• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் -16

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் . பரிசை வெல்லுங்கள்.


IMG-20210430-WA0029.jpg


அத்தியாயம் - 16

அந்த மருத்துவமனையின் விஐபி அறையில் அம்ருதா எழுந்து உட்கார முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
இவ்வளவு நேரம் ட்ரிப் ஏறியதால் படுத்தே இருந்தது முதுகு வலிக்கவே, எழ முயற்சி செய்தாள்‌.

அதுவரை அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக அமர்ந்து இருந்த அபிநயன், ட்ரிப்ஸ் ஏறிய கையை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்வதைப் பார்த்து பதறி அவள் அருகே வந்தவன், " ப்ச்… என்னைக் கூப்பிட வேண்டியது தானே… நான் வர மாட்டேனா…" என அவளைக் கடிந்துக் கொண்டே மென்மையாக தூக்கி சாய்வாக அமரச் செய்தான்.

அவளோ முகம் சிவக்க பார்வையை வேறு புறம் திருப்பினாள். அவளுக்கு அருகில் நாற்காலியை நகற்றிப் போட்டு அதில் சாய்ந்ததுக் கொண்டே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அபிநயன். அம்ருதாவோ மனதிற்குள், ' ஐயோ! இந்த மாமா, என்னை இப்படி தனியே இவர் கிட்ட விட்டுட்டு போயிட்டாரே… கௌதம் அண்ணாவையும் காணோம்.' என்று புலம்பிக் கொண்டே இருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த அபிநயன், " அப்பா போக மாட்டேன்னு தான் சொன்னார். நான் தான் கம்பெல் பண்ணி அனுப்பி வைத்தேன். அவருக்கு உன்னை விட்டு போகவே மனதில்லை. அவர் நேரத்திற்கு சாப்பிடணும். மதியம் சாப்பிட வரவில்லை என்றால் அம்மா வேற திட்டு வாங்க… பாவம் அதற்கு பயந்துட்டு இங்கேயே இருக்கிறேன் என்று சொன்னார்." என்றுக் கூறி சிரித்த அபிநயன். " நீ ட்ரிப்ஸ் போடவும், தூங்க ஆரம்பிச்சுட்ட...அதான் அப்பா வீட்டுக்கு போனது உனக்கு தெரியவில்லை.டாக்டர் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிட்டாங்க… சோ‌‌… கௌதம் பில் செட்டில் பண்ண போயிருக்கான்." என அவள் மனதில் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட அம்ருதா, அவனைப் பார்க்க… அபியோ," ஏன் அம்ரு…என்னோட தனியாக இருக்க அவ்வளவு கஷ்டமாக இருக்குதா…" என.

"இல்லை" என தலையசைத்தாள்.

" சரி. அப்ப சொல்லு உனக்கு என் மேல உள்ள கோவமெல்லாம் போய்விட்டதா? என்னை உனக்கு பிடித்து இருக்கா?" என அவளை கண்களால் விழுங்கிக் கொண்டே வினவ…
அவன் பார்வை வீச்சை‍, தாங்கிக் கொள்ள இயலாமல், பார்வையை மீண்டும் வேறுபுறம் திருப்பியவள், "அது… அது உங்க மேல உள்ள கோபம் அப்படியே தான் இருக்கு. பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…" என…

' ஆஹா... இன்னும் மேடமுக்கு கோபம் போகவில்லை போல… எந்த அளவிற்கு ஞாபகம் வந்திருக்கு என்று பார்ப்போம்' என மனதிற்குள் நினைத்தவன், " சரி சொல்லு அம்ரு… என்ன கோபம்…"என்று கேட்டான்.

"ஏன் என்ன கோபம், என்று உங்களுக்கு தெரியாதா?" என்ற அம்ரு, பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டாள்.

'அன்று கல்ச்சுரல் ப்ரோக்ராம் முடிந்தவுடன்' மறுநாள் கிளாஸ் நடக்கும் போது அம்ருதாவின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த ஸ்வேதா, அவள் காதருகில் சென்று மெதுவாக, "ஏன் டி அம்ரு… இன்னைக்கு எனக்கு ட்ரீட் கொடுக்கணும் என்று கவலையாக இருக்கிறாயா?" என.

அம்ருதா, அவளைப் பார்த்து முறைக்க…
" இல்லை டி… அபி சார் கையால் பரிசு வாங்கினால், எனக்கு ட்ரீட் வைக்கிறேன் என்று சொன்ன‌… சொன்னபடி நீ ஜெயிச்சிட்ட… அப்புறம் ஏன் இந்த கோலம்." என்று அவள் கன்னத்தில் கை வைத்து இருப்பதை காண்பித்து ஸ்வேதா கிண்டலடிக்க...
" ப்ச் இது வேற...நீ சும்மா இருடி… சார் வேற திரும்பித் திரும்பி பார்க்கிறார். லஞ்ச் டைமில கேண்டின் போய் பேசலாம்." என…

அதுக்கப்புறம் ஸ்வேதா ஏன் கவலைப் பட போறா‌… ' நல்லவேளை கேண்டீன் போலாம் என்று சொல்லிட்டா… இல்லை இவ இருக்குற இருப்புக்கு, இன்னைக்கு ட்ரீட் அவ்வளவு தான் என்று நினைச்சு பயந்துட்டேன்.' என மனதிற்குள் நினைத்தவள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

மதிய உணவு நேரத்தில் கேண்டீனில், அம்ருதாவும், ஸ்வேதாவும் எதிர், எதிரே உட்கார்ந்து இருக்க… ஸ்வேதாவோ, தன் கண் முன்னே வகை வகையாக இருக்கும் உணவை ஒரு முறை பார்ப்பதும், எங்கோ வெறித்துக் கொண்டு இருக்கும் அம்ருதாவை பார்ப்பதுமாக இருந்தவள், பிறகு இது வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள், தனது முக்கிய வேலையான உணவு உண்பதை ஆரம்பித்து விட்டாள்.

யோசனையில் இருந்து விடுபட்ட அம்ரு, நிமிர்ந்து பார்க்க... கிட்டத்தட்ட ஆர்டர் செய்திருந்த உணவுகள் அனைத்தும் ஸ்வேதாவின் வயிற்றுக்குள் சென்று விட்டது. அவளைப் பார்த்து முறைக்க…

"சாரி டி... நீ எதோ யோசனையில் இருந்த, அதான் உன்னை தொந்தரவு செய்யாமல் நான் சாப்பிட்டேன். உனக்கு வேண்டும் என்றால் ஆர்டர் பண்ணிக்கோ…

" ப்ச் விடுடி... இப்ப இதுவா முக்கியம். அபி சார், மேல நான் எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன் என்று உனக்குத் தெரியும் தானே… அவர் நேற்று அவருடைய தங்கைக்காக என்னிடம் வந்து சண்டை போட்டார் தெரியுமா... என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல், அவர் பாட்டுக்கு ஏதேதோ சொல்லி விட்டு, கடைசியாக அவர் தங்கை கிட்ட எந்த வம்பும் வச்சுக்கக் கூடாது என்று மிரட்டிட்டு போனார்."

" லூசா நீ‌… இதுக்கு தான் இவ்வளவு நேரம்,சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கிறீயா… ஃபர்ஸ்ட் ஆராதனா எதுவும் அவங்க அண்ணன் கிட்ட சொல்லலை. அவக் கூடயே சுத்துவாளே அந்த தர்ஷனா அவ தான் ஏதோ சொல்லிட்டு இருந்தா. நான் அந்த இடத்தில் தான் இருந்தேன், அவ சொன்னது காதில் விழவில்லை. ஆனால் அவ எப்பவும் உண்மையை பேச மாட்டா… அபி சார் அந்தக் கோபத்தில் ஏதாவது ஒன்னு ரெண்டு பேசி இருக்கணும்‌. பட் அவர் ரொம்ப நல்லவர் என்று என்னை விட உனக்கு நல்லாவே தெரியும்‌." என்று சமாதானப்படுத்த…

அம்ருதாவின் முகமும் மெல்ல மலர்ந்தது.

" சரி டி… அபி சாரோட கலெக்ஷன் ஒரு ஃபைலில் ரெடி பண்ணி வச்சுருந்தியே‍, அதை அவர் கிட்ட காட்டினியா? இல்லையா? " என ஸ்வேதா வினவ…

" ப்ச் இல்லை ஸ்வேதா"

" சரி விடு அம்ரு... வேற ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காண்பிக்கலாம். இப்போ ஃபீல் பண்ணாதா… சரி வா உனக்கு ஏதாவது ஆர்டர் பண்ணலாம்."

"அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ எடுத்துட்டு வந்திருக்க லஞ்ச்பாக்ஸை கொடு. எனக்கு அது போதும்." என்று சலிப்பாகக் கூற‌…

" ஏன் டி… ரொம்ப சலிச்சுக்கற… வேற எதையும் என் கிட்ட மறைக்குறீயா?" என ஸ்வேதா விடாமல் கேட்க…

" ஏய் ஸ்வேதா… நான் மறுபடியும் ஆர்டர் பண்ணால் அதையும் பிடுங்கி சாப்பிடலாம் என்று பார்க்குறீயா. ஆளை விடு." எனக் கூறி பேச்சை மாற்ற…

" அப்போ, என் கிட்ட என்ன விஷயம் என்று எதுவும் சொல்ல மாட்ட." என அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.

" அது இல்லடி… நான் நேற்று இருந்த டென்ஷன்ல அந்த ஃபைலில் அபி சாரை, நல்லா திட்டி எழுதிட்டேன்.இனி அவரிடம் அதை காண்பிக்க முடியாது."

"ஓஹோ" என்றவள், கலகலவென நகைக்க‌…

அவளை முறைத்துப் பார்த்தாள் அம்ருதா.

" இதுக்குத் தான் அவசரப்படக் கூடாது செல்லம். கொஞ்சம் பொறுமையாக இருந்து இருக்கணும்." என அம்ருதாவை கலாய்க்க…

" போடி... நானே கவலையா இருக்கேன். நீ வேற நேரங்காலம் தெரியாமல் என்னை கிண்டல் பண்ணுற…" என மெல்லிய குரலில் கூற...

" அம்ரு…நாம் எவ்வளவோ பார்த்தாச்சு… இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. இந்த ஃபைலை அவர்ட்ட காண்பி... அப்பதான் அவருக்கு உன்னோட வருத்தம் புரியும். டேக் இட் ஈசி டி." என்றவள், சரி வா க்ளாஸ்க்கு போகலாம் என்று ஸ்வேதா அழைக்க, அம்ருதாவும் கிளம்பிச் சென்றாள்.

அதற்குப் பிறகு ஆராதனாவால் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. தர்ஷனா பேச்சைக் கேட்டு ஆராதனா ஏதாவது ஆரம்பித்தாலும், அபிநயன் தங்கை என்ற ஒரே காரணத்திற்காக விட்டுக் கொடுத்துச் சென்று விடுவாள் அம்ருதா.

இப்படியே கலாட்டாவும், உற்சாகவுமாக கல்லூரி வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு நாள் ஆராதனாவின் பிறந்தநாளுக்கு தர்ஷனா, அன்ட் ஆராதனா வந்து முழு வகுப்பையும் பிறந்தநாளுக்கு அழைத்தனர்… அப்படியே இவர்கள் இருவருக்கும் அழைப்பு... ஸ்வேதா தயங்க… அம்ருதா வருகிறோம் என்று தலையாட்டினாள்.

ஆராதனா எந்த உள்நோக்கமும் இல்லாமல் வகுப்பில் உள்ள அனைவரையும் அழைக்கும் போது, அம்ருதாவை மட்டும் தவிர்க்க முடியாது என்று அழைக்க… தர்ஷனா இதை அம்ருதாவை அவமானப் படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொண்டாள்.

"அவசியம் போகணுமா அம்ரு." நூறாவது முறையாக ஸ்வேதா கேட்க…

"ஆமாம் ஸ்வேத்… க்ளாஸ்ல எல்லோரையும் அழைச்சிருக்கா… போகலைணா தப்பா தெரியும் டி. அதுவும் இல்லாமல் அபி சாரை பார்க்க இது ஒரு சான்ஸ். அதை ஏன் மிஸ் செய்வானேன்." என்றுக் கூறி கண்ணடிக்க…

அவளது மலர்ந்த முகத்தை கவலையாகப் பார்த்தாள் ஸ்வேதா.

"கவலைப்படாதே ஸ்வேத்‌.. எது வந்தாலும் பார்த்துக்கலாம். எவ்வளவோ பார்த்துட்டோம், இதை சமாளிக்க முடியாதா… அந்த தர்ஷனா எல்லாம் நமக்கு சுண்டைக்காய் மேட்டர்.ஓகே லீவ் இட். டோன்ட் வொர்ரி அபவுட் இட். லெட் சீ வென் இட் கம்ஸ்." என…

"சரி அம்ரு… அப்போ சண்டே அன்று பார்ட்டிக்கு என்னோட தான் வர்ற.நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். ஷார்ப்பா ஃபைவ் தேர்டிக்கு ரெடியா இரு... " என ஸ்வேதா சொல்ல…

" ஏய் ஸ்வேத் கிண்டல் பண்றீயா... உங்க வீடும் அந்த ஏரியா தானே. நீ அங்கே இருந்து இங்கே இவ்வளவு தூரம் வந்து என்னை கூட்டிட்டு போகணுமா... நான் அண்ணன் கூட வரேன் டி. உனக்கு எதுக்கு சிரமம்."

"அதெல்லாம் ஒன்னும் எனக்கு சிரமம் கிடையாது. நான் சொல்றதை நீ கேக்குற… அவ்வளவு தான் புரியுதா? இல்லையா?… இல்லை உங்க வீட்டுக்கு நான் வரக்கூடாது என்று சொல்றியா?" என…

"அதெல்லாம் இல்லை டி. நீ தராளமா வா" என அம்ருதா ஜகா வாங்க…

"அது… அந்த பயம் இருக்கட்டும்…" என்றுக் கூறி ஸ்வேதா சிரிக்க... அம்ருதாவின் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.

அவர்களுடைய கல்லாரி பிரபலமான கல்லூரி. எல்லோருமே நல்ல வசதியானவர்கள். இதில் சிலர் மட்டுமே மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதில் அம்ருதாவும் ஒருத்தி… அது தான் ஸ்வேதா ரொம்ப கவலையோடு இருந்தாள்‌. அவள் நினைத்தது போலவே தர்ஷனா அம்ருதாவை எப்படியாவது அந்த பார்ட்டியில் மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்தாள்.

அதற்கு அம்ருதாவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாள். அவளுக்கு ட்ராயிங் நன்றாக வரும். அதனால் ஒரு சார்ட்டில் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து அதை, அழகாக லேமினேஷன் செய்து கிஃப்ட் பேக் பண்ணி எடுத்துச் சென்றாள். அழகாக எளிமையான ஒரு சுடிதாரில் தயாராகி இருக்க…

சரியான நேரத்திற்கு வந்த ஸ்வேதா, "வணக்கம் ஆன்ட்டி" என்று சுதந்தியிடம் சொன்னவள், அம்ருதாவின் காதில் சென்று, " ஏய் அபி சார பார்ப்பதற்காக, சீக்கிரமே கிளம்பி ரெடியா இருக்கீயா" என கிண்டல் செய்ய…

"ஏய் விடுடி… இரண்டு நாளா ஓட்டிட்டே இருக்கிற… அம்மா வேற இருக்காங்க. சும்மா இரு." என்று அவளை அடக்கி வைக்க…

"சரி… சரி… வா… நாம கிளம்பலாம்."

"இரு மா... ஏதாவது குடிச்சிட்டு போலாம். காஃபி ஆர் டீ என்னமா சாப்பிடுற…" என்று சுகந்தி வினவ…

"எதுவாக இருந்தாலும் பரவாயில்லை ஆன்டி. என்றவள் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக இருவரும் கிளம்பி பார்ட்டிக்கு செல்ல… அப்போது தான் ஆரம்பமாகி இருந்தது. ஆராதனா மகிழ்ச்சியுடன் வந்து இருவரையும் அழைத்தாள். அம்ருதாவோ, அபிநயனை கண்களால் தேடிக் கொண்டிருந்தாள். ஸ்வேதா தான் அவளை அழைத்துச் சென்று ஒரிடத்தில் அமரச் செய்தாள்.

அபிநயன் சரியாக கேக் வெட்டும் நேரம் மட்டும் வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்குள் சென்று விட்டான்.

அம்ருதாவிற்கு தான் சற்று ஏமாற்றமாக இருந்தது. அபியை பார்க்கவே இந்த பார்ட்டிக்கு வந்திருந்தவள், அவன் உடனே சென்று விட… அவளுக்கு இருக்கவே பிடிக்கவில்லை. ஏற்கனவே இந்த அட்மாஸ்பியர் அவளை பயமுறுத்தியது. ஒவ்வொருவரும் அப்போதுதான் ப்யூட்டி பார்லரிலிருந்து வந்தது போல் இருக்க, இவளது எளிய அலங்காரம் இவளை தனித்து காண்பிக்க… எல்லோரும் இவளையேப் பார்ப்பது போல ஒரு ப்ரமை. ஸ்வேதாவிடம் திரும்பி, " வாடி… கிஃப்ட் குடுத்துட்டு கிளம்பலாம். எனக்கு அன்ஈசியா இருக்கு." என…

அவள் முகத்தை பார்த்த, ஸ்வேதா ஒன்றும் கூறாமல், ஆராதனவிடம் அழைத்துச் சென்றாள்.

இருவரும் பர்த்டே பேபிஐ விஷ் பண்ணிட்டு பிறந்த நாள் பரிசுகளைக் குடுக்க… ஏற்கனவே அபிநயனிடம் பேச முடியாமல் போனதை நினைத்து கோபத்தில் இருந்த தர்ஷனா, அம்ருதாவை எல்லோருக்கும் முன்பு அவமானப்படுத்தினாள்.

" ஏய் அம்ருதா… எதுக்கு செலவு பண்ணிட்டு கிஃப்டெல்லாம் வாங்கிட்டு வர… சும்மாவே வாழ்த்து சொல்லலாம்‌. இதெல்லாம் எதற்கு? "என்றுக் கூறி அவள் கொடுத்த பரிசை கீழே வீச…

ஐயோ ‌! என அம்ருதாவின் மனது துடித்தது. பின்னே அவள் அபிநயனும்‍‌‍‍, ஆராதனாவும் இருக்குமாறு ஒரு ஓவியத்தைத் தான் வரைந்திருந்தாள். அது வரை அமைதியாக இருந்த அம்ருதாவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் பெருக… ஆராதனாவை பார்க்க… அவளோ,என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்… அந்த அமைதி இன்னும் வெறியேற்றியது‌. சுற்றி உள்ளவர்களெல்லாம் ஏதோ ஜோக்கை கேட்டது போல சிரிக்க…

ஆராதனாவின் அருகில் சென்று," உன் கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை ஆராதனா. கூப்பிட்டு வச்சு என்னை அவமானப் படுத்திட்ட… உன் ஸ்டேட்டஸ்க்கு நான் ஏத்தவள் கிடையாது என்று நினைச்சிருந்தால்‍, என்னை இன்வைட் பண்ணியிருக்கவே தேவையில்லை." என்று கூறும் போது,அங்கு வந்து விட்டான் அபிநயன்.

இவ்வளவு நேரம் மாடியில் இருந்து அம்ருதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்‌. ஏதோ பிரச்சனை என்று புரிந்து வேகமாக கீழே இறங்கி வர, அம்ருதா கூறிய வார்த்தையைத் தான் கேட்டான். தன் தங்கையை பார்க்க அவளோ, கண்கள் கலங்கி நின்றாள்.

அம்ருதாவிடம் " ஏய்… இங்கே பாரு… உனக்கு மேனர்ஸ் என்றால் என்னவென்று தெரியாதா… இப்படி தான் ஒரு பார்ட்டியில் பிகேவ் செய்வாயா… " என அபிநயன் உறும‌…

"அதை உங்க தங்கச்சிக் கிட்ட கேளுங்க." என அம்ருதா கத்த…

"ஜஸ்ட் ஷட் அப். இன்னும் ஒரு வார்த்தை பேசின கொண்ணுடுவேன்." என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான். எல்லோரும் பார்க்க தன் தங்கை காட்சிப் பொருளாக நிற்பது, அவனுக்கு இன்னமும் டென்ஷனை ஏற்படுத்தியது. அவன் மெதுவாக அவளிடம் பேச, அம்ருதாவோ கத்தவும்‍, அவன் தன் கன்ட்ரோலை இழந்து பேசிவிட்டான்.

அம்ருதாவோ அதற்கு பிறகு ஒரு நிமிடமும் நிற்கவில்லை.'

இன்று பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தவள், அபியைப் பார்த்து, "என்ன நடந்தது என்று தெரியாமல் என்னைப் பார்க்கும் போதெல்லாம் கத்துவீங்களே. அப்ப தான் நான் யாரோ… ஒரு தேர்ட் பர்சன். இப்போ நான் உங்க வைஃப் தானே. இப்பவாச்சும் ஒரு சாரி கேட்குறீங்களா." என தன் மனத்தாங்கலை கூற…

" அப்பவே உன்னிடம் நான் சாரி கேட்கவில்லை. இப்ப என் மனைவியிடம் போய் நான் ஏன் சாரி கேட்கப் போறேன்…" என்றுக் கூறி புருவத்தை உயர்த்த... தன் பேச்சை கொண்டே தன்னை மடக்கும் அவனை பார்த்து முறைத்தாள்.

அவள் முகத்தைப் பார்த்த அபிநயன் அடக்கமாட்டாமல் நகைக்க… கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்த கௌதம், "சார்... பில் செட்டில் பண்ணியாச்சு வீட்டுக்குப் போகலாம்." என…

" நீ போ… கௌதம். நான் அம்ருவை அழைச்சிட்டு வரேன்." என்று அவனை அனுப்பியவன், அம்ருவிடம் திரும்பி, "நான் சாரி,கேட்கவில்லை என்றாலும் ஆராதனாவை கேட்க வச்சேனே." என…

அம்ருவின் முகம் மலர்ந்தது. ' ஆம், அடுத்த நாள் காலேஜிக்கு வந்தவள் அம்ருதாவிடம் மன்னிப்பு கேட்டிருந்தாள்.'

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே, அவளை வெளியே நிற்க வைத்து ஆரத்தி எடுத்தே உள்ள நுழைய விட்டாள் நிர்மலா.

உள்ளே ஹாலிலோ ராஜன் பரிதாபமாக அமர்ந்து இருந்தார். வீட்டிற்குள் நுழைந்த அபியை நிற்க வைத்து, " இது தான் வீட்டுக்கு வந்த மருமகளை நீ பார்த்திருக்கற அழகா. ஆஃபீஸ்க்கு முதல் தடவையா போகும் போது நீயும் கூட போறதில்லையா… நீ போய் இருந்தா அவளை இப்படி தனியா மேனேஜரோட அனுப்பி இருப்பியா? அவளுக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லை. நான் தான் கொஞ்சம் கூட புரிஞ்சுக்கமால், தனியா வீட்டிலே இருக்கிறாளே... எதையாவது யோசித்து குழப்பிக்கப் போறாளே என்று தான் ஆஃபீஸ்க்கு போக சொன்னேன். ஆனா அங்க போன இடத்தில இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் என்று நான் யோசிக்கவே இல்லை. " என தன்னையே நொந்துக் கொண்டவள், மீண்டும் அம்ருதாவிடம் திரும்பி, "உங்க அம்மா ஞாபகம் வராம உன்னை, நான் பார்த்துக்கணும் என்று நினைக்கிறேன் டா. அதனால இனி மேல் ஆஃபீஸ்க்கு போக வேண்டாம் டா…" என்றவள் அபிநயனைப் பார்த்து, " இனி அவ உடம்ப நல்லாகுற வரைக்கும் எங்கேயும் அனுப்ப மாட்டேன். வீட்டில நல்ல சத்தான ஆகாரமாக செய்து கொடுத்து நல்லா அவ உடம்பை தேத்தணும். அதுக்கு அப்புறமா எதுல அவளுக்கு இன்ட்ரஸ்டோ அதைச் செய்யட்டும்." என்று கூறியவள், அம்ருதாவிடம், " நீ போய் ரெஸ்ட் எடு மா.." என அனுப்பி வைத்தாள்.

அவள் மெல்ல படியேற... அபியிடம், " டேய் … என்ன பார்த்துக்கிட்டு சும்மாயிருக்க… கூட போட…" என்று விரட்ட …

அப்பாவை பரிதாபமாக பார்த்து விட்டு, அம்ருதாவுடன் மாடிக்கு ஏறினான்.

அறைக்குள் வந்தவுடன்," சாரி அம்ரு...
உனக்கு பாடுறதுல விருப்பம் இல்லாமல், ஆஃபீசுக்கு போக நினைச்ச... பட் அம்மா வேண்டாம் என்று சொல்லிட்டாங்க…உன்னை இனி கண்டிப்பாக அனுப்ப மாட்டாங்க… அத்தையோட சாவுக்கு காரணமானவர்களை நான் கண்டுபிடிச்சு சொல்வதை விட, நீயே கண்டுபிடித்தால் தான் நம்புவ, என்று நினைத்தேன். இனி அது முடியாது. உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா" என…

அவனையே பார்த்துக் கொண்டிருந்த அம்ருதா " இருக்கு." என்பது போல் தலையாட்டினாள்.

"அப்ப சரி தான்… நான் சீக்கிரமே உண்மை குற்றவாளியை ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன்." என்றவன், அவள் ஏதோ சொல்ல வருவதும், பின் தயங்குவதுமாக இருப்பதைப் பார்த்து, " என்ன அம்ரு… என் கிட்ட ஏதாவது சொல்லணுமா‌.. எதுவாக இருந்தாலும் கேளு. மனசுல எதையும் வச்சுக்காத…"

" அது… அபி எனக்கு ஒரு சந்தேகம்… எனக்கு இருந்த ஒரே தோழி ஸ்வேதா. அவ இருப்பதும் இந்த ஏரியா… பட் அவ ஞாபகம் எனக்கு வரவே இல்லை. அவளும் என்னை வந்து பார்க்கலை‌. எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு." என…

"அவ இங்க இருந்தா தானே, உன்னை பார்க்க வருவதற்கு… அவ தான் நீங்க ஃபைனல் இயர் படிக்கும் போதே, கல்யாணம் ஆகி ஹஸ்பெண்டோட சேர்ந்து, இருவரும் கனடா போயிட்டாங்க. அதுவும் இல்லாமல் உனக்கு இப்போ தான் காலேஜ் டேய்ஸ் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகத்திற்கு வருது. உனக்கும் ஆக்ஸிடென்ட் ஆனதில், பழைய நினைவுகளை மறந்துட்டே… அதை ஞாபகப் படுத்துவதில் கவனம் செலுத்தாமல்,என்னை குற்றவாளி ஆக்குவதிலேயே குறியாக இருந்த... அப்புறம் அத்தை மறைவு, என்னோட கட்டாய திருமணம், உங்க அண்ணா, அண்ணி, உன்னை கல்யாணம் செய்துக்க வற்புறுத்துனது, இப்படி எல்லாம் சேர்ந்து உன்னை எதையும் யோசிக்க விடவில்லை. அப்புறம் நம்ம கல்யாணத்துக்கு பிறகு என்னையத் தவிர வேறு எதையும் நீ நினைக்கவே இல்லையே…" எனக் கூறி சிரிக்க…

அவள் முறைக்க… " சும்மா… நோ கோபம் அம்ரு‌… அப்புறம் இன்னொன்றும் சொல்லுவேன் நீ கோபப்படக் கூடாது. " என்று பீடிகையுடன் ஆரம்பிக்க‌…

' ரொம்ப தான் எனக்கு பயப்படுறாரு' என்று மெதுவாக முணுமுணுத்தவள், " இல்லை" என்று தலையசைத்தாள்.

"அது வந்து அத்தைக்கு, உன் விருப்பம் தான் முக்கியம்… நீ பாடணும் என்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு சப்போர்ட் பண்ணாங்க‌.. ஆனால் இன்னைக்கு நீ பாட மாட்டேன் என்று சொல்லிட்ட‌… அவங்க எங்க இருந்தாலும்‍, அவங்க மனசு வருத்தப்படும்… அவர்களுக்காக கொஞ்சம் யோசிக்கக் கூடாதா…" எனக் கூற‌…

' அபியோட அத்தை…' என்ற வார்த்தையைக் கேட்கவும் மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள் அம்ருதா‌.

தொடரும் ‌….
 

Baby

Active member
Member
அது என்ன... லூசு மாதிரி தேவையில்லாம திட்டிருக்கான்.. ஆனா இவ அதை கொஞ்சம் கூட ஒருவாட்டி கூட திட்டலையா
 

Rajam

Well-known member
Member
அபி பேசியதும ,ஆராதன அமைதியும்,தரஷனாவின் செயலும்
மறப்பது கஷ்டம் தானே.
 

Viswadevi

✍️
Writer
அது என்ன... லூசு மாதிரி தேவையில்லாம திட்டிருக்கான்.. ஆனா இவ அதை கொஞ்சம் கூட ஒருவாட்டி கூட திட்டலையா
Thanks sis ♥️
 

Lakshmi

Well-known member
Member
எல்லாவற்றிற்கும் காரணம் தர்ஷணா,இதை ஏன் இன்னும் ஆரா புரிந்து கொள்ளவில்லை.
 

பிரிய நிலா

Well-known member
Member
அபி இப்படி நடந்த போதெல்லாம் அம்ரு எவ்ளோ அமைதியாக இருந்திருக்கா. கடைசியா நடந்த ஆக்சிடென்ட் தான் இவனை வெறுக்க வச்சிருச்சு...
 

Viswadevi

✍️
Writer
அபி இப்படி நடந்த போதெல்லாம் அம்ரு எவ்ளோ அமைதியாக இருந்திருக்கா. கடைசியா நடந்த ஆக்சிடென்ட் தான் இவனை வெறுக்க வச்சிருச்சு...
Thanks sis
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom