• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 19 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – 19

ஆதியின் தங்கை வித்யா குழந்தைகள் காதணி விழா முடிந்த மறுநாள், எல்லோரும் ஆதியின் சொந்த ஊருக்கு கிளம்பினர். முதலில் வித்யா கணவர் வழி உறவினர்கள் எல்லோருமே வருவதாக இருக்க, கடைசி நேரத்தில் அவர்கள் ப்ரோக்ராம் கான்செல் செய்து விட்டனர்.

வித்யா கணவர், மாமனார், மாமியார், ப்ரயு , ஆதி, அவன் அம்மா அவர்கள் மட்டுமே சென்றனர். நிறைய பேர் வரவில்லை என்றதும், ஆதியின் யோசனைப்படி உறவினர்கள் எல்லோரையும் அவர்கள் வந்த வண்டியில் சென்னைக்கு அனுப்பி விட்டு, இவர்களுக்கு மட்டும் என, ஒரு xylo புக் செய்து சென்றார்கள்.

வரும்போது போல் இப்போ ஆதியும் , பிரயுவும் அருகில் கூட அமர முடியவில்லைவித்யாவிற்கு வசதியாக அவள் கணவரும், மாமனாரும் நடு சீட்டில் அமர, ஆதி அம்மாவும், வித்யா மாமியாரும் பிரயுவின் அருகில் அமர, ஆதி டிரைவர் பக்கத்துக்கு சீட்டிற்கு சென்று விட்டான்.

இவர்கள் ஊரும் கிட்டத்தட்ட்ட ஏழு மணி நேர பயணத்தில் இருந்தது. காலை டிபன் முடிந்துதான் கிளம்பியதால், மதியம் சாப்பாட்டிற்கு வழியில் நிறுத்தி, சின்ன குழந்தை இருப்பதால் அதன் தேவையை பார்த்து, இவர்கள் சென்று சேர மாலை ஆகி விட்டது.

ஊரில் ஆதியின் அப்பாவிற்கு சொந்தமான இடத்தில் மூன்று வீடுகள் சேர்ந்தார் போல் கட்டி வாடைகைக்கு விட்டு இருந்தார்கள்.

மீதி இடத்தில் சின்னதாக ஒரு வீடு, இவர்கள் வந்தால், போனால் தங்குவதற்கு என்று இருந்தது. அதில் ஒரு ஹால், ஒரு ரூம், மற்றும் கிச்சன் இருந்தது. பாத்ரூம், டாய்லெட் தனியாக இருந்தது.

இவர்கள் பெரியப்பா வீடு, கல்யாண வீடு என்பதால் இவர்களுக்கு சமையல் வேலை எல்லாம் இல்லை. ஆனால் வந்த அலுப்பு தீர , ரெப்ரெஷ் செய்து விட்டு , எல்லோருமே கல்யாண வீட்டிற்கு சென்று விட்டனர்,

அதன்பின் நேரம் வேகமாக கழிய, எல்லோருமே வேலையில் ஆழ்ந்து விட்டனர். ஆதி அதிகமாக இங்கே வந்திரா விட்டாலும், உறவுகளில் எல்லோருக்கும் அவனை நன்றாக தெரிந்திருந்தது. அதனால் எல்லோரோடும் பேசுவது, எடுத்து போட்டு வேலைகள் செய்வது என சரியாக இருந்தது,

மறுநாள் காலையில் எல்லோரும் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று பூஜைகள் முடித்தனர். இவர்கள் பூஜையோடு கல்யாண பெண்ணிற்கான விசேஷ வேண்டுதல்களும் சேர, இதுவே கிட்டதட்ட திருவிழா போல் கூட்டமாகி விட்டது.

வந்த அத்தனை பேரும் பிரயுவின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா என்ற கேள்வியே எழுந்தது.

பெரியவர்கள் பிரயுவிடம், “ஏனம்மா, நீங்கள் கல்யாணம் முடிந்து முதல் முறை வருகிறீர்கள். முறைப்படி கல்யாணம் முடிந்து உன் பெற்றோர் உன்னை சீர்வரிசையுடன் இங்கேதான் கொண்டு விட வேண்டும். அந்த நேரத்தில் அது முடியாது போயிற்று. இப்போவது வந்து எல்லோரையும் பார்த்து விட்டு சென்றிருக்கலாம் இல்லையா? மாப்பிள்ளை மட்டும் போதும் என்று எண்ணக் கூடாது, அவர் ஊர், உறவு எல்லாம் தான் வேண்டும்” என்று சற்று குத்தலாகவே சொல்லவும், பிரயுவிற்கு வருத்தமாகி விட்டது.

உண்மையில் அவள் பெற்றோருக்கு தாங்கள் இங்கே வருவதே தெரியாது ..என்று யாரிடம் சொல்ல முடியும். தன் மாமியார் கூப்பிடவில்லை என்றா சொல்ல முடியும்

அவர்கள் பிரயுவின் மாமியாரையும் விட்டு வைக்கவில்லை “ஏன் உனக்கு தெரியாதா நம்ம ஊர் வழக்கம்? நீ பட்டணத்துக்கு போய்ட்டா எல்லாம் மறந்துடுமா. .நீ அவங்கள கட் அண்ட் ரைட்டா வரச் சொல்லியிருக்க வேண்டாம்.“என்றனர்,

பிறகு ஆதி தான் சமாளித்தான். பிரயுவின் ரெண்டு தங்கைகளும் மாசமாய் இருப்பதால் வரவில்லை என்று ஏதோ சொல்லி சமாளித்தான்.

ஆதிக்கு சரியான கோபம். ப்ரயு தங்கைகள் இல்லாவிட்டாலும், அவள் பெற்றோரையவது தன் அம்மா அழைத்து இருக்கலாமே. ஏதோ ஏதோ காரணம் சொன்ன போதும், அது தவறு என்று அவனுக்கு புரிந்தது.

நல்ல வேளை இதை பிரயுவோ, அவள் பெற்றோரோ பெரிய விஷயமாக எடுக்க வில்லை. இதே இடத்தில் வித்யவோ, அவள் மாமியாரோ இருந்திருந்தால் பெரிய பிரச்சினை ஆக்கி விட்டிருப்பார்கள்.

அவனுக்கு புரிந்ததுதான் கூப்பிட்டதற்காக மட்டும் இல்லாமல், தன் பெரியப்பா பத்திரிகை வைத்த மரியதைக்காவது வந்திருப்பார்கள். ஆனால் வித்யா வீட்டு விசேஷத்திற்கு வராமல், இதற்கு வந்தால் அதுவும் தவறாக போகும். அவர்களை கூப்பிடவில்லை என்று வித்யா வீட்டினரை குறையும் சொல்ல முடியாது. அதனால் தான் வரவில்லை என்று.

எப்படியோ ஒருவழியாக கோவில் பூஜை முடித்து எல்லோரும் நேராக மண்டபத்திற்கு சென்றனர்.

வித்யா கைக்குழந்தை வைத்து இருக்கிறவள் என்பதால் அவளை ஓரிடமாக அமர வைத்து விட்டார்கள். பிரயுவும், ஆதியும் இளம் வயதினாராய் இருப்பதால் அவர்களை நன்றாக வேலை செய்ய விட்டார்கள்.

மேலும் திருமணம் முடிந்து இவர்கள் கிளம்பலாம் என்று இருக்க, ஆதி , பிரயுவை மணமக்களை புகுந்த வீடு கொண்டு விடும் சடங்கை செய்ய சொன்னார்கள். எல்லாம் முடித்து வர இரவு ஆகி விடவே, இரவு பயணம் வேண்டாம் என மறுநாள் காலை சென்னைக்கு கிளம்பினர்.

ஆதி நொந்து போய் விட்டான். அவன் எண்ணி வந்திருந்தது ஞாயிறுக்குள் எல்லாம் வேலையும் முடித்து விட்டு, திங்கள் முதல் வியாழன் வரை மூணார் சென்று வர முடிவு செய்திருந்தான்.

ஆனால் இவர்கள் வரவே சனிகிழமை இரவு ஆகி விட்டது. வந்தவுடன் அலுப்பில் உறங்கி விட , ஞாயிறு எல்லோருக்கும் சற்று மந்தமாகவே இருந்தது.

மதியம் வரை நன்றாக இருந்த ஆதிக்கு தீடிர் என்று காய்ச்சல் அடிக்கவே, உடனே டாக்டரிடம் காண்பித்தனர். அவர் வெறும் வைரல்தான் என்று கூறி, இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டார்.

ப்ரயு ஆதி வரும் நேரம் என்று லீவ் போட்டு இருந்ததால் , ஆதியை நன்றாக கவனித்துக் கொண்டாள்.

இரண்டு நாள் கழித்து புதன் அன்று ஆபீஸ் சென்றவன், அவன் வேலை முடிய கிட்டத்தட்ட சனிகிழமை மதியம் வரை ஆகி விட்டது. அவன் ஞாயிறு அன்று நெதர்லாந்த் செல்ல வேண்டும்.

இதன் இடையில் அவன் பெரியப்பா பெண்ணை சென்னையில்தான் கொடுத்திருப்பதால், அவர் தன் பெண்ணை குடித்தனம் வைக்க வந்தவர், ஆதி ஊருக்கு கிளம்புவதால் அவனை பார்க்க வந்தார்.

அப்போது ப்ரயு மாமியார் சும்மா இல்லாமல், அந்த பெண் இருக்குமிடம் எல்லாம் விசாரித்தவர், ஒருநாள் விருந்துக்கு அழைக்கப் போவதாக கூறினார்.

அவர் சொல்லியது ஒரு வாரம் கழித்து அழைக்கிறேன் என்று. ஆனால் ஆதி பெரியப்பாவோ ஆதி கிளம்பும் முன் வைக்க விரும்புவதாக எண்ணி , உடனே அவளை போனில் அழைத்து வர சொல்லி விட்டார்,

ஆதி அம்மா முழிக்க, பிரயுவிற்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது.

அவள் ஆதியின் உடல்நிலை, வேலை இதை எல்லாம் எண்ணி ஊருக்கு கிளம்பும் முதல் நாள் தன் பெற்றோரையும், தங்கைகளையும் பார்த்து வர எண்ணியிருந்தாள். அவர்கள் இருவரும் இதை பற்றி நேரடியாக பேசிக் கொள்ளாவிட்டாலும், இருவருமே அவ்வாறுதான் எண்ணியிருந்தனர்.

ஆதியின் பெரியப்பா அவர் பெண், மாப்பிள்ளையை அருகில் உள்ள லேன்ட் மார்க்கிற்கு வர சொல்லி, அங்கிருந்து அழைத்து வர சென்றிருந்தார்.

இப்போது ஆதி தன் அம்மாவிடம்,

“என்னம்மா இப்போ போய் அவங்கள வர சொல்லி இருக்கீங்களே?”

“நான் என்னபா செய்ய? நான் அடுத்த வாரம் அவங்கள கூப்பிடுறதா தான் இருந்தேன். உங்க பெரியப்பா அத தப்பா புரிஞ்சிகிட்டு இப்போ வர சொல்லிட்டார்.

“ஏன் நான் வெளியிலே போறேன்னு சொல்லியிருக்கலாம் லே?”

“நீ அப்படி ஏதும் என்கிட்டே சொல்லலையே?”

“ஏனம்மா நானும் வந்ததுலேர்ந்து ப்ரயு வீட்டிற்கு போகல. நாளைக்கு ஊருக்கு கிளம்பறேன். இன்னிக்கு போவேன்னு நீங்களே புரிஞ்சிக்க வேண்டாமா?’

“அத சொன்னாதானே தெரியும் “

“சரி . அப்படினா அவங்க வரட்டும். அவங்களையும் கூட்டிட்டு எங்கியாவது ஹோட்டல் போயிட்டு, நாங்க ப்ரயு வீட்டிற்கு நைட் போறோம்“

“ஆதி நீ நாளைக்கு ஊருக்கு போற. இன்னிக்கு நம்ம வீட்டுலே இல்லாம அங்க தங்கிக்கிறேன் சொல்றியே. எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சியா?

நீங்க பிரயுவ பத்தி யோசிச்சீங்களா ? போன வாரம் கல்யாணம் ஆன அவங்களுக்கு இன்னிக்கு விருந்து போடறோம். ப்ரயு தங்கசிங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சு. அவங்கள இன்னும் போய் கூட பார்க்கலநல்லவா இருக்கும்’

“ஏன்.? அவங்க வந்து பார்க்க மாட்டாங்களா ? நீ கிட்டத்தட்ட ஒன்னரை வருஷம் கழிச்சு வந்துருக்க. உன்னை பார்க்க வர வேண்டியதுதானே..

இதுவரை எதுவும் குறுக்கிடாமல் இருந்த ப்ரயு,

“அவங்க வெறுமே என் தங்கச்சிகளா மட்டும் இருந்தா வரலாம். அவங்க இன்னொரு வீட்டு மருமகள். நாம முதலே போய் பார்த்த்தானே அவங்க வருவாங்க,,

“ஏன் வயசுலே சின்னவங்கதானே அவங்க வந்தா என்ன குறைஞ்சா போய்டுவாங்க..

“வயசுலே பெரியவங்க நாங்க போனாதானே அவங்களுக்கும் திருப்பி வரணும்னு தோணும்.’

“அப்படிதான் வரணும்னா .அங்கே யாரும் போக வேண்டியதில்ல..

“ஒன்னு விட்ட தங்கசிக்காக நாங்க இங்கே இருக்கனும்னா என் சொந்த தங்கசிங்களுக்குகாக நாங்களும் போய்தான் ஆகனும்

இதுவரை அவர்கள் பேசியதை பார்த்த ஆதி, இது சண்டையா மாறும் போல் தோண,

“ப்ரயு சும்மா இரு. நான் பெரியப்பா வந்ததும் பேசிட்டு என்ன பண்றதுன்னு பார்க்கலாம்..” என்று அவளை அடக்கினான்.

ஆதியின் அம்மாவிற்கு தன் பையன் எங்கே சென்று விடுவானோ என்ற கவலை வந்தது, இதுவரை அவர் இப்படி எல்லாம் யோசித்தது இல்லை. அவர் ஆதி தன் மாமியார் வீட்டிற்கு செல்கிறான் என்பதை விட, தன் கணவர் வீட்டார் முன், தன்னை விட்டுக் கொடுத்து விடுவானோ என்ற பயம்தான் பெரிதாக இருந்தது. அவர் இன்று வரை அவர்களுக்கு பயப்படுவார்.

ஆதி எப்படி நிலைமையை சமாளிக்க என்று யோசித்து கொண்டிருக்க, அவன் பெரியப்பாவோ , தன் பெண், மாப்பிளையோடு , ஆதியின் இன்னொரு பெரியப்பா, பெரியம்மா என எல்லோரையுமே அழைத்து வந்தார்.

வீட்டிற்குள் நுழைந்த கும்பலை பார்த்த ஆதி ஒருகணம் திகைத்தவன், பிறகு எல்லோரையும் விருந்தோம்பினான்.

ஆதி அம்மாவும் செய்வதறியாது முழித்தவர், பின் எல்லாரையும் வரவேற்றார்,

இத்தனை பேரை எவ்வாறு ஹோட்டேல்க்கு அழைத்து போக என்பதோடு , அவர்கள் எதிரில் தன் அம்மாவை மட்டும் எப்படி தனியாக விட்டு செல்ல என்று தெரியவில்லை ஆதிக்கு.

இத்தனை பேரை பார்த்த ப்ரயு, மளமள வென்று சமையலை ஆரம்பித்தாள். உதவிக்கு ஆதி அம்மா, பெரியம்மாக்களும் வரவே எல்லோருமாக சேர்ந்து திருப்தியாகவே விருந்து செய்தனர்.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு கிளம்ப மணி பதினொன்று ஆகியது.

அதுவரை ப்ரயு, ஆதியிடம் எதுவும் பேசவில்லை ஆதி அம்மாவிற்கும் ஒரு மாதிரி கஷ்டமாகதான் இருந்தது. இன்று ப்ரயு கொஞ்சம் முகம் காமித்து இருந்தாலும் மானம் கப்பல் ஏறி இருக்கும் என்று அவர் உணர்ந்துதான் இருந்தார். ஆனாலும் அந்த கெத்து அவர் விடவில்லை.

தங்கள் அறைக்கு சென்ற ஆதியும், பிரயுவும் அமைதியாக இருந்தனர். ஆதி தான் முதலில்

“ப்ரயு சாரிடா. இன்னிக்கு உன்னை கூட்டிட்டு வெளியே கிளம்பலாம்னு நினைச்சேன். ஆனால் இப்படி ஆகிட்டது”

ப்ரயு எதுவும் பேசவில்லை. ஆதி மீண்டும் மீண்டும் அவளிடம் பேச வர, அவள் மௌனமே பதிலானாள்.

“ப்ரயு நான் நாளைக்கு கிளம்பனும். இத்தனை நாள் நாம் கொஞ்ச நேரம் ஆசையா பேசக் கூட முடியல. இன்னிக்காவது சந்தோஷமா பேசிட்டு இருக்கலாம் ப்ளீஸ்“

“என்னாலே முடியல.ஆதிப்பா. நீங்க வந்து இத்தனை நாள் நான் எதாவது உங்கள தொந்தரவு பண்ணினேனா? எனக்காக இன்னிக்கு ஒரு அரை நாள் கூட ஒதுக்க முடியாதா? “

“ஹே அப்படி எல்லாம் இல்லைடா. நான் நேத்தே வேலை முடிஞ்சுரும்னு நினச்சேன். ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டி இருந்தது. அதனால் தான் இன்னிக்கு போயிட்டு வந்தேன். ஆனால் பெரியப்பா வீட்டுலே இப்படி பண்ணுவாங்கன்னு நானும் எதிர்பார்க்கல”

“அவங்கள சொல்லாதீங்க அத்தை இப்படிதான் எதாவது கிளப்பி விட்டு போயிடறாங்க“

ஆதிக்கு அவன் அம்மாவை எண்ணி கோபம் வந்தது. ஆனாலும் பிரயுவிடம் விட்டு கொடுக்க முடியாமல்,

“அவங்க என்ன பண்ணுவாங்க? வாய் வார்த்தையை சொன்னத அவங்க பிடிச்சுக்கிட்டங்க.“

“உங்க வீட்டுலே யாரையும் விட்டு கொடுத்துடாதீங்க. ஆனால் என்னை மட்டும் விட்டு கொடுத்துடுங்க..”

“உன்னை எப்போடி விட்டு கொடுத்தேன் நான் உனக்காக தானே அம்மாகிட்ட பேசினேன்“

“அதுக்கு ரிசல்ட் என்ன ?”

“இது எல்லாம் சூழ்நிலைதான் காரணம். யாரு மேலையும் தப்பு சொல்ல முடியாது.”

சற்று நேரம் அவளிடம் வாதாடியவன், பிறகு அவளை சமாதனம் செய்யும் பொருட்டு,

“சரி விடு ரதி குட்டி. நாளைக்கு காலை முதல் கிளம்பும் வரை உன்னோடதான் நான் எங்கே எல்லாம் போகணும்னு சொல்றியோ போகலாம்“

பிரயுவிற்கு சமாதனம் ஆகவில்லை என்றாலும் அவனிடம் சண்டை போடவும் விருப்பம் இல்லாமல், அமைதியாக படுத்து விட்டாள்.

ஆதியோ மனதில் ஏதோ ஏதோ எண்ணி வந்தால் , இங்கே நிலைமை ஒன்றும் சரி இல்லையே. ஏன் தனக்கு மட்டும் எப்படி என்று மனதினுள் புலம்பினான்.

மறுநாள் காலை டிபன் முடித்து கிளம்பலாம் என்று எண்ணியிருந்தால்., அண்ணனை வழி அனுப்ப என்று வித்யா காலையிலேயே வந்து விட்டாள்.

ஆதியின் அம்மா கூட சற்று சங்கடப்பட்டு விட்டார். ஜாடையாக தன் மகளிடம்

“என்ன வித்யா சொல்லவே இல்லியே ? நீ சாயங்காலம் அவன் கிளம்பும் போதுதான் வருவன்னு நினைச்சேன்”

தனியாகத்தான் கேட்டார். மாப்பிள்ளை காதில் விழுந்தால் வம்பு என்று.

வித்யவோ “இல்லை மாசாயங்காலம் ஒரு கல்யாணம் ரிசப்ஷன் இருக்கு. அதுதான் இங்கே வந்து அண்ணனோட இருந்துட்டு மத்தியனமா கிளம்பலாம் என்று சீக்கிரம் வந்தேன்”

அவருக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. ப்ரயு அவர்களை பார்த்தவள் , ஆதியை நேராக பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

ஆதிக்கு ஒரே வருத்தமாக போய் விட்டது. குழந்தையை அவன் அம்மா ரூமில் வித்யாவும், அவள் கணவரும் தூங்க வைத்து இருக்க, ஆதியின் அம்மா ஹாலில் இருந்தார்,

அவன் அம்மா ரூமில் இருந்தால் பரவாயில்லை. ஹாலில் இருக்கும்போது கதவை அடைக்க முடியாமல் தவித்தான்.

மதிய நேரத்தில் தன் மாமனாரிடம் போனில் பேசி விடை பெற்றான்.

அவன் கிளம்பும் நேரம் வர, பிரயுவின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. அவன் தங்கை சென்று இருக்க, ஆதி அம்மா அவன் நிலைமை புரிந்தவராக, ஆதியிடம் சொல்லி விட்டு பக்கத்துக்கு கோவிலுக்கு சென்று அரைமணி நேரத்தில் வருவதாக கூறினார்.

“ப்ரயு குட்டிமா“ என்று அழைத்தவன், அவளை இறுக்க அணைத்தான். அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

“கண்ணம்மா என்னால் முடியலடாஉன்னை விட்டு போக ரொம்ப கஷ்டமா இருக்குடா.”

அவள் வாய் திறக்கவில்லை.

பிறகு “இந்த பையில் உன் தங்கைகளுக்கு வாங்கின கிப்ட்ஸ், அத்தை , மாமாவிற்கு எல்லாம் இதில் இருக்கிறது. நீ எல்லோருக்கும் கொடுத்து விடு“

அதற்கும் அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் வருத்தமான குரலில்,

“தப்புதாண்டா. நான் இன்னும் கரெக்ட்டா பிளான் பண்ணி உன்னோட இருந்து இருக்கணும்ப்ளீஸ் பேசுடா. இனிமேல் போன்லே தான் குடும்பம் நடத்தனும்“ கூறவும், பிரயுவால் தாங்க முடியவில்லை.

அவள் தன்னை சரிப்படுத்திக் கொண்டு “நல்லபடியா போயிட்டு வாங்க ஆதிப்பா..”

“தேங்க்ஸ்டா குட்டிமா. தேங்க்ஸ் ரதி. “ என்றவன் அவளை அணைத்தபடி இருந்தான். கிளம்பும் நேரம் வர , அவளின் இதழோடு முத்தமிட்டவன் கிளம்பி விட்டான்.

ஆதியின் இந்திய பயணம் அவன் எதிர்பார்த்த எந்த மாற்றத்தையும் அவன் வாழ்வில் ஏற்படுத்தாமல் , அவர்கள் வாழ்க்கை தொடங்கிய நிலையிலே நிற்க பயணம் முடிந்தது. சென்ற முறை சில வருத்தம் இருந்தாலும் ஆவலாக இருந்த இந்த வெளிநாட்டு வேலை, இந்த முறை அவனுக்கு நிறைய வேதனை கொடுத்தது. இந்த வேலை தேவையா என்று யோசிக்க வைத்தது.

ஆதி என்ன முடிவு எடுப்பான்? பிரயுவின் மனதில் என்ன இருக்கிறது?
-தொடரும் -
 

Rajam

Well-known member
Member
வேலைய விட்டுட்டு வரணும் ஆதி.
பணம் முக்கியமில்லை.
சம்பாத்யம் இருந்தும்
சந்தோஷம் இல்லாத வாழ்க்கை .
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
வெளிநாடு வாழ் மக்களின் வாழ்க்கை முறை தெளிவா sollittinga!!!!kanavan manaivi pirinthu vaazhthal kodumai, panam pona sambaathikkalaam, ilamai ponaal vaaraathuuu!!!
 

sugan

Active member
Member
Panam mukiyam Dan atha Vida nambi Vanda ponnu romba mukiyam...silar atha purinjukavae matranga
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom