• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 19

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசை வெல்லுங்கள்.



IMG-20210430-WA0029.jpg

அத்தியாயம் - 19

மாலைப்பொழுது விடைபெற்று, காரிருள் சூழ... வானத்து தேவதையான நிலா பவனி வர… தேகம் சிலிர்க்கும் குளிர்ந்த காற்றில், சுற்றிலும் இருந்த மலர்களின் சுகந்தம் வீச… பின் மாலைப் பொழுதில்… அந்த ஹோட்டலின் பார்க்கில் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறு நெருப்பை மூட்டி, அதை சுற்றி அமர்ந்து உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்…

பேராசிரியர்களும், அவர்களோடு சேர்ந்து கும்மாளம் போட… அவர்களை தடுக்க யாருமில்லை. அபிநயனும், அவர்களுக்கு சரிசமமாக இறங்க... அப்புறம் என்ன ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான்.‌.. அங்கிருந்த மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். அப்புறம் அபிநயனையும், விட்டு வைக்கவில்லை… "சார்… சார்… எங்களுக்காக ஒரு பாட்டுக்கு மியுசிக் ப்ளே பண்ணுங்க.‌.. " என்று ஒரு மாணவன் தான் வைத்திருந்த கிட்டாரை நீட்ட…

அதை வாங்கிய அபி, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, " கைஸ் என்னப் பாட்டுக்கு ப்ளே பண்ண சொல்லுங்க…" என…

ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த பாடல்களை இசைக்க சொல்ல…

" கைஸ்… ஸ்டாப், ஸ்டாப்… இப்படி கூச்சல் போட்டால் எப்படி நான் ப்ளே பண்றது.‌.. முதலில் அமைதியாக இருங்க… " என்ற அபி, ஒரு நிமிடம் புருவத்தை சுருக்கி யோசித்தான், பிறகு முகம் மலர, "ஒரு ஐடியா பால் யாரும் வச்சிருக்கீங்களா… " என…

"என் கிட்ட இருக்கு…" என்று ஒரு மாணவன், பாலைத் தூக்கிப் போட… அதை கேட்ச்‌ பிடித்தான் அபி…

"இங்க பாருங்க டியர்ஸ்… எல்லோருடைய விருப்பப்படி இசைக்கணும் என்றால் டைம் பத்தாது, அண்ட் முடியவும் முடியாது. சோ… நாம ஒரு கேம் விளையாடுவோம்… பர்ஸ்ட் நான் பாலைத் தூக்கிப் போட்டுட்டு, எனக்கு பிடித்த ஒரு பாடலை ப்ளே பண்றேன்… ப்யூ லைன்ஸ் ஒன்லி… அப்புறம் நான் நிறுத்தும் போது, பால் யார் கையில் இருக்குதோ, அவங்க கேக்குற பாட்டை ப்ளே பண்ணுவேன். ஒன் ஹவர் வரைக்கும் தான் நான் இருப்பேன். அதுக்கப்புறம் நான் கிளம்பிடுவேன்… நாளைக்கு மார்னிங் வொர்க் இருக்கு… நான் போய் கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுக்கணும்… " என்றுக் கூறி முறுவலிக்க…

" ஒகே சார்…" என எல்லோரும் சத்தமாக கூறினர்‌…

அபி, அந்த சிச்சுவேஷனுக்கு ஏத்த பாடலான, " என் இளைய பொன் நிலவே… " என்ற பாடலுக்கு கிட்டாரில் இசைத்தான். அதை நிறுத்தவும், பாலை கையில் வைத்திருந்த மாணவன், "ஹோ…" என கூச்சலிட்டு, அவனுக்கு பிடித்த பாடலை சொன்னான்… இப்படியே ஒவ்வொருவராக அவர்களுக்கு பிடித்த பாடலைக் கூற, இசைத்துக் கொண்டே இருந்தான் அபி…

தர்ஷனா தனக்கு சான்ஸ் கிடைக்குமா? என காத்திருக்க… கடவுள் அவளுக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை. மாறாக அம்ருதாவின் கையில் பால் வந்து விழுந்தது. அதாவது அபி அவள் கைகளில் பால் வருவதைக் கவனித்து கிட்டார் ப்ளே பண்ணுவதை நிறுத்தியிருந்தான்.

அம்ருவோ, என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க‌…

" ம் சொல்லுங்க… எந்த பாடல் இசைக்க.‌‌.. க்வீக் அம்ரு… " என்று விட்டு, "அம்ரு என்று தான உங்க பெயர் வரும். மறந்துடுச்சு … சாரி…" என ஒன்றும் அறியாதவன் போல கூற…

மனதிற்குள், ' அடப்பாவி' என திட்டிக் கொண்டு, " ஐயம் அம்ருதவர்ஷினி‌…எனக்கு எந்த ஐடியாவும் இல்லை… உங்களுக்கு பிடித்த பாடலே ப்ளே பண்ணுங்க…" என்றுக் கூறி விட்டு, ஸ்வேதாவிடம் நெருங்கி அமர்ந்துக் கொண்டாள், பின்னே அவனின் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் தவித்துப் போனாள்.

" ஓஹோ… அம்ரு… சாரி, சாரி அம்ருதவர்ஷினி இன்னைக்கு என்னமோ அமைதியா இருக்காங்க… ஓகே … அவங்க என்னோட சாய்ஸ் என்று வேற சொல்லிட்டாங்க... சோ‌… அவங்களுக்கு ஸ்பெஷல் டெடிகேஷன்‌‌… பாடிக்கிட்டே நான் இசைக்க போகிறேன்." என…

" ஹோ‌…" என்று ஒரே கூச்சல்… தர்ஷனாவோ, எள்ளும், கொள்ளும் வெடிக்க‌, தனது அருகில் அமர்ந்து உற்சாகமாக கை தட்டி கொண்டு இருந்த ஆராதனாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அபிநயன், அம்ருதாவைப் பார்த்துக் கொண்டே பாட ஆரம்பித்தான்.

"ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
……………………..
……………………..
……………………..
காதலி
மை டார்லிங்
என்னை காதலி
பிளீஸ்
காதலி
ஆஹா…
என்னை காதலி

ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்

காதலி
இசைக்காதலி
என்னை காதலி
என்னை காதலி…" என பாடி முடிக்க…

அவன் பாடலில் இருந்த, உணர்வு குவியலை உணர்ந்த எல்லோரும், கரகோஷம் எழுப்ப… அம்ருதா மட்டும் அதில் காதலி என்பதை இசைக்காதலி என்று மாற்றியதை கவனித்து இருந்தாள்.

அதற்கு மேல் அவளால், அங்கு அமர முடியவில்லை… மெல்ல யாரும் கவனிக்காதவாறு அந்த இடத்தில் இருந்து நழுவினாள். அவள் எழுந்து செல்வதை பார்த்த, ஸ்வேதாவும் எழுந்து அவள் பின்னே சென்றாள்.

அபி, அவர்கள் இருவரும் சென்றதை கவனித்தான். ஆனால் இப்பொழுது இந்த கூட்டத்தில் இருந்து அவனால் செல்ல முடியாது என்பதை உணர்ந்தவன், முயன்று இசைத்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாக ஒரு மணி நேரம் முடிந்தவுடன், ஓகே கைஸ்… யூ கேன் என்ஜாய்... பை... சீ யூ சம் அதர் டைம்ஸ்." என்று அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறியவன், உள்ளே நுழைவது போல சென்று, வேறு வழியாக அம்ருதாவும், ஸ்வேதாவும் சென்ற இடத்திற்கு சென்றான். அங்கு அம்ருதா கண்கள் கலங்கி அழுதுக் கொண்டிருந்தாள்…

ஸ்வேதா கேட்டதற்கும் ஒன்றும் கூறாமல், மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

அங்கு வந்த அபி, ஒன்றும் கூறாமல் அம்ருவைப் பார்க்க…

அவளோ, அபியை இங்கு எதிர்ப்பார்க்கவில்லை. யாராவது பார்த்தால், என்னாவது என்று பயந்துக் கொண்டே அங்கே விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தாள்.

அவர்களுக்கு தெரியாது என்று புரிந்துக் கொண்டவள், நிம்மதி பெருமூச்சுடன் அபியிடம், " என்ன அபி சார்… " என்று தந்தியடித்தாள்.

ஸ்வேதா அப்போது தான் அபி வந்ததையே கவனித்தாள், "சார் " என்றவள் எழுந்து நிற்க…

" உட்காருங்க மிஸ்… " என்று அபி இழுக்க…

" ஐயம் ஸ்வேதா… " என தன்னை அறிமுகம் செய்துக் கொண்டாள்.

" யா… உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே…"

" எங்க அப்பாவும், சினி ஃபீல்டுல தான் இருக்காங்க… "என்று தன்னுடைய தந்தையை பற்றிக் கூற…

" வாவ்… அதான் உங்களைப் பார்த்த மாதிரி இருந்தது… உங்களுக்கு கூடிய சீக்கிரம் மேரேஜ் என்று சார் சொன்னாரே… கங்கிராட்ஸ் சிஸ்…"

" தேங்க்ஸ் சார்… அப்பா இன்வைட் பண்ணுவார்… கட்டாயம் நீங்க வரணும்…" என ஸ்வேதா கூற…

" யா… கட்டாயம் வரேன்…" என்று அம்ருவைப் பார்த்துக் கொண்டே கூற…

அபியின் பார்வையை பார்த்து, ஸ்வேதா குழம்பி போய் நின்றாள்…

அபியோ, அதையெல்லாம் கவனிக்கவில்லை. " ஸ்வேதா… நான் உங்க தோழியோட கொஞ்ச நேரம் தனியாக பேசணும்…" என..

ஸ்வேதா புரிந்தும், புரியாமலும் தலையாட்டி விட்டு சற்றுத் தள்ளி நின்று கொண்டாள்‌.

சிறு, சிறு மரங்கள் குன்றுகளாக காட்சியளிக்க… அதில் ஒரு மரத்திற்கு பின்பு இருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள் அம்ருதா… அவளின் அருகில் சென்று அமர்ந்த அபி, அவள் இன்னும் நிமிராமல் இருப்பதைக் கண்டு, அவளை நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டு, " ஏன் அம்ரு… நீயும் கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்துற… உனக்கு என்னைப் பிடிக்கும் என்று எனக்கு நல்லாவே தெரியும்… எனக்கு தெரியும் என்பது, உனக்கும் தெரியும். ஏன் இப்படி விலகிப் போற… அப்புறம் இப்படி தனியாக உட்கார்ந்து அழற… சொல்லு மா...நீ சொன்னா தான் எனக்கு தெரியும்… நீ, இப்படி என்னை தவிர்க்கிறதைப் பார்த்தால்,என்னால் எதிலும் கான்சன்ட்ரேஷன் பண்ண முடியவில்லை‌. இப்படியே போனால் எனக்கு பைத்தியம் தான் பிடிக்கும். இல்லை நான் அப்படி சுத்துறதைப் பார்க்கத் தான் உனக்கு விருப்பமா… " எனக் கூறி முடிக்கும் முன்பே,
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க அபி ... " எனக் கதறிய அம்ரு அவனது தோளில் சாய்ந்து இருந்தாள்…

அவளின் செயலில் வந்த புன்னகையை அடக்கிக் கொண்டு, "அப்புறம் ஏன் அம்ரு… நான் காதலை சொல்லியும் ஒத்துக் கொள்ளாமல், என்னை தவிக்க விட்ட…"

" அது… உங்க ஸ்டேட்டஸ் வேற‌… எங்க ஸ்டேட்டஸ் வேற… அப்புறம் எங்க அண்ணாவுக்கு‍, நான் பாடுவதே பிடிக்காது... இதில் நீங்கள் மியூசிக் டைரக்டர் என்று சொன்னால் ஒத்துக் கொள்ளவே மாட்டார். உங்க வீட்டிலும், உங்க தங்கச்சிக்கு என்னை பிடிக்காது... அதான் ஆரம்பத்திலேயே உங்களை விட்டு விலகி விடலாம் என்று பார்த்தேன்‌. ஆனால் நீங்கள் தான் விடவில்லை…" எனக் கூறி அவனை பார்க்க…

" எல்லாருக்காகவும் பார்த்த சரி… ஆனால் எனக்காக கொஞ்சம் யோசித்துப் பார்த்தீயா அம்ரு…"

" சாரி அபி …"

"நான் முன்னாடியே சொன்னது தான்.‌‌.. நமக்குள் சாரி, தேங்க்ஸெல்லாம் தேவையில்லை… நான் கேட்பதை தருகிறாயா…" என சரசமாக வினவ…

அவளோ முகம் சிவக்க, " போங்க அபு…" எனக் கூறி அவன் முதுகிலே இரண்டு தட்டு தட்டினாள்.

அடித்த கைகளைப் பற்றி இழுத்து தன் மேல் சாய்த்தவன், " அம்ரு… என் தங்கையை பற்றி கவலைப்படாதே‌‌… நீ என் மனைவியாக வந்துவிட்டால், அவள் உன் மேல் பிரியமாக இருப்பாள்.அப்புறம் உங்க அண்ணன் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. உன் படிப்பு முடியட்டும், தட்டை தூக்கிட்டு வரேன்… உங்க வீட்டுல வந்து பொண்ணு கேக்குறேன். ஒத்துக்கிட்டா சரி… இல்லைணா பொண்ணைத் தூக்குறேன்… அவ்வளவு தான்…" என்றுக் கூறி கண்ணடிக்க.‌‌..

அவனைப் பார்த்து முறைக்க முயன்ற அம்ரு, அது முடியாமல் கலிரென நகைத்தாள்.

இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதா, அதிர்ச்சியில் ஆவேன வாயைப் பிளந்தபடி நின்றிருந்தாள். இவர்கள் இருவரின் காதலுக்கு சாட்சியாக இருந்தாள்.

டயர்டாக இருக்கு என்று பயர் கேம்பிற்கு கௌதம் வரவில்லை… அதனால் அவனுக்கு இவர்கள் இருவரும் விரும்பிய விஷயம் தெரியாமலே போய் விட்டது‌.

"நாளை வேலை முடிந்ததும் கிளம்பி விடுவேன்." என்ற அபி, அவளுடைய செல்ஃபோனை வாங்கி, இவனது பர்ஸனல் நம்பரை பதிவு செய்துக் கொடுத்தவன், அவனது செல்லிற்கும் ஒரு மிஸ்டு கால் கொடுத்துக் கொண்டான். இதுக்கு மேல் இருந்தால் யாராவது பார்த்து விடுவார்கள், "நான் வரேன் அம்ரு … ஸ்வேதா மேரேஜ்ல பார்ப்போம்…" என்றுக் கூறி அவசரமாக, அவளது கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்தவன் கிளம்பி விட்டான்.

அதற்குப் பிறகு ஸ்வேதா பண்ணிய கலாட்டாவை, எல்லாம் ஒரு வழியாக சமாளித்து, ரூமிற்கு அழைத்துச் சென்றாள் அம்ரு… அடுத்து வந்த நாட்களில் இருவரும் சுற்றுலாவை செமையாக என்ஜாய் செய்தனர். அம்ருவின் முகம்மெல்லாம்‍ ஜொலிக்க, ஆடிப் பாடி கொட்டமடித்தாள்.

ஒரு வழியாக டூரெல்லாம் முடிந்து, ஆஸ்யூசுவலாக காலேஜ் போய் கொண்டிருக்கும் போது, இவர்கள் கூட படிக்கும், ராம் வந்து, அம்ருதாவிடம் காதலை சொல்ல…

" சாரி ராம்… ஐ அம் கம்மிட்டெடு…" என்று அம்ரு மறுத்துக் கூற…

" உண்மையை சொல்லுங்க அம்ருதா… என்ன அவாய்ட் பண்ணுவதற்காக பொய் சொல்றீங்களா?" என வினவ…

" நோ… ராம்… அப்படியெல்லாம் இல்லை… மை லவ்வர் பாய் ஈஸ் அபு… மை லவ்… மை டார்லிங்… எல்லாமே அவன் தான்…" என கருவிழிகள் இரண்டும் கனவில் மிதக்கக் கூற…

அவனோ, " சாரிங்க…" என்றுக் கூறி விட்டு சென்று விட்டான்.

இவர்கள் பேசுவதை ஆராதனாவும், தர்ஷனாவும் கேட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆராதனா முகத்தில் மெல்லிய புன்னகை மலர, தர்ஷனாவோ, கேட்டியா ஆரு, " பூனை மாதிரி அமைதியாக இருந்துக் கிட்டு லவ் பண்ணியிருக்கா… பாரேன் யாருக்கும் தெரியவே இல்லையே… யாரா இருக்கும்… " என புலம்பியபடியே வர…

" ஹேய் தர்ஷி… நமக்கு தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே…" என ஆராதனா அவளை அடக்கி வைத்தாள்.

அதற்குப்பிறகு அம்ருதாவின் விஷயத்தில் தர்ஷி தலையிடவில்லை... அபியும், அம்ருவும் வழக்கமான காதலர்களைப் போல், போன் மூலமாகவே தங்களது காதலை வளர்த்தனர்.

" காதல் வந்தால் கள்ளமும் புகுந்து விடும்…" என்பது போல, அம்ருதா தன் அம்மாவிற்கு தெரியாமல் இரவு படிக்கணும் என்று கூறி விட்டு ஹாலில் அமர்ந்து, அபியுடன் பேசிக் கொண்டிருப்பாள்.

அவளுடைய ஆசை, கனவு,விருப்பம் என ஒவ்வொன்றையும் அபியுடன் பேசிப் கொண்டிருப்பாள்.

நாட்களும் வேகமாக மறைய, ஸ்வேதாவின் கல்யாண நாளும் நெருங்கியது…

"ஸ்வேத் கல்யாணத்திற்கு வருவீங்களா அபு… " என்று ஃபோனில் வினவ…

அந்தப் பக்கம் அபியோ," உன்னைப் பாக்குற சான்ஸை மிஸ் செய்வேனா ராகா டியர்…பட் முதல் நாள் வரவேற்புக்கு மட்டும் வருவேன்." என்று கொஞ்சிக் கொண்டிருந்தான். ஆம் இவ்வளவு நாட்களில் அபு என மனதிற்குள் மட்டும் கூறிக் கொண்டிருந்த அம்ரு, வெளிப்படையாக அபு என அழைக்க ஆரம்பித்திருந்தாள்… அபியும், அம்ரு என்றுக் கூப்பிட்டுக் கொண்டிருந்தவன், அது எல்லோரும் கூப்பிடும் பெயராக இருக்கிறது‌.அம்ருதவர்ஷினி என்பது ராகம் பெயர் தானே… இனி மேல் ராகா என்று தான் அழைப்பேன் என்று கூறிவிட்டிருந்தான்.

" அப்புறம் அம்ரு… நீ என்ன ட்ரெஸ் போட்டுட்டு வருவ…என்ன கலர் என்று சொல்லு… நானும் அதே கலரில் போட்டுட்டு வரேன்… மேட்சிங்… மேட்சிங் ஓகேயா…" என …

" ம்… பஞ்சு மிட்டாய் ரோஸ் கலர் சாரி தான் கட்டப் போறேன் உங்களுக்கு ஓகே வா‌…" என்று அம்ரு கேட்க…

' ஒரு நிமிடம் கற்பனையில் தன்னை பார்த்தவன்' ஓ… நோ என்று கத்தியவன், "என்ன ராகா… நாம இரண்டு பேரும் ஒரே கலர் ட்ரெஸ் போடலாம் என்று ஆசையாக இருந்தேன் தெரியுமா? " என சோக கீதம் வாசிக்க…

" ஹா...ஹா என நகைத்தவள், சும்மா உங்களை வம்பிழுத்தேன், கல்யாணத்துக்கு தான் பிங்க் கலர்ல சாரி காட்டலாம் என்று இருக்கிறேன். முதல் நாள் ரிசப்ஷனுக்கு,எனக்கு மிகவும் பிடித்த கருநில கலர்ல லெஹங்கா தான் போடப் போறேன். உங்களுக்கு வாட்ஸ்அப்பில ஃபோட்டோ அனுப்புகிறேன். சரி ஃபோனை வைக்கட்டுமா?" என அம்ரு வினவ…

" இரு… இன்னும் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம்… என்ன அவசரம்… அப்ப நம்ம கல்யாணத்துக்கும் பிங்க் கலர் சாரியே உனக்கு எடுப்போம். ரிசப்ஸனுக்கு கருநீலம் ஓகே‌… அப்புறம் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு என்ன கலர்ல எடுக்கலாம் என்று சொல்லு… " என சரசமாக வினவ…

" அதெல்லாம் ஒன்னும் வேணாம்." என்று வேகமாக அம்ரு மறுக்க…

" ஓஹோ… அது தேவையில்லாதது என்பதால்‍, வேண்டாம் என்று சொல்றீயா டார்லிங் …" என்று விஷமமாக வினவ…

" ப்ச் போங்க அபு… நான் ஃபோன் வைக்குறேன்." என்று சிணுங்க…

"ஏய் ராகா… வச்சிடதா… பேச வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கு… " என்றவன் மீண்டும் ஆரம்பித்தான், ' நம்ம ஹனிமூனுக்கு எங்க போகலாம்? ஏதாவது உனக்கு ஐடியா இருக்கா? சொல்லுடா …" என…

" போங்க அபு‌…" என அம்ரு வெட்கப்பட‌…

"ஐயோ! வெட்கப்படுறீயா செல்லம்‌… வீடியோ கால் வர வா…"

" அதெல்லாம் ஒன்னும் வேணாம். இப்படியே பேசுறது என்றால் சொல்லுங்க… இல்லை என்றால் ஃபோனை வைக்கட்டுமா…"

" சரி… சரி… வச்சுடதா… நான் சீரியஸா கேட்குறேன் சொல்லு… நாம எங்க போகலாம்?"

"எனக்கு கேரளா, என்றால் ரொம்ப பிடிக்கும்... ரொம்ப நாளா போகணும்னு ஆசை…"

"தத்தி... தத்தி… நாம் என்ன சுத்தி பார்க்கவா போறோம், கேரளாவை, அப்புறம் பாத்துக்கலாம்… யாருடைய தொந்தரவும் இல்லாமல், ஃப்ரீயா இருக்கணும்… எதாவது வெளிநாட்டுக்கு தான் போகணும்... உனக்கு எங்க போகணும் என்று எதுவும் ஐடியா இருக்கா?"

" ஓ… அது வந்து அபு… காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ் கிட்ட அடிக்கடி சொல்லுவேன் வெளிநாட்டுக்கு போறது என்றால், எனக்கு மொரிஷியஸ் போகணும்னு ரொம்ப நாள் ஆசை… அந்த இயற்கையின் சொர்க்கப்புரியை ஒரு தடவையாவது நேரில் பார்க்கணும் என்று ஆசை… அப்புறம் யாரும் இல்லாமல்‍, அந்த தீவுல, நீங்க மட்டும் என்னோடு இருக்கணும்… எனக்கு பிடிச்ச பாட்டை, உங்களோடு சேர்ந்து பாடணும்… நீங்க, நான், இசை, இயற்கை இது தவிர வேறு எதுவும் இருக்க கூடாது… என தனது ஆசைகளை கூற‌…

அந்தப் பக்கமிருந்த அபிநயன், அடக்க மாட்டாமல் சிரித்தான். அவன் சிரிப்பதைக் கேட்ட அம்ரு, " நீங்க சிரிச்சா… அப்புறம் நான் ஃபோனை வச்சிடுவேன். அதுக்கு தான், நான் சொல்ல மாட்டேன் என்று சொன்னேன்.சொல்லு சொல்லு என்று விட்டு இப்ப என்னடானா என்னை கேலி செய்து சிரிக்கிறீங்க…" என …

" அது இல்லை டா‌... நீங்க காலேஜில் படிக்கிறேன் என்று சொல்லி இந்த வேலைதான் பார்க்கிறீர்களா... என்று நினைத்து சிரித்தேன்." என…

"ஹலோ... ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வெளிநாட்டிற்கு போனால், இந்த ஊருக்கு ஒரு முறையாவது போகணும் என்று தான் பேசிகிட்டு இருந்தேன். வேற ஆசைகளை எல்லாம், நான் உங்க கிட்ட மட்டும் தான் சொன்னேன்…" என்று முறுக்கிக் கொள்ள…

"ஓகே டியர் கோச்சுக்காத... உன்னோட விருப்பம் எல்லாவற்றையும் நிறைவேற்றத்தான் அடியேன் காத்திருக்கிறேன்… சரி மணி ஆயிடுச்சு தூங்கு‌‌… நாளைக்கு ஈவினிங் பார்க்கலாம்… அப்புறம் ராகா…அந்த ஃபைல்… அதான் என்னோட கலெக்ஷன் ஃபைல் மறக்காமல் எடுத்துட்டு வா…" என…

" அதெல்லாம் இப்போ வேண்டாம்… நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்துப் பார்ப்போம். இப்போ ஃபோனை வச்சுடுறேன் பை…"என்று அவன் பதில் கூறுவதற்கு முன்பு வைத்து விட்டவள், அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். 'பின்னே அதில் கடைசியாக அபியைத் திட்டி எழுதியிருந்தாளே… அதைப் பார்த்து தப்பாக நினைச்சா என்ன பண்றது. எதுவாக இருந்தாலும், இனி இரண்டு பேரும் சேர்ந்து தான் பார்க்கணும்.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அவனோ சிரித்துக்கொண்டே,' இந்த கேடி… அதுல என்னமோ வில்லங்கமா செய்து வைத்திருக்காள். அதான் என் கிட்ட காண்ப்பிக்காமல், ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறாள். என்னைக்காவது மாட்டுவல்ல அன்னைக்கு கவனிச்சிக்கிறேன்.' என்று நினைத்தவன் புன்னகையுடன் உறங்கினான்.

மறுநாள் ஸ்வேதா ரிசப்ஷனில் சொன்ன மாதிரியே இருவரும் கருநீல கலரில் வந்திருந்தனர். பங்ஷன் முடியும் வரை தன் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும்,என்று ஸ்வேதா ஏற்கனவே அம்ருவிடம் சொல்லியிருந்தாள்‌.

அம்ருவும் அழகாக அலங்கரித்துக் கொண்டு, கருநீல நிற லெஹங்காவில் தேவதையாக நின்றுக் கொண்டிருந்தாள்.

அபிநயனோ, வந்ததிலிருந்து அவளை கண்களாலே விழுங்கிக் கொண்டிருந்தான். அவன் பரிசுக் கொடுத்து விட்டு, மாப்பிளையின் அருகில் நிற்க, அம்ருவோ ஸ்வேதாவின் அருகில் நின்றிருந்தாள். கேமராமேன் போட்டோ எடுக்க, அந்த போட்டோ அழகாக வந்து இருந்தது. மேடையில் இருந்து இறங்கும் போது அம்ருதாவை பார்த்து கண்ணடித்து விட்டு இறங்கினான் அபி‌… முகம் சிவக்க அதை மறைக்க படாத பாடுபட்டாள் அம்ரு...

ஸ்வேதா கனடாவிற்கு சென்று விட, அம்ரு மட்டும் காலேஜுக்கு சென்று,ஒரு வழியாக அவளது படிப்பை முடித்தாள். அதற்கு இடையில் அவளது அண்ணனுக்கும் திருமணம் முடிந்து, அமெரிக்காவிற்கு சென்று விட்டனர்.

காலேஜ் படிப்பு முடிந்து, வீட்டிலிருக்க… திடீரென்று ஒரு நாள், அவள் சூப்பர் சிங்கரில் கலந்துக் கொண்ட டிவி ஷோவைப் பார்த்த டைரக்டர் ஒருவர் மூலம் இவளுக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வந்தது. அதை அவளது அம்மாவிடம் கூறி உற்சாகமடைந்தவள், வெளிநாட்டிலிருந்த அண்ணன், அண்ணிக்கும் அழைத்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள்.

வெளியே வரவே மாட்டேன் என்ற தனது தாயை வற்புறுத்தி, வீட்டிற்கு அருகில் இருந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றாள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சந்தோஷமாக வெளியே வந்தவள், வாய் ஓயாமல் தனது கனவுகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். அதுவும் முதல் வாய்ப்பே ஒரு பெரிய பட்ஜெட் படத்தில், அதுவும் அபிநயன் இசையில்… பிறகு கேட்கவும் வேண்டுமா அவளது உற்சாகத்தை… அந்த நேரத்தில் ஒரு ஃபோன் கால் வர... அதை பேசிக்கொண்டிருந்த அம்ரு ஏதேச்சையாக நிமிர்ந்து பார்த்தாள், அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு சந்தில் ரொம்ப நேரமாக அந்த லாரி நின்றிருந்தது. அதைப் பார்த்தும் அவள் மனதில் ஒரு ரகசிய சிலிர்ப்பு… அது அபிநயனின் தந்தையோட லாரி… ஃபோனில் பேசிக் கொண்டிருந்த அம்ரு, தன் அம்மாவிடம் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க என்று சைகை செய்ய‌…

மகளின் மகிழ்ச்சியை பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த சுகந்தி புன்னகையுடன் சரி என தலையாட்டினாள். அவர்கள் ரோட்டை கிராஸ் பண்ணுவதற்காக காத்திருந்தனர். திடீரென்று ஏதோ தோன்ற‍, திரும்பிப் பார்த்த சுகந்தி, ஒரு லாரி அசுர வேகத்துடன் வருவதைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்தவள், பிறகு வேகமாக அம்ருதாவை இழுத்தாள்‌. அம்ருதாவை இழுத்த வேகத்திற்கு சுகந்தி கீழே விழுந்து விட , அவள் மீது லாரி ஏறிச் சென்றது. தன் கண் முன்னே நடந்த விபத்தைப் பார்த்து அதிர்ந்து மயங்கி விழுந்தாள் அம்ருதா… '

அம்ருவிற்கு எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது. பார்க்கில் அமர்ந்து இருந்தவள் பதட்டத்தில் எழுந்து தள்ளாட, அருகிலிருந்த கௌதம் பாய்ந்து வந்து அவளைப் பிடித்துக் கொண்டான். "அம்ருதா… என்ன செய்யுது மா? ஆர் யூ ஓகே …"

" தன்னை சமாளித்துக் கொண்டவள், ஒன்னும் இல்லை அண்ணா. லேசா தலை சுத்திடுச்சு... நான் போய் ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறேன்.‌.." என…

" ப்ச் முதலில் சாப்பிடு மா‌‌… அப்புறம் அபி வந்து என்னை தான் திட்டுவான்‌..‌." என்று கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவன், அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் செய்தான்‌

அம்ருவோ, சாப்பிட முடியாமல் திணறினாள்‌‌. பிறகு கஷ்டப்பட்டு வேகமாக அள்ளி‍, விழுங்கினாள். அவளுக்கு இப்போது தனிமை தேவைப்பட்டது. எப்போதடா அறைக்கு செல்லலாம் என்று காத்திருந்தவள், கௌதமும் சாப்பிட்டு முடிக்கவும், வேகமாக எழுந்தாள்.

தனது அறைக்கு சென்றவள், அடக்கமாட்டாமல் அழுதுக் கொண்டிருந்தாள். அவளுக்கு எல்லாமே ஞாபகம் வந்து விட்டது. அவள் அம்மா இறந்தது மட்டும் இல்லை… அதற்கு அப்புறம் நடந்ததும், நினைவுக்கு வந்து விட்டது. 'ஐயோ ! கடவுளே… நான் எப்படி இந்த மடத்தனத்தை செய்தேன்…இனி அபுவை எப்படி ஃபேஸ் பண்ணுவேன்.' என்று தனக்குள் குழம்பித் தவித்தாள் அபுவின் ராகா…

தொடரும்…..
 

பிரிய நிலா

Well-known member
Member
அடப்பாவிகளா இவ்ளோ லவ் பண்ணுனாங்களா..
நான் கூட கட்டாய கல்யாணம்.. இரண்டு பேரும் ப்ரப்போஸ் பண்ணல. லவ் பண்றத ஷேர் பண்ணலனு நெனச்சேன்.
 

Viswadevi

✍️
Writer
அடப்பாவிகளா இவ்ளோ லவ் பண்ணுனாங்களா..
நான் கூட கட்டாய கல்யாணம்.. இரண்டு பேரும் ப்ரப்போஸ் பண்ணல. லவ் பண்றத ஷேர் பண்ணலனு நெனச்சேன்.
Thanks sis
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom