• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 18

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசை வெல்லுங்கள்.

IMG-20210430-WA0029.jpg

அத்தியாயம் - 18

ஷெராடன் கிராண்ட் ஹோட்டல் பெங்களூர்… அந்த ஓட்டலில் இறங்கிய அபிநயன் விறுவிறுவென உள்ளே நுழைந்தான். அவன் பின்னே வந்த அம்ரு, அந்த ஹோட்டலை சுற்றி பார்த்துக் கொண்டே வந்தாள் … அவளோடு கௌதம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தான். அவனுடன் பேசிக்கொண்டே வந்தாலும், உள் மனதோ படபடவென அடித்துக் கொண்டிருந்தது. எதையோ யோசிக்க முயல… "கம் பாஸ்ட் அம்ரு…" என்ற அபிநயனின் குரலில் களைந்தாள்.

லிப்டில் ஏறி அவர்களுக்கென புக் செய்திருந்த அறைக்குள் நுழைந்திருந்தனர். "கௌதம் ஃப்ரெஷ்ஷப் ஆகிவிட்டு வா… ப்ரேக் பாஸ்ட் ஆர்டர் பண்ணுறேன். சாப்பிடலாம் " என அபி கூற...

"ஓகே அபி…" என்றவன், அவனுக்கென புக் செய்திருந்த அறைக்குச் சென்றான்.

அங்கிருந்த மெத்தையில் அமர்ந்த அம்ருதா இவனது வேகத்தைப் பார்த்து மிரண்டிருந்தாள். நேற்று இரவு எங்கோ சென்று வந்தவன், பெங்களூர் போக வேண்டும் என்று சொன்னான்.

இதோ காலை உணவிற்கு பெங்களூருக்கு அழைத்து வந்து விட்டான். ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்த அபி, புன்னகையுடன் அம்ருதாவின் அருகில் அமர்ந்தவன், அவள் முன்னே கைகளை ஆட்ட, யோசனையிலிருந்து விடுபட்ட அம்ரு மிரண்டு விழிக்க…

"அம்ரு...ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா… கௌதம் வந்துருவான்… க்யூக் பாஸ்ட்…"

பொம்மை போல அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியவள், அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்தாள்.அந்த கண்ணாடியாலான கதவை திறந்தாள். ஏற்கனவே அபிநயன் ஸ்கீரினை இழுத்து விட்டு சென்றிருக்க, அதைப் பார்த்து, அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக் கொண்டவள், பிறகு வேகமாக தயாராகி வந்தாள்.

கௌதமும், அபிநயனும் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

கௌதம், " அபி‌… நீ, அம்ருதாவோட இரு‌… நான் போய் விசாரிச்சிட்டு வரேன்."

" நோ… கௌதம்… நானே போனால் தான் சரியாக வரும். நீ உன்னுடைய ரூம்ல இரு… உன் கவனம் மட்டும் இந்த அறையின் மேலேயே இருக்கட்டும். டேக் கேர் ஹெர்…" என அபி கூறிக் கொண்டிருக்கும் போது வெளியே வந்த அம்ருதா, இன்னும் கொஞ்சம் பயந்துப் போனாள்.

அவளைப் பார்த்த அபி, பேச்சை அத்துடன் நிறுத்தி விட்டு, " வா அம்ரு…" என அவளை அழைத்து தனதருகே அமர வைத்தவன், மூவருக்கும் உணவினை எடுத்து பறிமாற ஆரம்பித்தான். உணவருந்தி முடிக்கும் வரை எந்த பேச்சும் ஆரம்பிக்கவில்லை. கௌதமும் மௌனமாக உணவருந்தினான்.

கௌதமும் அவனது அறைக்குச் சென்று விட அம்ருவும், அபிநயன் மட்டுமே இருந்தனர். அம்ரு நான் உன்னை இங்கு அழைத்து வந்தது சுற்றி பார்ப்பதற்காக அல்ல, உன்னை என் கண் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தான் அழைத்து வந்தேன்.எனக்கு ஒரு முக்கியமான வொர்க் இருக்கு. அதுக்காக தான் வந்து இருக்கேன். சீக்கிரம் வந்துடுவேன். ரெஸ்ட் எடு... கௌதம் இருக்கிறான். உனக்கு ஏதாவது தேவை என்றால் அவனைக் கூப்பிடு… அப்புறம் லஞ்சுக்கு கௌதம் அழைச்சிட்டுப் போவான். உனக்கு பக்கத்துல எங்காவது போகணும்னு என்றால் கௌதமோட போய்ட்டு வா… எங்கே போனாலும் கவனமாயிரு… வெளியே போக இன்ட்ரஸ்ட் இல்லை என்றால், இங்கே ஹோட்டலோட பார்க் இருக்கு, உனக்கு தெரியும் தானே… அங்கே கூட போய் ரிலாக்ஸ் பண்ணு… பட் எங்க போறது என்றாலும் கௌதம் கூட போயிட்டு வா… என்ன புரியுதா?..." என…

"சரி" என தலையாட்டினாள்.

அபிநயன் வெளியே சென்றவுடன், சற்று நேரம் தூங்கலாம் என்று படுத்துப் பார்த்தாள் அம்ரு. தூக்கம் தான் வருவேனா என்று இருந்தது. சரி டிவியாவது பார்க்கலாம் என்று பார்த்தால், ஒன்றும் பிடிக்கவில்லை… சரி தான் என்று எழுந்தவள், அங்கு இருந்த பால்கனியில் சென்று வேடிக்கை பார்த்தாள். ஹோட்டலின் அழகிய பார்க் தெரிந்தது. அதை பார்த்தவுடன் மனது ஆர்ப்பரித்தது. உடனே அங்கே போகணும்னு மனம் துடிதுடிக்க… "கௌதமோடு செல் " என்ற அபிநயனின் வார்த்தையை மறந்தவள், விறுவிறுவென வெளியே சென்று லிஃப்டில் இறங்கி, கீழே இருக்கும் பார்க்கிற்கு சென்றாள்.

அபிநயன் அறைக்கு வெளியே ஒரு மைக்ரோ கேமராவை ஃபிக்ஸ் செய்து, கவனித்துக் கொண்டிருந்த கௌதமன், அம்ருதா வெளியே சென்றதைப் பார்த்து அரக்கப் பரக்க அவளை தேடி ஓடினான். கீழே சென்று பார்க்கில் அவளைப் பார்த்தவுடன் தான் மூச்சே வந்தது. சற்றுத் தள்ளி அவள் கவனத்தை கவராதவாறு அமர்ந்து, அம்ருதாவை கவனித்துக் கொண்டு இருந்தான்‌‌.

அம்ருதாவிற்கு இங்கு ஏற்கனவே வந்த நினைவு வந்து விட்டது.

அன்று‌…

"ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்… எனக்காக அம்ரு குட்டி… இன்னும் டூ மன்த்ல எனக்கு மேரேஜ் பண்ணிடுவாங்க... அதுக்கு முன்னாடி நான் லாஸ்ட்ட போற டூர் நீ வரலைன்னா, என்னால என்ஜாய் பண்ண முடியாது. போன வருஷமே நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டி… ப்ளீஸ் டி … வேற யாரும் எனக்கு செட்டாக மாட்டாங்க"என ஸ்வேதா கெஞ்ச…

" போடி எனக்கு யாரையும் பிடிக்கவே இல்லை. அதுவும் மறுபடியும் டூர்ல போய், அவளுங்களை பாக்கணும், என்று நினைச்சாலே எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு…"

"எனக்கும் அப்படி தான் இருக்கு… ஆனால் உன்னோட டூர்ல என்ஜாய் பண்ணனும் என்றும் ஆசையா இருக்கு… ஆன்ட்டிக் கிட்ட நான் வந்து பேசுறேன்."

" அம்மா அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க ஸ்வேத்… எனக்கு தான் இன்ட்ரஸ்ட் இல்லை."

" எனக்காக வருவியா... மாட்டியா... அப்புறம் நான் மேரேஜ் முடிஞ்சு கனடா போயிடுவேன்‌. என்னை மிஸ் பண்ணவே மாட்டியா…" என கண்கள் கலங்க கேட்க...

"ஓகே... ஓகே... கல்யாணப் பொண்ணு அழுவாதீங்க… நான் வரேன்… " என...

அவ்வளவு தான் தன் வாயிலிருந்து அந்த வார்த்தை வெளி வந்தததும், அவ்வளவு நேரம் டல்லாக இருந்த ஸ்வேதா ஸ்விட்ச் போட்டது போல பளிரென ஒளிர்ந்தாள்.

அதற்கு பிறகு டூருக்கு செல்லும் நாள் வரும் வரை, அதைப் பற்றி மட்டுமே மேடமின் பேச்சாக இருந்தது‌.

அதோ… இதோவென்று டூருக்கும் வந்தாயிற்று… ஒரு அறைக்கு இரண்டு பேர் என்று அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு இருக்க… அம்ருவும், ஸ்வேதாவும் ஒரு அறையை ஷேர் செய்துக் கொண்டனர்‌. ஆராதனா குரூப்க்கும் இவர்கள் இருக்கும் ப்ளோரிலே அலாட் ஆகியிருந்தது.

அம்ருதா, ஆராதனாவிடமிருந்து விலகியே இருந்தாள்.ஆனால் உணவருந்தும் போதோ, அல்லது சுற்றிப் பார்க்கும் போதோ, அவாய்ட் செய்ய முடியவில்லை.

முதல் நாள் வெளியே சுற்றி விட்டு பேருந்தில் வந்துக் கொண்டிருக்கும் போது, முன்னால் அமர்ந்து இருந்த, ஆராதனாவும், தர்ஷனாவும் பேசிக் கொண்டிருந்தது இவர்களின் காதில் விழுந்தது. விஷயம் இது தான், அபிநயன் சாங் ரெகார்டிங்காக இங்கு வந்திருக்கிறார். இவர்கள் தங்கியிருக்கும் இதே ஹோட்டலில் அவரும் தங்கி இருக்கிறார். அதை தெரிந்துக் கொண்டே தர்ஷனா, இன்னைக்கு நைட்டு ஃபயர் கேம்ப்ககு உங்க அண்ணாவை வரச் சொல்லுடி… உங்க அண்ணாவும் நம்மோட சேர்ந்துட்டால், இன்னும் ஆட்டம், பாட்டம் என்று சூப்பராக என்ஜாய் பண்ணலாம்." என…

"அது வந்து அண்ணா, என்ன சொல்வாங்கன்னு தெரியலடி…" என ஆராதனா தயங்கிக் கொண்டிருந்தாள்.

அருகிலிருந்த ப்ரொஃபஸர் அவர்கள் இருவரும் பேசுவதை கவனித்து விட்டு, "என்னமா விஷயம்... நீங்க ரெண்டு பேரும் டீப்பா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க…" என வினவ…
. இதுதான் சான்ஸ் என்று தர்ஷனா அவரிடம், "சார்…. அபிநயன் சார் வந்திருக்கிறார். நைட் ஃபயர் கேம்ப்க்கு அவரையும் நம்மோட ஜாயின் பண்ண சொல்லலாமா சார்…"

" இந்த ஐடியா நல்லா தான் இருக்கு… நான் வேணும்னா அவர் கிட்ட கேட்கிறேன்… அவர் ஓகே சொன்னா… லெட்ஸ் என்ஜாய்… பட் அவர் மறுத்துட்டா, அதற்கு பிறகு அவரை தொந்தரவு செய்யக்கூடாது." என்று உறுதியாக கூறியவர், ஆராதனாவிடம், " நீ கால் பண்ணி கொடுமா.. நான் பேசி பார்க்கிறேன்." என…

அதற்கு பிறகு ஆராதனாவால் எதையும் மறுக்க முடியவில்லை. அவர்களது ப்ரொஃபஸர் அபிநயனிடம் பேசி சம்மதம் வாங்கி விட… மாணவ, மாணவிகளின் உற்சாகத்தில் அந்த பேருந்தே ஒரு நிமிடம் குலுங்கியது.

***********************

அபிநயன் ஜன்னல் வழியாக வெளியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எண்ணம் முழுவதும் அம்ருதாவையே சுற்றிக் கொண்டிருந்தது. தான் ஒரு செலிப்பிரட்டியாக இருப்பதை அறவே வெறுத்தான். அதனால் தான் அவளை தனியாக சந்தித்து பேச இயலவில்லை என்று மனம் குமைந்துக் கொண்டிருந்தான். தன் தங்கையின் பிறந்தநாள் பார்ட்டி முடிந்த பிறகு, இரண்டு முறை அவளை சந்தித்து சமாதானம் செய்ய முயற்சிக்க…

அவள் கொஞ்சமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை… வேண்டும் என்று அவனை தவிர்ப்பது நன்கு புரிந்தது அபிநயனுக்கு ... இப்பொழுது நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

' பார்ட்டி முடிந்த மறுநாள், மாலையில் காலேஜ்ஜிலிருந்து வீடு திரும்பி போது, அவளது வீட்டிற்கு முன்பு இருந்த இடத்தில் அவளது ஸ்கூட்டி மறிப்பது போல் அவனது பைக்கை நிறுத்தினான். தனது ஸ்கூட்டிற்கு குறுக்கே ஒரு பைக் வந்து நிற்கவும் ஒரு நிமிடம் திடுக்கிட்ட அம்ருதா, வண்டியை முதலில் நிறுத்தி விட்டு இறங்கி நின்றாள்.

ஒரு வேளை தான் யார் என்பது தெரிந்து விட்டதோ, அதனால் தான் அம்ருதா கீழே இறங்கியிருக்கிறாளோ, என்று நினைத்த அபிநயனும் வண்டியை விட்டு கீழே இறங்க... அவன் சுதாரிப்பதற்கு முன்பு, தனக்கு தெரிந்த கராத்தே கட்டாஸை பயன்படுத்தி அவனை மடக்கி நிறுத்தினாள்.

அவள் அடித்ததை கூட பொருட்படுத்தாமல், அவளது திறமையை பார்த்து வியந்து, " வாவ் அம்ரு… " என கூற…

அவனது குரலில் அது அபி என அறிந்த அம்ரு, பதற்றத்துடன்," என்ன அபி சார்? நடு ரோட்டில் நின்றுக் கொண்டு, என்ன பண்றீங்க? யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க… உங்கக் கிட்ட நான் இதை எதிர்பார்க்கவே இல்லை…" என படபடக்க…

"ஷ் அம்ரு… அமைதி… அமைதி… அதுக்காக தான் ஹெல்மேட்டோட வந்துருக்கேன். யாராலும் கண்டு பிடிக்க முடியாது."

" ஓஹோ… எதுக்கு வந்திருக்கீங்க… மன்னிப்பு கேட்கவா…"

"நான் ஏன் மன்னிப்பு கேட்கப் போறேன். அதெல்லாம் ஒன்றுமில்லை… ஹான் அன்னைக்கு காலேஜ் வந்த போது, என்னோட கலெக்ஷன் ஒரு ஃபைல் வச்சிருக்கேன்… காண்பிக்குறேன்… என்று சொன்ன தானே… அன்னைக்கு இருந்த டென்ஷன்ல மறந்துட்டேன். அதான் இன்னைக்கு பார்த்துட்டு போகலாம் என்று வந்தேன்." என அப்பாவியாகக் கூற…

" அன்னைக்கு என்ன டென்ஷன் என்று உங்களுக்கு வேண்டும் என்றால் மறந்திருக்கலாம் அபி சார்… ஆனால் எனக்கு மறக்கவில்லை. உங்க தங்கைக்காக என்னிடம் சண்டை போட்டீங்க…" என்று கூற…

"அதெல்லாம் மறக்கக்கூடாதா அம்ரு…"

" நான் எதையும் மறக்க மாட்டேன் அபி சார்…"

" சரி அம்ரு… நீ எதையும் மறக்க வேண்டாம்‌… இந்தா இதை பிடி…" என்று ஒரு கவரை நீட்ட…

அதை பார்த்து அதிர்ந்தவள், " என்னது?" என்று திணறியபடி வினவ…

" இது கடிதம் என்றும் சொல்லலாம் இல்ல என் மனசு என்றும் சொல்லலாம்…" என்றவன், அந்த கவரை அவள் கையில் திணித்து விட்டு, "இன்னொரு தடவை வாய்ப்பு இருந்தால் சந்திப்போம்." என்றுக் கூறி விட்டு. தனது வண்டியை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான்.

செல்லும் அவனையே பார்த்தவள், கைகள் நடுங்க அந்த கவரைப் பிரித்தவள், அதில் எழுதியிருந்ததைப் படித்தாள். "இசைக்காதலி என்னைக் காதலி…" என்று எழுதியிருந்தது.

***********************

அடுத்து இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பு இரண்டு வாரங்கள் கழித்து தான் கிடைத்தது...

அம்ருதாவிற்கு பாடுவதில் உள்ள ஆர்வத்தைப் பயன்படுத்தி, தனது மதிப்பிற்குரிய, பிரபல தயாரிப்பாளரான நாகராஜ் அங்கிளிடம் உதவி கேட்க... அந்த உதவியே பின்னாளில் பெரிய அனர்த்தம் நடப்பதற்கு காரணமாக இருந்தது. அன்று அவன், காதலிக்கும் பெண்ணுக்கு ஒரு உதவி வேண்டும் என்று அவர் முன் நின்றான்.

அவரும், அவரது பி.ஏ மூலம் பாடுவதற்கு வாய்ப்பு அளிப்பதாகச் சொல்லி அம்ருதாவை தொடர்பு கொள்ள... அவளும் படபடப்புடன், எல்லா தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு, எப்படியாவது தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும், என மீண்டும் ஸ்ட்ராங்காக ஒரு மனு கடவுளிடம் போட்டு விட்டு, வீட்டிலும் அவளின் அம்மாவிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவள், உற்சாகத்துடன் அவரது அலுவலகத்திற்கு வந்தாள்.

முக மலர்ச்சியுடன் உள்ளே நுழைந்தவள், அங்கு அமர்ந்திருந்த அபியைப் பார்க்கவும், முகம் சுருங்கியது. அதற்குப் பிறகு நாகராஜ் சார் என்ன கூறுகிறார் என்பதை கேட்காமல், " சாரி சார்... எனக்கு சிபாரிசு மூலம் வரும் எந்த வாய்ப்பும் தேவையில்லை. எனக்கு என் திறமை மேல் நம்பிக்கை இருக்கிறது. என்றாவது ஒரு நாள் நான் பாடகியாக ஜொலிப்பேன் அது உறுதி. அப்போ உங்க தயாரிப்பில் நானும் பாடுவேன் சார். பட் நாட் நவ் சார். ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்.‌‌.." என்றவள் வேகமாக வெளியேற முயல...

அவளது கையை பிடித்து,"அம்ரு… ப்ளீஸ்டா நான் என்ன சொல்ல வரேன் என்பதை கேளு"

"அபி உங்க மேல நான் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அதை ஸ்பாய்ல் பண்ணிக்காதீங்க." என மெதுவாக முணுமுணுத்தாள். அவளுக்கு ரொம்ப படபடப்பாக இருந்தது.ஒரு பெரிய தயாரிப்பாளர் முன்பு அப்படி அபி நடந்துக் கொண்டது, அவளுக்கு கவலையாக இருந்தது. அபியை பற்றி என்ன நினைப்பார்கள் என வருந்தினாள்.

ஆனால் அவனுக்கு அப்படி எதுவும் இல்லை போல... அங்கிள், ஒரு ஃபைவ் மினிட்ஸ் அம்ருக் கூட தனியாக பேசணும்…" என்றவன் இன்னும் அவள் கைகளை விடாமல் இருக்க…

" யூ கேரி ஆன் அபி…" என்று விட்டு அவர் வெளியே சென்று விட்டார்.

கைகளை உதற முயன்ற அம்ருவை, தடுத்து மெல்ல அனைத்தவாறு, அவளின் காதருகில், " ப்ச்...அம்ரு… அவர் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் தெரியுமா? உனக்காக நான் அவரிடம் அப்பாயிட்மெண்ட் வாங்கினேன் தெரியுமா? நீ இப்படி அவர் கிட்ட பேசியிருக்க கூடாது." என...

" ப்ளீஸ் அபி சார் விடுங்க… எனக்கு சிபாரிசெல்லாம் பிடிக்காது. முதலில் அதை தெரிஞ்சுக்கோங்க ‌... உங்களுக்கும், எனக்கும் செட்டாகாது… நீங்க செஞ்ச தப்புக்கு, என்கிட்ட ஒரு முறை கூட சாரி கேட்கவில்லை…" என்று அவனிடமிருந்து விடுபட்டுக் கொண்டே கூற…

" முதலில் அபி சார், அபி சார் என்று கூப்பிடுவதை நிறுத்து… நீ யாரோவாக இருந்தா இந்நேரம் நான் மன்னிப்பு கேட்டு இருப்பேன்‌. நான் உன்னை நேசிக்கிறேன். எப்போ இருந்து தெரியுமா? நீ முதன் முதலாக சூப்பர் சிங்கரில் பாடுனியே, அப்போதையிலிருந்து விரும்ப ஆரம்பிச்சிட்டேன். சரி சின்னப் பொண்ணா இருந்த… அதான் உன்னை தொந்தரவு பண்ணவில்லை… இப்பவும் உன் கிட்ட சொல்லாமல், இருந்தால் நீ என்னை விட்டு விலகிப் போய்டுவியோ, என்று தான் சொல்லி விட்டேன். அப்புறம் காதலிக் கிட்ட எல்லாம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். காதலிக்கிட்ட சாரி, தேங்க்ஸ் எல்லாம் வேற மாதிரி தான் கேட்கணும். உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் அப்படிக் கேட்கவா…" என அப்பாவியாக வினவ‌…

ஒரு நிமிடம் அவன் பேச்சில், முகம் சிவக்க அவனைப் பார்த்தவள், பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு, " சாரி அபி சார்… நமக்கு செட் ஆகாது. குட் பை சார்…" என்றுக் கூறி விட்டு விடுவிடுவென அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.

அதற்குப் பிறகு இதோ இப்பொழுது பெங்களூரில் தான் அவளை சந்திக்க போகிறான். அவள் வந்ததை அவன் ஏற்கனவே அறிந்திருந்தான். அவனது அறையில் இருந்த பால்கனியில் இருந்து பார்க்கும் போது அந்த பரந்து விரிந்த பார்க்கில், அவளும் அவளுடைய தோழியும் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து விட்டான். அதனால் தான் ஆராதனாவின் ப்ரோஃபஸர் நைட் பார்ட்டிக்கு அழைக்கும் போது வருகிறேன் என்று சம்மதம் சொன்னான்.

இதோ அவளைப் பார்ப்பதற்காக உற்சாகமாக விசிலடித்துக் கொண்டே தயாராகிக் கொண்டிருக்கிறான். ' மை டியர் டார்லிங் அம்ரு… இன்னைக்கு பார்ட்டியில் நான் உன்னை வச்சு செய்யுறேன், உன் காதலை இன்னைக்கு ஒத்துக் கொள்ள வைப்பேன்.' என்று மனதிற்குள் நினைத்தவன், அதே உற்சாகமான மனநிலையில் கீழே இறங்கினான்.

தொடரும்…..
 

Baby

Active member
Member
இறங்கு ராசா இறங்கு... ஆனா என்ன நடக்கும்
 

Lakshmi

Well-known member
Member
பாவம் அபி அவனுடைய இந்த ஆசையாவது நிறைவேறுமா.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom