• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 17

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசை வெல்லுங்கள்

IMG-20210430-WA0029.jpg


அத்தியாயம் - 17

அன்று…

'விரல் நகத்தை கடித்துக் கொண்டு தன் அண்ணாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்ருதா. உண்மைக்கு இன்றைய நாளில் அவள் மகிழ்ச்சி கடலில் விழுந்து இருந்திருக்க வேண்டும். ஆனால் அவளோ, டென்ஷனோடு இருந்தாள். வீட்டில் உள்ளவர்களையும் டென்ஷனாக்கிக் கொண்டிருந்தாள்.

இன்று தான் பிளஸ் டூ ரிசல்ட் வந்திருந்தது. மாநில அளவில் ரேங்க் எடுத்து இருந்தாள் அம்ருதா. அவளது அண்ணன் மருத்துவம் எடுத்து படி என்று சொல்ல… அவளோ," மா… அண்ணா... எனக்கு அதில் ஆர்வம் இல்லை. எனக்கு மியூசிக்ல தான் இன்ட்ரஸ்ட். அப்படி இருக்கும் போது எதுக்கு ஒரு சீட்டை வேஸ்ட் பண்ணணும்? என்னால் அதைச் செய்ய முடியாது." என திட்டவட்டமாக கூறி விட்டாள்…

அப்போதையிலிருந்து வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கு… அம்ருவிடம் பேசி பார்த்த அருண், அவள் கேட்பதாக இல்லை என்றவுடன் தன் தாயிடம் பாயந்துக் கொண்டிருந்தான்.
" மா…உங்க கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை. நீங்களாவது அம்ருவுக்கு புரிய வைக்கக் கூடாதா? ஏற்கனவே சினி இன்டஸ்ட்ரில நுழைய அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார்."

"இங்க பாரு அருண் ‌… நீ எனக்கு எப்படி முக்கியமோ, அப்படித்தான் அம்ருவும்… உனக்கு பிடிச்ச படிப்பை நீ படிச்ச… அதே மாதிரி அவளும், அவ ஆசைப்பட்ட படிப்பே படிக்கட்டும். உங்க அப்பா கஷ்டப்பட்டால், எல்லோரும் கஷ்டப்படணும் என்று அவசியமில்லை… எல்லாம் நான் வாங்கி வந்த வரம். எனக்கு தான் அவரோட வாழக் குடுத்து வைக்கவில்லை. நீங்க இரண்டு பேரும் என்றால் அவருக்கு எவ்வளவு இஷ்டம் தெரியுமா?… அதுவும் அவர் இருந்த வரை, அம்ரு கேட்டு எதுவும் இல்லை என்று சொன்னதில்லை… ஏன் நம்ம யாருக்கிட்டையும் அவரோட கஷ்டத்தைக் கூட சொன்னதே இல்லை.அவர் மட்டும் சொல்லியிருந்தால், நம்மளை தவிக்க விட்டு போயிருக்க மாட்டார். சரி விடு… பழைய கதையெல்லாம் எதற்கு… நீ நாளைக்கு அவ ஆசைப்படுற காலேஜ்ல போய் விசாரிச்சிட்டு, ஃபார்ம் வாங்கிட்டு வா… அப்படி உன்னால முடியாது என்றால் சொல்லு… நான் நாளைக்கு பேங்க்குக்கு லீவ் சொல்லிட்டு போறேன்." என…


"என்னமா இப்படி சொல்றீங்க... நான் அவளுக்காக தான் யோசிக்கிறேன். நீங்களே அதைப் புரிஞ்சுக்காமல் பேசினால்,என்ன சொல்றதுணே தெரியவில்லை.அவ சின்ன குழந்தை… நாம தான் அவளுக்கு புரிய வைக்கணும். அதை விட்டுட்டு நீங்களே இப்படி பேசுறீங்க. அது பெரிய காலேஜ்… அவளோட மார்க்குக்கு ஃப்ரீ சீட்டே கிடைக்கும். அது பிரச்சினை கிடையாது. அங்க உள்ளவங்க எல்லாருமே ஹைகிளாஸ் பீப்புளா இருப்பாங்க. இவளுக்கு அவங்களோட மிங்குள் ஆகுறது கொஞ்சம் கஷ்டம். இதெல்லாம் நம்ம குட்டிக்கு எதுக்கு? அன்னைக்கு அப்படி தான், சூப்பர் சிங்கரில் பாட வேண்டாம், பப்ளிக் எக்சாம் இருக்கு என்று எவ்வளவோ சொன்னேன் அப்பவும் கேட்கவில்லை, இப்பவும் என் பேச்சுக்கு மதிப்பு கிடையாது. சரி விடுங்க…" என்றவன் தனது அறைக்குச் செல்ல…

அம்ருதாவோ, கண்கள் கலங்க, தன் தாயை பார்த்தாள்… சுகந்தியோ, அம்ருவின் தலையை வருடி விட்டவள், "அம்ரு… உன் அண்ணனோட கோபம் கொஞ்ச நேரத்துல குறைஞ்சிடும். அம்மா இருக்கேன் சரியா… நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்." என்றவள், இன்னும் சமாதானம் ஆகாமல் உம்மென்று இருக்கும் தன் மகளைப் பார்த்து, "இல்லை என்றால் ஒன்று செய். நீ போய் பேசு… அவன் சீக்கிரம் சமாதானம் ஆகிடுவான் " என…

அது சரியான யோசனையாக இருக்க… அம்ரு அருணின் அறைக்குச் சென்று, கெஞ்சி, கொஞ்சி தாஜா செய்து, ஒரு வழியாக சம்மதம் வாங்கி விட்டாள்.

அருணோ," இங்கப் பாரு குட்டிமா… காலேஜ்ல என்ன பிரச்சனையாக இருந்தாலும் அண்ணன் கிட்ட மறைக்காமல் சொல்லணும். சரியா…" என…

அருணின் சம்மதத்தில் மலர்ந்த அம்ருதா, அவனது கேள்விக்கு உற்சாகமாகத் தலையாட்டினாள்.

" சரி டா… நாளைக்கு போய் நான் அப்ளிகேஷன் வாங்கி வரேன்." என அருண் கூற…

" சரி அண்ணா.நான் போய் அம்மாக் கிட்ட சொல்றேன்" என்றவள் வேகமாக வெளியே ஓடினாள்‌.

"ஏய் பார்த்து குட்டி மா." என்ற அருணின் குரல் காற்றிடம் தான் பேசியது.

அருண் சொன்னது போல தான் நடந்தது. காலேஜின் முதல் நாள் வகுப்பில் இன்ட்ரொடக்ஷன் ஆரம்பமானது. அம்மா பேங்க் மேனேஜர் என இவள் கூறவும், கேலியாக பார்த்தனர். அதற்கு பிறகு சூப்பர் சிங்கரில் வின் பண்ணியதைப் பற்றி சொல்வதற்கு அம்ருதாவிற்கு மனமில்லை‌. சரி தான் என்று விட்டு விட்டாள். தர்ஷனாவோ, " பெரிய தயாரிப்பாளரின் மகள்." என அறிமுகம் செய்தவள், அவளுக்கு அருகில் அமர்ந்து இருந்த அம்ருதாவை அலட்சியமாக பார்த்தாள்.
தர்ஷனாவுக்கு அருகில் அமர்ந்து இருந்த ஆராதனா, தன் தந்தை மற்றும் அண்ணனை பற்றி பெருமையாக அறிமுகம் செய்துக் கொண்டாள். இதே மாதிரி ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டனர். எல்லோருமே பெரிய பெரிய பிஸ்னஸ் மேக்னட்டின் வாரிசுகளாக இருந்தனர். சற்று தாமதமாக வந்த ஸ்வேதா எஸ்க்யுஸ் கேட்டுக் கொண்டு உள்ள வந்து அமர இடம் தேடியவள், அம்ருதாவிற்கு அருகில் அமர்ந்து ஸ்நேகமாக புன்னகைத்தாள். பார்த்தவுடனே அம்ருதாவைக் கண்டு கொண்டாள், "நீங்க சூப்பர் சிங்கரில் பாடியவங்க தானே...உங்க பாட்டு என்றால் எனக்கும், எங்க அப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும்.உங்களுக்கு நல்ல ஃப்யூச்சர் இருக்கு என்று எப்பவும் சொல்லிக் கொண்டே இருப்பார்‌."

"தேங்க்ஸ் ஸ்வேதா… அங்கிள் என்ன செய்யறாங்க …"

" எங்க அப்பா டைரக்டர் என்று அவர் பெயரை கூற‌‌…"

" அம்ருதா திகைத்துப் போய் பார்த்தாள். ஏனென்றால் சினி இண்டஸ்ட்ரியில் பெரிய டைரக்டர் அவர்… அவரிடம் பாராட்டு வாங்குவது என்பது அவ்வளவு பெரிய விஷயம். அவளுக்கு உண்மையிலேயே நம்பவே முடியவில்லை. சற்று பயத்துடன் ஸ்வேதாவை பார்க்க…"

" என் அப்பாவை பற்றி நினைச்சிட்டு என் கிட்ட இருந்து விலகாதே அம்ருதா‌… நாம இப்போதிலிருந்து ஃபிரெண்ட்ஸ்‍…" என்றுக் கூறி கையை நீட்ட... இவளும் கையை நீட்டினாள். அன்றிலிருந்து அவர்களுடைய நட்பு நாளுக்கு நாள் வளர்ந்தது.

ஆராதனா, அபிநயனின் தங்கை என்று தெரியவும், அவளிடம் ஆவலாக பேச வந்த அம்ருதாவை, கிண்டல் செய்தாள் தர்ஷனா. "செலிபிரட்டியோட சிஸ்டர் எனவும் வந்துவிடுவீங்களே… ஓசி சாப்பாட்டிற்கு அலையுற கேஸ் போல…" என முணுமுணுக்க… அவளை ஒரு பார்வை பார்த்த அம்ரு ஒதுங்கி போக முயன்றாள். அவள் நினைத்தால் மட்டும் போதுமா…. அந்த தர்ஷனா விடவில்லை. அன்று ஆரம்பித்த சண்டை இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

காலேஜில் இருந்து வீட்டுக்கு வந்த அம்ருவின் முகத்தைப் பார்த்தே புரிந்துக் கொண்ட சுகந்தி,என்ன ஏது என்று விசாரித்தவர், வேறு எதுவும் கேட்காமல் ஆறுதலாக கூறினார். "அம்ரு உன்னுடைய உறுதியில் நீ நிலையாக இருடா...
உன்னை யார் கேலி, கிண்டல் செய்தாலும் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்காமல், அவங்களுக்கு முன்னாடி நீ உன் தகுதியை வளர்த்துக் கொண்டு நல்ல நிலைமைக்கு வர வேண்டும்." என்றுக் கூறினார்.'

இப்போது அதை நினைத்து பார்த்த அம்ரு, ' ஸ்வீட் மாம்... ஐ மிஸ் யூ.' எனக் கூறி பெரு மூச்சு விட்டுக் கொண்டாள்.சுற்றி அறையை பார்க்க அபிநயனை காணவில்லை. எப்போது அங்கிருந்து சென்றான் என்று யோசித்துப் பார்த்தாள்.ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்த பிறகு, மாடிக்கு நம்ம கூட தான் வந்தார். அப்புறம் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம், அம்மாவை பற்றி நினைக்கவும், அப்படியே யோசனையிலிருந்துட்டோம் போல்... அவர் எங்க என்று தெரியவில்லை. சரி தான் அவருக்கு ஏதாவது வேலை வந்திருக்கும். கீழே போயிருப்பார்… நாம கொஞ்ச நேரம் தூங்குவோம் என்று நினைத்தவள், தனது உறக்கத்தை தொடங்கினாள்.

அபிநயனோ, அம்ருதா யோசனையில் இருப்பதைக் கண்டவன், அவளை தொந்தரவு செய்யாமல், கீழே ராஜனைத் தேடி அவரது ஆஃபிஸ் ரூமிற்கு சென்றான். அங்கு ஏதோ யோசனையில் இருந்த ராஜனைப் பார்த்து "அப்பா " என அழைத்தான்.

"வாப்பா …" என்றவர், மீண்டும் அபி பேசுவதற்கு முன்பு, டேபிள் மேல் இருந்த ஒரு பைலை நீட்டினார்.

தந்தையைப் பார்த்து ஆச்சரியப்பட்டவன், பைலை வேகமாக புரட்டினான். அவனது வாழ்க்கையே புரட்டிப் போட்ட அந்த தேதியை தேடினான். அவன் நினைத்தது மாதிரியே தர்ஷனாவின், தந்தையின் மேனேஜர் தான் லாரியை புக் செய்து இருக்கிறார். அதைப் பார்த்தவுடன் தன்
தந்தையை குற்றம் சாட்டும் பார்வையைப் பார்க்க…

ராஜனோ, " அது பா‌… நம்ம ஆரு வந்து இது தெரியாமல் நடந்த ஒரு ஆக்சிடென்ட் … பட் நம்ம நாகராஜனோட மேனேஜர், தான் லாரி புக் செய்தார் என்று வெளியே தெரிந்தால் பிரச்சனை வேற மாதிரி போயிடும் பா…" என்று சொன்னா…. "அதுவுமில்லாமல் டிரைவரும், நம்ம டிரைவர் தானே… அவனிடம் விசாரிச்சேன்… தெரியாம கவனக் குறைவாக வந்துட்டேன் சார்… என்னை மன்னிச்சிடுங்க என்று அழுதான். நானும் அதனால் தான் விட்டுட்டேன். ஆனால் நம்ம மருமக மயக்கம் போட்டு விழுந்தவுடன், நாமளே விசாரிச்சு அம்ருதாக் கிட்ட சொல்லுவோம் என்று‍, நம்ம ட்ரைவர் வீட்டுக்கு போனேன். அவனுடைய வீட்டம்மாக் கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் சந்தேகம் வந்தது. அவங்க எதையோ, என் கிட்ட மறைக்குறாங்க... முன்னுக்கு பின் முரணாக பேசுறாரு… இப்போ என்ன செய்யுறது என்றே தெரியவில்லை. தர்ஷனாவோட அப்பா எப்படி பட்டவரு என்று தான் உனக்கு நல்லா தெரியுமே... ரொம்ப நல்லவரு… அவரு எந்த தப்பும் செய்து இருக்க மாட்டார்…" என்று குழப்பத்துடன் ராஜன் கூற…

" அப்பா… நாகராஜன் அங்கிள் செய்து இருக்கமாட்டார்… அவர் என்னோட வெல்விஷர். எனக்கு அவர் மேல சந்தேகம் கிடையாது. தர்ஷனா மேல லைட்டா ஒரு சந்தேகம் இருக்கு… ஆனால் அங்கிளுடைய மேனேஜர் தான் இங்கே வந்து புக் செய்துருக்காரு… அப்புறம் நம்ம ஆரு எதுக்கு, வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்கணும். அப்ப தர்ஷனா சொல்லி தானே கேட்டுருக்கணும். மேனேஜர் புக் செய்தது, அவரோட பர்சனல் வொர்க்குகாக... அதுல தர்ஷனா ஏன் நுழையுறா… அது தான் எனக்கு சந்தேகம்… நான் அம்ருவை லவ் பண்ண விஷயம் நாகராஜன் அங்கிளுக்கு மட்டும் தான் தெரியும்… தர்ஷனாவுக்கோ, என் மேல க்ரஷ்... சோ, அவ மேனேஜரோட சேர்ந்துக்கிட்டு ஏதாவது செய்து இருப்பாளோ‌ என்று சந்தேகம்… முதலில் அந்த மேனேஜரை விசாரிக்கணும்…"

" தம்பி… நான் நாகு கிட்ட கேட்டுட்டேன்.அந்த மேனேஜர் வேலையை விட்டு சொந்த ஊருக்கு போய்ட்டார் என்று சொன்னான்." என…

"எந்த ஊரு என்று சொன்னாரா பா?" என…

"பெங்களூர் என்று சொன்னான். நான் வேற எந்த டீடெயிலும் கேட்கவில்லையே அபி."

" பரவாயில்லை பா… நான் அங்கிள்ள பார்த்து கேட்டுக்கிறேன். அவர் கிட்டேயும் விவரம் சொல்லணும்ல … நீங்க ரெஸ்ட் எடுங்கப்பா… " என்றவன் அடுத்து சென்றது நாகராஜனை பார்க்கத்தான்…

இவன் வந்ததை அறிந்த வாட்ச்மேன் பரபரப்புடன், நாகராஜனுக்கு தெரிவிக்க… அவரும் ஆச்சரியத்துடன் வந்தார். பொதுவாக வீட்டிற்கு வரமாட்டான் அபிநயன்… அவரைப் பார்க்க வேண்டுமென்றால் அவரது அலுவலகத்திற்குச் செல்வான்… அப்படி இருக்க இன்று வீடு தேடி வரவும் என்ன விஷயமாக இருக்கும் என்று யோசனையுடனே வந்தார்.

" வா அபி... உன்னை எத்தனை முறை வீட்டிற்கு அழைத்து இருக்கிறேன். ஏதாவது சொல்லி தவிர்த்துக் கொண்டே இருப்ப… இன்னைக்கு சர்ப்ரைஸா நீயே வந்திருக்க… என்ன விஷயம் அபி?" என…

" அது அங்கிள்… முதலில் இந்த நேரத்தில் வந்து உங்களை தொந்தரவு செய்ததற்கு சாரி அங்கிள்‌‌… எனக்கு உங்க மேனேஜரோட அட்ரஸ் அன்ட் டீடைல்ஸ் வேண்டும். கொஞ்சம் அர்ஜென்ட் அன்ட் கான்பிடன்டல்… இல்லனா நாளைக்கு ஆஃபீஸ்க்கு வந்து இருப்பேன் ஆங்கிள்…"

" ஓகே அபி...என்ன விஷயம் என் கிட்ட சொல்லலாம் என்றால் சொல்லுப்பா… என்னாலான உதவியை செய்கிறேன்."

" அது வந்து அங்கிள்… அம்ருவோட அம்மா ஆக்சிடென்ட் ஆன விஷயமா தான்… அந்த லாரியை புக் செய்தது உங்க மேனேஜர் ... அம்ரு, கண்டிப்பா அந்த லாரி வேண்டுமென்றே தான் மோதியது என்று சொல்லுறா‌… சரி விசாரிக்கலாம் என்று பார்த்தால், எங்கேங்கோ சென்று, உங்க மேனேஜர் மேல வந்து நிக்குது. அவரைப் ஆபீஸ்ல பார்க்கலாம் என்று பார்த்தால் அவர் வேலையை விட்டு நின்னுட்டாராமே… அதான் அவரது அட்ரஸ் கேட்கலாம் என்று வந்தேன்."

" அவரா… என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியலை... அம்ருதாவை கொல்லணும் என்று அவருக்கு என்ன மோட்டிவ் இருக்க போகுது…"

" அது தெரியவில்லை அங்கிள். போய் விசாரிச்சால் தான் தெரியும்."

"சரிப்பா… இரு லேப்டாப்ல அவரோட டீடெயில்ஸ் இருக்கும் எடுத்து வரேன்." என்று உள்ளே சென்றவர் சற்று நேரத்தில் அபிநயன் கேட்ட தகவலோடு வந்தவர், "யாரை நம்புவது என்று தெரியவில்லை. எதற்கும் ஜாக்கிரதையாக இரு அபி... நீ சொல்றதெல்லாம் கேட்டா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவர் திடீர்னு நின்றது எனக்கும் கொஞ்சம் வருத்தம் தான். அவரு என் கிட்ட ரொம்ப விஸ்வாசமாக இருந்தவர், திடீரென்று நின்னுட்டார். சம்பளம் பத்தவில்லையா என்றதற்கு, அதெல்லாம் இல்லை சார், என்று மழுப்பலாக பதில் கூறி விட்டு சென்று விட்டார்." என்றுக் கூறி பெருமூச்சு விட்டார்.

" ஓகே அங்கிள்... நான் வரேன். நீங்க ரெஸ்ட் எடுங்க‌… ஆன்ட்டி எங்கே பார்க்கவே இல்லை." என…

" அவ ஊருல இல்லை. தட்ஷி‍யும், அவளும் அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க… இல்லை என்றால் இந்த நேரத்தில் உன்னை சாப்பிடாமல் அனுப்புவேனா… எங்க சமையல்காரர் கை வண்ணம், கொஞ்சம் சுமாராக தான் இருக்கும்."என்றுக் கூறி புன்னகைக்க…

" பரவாயில்லை அங்கிள்… அம்மாவும், அம்ருவும் வெயிட் பண்ணுவாங்க… வரேன் அங்கிள்…" என்றவன் புன்னகையுடனே கிளம்பி விட்டான்.


**************
வீட்டிற்கு சென்ற அபி, அங்கு காத்திருந்த நிர்மலாவிடம் சென்றவன், " அம்ரு எங்கேம்மா? சாப்பிட்டாளா?" என வினவ…

" நீ எங்கப்பா போன? அவக் கிட்ட சொல்லவில்லையா? உன்னை ரொம்ப தேடுனா… நான் மல்லுக்கட்டி சாப்பிட வச்சு அனுப்புனேன். தூங்கனாளா... இல்லையா ?என்று தெரியவில்லை. சரி நீ வந்து சாப்பிடு…" என்று பரிமாறியவர், " அப்பாவும் உன்னை தேடிட்டு இருந்தார்."

" ஒ‌… நான் சாப்பிட்டு போய் அப்பாவை பார்க்குறேன் மா… முக்கியமான வேலையாக நாளைக்கு பெங்களூர் போக வேண்டி இருக்கு… அம்ருவையும் கூட்டிட்டு போறேன் மா‌… அவளுக்கும் சேன்ஜா இருக்கும்."

" சரிப்பா பார்த்து பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா… எத்தனை நாள் பா அங்க இருப்பீங்க.."

" டூ டேஸ் தான்… வேலை முடிஞ்சிருச்சுணா அதுக்கு முன்னாடியே கிளம்பிடுவேன். கௌதமும் வரான்… " என்றவன் ராஜனிடம் சென்று எல்லா தகவலையும் கூறி விட்டு, மாடிக்கு செல்ல…

அங்கோ, பால்கனி ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தாள் அம்ருதா.

" அம்ரு… இன்னும் தூங்கவில்லையா…" என்ற அபியின் குரலில், முகமெல்லாம் சந்தோஷமாக திரும்பினாள் அம்ருதா…

"இல்லை… ஈவினிங் நல்லா தூங்கிட்டேன். அதான் தூக்கம் வரவில்லை… நீங்க எங்க போனீங்க…" என அம்ருதா வினவ…

" அது… ஒரு ஃப்ரெண்டை பார்க்க போயிருந்தேன். அதை விடு… நாளைக்கு நான் பெங்களூர் போறேன். உன்னையும் அழைச்சிட்டு போறேன்." என…

அம்ருதாவின் முகம் மலர்ந்தது." வாவ்‌… பெங்களூர் என்று பேரைக் கேட்டாலே மனது சிலிரென குளிர்ந்து போகிறதே அபி…" என உற்சாகமாக கூற…

'ஆமாம் டார்லிங்… நம்ம இரண்டு பேருக்கும் நிறைய ஸ்வீட் நத்திங்ஸ் இருக்கிறதே' என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியே புன்னகை முகத்துடன் நின்றிருந்தான்."

தொடரும்…..
 

பிரிய நிலா

Well-known member
Member
ஓஓஓஓ... அதானே ஆரா எந்த தப்பும் பண்ணல.. அவ பண்ணுன ஒரே தப்பு தர்ஷியை நம்புனது தான்...

பாவம் சுகந்தி அம்மாவை அம்ரு இழந்துட்டா...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom