• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 2 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் - 2
ஆதர்ஷ் நார்வே செல்ல எப்படியும் ஒரு நாள் ஆகி விடும் என்பதால் அவனுடைய போன்க்கு காத்திராமல் , காலையில் எழுந்த பிரத்யுஷா, தன் மாமியாரிடம்,

“அத்தை. நான் இன்னிலேர்ந்து ட்யுட்டி லே ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன் போகட்டுமா ?” என்றாள்

“அதுக்கென்னம்மா செய் உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும் அப்புறம் நீ சாப்பாடு எடுத்துட்டு போவியா இல்ல. அங்கியே கான்டீன் இருக்கா?” என்றார்.

இல்ல அத்தை. நான் லஞ்ச் வீட்லேர்ந்து கொண்டு போவேன். நான் என்ன பண்ணனும் சொல்லுங்க . உங்களுக்கும் சேர்த்து செய்து முடிச்சுடறேன் சாதம் கூட ரைஸ் குக்கர்லே வச்சுட்டா திருப்பி வைக்க வேணாம். சூடாவே இருக்கும்“

அப்போது வீட்டு லேன்ட் லைன் அடிக்க, எடுத்து பேசிய கமலா

“ஆதர்ஷ் சொல்லுப்பா ” என,

அவள் ஆவலோடு வந்தாள் அவர் பேசி விட்டு அவளிடம் கொடுக்கவும்,

“ஹாய் நீங்க இப்போ பேசுவீங்கனு நினைக்கல பிளைட் ஈவினிங் தானே லேன்ட் ஆகும் “ என

“ஆமாம்டா. ஆனால் இப்போ கனெக்டிங் பிளைட்க்காக வெய்ட் செய்துட்டு இருக்கேன் நைட் புல்லா ஒரே யோசனை நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்களோன்னு.அதான் சரி இந்த டைம்லே பேசலாம் கூப்பிட்டேன். நீ சொல்லு நைட் தூங்கினியா?” என வினவ,

“ஹ்ம்ம் கஷ்டமாதான் இருக்கு ஆனா பழகிடும்னு நினைக்கிறேன் நீங்க ஏதாவது சாப்பிடீங்களா? “

“இல்லம்மா இனிமேதான்.”

“சரி சாப்பிடுங்க வந்து நான் இன்னிலேர்ந்து வேலைக்கு திரும்ப ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன் அத்தை கிட்டேயும் கேட்டுட்டேன் நீங்க என்ன சொல்றீங்க ?”

“ஹ்ம்ம் சரிமா வச்சுடவா”

“சரி நைட் இன்னிக்கு பேசலாமா? “ என்று ப்ரயு வினவ,

“இன்னிக்கு கொஞ்சம் கஷ்டம் நான் லேன்ட் ஆனவுடனே கால் பண்ணி சொல்லிடறேன் மத்தபடி நாளைக்கு வேலைலே சேர்ந்துட்டு உனக்கு டைம் சொல்றேன் “

“ஒகே பார்த்துக்கோங்க” என்று அவள் வைக்கவும், அவனும் வைத்தான்

கொஞ்ச நேரம் அங்கேயே நின்றவள், பின் தன் அத்தையிடம் சென்றாள்

அவர்கள் சொன்னபடி சமையல் முடித்து, கிளம்பி தான் வேலை செய்யும் ஹாஸ்பிடல் நோக்கி சென்றாள்

அவளை எதிர் நோக்கி அவள் தோழி பிரியா காத்திருந்தாள்.

“வாம்மா புதுபொண்ணு என்ன கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு ?” என்று கேலியாக வினவ,

“நல்லாருக்குடி” என்றவள்,

“ஹ்ம்ம் அப்புறம் ஹனி மூன் போனியா? எங்க போன ?”

“இல்லடா இந்த தடவை புல் டைட் அவர் எப்படியும் நடுவிலே வருவார்னு நினைக்கிறன் அப்போ பார்க்கலாம் “

“ஏண்டி இப்போ அனுபவிக்காம எப்போ இதெல்லாம் கிடைக்கும் அப்புறம் கமிட்மென்ட் ஏறிடும் பா”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை அவர் வீட்டிலே எல்லாரும் நல்லவங்கதான் அதான் நெக்ஸ்ட் டைம் வரும்போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்”

சரி சரி வா வேலை பார்க்கலாம் முதலில் போய் எம்.டிய பார்த்துட்டு வருகிறேன் “ என்று முடித்து விட்டு சென்றாள்.

எம்.டிய பார்த்தாள். அவரும் அவளை பற்றி விசாரிக்க, பதில் சொன்னவள், தன் அத்தை தனியாக இருப்பதால் , இனிமேல் நைட் ஷிப்ட் பார்ப்பது கஷ்டம் என்று எடுத்து உரைத்தவள், அதற்கு தேவையான மாற்று ஏற்பாடு குறித்து பேசி விட்டு வந்தாள்

அட்மின் பிரிவில் நைட் ஷிபிட் தேவைப்படாது என்றாலும், இந்த மருத்துவமனையில் எல்லாரும் இல்லை என்றாலும், தீடிர் என்று தேவைபட்டால் எல்லா வேலையும் தெரிந்த இரண்டு பேர் அட்மின் பிரிவில் இருப்பார்கள் அது சுழற்சி முறையில் வரும்போது இவளும் வருவாள் இப்போது அதற்கு தான் மாற்றம் கேட்டு விட்டு வந்தாள்.

திருமணத்திற்கென பதினைந்து நாட்கள் லீவ் எடுத்ததால் கொஞ்சம் வேலைகள் சேர்ந்து இருந்தது அன்றைய மதியம் வரை வேலை சரியாக இருக்க, மதியம் தன் தோழியோடு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“உஷா உன் அம்மா வீட்டிற்கு சென்று வந்தாயா? அங்கே எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.”

“இல்லமா கல்யாணத்திற்கு மறுநாள் ஒருவேளை அங்கே சென்று சாப்பிட்டு வந்தது நேற்று அம்மா வீட்டிலிருந்து எல்லாரும் வந்து அவரை வழியனுப்பி வைத்தார்கள்”

“சரி லோக்கல்லே யாவது எங்கியாவது போனீங்களா?

அவரோட சேர்ந்து மூன்று நாலு தடவை ஷாப்பிங் போனோம் வேற எங்கே போக டைம் இருந்தது?”

உன் ஹஸ்பன்ட் எப்போ திரும்பி வருவார்?

எப்படியும் மூணு வருஷத்துக்கு மேல ஆகுமாம்.

உனக்கு கஷ்டமாக இல்லையாடி இவ்ளோ நாள் ஆகும்னா பேசாம போயிட்டு வந்து கல்யாணம் செய்திருக்கலாமே? இல்ல உன்னை கூட்டிட்டு போற ஆப்ஷன் ஆவது பார்த்துருக்கலாமே ? நீ கேட்டு பார்க்க வேண்டியது தானே?

இல்லை. அவர் எல்லா ஆப்ஷன் ட்ரை பண்ணிட்டுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கார். அவர் தங்கைக்கு இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு நார்வே கிளைமேட் இண்டியன்ஸ்க்கு அதுவும் வயசானவங்களுக்கு கஷ்டமாம் அதோட அவர் அத்தையை அங்கே கூட்டிட்டு போய்ட்டா, அவர் தங்கை வித்யாவிற்கு இனிமேல் வரும் விஷேஷங்களுக்கு அவங்க அம்மாவை எப்படி கொண்டு விட்டு கூட்டி போறது எல்லாம் கஷ்டம்

அவரோட ஜாப் ப்ரோபைலே அங்கே உள்ள ஐ.டி. மார்க்கெட்டிங் டெவலப் பண்ணனும் சோ அடிக்கடி லீவ் போட முடியாது ஓரளவு அங்கே பிக்கப் ஆச்சுன்னா அவர் திரும்ப இங்கியேதான் வரணும்

அம்மாவை இங்கே தனியா விட முடியாது இதெல்லாம் யோசிச்சு தான் கல்யாணம் பண்ணி மனைவியை இங்கே விட்டு விட்டால், அம்மாவும் மனைவியும் ஒருதரோகொருத்தர் துணையா இருப்பாங்க

இதெல்லாம் எங்க அப்பா கிட்ட சொல்லி தான் பொண்ணு கேட்டாங்க அப்படி இருக்கும் போது நான் இப்போ எப்படி அவர்கிட்ட எதுவும் சொல்ல முடியும்

சரிடி உஷா இதெல்லாம் உன்கிட்டயும் சொல்லியுருப்பாங்கதானே நீயாவது யோசிச்சிருக்கலாம் ல

என்னை பொறுத்தவரை அம்மாக்காக இவ்வளவு யோசிக்கிறவர் கண்டிப்பா என்னையும் நல்லா பார்த்துப்பார்னு தோணிச்சு. என்னோட பாமிலி அப்படின்னு வந்தா , கமிட்மென்ட் கூடிடும் அதே சமயம் இந்த நாலு வருஷம் நான் அவங்க அம்மா கூட இருந்தாலும் , என் தங்கச்சிங்க செட்டில் ஆகிறவரை அம்மா வீட்டையும் பார்த்துக்கலாம். இதெல்லாம் யோசிச்சுதான் சரி ன்னு சொன்னேன்

ஓகே. ஓகே ஆனால் கல்யாணத்திற்கு முன்னால் உள்ள அந்த மலர்ச்சி இப்போ உன்கிட்ட இல்லையே, அப்போ அவரை மிஸ் பன்ன்றேதானே

அது ஆமாம்டி. நீ சொன்ன மாதிரி நடப்பதெல்லாம் நன்மைக்கே அப்படின்னு நினைச்சாலும், இந்த பத்து நாள்லே அவர் மேலே இவ்ளோ அன்பு வைப்பேன்னு நானே நினைச்சு பார்கலே அதுவும் நேற்று இரவு ரூமில் தனியா படுத்தப்போ ரொம்ப கஷ்டமா இருந்தப்போ” என்று சொல்லும் போது அவள் கண்கள் கலங்கியது.

“சரி சரி விடு அவர் வேலை சீக்கிரம் முடியனும்னு வேண்டிக்கோ வா போகலாம்” என்று ப்ரத்யுவை அழைத்துக் கொண்டு போனாள் பிரியா

அன்று மாலை வேலை முடிந்து வந்தவள், வீட்டில் மாமியாருடன் சேர்ந்து இரவு உணவு வேலையை முடித்தவள், ஆதர்ஷின் போனிற்காக காத்திருந்தாள்.

இரவு கிட்டத்தட்ட பன்னிரண்டு மணியளவில் போன் செய்தவுடன், முதலில் தன் அத்தையிடம் கொடுத்து பேச வைத்தாள். அவர் அவனிடம் பேசிவிட்டு, தூங்க செல்ல,

போன் எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்தாள்

“ப்ரயு என்ன பண்ணிட்டிருக்க ?” என்றான்

“ஹ்ம்ம் உங்க கூட பேசிட்டு இருக்கேன் “

“அய்யே அரத பழசான மொக்க ஜோக்கு “

“மொக்க கேள்விக்கு மொக்க பதில் தான் வரும்”

“ஹோய் என்ன கிண்டலா “ என்றவன் ”இன்னிக்கு வேலைக்கு போயிட்டு வந்தியே.ஒன்னும் ப்ரோப்ளம் இல்லையே”

“இல்லப்பா எப்பவும் போல் உள்ள வேலைகள்தான் ஆனால் இங்கேர்ந்து போறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு வேற எதாவது ஈசி ஆப்ஷன் பார்கனும்”

“ஒ.. சரி சீக்கிரம் பார்க்கலாம்”

“அப்புறம் நீங்க எங்கே தங்கியிருக்கீங்க

“ஹோட்டல் தான் நாளைக்கு கெஸ்ட் ஹவுஸ் ரெடி ஆயிடுமாம் இன்னிக்கே ரெடி ஆக வேண்டியது இங்கே லோக்கல் ஹாலிடே இன்னிக்கு அதனால் தான்.”

“அங்கே இப்போ டைம் என்ன ?”

“ஏழு மணி அங்கே என்ன பனிரெண்டு மணியா?” என்றவன் சற்று நேரம் பேசி விட்டு

“நாளைக்கு கெஸ்ட் ஹவுஸ் போயிட்டு, அங்கிருந்து டெய்லி எத்தனை மணிக்கு பேசலாம் னு சொல்றேன் இப்போ போய் தூங்கு “என்றான்

“சரி குட் நைட் என்று சொல்லிவிட்டு அவளும் போனை அணைத்தாள்.

இருவர் மனத்திலும் அப்போது தோன்றிய எண்ணம்

“இந்த மூணு , நாலு வருஷமும் நாம் அழகன் படத்துல வர மாதிரி

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா

என்று போனில் தான் குடும்பம் நடத்தனும் போலே ”

மறுநாள் காலை எழுந்ததிலிருந்து முதல் நாள் போல் போன் செய்வானோ என்று மிகவும் எதிர்பார்த்தாள் ப்ரத்யு ஆனால் ஆதர்ஷ் பண்ணவில்லை. ஏமாற்றத்தோடு தன் வேலைக்கு கிளம்பினாள்.

அங்கே ப்ரியா “என்ன உஷா உன் முகம் நேற்றை விட டல் அடிக்குது இன்னிக்கு. என்ன விஷயம்?”

“ஒன்னும் இல்லடி நேற்று மாதிரி இன்னிக்கும் பேசுவாரோன்னு நினைச்சேன் ஆனால் பேசலை”

ஏன் நேத்து நைட் ஊர் போய் சேர்ந்து போன் பண்ணலையா?

“அது நேத்து ராத்திரியே பண்ணிட்டார் நேத்தைக்கு காலையில் பண்ண மாட்டார்னு நினைச்சேன். பண்ணினார் சரி. இன்றும் காலையில் பண்ணுவாரோன்னு எதிர்பார்த்து ஏமாற்றமா இருக்கு

ஏண்டி ஒரு நாளே இப்படி இருக்கியே இன்னும் இருக்கே? எப்படி தாங்குவே?

அதெல்லாம் ஒன்னுமில்லடி பாவம் நேத்து புல்லா ட்ராவல் பண்ணிட்டு , நைட்டும் என்னோடு பேசிட்டுதானே படுத்தார் டயர்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன் அதுதான் போன் பண்ணல புத்திக்கு தெரியுது மனசு ஏமாற்றமாயிடுது அதுதான் முகத்தில் தெரியது மத்தபடி ஒண்ணுமில்லை “ என்று ப்ரியாவோடு சேர்த்து தனக்கும் சமாதனம் சொன்னாள் ப்ரத்யு

அன்று இரவு பதினொரு மணிக்கே கால் செய்தவன் தன் அன்னையிடம் பேசிவிட்டு, பிரத்யுவிடம் பேச ஆரம்பித்தான்

“ப்ரயு நீ சிஸ்டம் கனெக்ட் பண்ணி வெப் கேம் வா” என்றவன், அவள் சிஸ்டத்தில் உட்காரவும்,

“ஹாய் ப்ரயு எப்படி இருக்க?

ஹ்ம்ம்

என்ன டல்லா பதில் வருது

நேத்து நீங்க மார்னிங் பேசின மாதிரி , இன்னிக்கும் பேசுவீங்கனு நினைச்சேன் அதான் டல்லா இருக்கு

ஹே லூசு பொண்ணே நான் காலையில் உன்கிட்ட பேசணும்னா மூணு மணிக்கு எழுந்து பேசினாதான், உனக்கு எட்டு மணி ஆகும் டெய்லி அது நடக்குமா சொல்லு?

ஹே சாரி நான் அத யோசிக்கவில்லை சரி சரி நீங்க ஈவேனிங் கால் பண்ணுங்க

சரிமா

கெஸ்ட் ஹவுஸ் எப்படி இருக்கு? எல்லா வசதியும் இருக்கா?

அதெல்லாம் ஒன்னும் ப்ரோப்ளம் இல்லைடா நான் இன்னிக்கு ட்யுட்டி ஜாயின் பண்ணிட்டேன் என்னோட டைம் 9 டு 5 தான் சோ நான் ஆபீஸ் முடிச்சிட்டு வந்து ஒரு 6 மணிக்கு உனக்கு கால் பண்றேன் நம்ம டைம் படி பார்த்தா 11 மணி ஆகிடும் உனக்கு பரவாயில்லியா?

அது ஓகே பா ஆனால் கண்டிப்பா கால் பண்ணிடுங்க

ஷுர் மாக்சிமம் ஒரு மணி நேரம் பேசலாம் வேற ஏதாவது உனக்கு என்னிடம் சொல்ல தோணினா, என்னோட மெயில் அல்லது எப்.பி லே மெசேஜ் அனுப்பு நான் பார்த்துட்டு எமெர்ஜென்சினா கால் பண்றேன்

அவள் சரி எனவும், அன்றைய நடப்புகளை இருவரும் பேசினார்கள் ஒரு மணி நேரம் போவது ஏதோ தெரியாமல் பேசினார்கள். இடையிடையே அவன், அவளிடம் சில ஜோக்குகள் சொல்லி அவளை சிரிக்க வைத்தான்

“ப்ரயு

மனைவி கணவனிடம் சொன்னாளாம் “ஏங்க சொர்கத்திலே புருஷனையும், பொண்டாட்டியையும் பிரிச்சிருவாங்களாமே”

கணவன் பதில் சொன்னனாம் “அதுனாலதான் அது சொர்க்கம்” என்றானாம்” என்று முடிக்கவும்,

ப்ரயு அவனுக்கு அழகு காட்டியபடி “அப்போ நீங்க சொர்கத்திலே இருக்கிறதா சொல்றீங்களோ? “ என்று மூஞ்சை தூக்கவும்,.

“ஹே இல்ல மா நான் அப்படி எல்லாம் சொல்வேனா? ஜோக் சொன்னால் சிரிப்பியே உன் அழகு சிரிச்ச முகத்தை பார்த்துட்டு குட் நைட் சொல்லலாமேன்னு பார்த்தேன்

இது ஜோக் ? இதுக்கு நாங்க சிரிக்கணுமோ?

ஹே வாட்ஸ் அப் வைரல்மா இது ரொம்ப வேகமா பரவிட்டு இருக்கு பார்த்துக்கோ

நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இது என்றபடி சிரிக்க, அவள் சிரிக்கும்போதே இருவரும் குட் நைட் சொல்லியபடி கால் கட் செய்து விட்டு படுக்க சென்றார்கள்

அவர்கள் இருவரின் நாட்களும் இதே போல் விரைய, ஆதர்ஷ் நார்வே சென்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நல்லபடியாக கழிந்தது.
 

பிரிய நிலா

Well-known member
Member
பரவாயில்லை... பிரயு புரிஞ்சி நடந்துக்கற மாதிரி ஆதர்ஷ் அவளோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கறான் சூப்பர் எபி சிஸ்..
 

Baby

Active member
Member
மூனு மாசம் தான் இனிமையா முடிஞ்சிருக்கு..இனிமேல் தான் இருக்குனு சொல்ல வர்றீங்களா சிம்பாலிக்கா
 

Thani

Well-known member
Member
மன்னிக்கணும் சிஸ்🙏இந்த கதையை தொடர்ந்து படிக்க முடியல ....ஆனால் 2 or 3 நாளில் படிக்க தொடங்கி விடுவேன் 😀
 

Devi Srinivasan

✍️
Writer
மன்னிக்கணும் சிஸ்🙏இந்த கதையை தொடர்ந்து படிக்க முடியல ....ஆனால் 2 or 3 நாளில் படிக்க தொடங்கி விடுவேன் 😀
eppo mudiyudho padinga sister. site le than irukkum. thank you :love:🙏🙏
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom