலும், மாரல் சப்போர்ட் என்பது அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. இதனால் ஆதியின் அப்பா வீட்டினர் அவரை சற்று அலட்சியமாகவே நடத்தினர். அதே சமயம் பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால் இவர்கள் குடும்பத்தில் அவர்கள் தலையீடு இருக்கும். ஆதி படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பின் தான் அவர்கள் தலையீடு குறைந்தது.

இந்த நிலைமை தன் மகளுக்கு வரக் கூடாது என்பதே அவரின் முக்கிய நோக்கம். வித்யாவின் விஷயம் என்று வரும்போதுதான் அவர் ஆதி, பிரயுவிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார்.

வித்யா டெலிவரியின் போது, பிரயுவின் அனுசரணை, சென்ற முறை ஆதி வந்த போது ஏற்பட்ட மனசங்கடங்களுக்கு பின்னும், அவர் மேல் அவள் காட்டும் அக்கறை. இது எல்லாம் அவருக்கு அவள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியது. தனக்கு பின்னும் இவள் தன் மகளுக்கு சப்போர்ட் ஆக இருப்பாள் .

ஆனால் இப்போது பிரயுவின் களையிழந்த முகமும், அவள் உடல் நிலையும் அவரை குற்ற உணர்வில் கொண்டு தள்ளியது. தன்னால் முடிந்த விதத்தில் அவளுக்கு வீட்டில் அதிக வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.

அவள் அன்று காலை எழ லேட் ஆனதும் தானே சமையல் முடித்து விட்டார். ப்ரயு எதுவும் சொல்ல வில்லை. அவர் செய்ததை சாப்பிட்டு விட்டு , மீதம் இருந்த வேலைகளை முடித்து விட்டு வேலைக்கு கிளம்பினாள்.

ப்ரயு மாமியார் “ஏன்.இன்னிக்கே வேலைக்கு போறே ? ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம் இல்ல ?”

“இல்ல. இப்ப பரவாயில்லை. கொஞ்சம் அவசர வேலையும் இருக்கு. அதனால் போறேன்” என்று முடித்து விட்டாள்.

பிரயுவிற்குமே அன்று வேலைக்கு போக விருப்பம் இல்லை, ஆனால் டாக்டர் கண்டிப்பாக வர சொல்லியிருப்பதால் சென்றாள்.

என்னதான் தைரியசாலி என்றாலும் டாக்டரிடம் தனியாக போக சற்று பயமாக இருந்தது.

அவர் சொன்னபடி அவளை கம்ப்ளீட் மாஸ்டர் செக்கப் செய்து விட்டு, மறுநாள் ரிசல்ட் வாங்கி கொள்ள சொன்னார்.

மறுநாள் அவளை அழைத்து பேசிய டாக்டர்,

“ப்ரத்யா உனக்கு என்ன பிரச்சினை.?”

“என்ன டாக்டர் எதாவது பெரிய விஷயமா? ”

“உன்னை செக் செய்ததில் பெரிய ப்ராப்ளம் எதுவும் இல்லை. ஆனால் சின்ன விஷயமும் இல்லை. நீ அதிக உணர்ச்சி வசபட்டால் , உன் இதய துடிப்பு சீராக இல்லை. ஒரு வகையில் இது பிரஷர் சம்பந்தப்பட்ட கேஸ்தான் என்றாலும், உன் வரையில் அது நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சீரில்லாத ரத்த ஓட்டம் உன் மூளையிலும் ஏற்பட்டு மயக்கத்தை தருகிறது.

இதற்கு சரியான சிகிச்சை என்றால் , நீ உன் மனதை முடிந்த அளவு அலட்டாமல் இருக்க வேண்டும். தினமும் குறைந்த பட்சம் ஏழு மணி நேரமாவது தூங்க வேண்டும். வேலைகள் செய்யும் போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு செய். ஒரே பிடியில் எல்லா வேலையும் முடிக்க நினைக்காதே.

உனக்கு சில வைட்டமின் மாத்திரைகளோடு , ஸ்லீபிங் டேபிலேட் தருகிறேன். தவறாமல் எடுத்துக் கொள்.” என்று டாக்டர் கூற,

“டாக்டர் இந்த பிரச்சினை மயக்கம் மட்டும் தானே வர வைக்கும்?”

“இல்லை .ப்ரத்யா .அந்த மயக்கம் நீடிக்கும் கால அளவு அதிகரித்தால் கோமாவில் கொண்டு விடும். அல்லது secizure (பிட்ஸ்) வரும்.”

“ஒஹ்“என்றவள் அவர் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன் எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட,

“ப்ரத்யா எனக்கு தெரிந்து உன் கணவரை நீ மிஸ் செய்கிறாய் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தை சொல்லி ஒன்று அவரை இங்கே வரவழை அல்லது நீ அவரோடு சென்று விடு. அது உன்னை கொஞ்சம் அமைதி படுத்தும்.” என்று சொன்னார்.

மெல்லச் சிரித்தபடி “பார்க்கலாம் டாக்டர்” என்று விட்டு போனாள்.

அவளுக்கு தன் நிலைமையை யாரிடம் சொல்ல என்று தெரியவில்லை, யாருமே அவளிடம் உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்காத போது அவள் எப்படி சொல்வது, எல்லோருமே அவரவருக்கு தெரிந்த படி நினைத்து கொண்டார்களே தவிர, அவளிடம் பேசவில்லை அவள் பெற்றோர் உட்பட.

ப்ரயு பெற்றோரும் அவள் ஏன் உடனே வேலைக்கு போனாள் என்று சத்தம் போட்டு விட்டு , உடம்பை பார்த்துக் கொள்ள சொல்லி வைத்து விட்டார்கள்.

வித்யா வந்து அவளை பார்த்துவிட்டு சென்றாள். வித்யா இப்போது எல்லாம் முன் போல் அடிக்கடி வருவதில்லை. அவள் குழந்தை, கணவன், மாமியார் என்று பிஸியாக இருந்தாள்.

ஆதி முதல் நாள் பேசியவன், மறுநாளில் இருந்து அவன் கூப்பிட்டாலும் ப்ரயு எடுக்கவில்லை. அவன் மெசேஜ் அனுப்பியதற்கும் அவள் பதில் அனுப்பவில்லை.

அவனுக்குத் தெரியும் அவளுக்குத் தன் மேல் கோபம் என்று. அவன் அன்று இருந்த நிலை , அவளுக்கு மயக்கம் என்று கேள்விப்பட்ட பின் ஏற்பட்ட துடிப்பு, அவனின் குற்ற உணர்ச்சி எல்லாம் சேர்த்து அவனை வேகமாக பேச வைத்து விட்டது. பிறகு அதை எண்ணி வருத்தப்பட்டான்.

தான் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரத்தில், அவளை மேலும் வருத்தப்படும் படி பேசியதை எண்ணி வேதனை பட்டான். மறுநாள் அவளிடம் மன்னிப்பு கேட்க எண்ணியிருந்தவன், அவள் பேசவில்லை என்றதும் அது தனக்குக் கிடைத்தத் தண்டனையாக எண்ணிக் காத்திருந்தான். அவள் இப்படி செய்யவில்லை என்றால் தனக்கும் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மீது கவனம் இருக்காது என்று புரிந்து கொண்டான்.

ஆனாலும் தினமும் விடாமல் காலை, இரவு இரண்டு வேளையும் மெசேஜ் அனுப்பி விடுவான். அவள் வீடு திரும்பும் நேரத்தை கணக்கிட்டு, போன் செய்து அவன் தாயிடம் அவள் எப்படி இருக்கிறாள், சாப்பிட்டாளா என்று விசாரித்து விடுவான்

ஆதி தனக்குத் தண்டணையாக இதை எண்ணி இருக்க, பிரயுவின் மனதிலோ ஆதிக்கு தான் தேவை இல்லை என்ற எண்ணம் வளர ஆரம்பித்தது.

ஆதி தன் அம்மாவை பார்த்துக் கொள்ளத்தான் அவளை திருமணம் செய்து கொண்டான். தன் மேல் அவனுக்கு அன்போ, பாசமோ , நேசமோ எதுவுமே இல்லை.

அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ? ஒரு வேளை அவன் எதிர்பார்ப்பது போல் தான் இல்லையோ?

வெளிநாடு சென்ற புதிதில் இருந்த ஆசையும், வேகமும் இப்போது அவனிடம் இல்லை.

ஆசை அறுபது நாள் பழமொழி அவனை பொறுத்தவரை உண்மையோ?

இந்த மாதிரி எல்லாம் தன் கற்பனை குதிரையை தட்டி விட்டிருந்தாள் ப்ரயு .

யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்க ஆரம்பித்தாள். தன் அம்மா வீட்டிற்கு கூட போவதில்லை. அவர்கள் அவ்வப்போது வந்து பார்த்து சென்றார்கள். ஆனால் அடிக்கடி வருவதில்லை.

எட்டு மாதங்கள் கடந்திருக்க, எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்க்கை சென்றது.

பிரயுவின் வேலையில் எந்த பிரச்சினை இல்லாமல், முழு கவனமாக செய்பவள் என்பதால் அது அவளுக்கு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ரிலீஃப் ஆக இருந்தது. ப்ரயு வேலை செய்யும் ஹாஸ்பிடலில் அவளுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்க எண்ணி, அவளை அதற்கு பிரத்யோக ட்ரைனிங் ஒன்று மூன்று மாதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்,

சென்னையில் தான் என்றாலும் இது முற்றிலும் வேறு மனிதர்கள் நிறைந்த இடம் . அரட்டை அடிக்கவோ, ட்ரைனிங் தானே என்று அலட்சியமாகவோ இருக்க முடியாத படி முழுக்க முழுக்க இவர்களுக்கு வேலை, கற்று கொடுத்தல் என்று பிஸியாக இருக்க வைத்தது. இந்த ட்ரைனிங்கிற்காக அவள் கண் விழித்து வேறு படிக்க வேண்டியிருந்தது,

அவள் இதை பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எப்போதும் போல் அவள் வேலைக்கு செல்கிறாள் என்று மட்டுமே எண்ணினார்கள்.

ஆதி, ப்ரயுவின் மூன்றாம் திருமண நாள் வர இன்னும் பத்து நாட்கள் இருந்த நிலையில், அன்று ஒரு ஞாயிறு.

மூன்று மாதங்களாக வார நாட்கள் பயிற்சியில் செல்ல, ஞாயிறு கொஞ்சம் ப்ரீயாக இருப்பாள். ஆனால் படித்து கொண்டிருப்பாள்.

அன்று ஏனோ அவளுக்குப் படிக்கத் தோன்றவில்லை. மாலையில் அப்படியே மொட்டை மாடி சென்று கொஞ்ச நேரம் சாய்ந்து அமர்ந்திருதாள்.

முதல் நாள் இரவும், இன்று காலையும் அவன் மெசேஜ் வரவில்லை. அவள் பதில் அனுப்பா விட்டாலும் படித்து விடுவாள். ஆதியும் அவள் படித்து விடுகிறாள் என்று அறிந்துதான் தினமும் மெசேஜ் அனுப்புகிறான்.

என்னதான் பேசாமல் இருந்தாலும் அவன் மெசேஜ் ஒரு நாள் வராவிட்டாலும் கவலையாக இருக்கும். அன்று முழுதும் அவளால் எந்த வேலையும் பார்க்க முடியாது.

அவன் அன்னையோடு பேசுவதை அவ்வப்போது கேட்பாள். அவன் மெசேஜ் வராத அன்று ஹாலில் இருப்பது போல் அவள் மாமியாரும் கணவனும் போனில் பேசுவதை கேட்பாள். அவர்கள் பேசுவதை வைத்து, அவன் உடம்புக்கு ஒன்றுமில்லை.வேறு எதாவது வேலை இருந்திருக்கும் என்று புரிந்து கொள்வாள்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகிவிட்டது அவனிடம் நேரடியாக பேசி. இந்த கோபம் அதிகம் தான். ஆனால் அவளால் அதை விட முடியவில்லை. அதோடு அவள் மனதில் வேறு சில யோசனைகளும் அவளை குழப்பிக் கொண்டிருந்தது. ஆதியோடு பேசினால் அவள் கொஞ்ச நாளில் அவள் உடல் நிலையை பற்றி சொல்லி விடுவாள். அதன் பின் என்று அவள் யோசித்த விஷயம் தான் அவளை குழப்பத்திலும், பயத்திலும் தள்ளியது.

ரொம்ப நாள் கழித்து அவள் மனதில் இன்று ஏதோ சந்தோஷம் தோன்றியது. ஏனோ.அவளின் மனம் ஆதியை தேடியது.

அப்போது எங்கிருந்தோ காற்றில் கசிந்து வந்த பாடலோடு அவளும் பாட ஆரம்பித்தாள்.

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
அ அ அ வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனை தன் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே​

அவளின் குரலோடு ஆதியின் குரலும் ஒலிக்க , திரும்பி பார்த்தவள் ஆதியை காணவும் முதலில் பிரமை என்று நினைத்தவள்,

அந்த உருவம் அருகில் வரவும், திகைத்து விழித்தாள்.

அருகில் வந்தவன் அவளின் முகத்தின் அருகே சொடக்கு போட்ட படி

“ஹாய்.பொண்டாட்டி எப்படி இருக்க?”

ப்ரயு இன்னமும் திகைப்பில் இருந்து வெளியில் வரவில்லை.

அவள் அப்படியே நிற்க, அவளைத் தூக்கிச் சுற்ற வேண்டும் என்ற ஆசையை அடக்கி, பொது இடமாக இருப்பதால், கை பிடித்து அழைத்து தங்கள் வீட்டிற்கு சென்றான்.

அங்கே அவன் அம்மாவும் இன்னும் திகைப்பிலிருந்து வெளியே வர வில்லை.

ப்ரயு மொட்டை மாடிக்கு செல்லவும், டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதியின் அம்மா, வாசலில் யாரோ நிற்கவும், யார் எனப் பார்த்தவர் திகைத்து நின்று விட்டார். முன்தின இரவு பேசும் போது கூட அவன் வருவதை பற்றி சொல்லவில்லை.

அவரின் திகைப்பை பார்த்தபடி ,

“ப்ரயு எங்கே அம்மா? “ என்றான்.

அவர் மொட்டை மாடி நோக்கி கை காட்டவே , அவன் வேகமாக சென்று விட்டான். இன்னும் அவன் வந்தது நிசமா, கனவா என்ற நிலையிலேயே அவர் நிற்க, மொட்டை மாடியில் இருந்து பிரயுவை அழைத்து வரவும் , கொஞ்சம் தெளிந்தார்.

“என்னடா ஆதி வரேன்னு சொல்லவே இல்லை ?”

“உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான்மா சொல்லல..”

பிரயுவிற்கு இன்னுமே தெளியவில்லை.

“அதுக்குன்னு இப்டியாடா ? இப்போ மதியானம் பேசினியே? அப்போ கூடவா சொல்ல மாட்ட?’

“அது நான் டிராவலில் இருக்கும் போது பண்ணினேன். சரி வீட்டில் இருக்கீங்களா? வெளியே எங்கியும் போயிருப்பீங்களா என்ற சந்தேகம் இருந்தது. அதுதான் பேசிக் கேட்டுக் கிட்டேன்.”

அவன் அப்படியே சோபாவில் அமர,

‘இப்போ என்ன விசேஷம் அத்தை? தீடிர்னு வந்துருக்கார்?” என்று கேட்டாள் ப்ரயு.

அவருக்கும் அதே தோன்றியதோ என்னவோ அவரும் அவள் எண்ணியதையே கேட்க,

“தீடிர்னு வந்திருக்கேயே ? எதாவது ஆபீஸ் மீட்டிங்கா? எத்தனை நாள் லீவ் போட்டுருக்க?

அவன் இருவரையும் பார்த்தபடி .

“மீட்டிங், லீவ் எல்லாம் இல்லை. அங்கிருந்து வேலை எல்லாம் முடித்து விட்டு வந்து விட்டேன். “

அவன் வந்ததை விட இது மிகவும் ஆச்சரியமான விஷயமாக தோன்றியது இருவருக்குமே. அவன் அங்கே சென்றது முக்கியமான வேலை என்று தெரியும். இடையில் வரக் கூடாது என்றுதான் காண்ட்ராக்ட் போட்டு அனுப்பினர் அவன் கம்பனியில்.

“என்னடா சொல்ற உன் காண்ட்ராக்ட் முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கே?”

“இல்லைமா. நான் இதோட என் காண்ட்ராக்ட் முடிச்சுட்டேன் . இனிமேல் போக வேண்டிய அவசியம் இல்லை” என்றான் பிரயுவை பார்த்தபடி.

பிரயுவிற்கு இப்போது அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை. அவள் அப்படியே நிற்கவும், ஆதி

“அம்மா எனக்கு டிராவல் பண்ணது கசகசன்னு இருக்கு. நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன் “ என்றவன்,

பிரயுவிடம் “எனக்கு காபி எடுத்துட்டு வரியா ?” என்றான்.

அவள் தங்கள் அறைக்கு காபி எடுத்துக் கொண்டு போகவும் , கதவுக்கு பின்னால் இருந்தவன், கதவை சாத்தினான்.

பின்னாடி இருந்து அவளை அணைத்தவன்,

“ஹே.கண்ணம்மா எப்படிடா இருக்க ? உன்னைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு? ஏன் இப்படி இளைச்சி, வாடி போய்ட்ட? ஒழுங்கா சாப்பிடுறையா இல்லியா ? உன்னை கூட்டிட்டு போய் புல் செக்கப் பண்ணனும்டா.” என்று அவளிடம் வாய் மூடாமல் பேசியவன், அவளை தன் அணைப்புக்குள் இன்னுமாக இறுக்கினான்.

அவனின் வேகத்தில் அவள் மூச்சு முட்ட நின்றிருக்க, அவன் அவளை அணைத்தபடியே கட்டிலில் உட்கார வைத்தான்.

அவள் இன்னும் அவனிடம் நேரடியாக பேசவில்லை என்று உணர்ந்து,

“ப்ரயு என்னடா இன்னும் உன் கோபம் குறையவில்லையா? நான் அன்னிக்கு அப்படி உன்கிட்ட பேசி இருக்க கூடாது. எனக்கு நீ உன்னை பார்த்துக் கொள்ளவில்லை என்ற கோபத்தில் அப்படி பேசிட்டேன். அதுக்கு இத்தனை நாள் எங்கிட்ட பேசாமல் தண்டனை கொடுத்திட்ட இல்ல. இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன். பேசுடா ?” என்று கெஞ்சி கொஞ்சினான்.

ஆதி கெஞ்சினாலும், ப்ரயு மனதில் இன்னும் ஏதோ சந்தேகம் இருந்தது. அதை அவள் வாய் விட்டுச் சொல்லவில்லை. ஆனால் அவனிடம் அதை காட்டவும் இல்லாமல்,

“காபி ஆறிடப் போகுது எடுத்துக்குங்க “ என்றாள்.

அவள் பேசிய சந்தோஷத்தில், ஆதி வேறு எதிலும் கவனம் வைக்காமல்,

“ப்ரயு கிட்டத்தட்ட ஆறு நாளா இருபது மணி நேரம் வேலைப் பார்த்து பயங்கர அலுப்பா இருக்கு. அதனால் ஒரு ரெண்டு நாளைக்கு நான் முழுக்க தூங்கறேன். எனக்கே பசிக்கும் போது எழுந்து சாப்பிடுறேன். யாரும் டிஸ்டர்ப் பண்ணாமல் பார்த்துக்க. சரியா ?’

என்றவன், காபி குடித்து விட்டு , தன் அம்மாவிடமும் சென்று சொல்லி விட்டு படுத்து விட்டான். தூங்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரயு.

-தொடரும் -
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom