• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 10 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் - 10

பிரயுவின் கருத்தை கேட்ட அவள் தந்தை, சற்று யோசித்தார். பின்பு பிரயுவிடம்,

“இருக்கட்டும்மா. எதற்கும் இன்னும் ஒரு நாள் கழித்து நம் முடிவு சொல்லலாம். நான் அதற்குள் நம் பெரிய மாப்பிள்ளையிடமும் கலந்து பேசி விடுகிறேன்.” என்று முடித்தார்.

அதை கேட்டவள் தன் தங்கைகளிடம் தனியாக “எதற்கும் இப்போதைக்கு எந்த மெசேஜ்க்கும் பதில் கொடுக்க வேண்டாம். இரண்டு நாட்கள் கழித்து பேசி பார்க்கலாம் அது வரை இருவரும் காத்திருங்கள். “ என்று விட்டு சென்றாள்.

ப்ரயு வீட்டிற்கு சென்ற போது அவள் மாமியார் பையன் வீட்டார் பற்றி விசாரிக்க, அந்த அம்மா பேசியதை சொன்னாள்.

அதை கேட்ட அவர் “ஹ்ம்ம். உன் அப்பா எப்படி அதற்குள் இரண்டு கல்யாணம் செய்ய முடியும்? இந்த விவரம் எல்லாம் அந்த அம்மா பெண் பார்க்க வரும் முன்னால் பேசி இருக்க வேண்டும் என்னவோ போ ஒன்றும் புரியவில்லை “ என்று சென்று விட்டார்.

பிரயுவின் மனம் யோசனையில் கழிந்தது. அன்று இரவு ஆதி, பிரயுவிற்கு பேசும்போது, அவனும் சற்று நிதானிக்கலாம் என்றே கூறினான்.

பிரயுவிற்கு பேசிய ஆதி, வழக்கமான பேச்சுக்கள் முடிந்த பின்,

“ஏன் ப்ரயு? உன் அப்பாவிடம் அவர்கள் திருமணத்திற்கு உடனே சம்மதம் சொல்ல சொன்னாயா? அப்படி என்ன அவசரம் ? அந்த அம்மா பேச்சை பார்த்தால் கொஞ்சம் கண்டிப்பனவர்களாக தெரிகிறது. உன் தங்கைகளுக்கும் இப்பொழுதுதானே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள். வேறு இடம் பார்கலாமே ?” என்று கேட்டான்.

“இல்ல ஆதிப்பா. அவர்கள் நால்வரும் இந்த பெண் பார்க்கும் படலத்தையே கிட்ட தட்ட உறுதி செய்வதாக எண்ணி, தங்கள் கனவுகளை வளர்த்து விட்டார்கள் அதனால் அவர்கள் இன்று இருந்த அரை மணி நேரத்தில், தங்கள் வாழ்க்கை பற்றி திட்டமிட்டு விட்டதாக தோன்றுகிறது. இனிமேல் நாம் வேறு வரன் பார்த்தல் என் தங்கைகள் இருவரும் முழு மனதோடு சம்மதிப்பார்கள் என்று தோன்றவில்லை. “

“எப்படி அவ்வளவு உறுதியாக சொல்லுகிறாய்?”

“அவர்கள் அங்கே இருந்து சென்ற இரண்டு மணி நேரத்தில், இருவருக்கும் அந்த பையன்கள் கிட்டத்தட்ட இருபது மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். இன்று இரவே போனில் பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். நான் என் தங்கைகளிடம் சொல்லி விட்டு வந்திருப்பதால் அவர்கள் பேச மாட்டார்கள் என்றாலும், அந்த பசங்க விடுவார்கள் என்று தோன்றவில்லை. “

“அந்த பசங்க தொந்தரவு செய்தால் நாம் அதை போலீஸ் மூலமாகவோ, அவர்கள் பெற்றவர்கள் மூலமாகவோ பேசி தீர்த்துக் கொள்ளலாமே”

“ஒருவேளை அவர்கள் உறுதியாக இருந்து என் தங்கைகளை திருமணம் செய்து கொண்டால், நாளைக்கு அவர்கள் வாழ்க்கையில் இது பிரச்சினையாக தோன்றும்.”

“ஹ்ம்ம் எனக்கு என்னவோ நீ தேவை இல்லாமல் கவலை படுகிறாய் என்று தோன்றுகிறது. உன் தங்கைகள் பேசவில்லை என்றால், அவர்கள் இவர்களை மறந்து விட்டு வேறு பெண் பார்க்க சென்று விடுவார்கள் பார்”

“பார்க்கலாம்” என்ற ப்ரயு முடித்த பின், இருவரும் வேறு சில விஷயங்கள் பேசி விட்டு வைத்தனர்.

மறுநாள் ப்ரயு எதிர்பார்த்தது போல் அவள் உணவு இடைவேளை போது, அவளுக்கு போனில் சொல்லி விட்டு, அந்த இரு பையன்களும் அவளை பார்க்க வந்தனர்.

ப்ரியாவுடன் அவர்களை பார்க்க சென்றாள் ப்ரயு

“ஹலோ சிஸ்டர் “என்றார்கள்.

“ஹலோ “ என்றவுடன்

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். “ என்றான் அருண்

“சொல்லுங்க. “

“அம்மா பேசினது எங்களுக்கு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும். நாங்க வீட்லேர்ந்து கிளம்பும் போது கிட்ட தட்ட உங்க வீட்டு சம்பந்தம் முடிவான மாதிரிதான் சொன்னாங்க .

அம்மா வேற எதுவும் பெருசா எதிர் பார்க்க மாட்டாங்க. கிராமத்துலேர்ந்து வந்த முதல் தலைமுறை அவங்க அதனால் கொஞ்சம் பழைமைவாதி . மற்றபடி நல்லவங்க.

அவங்க மறுப்பாங்க என்ற எண்ணமே எங்களுக்கு தோணல அம்மாகிட்ட நேரடியா உங்க தங்கச்சிங்க ரெண்டு பேரையும் பிடிச்சிருக்க்குன்னு சொல்லிட்டோம் அதுனாலதான் நாங்க உங்க தங்கச்சிகிட்ட பேசும் போது போட்டோ எடுத்தது, போன் பேசுனது எல்லாமே அதுக்காக சாரி கேட்டுக் கொள்கிறோம்

ஆனால் ப்ளீஸ் இந்த கல்யாணத்த எப்படியாவது உங்க அப்பா கிட்ட பேசி நடத்த முடியுமா உங்க தங்கச்சி இல்லைனா வாழ்க்கையே இல்லைன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டோம் ஆனால் எங்க வாழ்க்கையோட கடைசி வரைக்கும் ஒரு ஓரத்தில் இவங்கள மறக்க முடியாமல் தவிப்போம். வர பொண்ணுகிட்ட இவங்கள ஒப்பிட்டு பார்த்து மனசு தவிக்கும். இது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கறோம்

அரவிந்த் “என் கல்யாணம் பற்றி உங்க வீட்டு வரன் வரும் வரை யோசனையே இல்லாமல் தான் இருந்தார்கள் தீடீரென்று தான் அவங்களுக்கு இந்த எண்ணம் தோன்றி இருக்கிறது. அம்மா இந்த விஷயத்தில் இவ்ளோ தீவிரமா இருப்பாங்கன்னு நாங்க நினைக்கல. இப்போ அவங்க மனசுலே எங்க ரெண்டு பேருக்கும் அக்கா தங்கையைத்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்ற முடிவோடு இருக்கிறார்கள். இப்போ உங்க வீட்டு சம்மதத்தை எதிர் பார்த்துட்டு இருக்காங்க. ப்ளீஸ் நீங்க உங்க அப்பாவ கன்வின்ஸ் பண்ணுங்களேன்”

ப்ரயு “நீங்க சொல்றது புரியது. சொல்ல போனால் நாங்க பவித்ராவிற்கே வரன் பார்க்க ஆரம்பிக்கவில்லை. ஒரு சொந்தக்காரங்க மூலம் தான் உங்க வீட்டு வரன் வந்தது அவங்க ரொம்ப சொன்னதாலே தான் நாங்க சம்மதிச்சோம் கல்யாணம் எடுத்து நடத்தறதே கொஞ்சம் சிரமம் தான். ஆனால் அதை விட சின்னவ படிப்ப நிறுத்திட்டு கல்யாணம்னா எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. இப்போவே இவ்வளவு யோசிக்கிற உங்க அம்மா, கல்யாணத்துக்கு அப்புறம் அவங்கள படிப்ப முடிக்க விடுவங்களான்னு கேள்வி வருதே?”

அரவிந்த் “இல்ல சிஸ்டர் .நான் கண்டிப்பா உங்களுக்கு உறுதி தரேன் உங்க தங்கச்சி இப்போ படிச்சிட்டு இருக்கிற கோர்ஸ் முடிப்பாங்க அதுக்கு நான் கியாரன்டி”

அருணோ ”அது மட்டும் இல்லைங்க. எங்க வீட்டுலேர்ந்து இதை செய்ங்க, அத செய்ங்க என்று எந்த பிரஷரும் கொடுக்க விட மாட்டோம். உங்களாலே என்ன முடியுதோ அத செய்யுங்க. மற்றபடி எங்க மனைவிக்கு என்ன தேவையோ அத நாங்க பார்த்துக்கறோம் “ என்றான்.

அவர்கள் இருவரும் பேசியதை கேட்ட ப்ரத்யா , சற்று நேரம் யோசித்தவள் “சரி நான் எங்க அப்பா கிட்ட பேசுகிறேன் அதே சமயம் நீங்க என் கணவர் கிட்டயும் பேசுங்க அவரோட சப்போர்ட் இருந்தா எங்க அப்பாவ கன்வீனஸ் பண்றது இன்னும் கொஞ்சம் ஈசியா இருக்கும் “ என்றாள்

அவர்கள் இருவரும் “உடனே நீங்க நம்பர் கொடுங்க நாங்க இப்போவே பேசுகிறோம் “ என்றார்

அவர்கள் அவசரத்தை பார்த்து சிரித்த ப்ரத்யா “நம்பர் வாங்கிக்குங்க ஆனால் இப்போ வேண்டாம் நைட் ஒரு எட்டு மணிக்கு மேலே பேசுங்க “ என்றாள்.

அவர்கள் இருவரும் அவளிடம் விடை பெற்று செல்ல, இதை பார்த்திருந்த பிரியா “பிரத்யுஷா நீ ரிஸ்க் எடுக்கறையோன்னு தோணுது “ என்றாள்.

“ஏன் அப்படி சொல்ற?”

“இல்ல உன் சின்ன தங்கச்சிய நிச்சயம் பண்ணிட்டு ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாமே அத அவங்க அம்மா கிட்ட எடுத்து சொல்லாமல் அவங்க ரெண்டு பேரும் உங்கள பிரஷர் பண்றாங்களோ தோணுது “

“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரி தான். ஆனால் இதை தவிர அவங்க கிட்ட குறை சொல்ற மாதிரி வேற எதுவும் இல்லை. அதோட அவங்க விரும்பி கேட்கும் போது நல்லா பார்த்துப்பாங்கன்னு தோணுது”

“ஆனால் அவங்க ரொம்ப கண்டிப்பானவங்கன்னு தோணுதே “

“ஹ்ம்ம். இருக்கலாம் யோசிக்கணும் சரி வா போகலாம் “ என்ற போது அவள் போன் ஒலிக்க, எடுத்து பார்த்தவள் தன் தங்கை நம்பரை பார்த்தவள், யோசனையோடு எடுத்தாள்

“ஹலோ சொல்லு பவித்ரா.”

“அக்கா நீங்க ப்ரீயா? “

“சொல்லு . இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருக்கு லஞ்ச் முடிய ”

“வந்து தப்பா எடுத்துக்காதீங்க. இந்த கல்யாணம் அப்பா, அம்மா இஷ்டப்படி முடிவு எடுக்கட்டும் ஆனால் இது இல்லைன்னு முடிவானால் இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்காவது எங்கள் கல்யாண பேச்சு எடுக்க வேண்டாம் கா இத நீங்க அப்பா கிட்ட பேசி பர்மிஷன் வாங்கி கொடுக்கணும்”

“என்னடி ரெண்டு பேரும் மிரட்டறீங்களா?”

“இல்லை கா. “ எனும் போதே அவள் குரலில் கண்ணீர் கேட்டது “எங்க ரெண்டு பேர் மனசும் கொஞ்சம் சமாதனம் ஆக டைம் கேட்குறோம் ப்ளீஸ் “

கொஞ்சம் அமைதியை இருந்த பிரத்யுஷா “சரி கவலைபடாதீங்க நல்லதே நடக்கும்னு நம்புவோம்” என்று வைத்தாள்.

ப்ரியாவை பார்த்து பெருமூச்சு விட்டவள் , அவர்கள் பேசியதை சொல்லியவள் “இதைதான் நான் எதிர் பார்த்தேன். இதற்காகத்தான் நான் இந்த கல்யாணம் நடக்கட்டும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம் “ என்று அவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.

இரவு பேசிய ஆதியும், அருண் , அரவிந்த் பேசியதை கூறியவன் பிரத்யாவின் அப்பாவிடம் பேசி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கியதாக கூறினான்.

அதற்கு பின் இருவர் வீட்டிலும் பேசி நிச்சயத்திற்கு நாள் குறித்தனர்.

இதற்கு இடையில் ஆதி தங்கை வித்யாவிற்கு வளைகாப்பு நெருங்கியது. அந்த வைபவத்திற்கு எல்லாரும் சென்றனர். வளைகாப்பு முடிந்த உடனே வித்யாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதால் அதற்கு ஏற்ற படி தயார் செய்தார்கள்.

பிரத்யாவிற்கு லீவ் நாட்களில் தன் தங்கைகள் நிச்சயத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்க அவர்களோடு அலைய சரியாக இருந்தது.

வித்யா வளைகாப்பு அன்று அவளுக்கு வாங்கின சீர் பொருட்கள் எல்லாம் அடுக்கி, அவள் மாமியார் திருப்தி ஏற்படுமாறு பிரத்யாவும், அவள் மாமியாரும் செய்தார்கள்.

ப்ரத்யா வீட்டாரும் முன்னாடியே வந்து தேவையான உதவிகளை செய்தார்கள் அதோடு தங்கள் மகள்கள் நிச்சயத்திற்கும் வித்யா வீட்டாரை அழைத்தார்கள்

வித்யாவிற்கு வளையல் அடுக்கி முடியவும், அருகில் இன்னொரு பெண்ணிற்கு அடுக்க பிரத்யாவை அமர சொன்ன போது,

வித்யா மாமியார் “அவளை எதுக்கு இப்போ உட்கார சொல்றீங்க. எப்படியும் இன்னும் மூணு வருஷம் கழிச்சுதான் அவ புருஷன் வர போறான் இப்போவே வளையல் அடுக்கி என்ன பண்ண போறா ?” என்று கூறவும்,

ப்ரத்யா ஒரு மாதிரி முகம் சுருண்டு போனாள். பிரத்யாவின் மாமியாருக்கும் இந்த பேச்சு பிடிக்கவில்லை. அவர் எதிர்த்து பேச போன போது வித்யாவின் கெஞ்சல் பார்வை அவரை அடக்கி விட, ப்ரத்யா அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

பிரத்யாவின் அம்மா, அப்பாவிற்கும் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவள் மாமியாரே பேசாமல் இருக்கும் போது தாங்கள் என்ன செய்வது என்று பேசாமல் போய் விட்டார்கள்,.

வித்யா தன் பிறந்த வீடு வந்து விட்டாள். பழைய பிரச்சினை வரவில்லை என்றாலும், வித்யா கணவன் இப்போது எல்லாம் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வித்யாவை பார்க்க வந்து தங்கி விட்டு போனார்.

அவர் வரும்போது ப்ரத்யா மாமியார், பிரத்யாவோடு தங்க ஆரம்பித்தார். அவருக்கு கட்டில் தேவை படுவதால் , அவர் இவளோடு படுத்து விடுவார்,

அப்போது எல்லாம் பிரத்யாவிற்கு, தன் அறையில் மாமியாரை வைத்துக் கொண்டு தன் கணவனோடு பேசுவது என்பது கஷ்டமாக இருந்தது

பல முறை வெறும் நல விசாரிப்போடு இருவரும் முடித்து விடுவார்கள். இதனால் சில சமயங்களில் அவள் தன் கஷ்டத்தையோ, சந்தோஷதையோ பகிர முடியாமல் அவர்களுக்குள் இடைவெளி ஏற்பட்டது,

ஆதிக்கும் இப்போது அங்கே வேலை விறுவிறுப்பாக நடப்பதால், பாதி நேரம் வேலையிலேயே கழித்தான்.

ப்ரத்யா தங்கைகள் நிச்சயத்திற்கு, வித்யா மாமியார் வீட்டில் எல்லோரும் வந்திருந்தார்கள் அவர்கள் பையன் வீட்டினருக்கும் ஏதோ தூரத்து உறவு என்றார்கள்.

பவித்ரா, அருண் தங்கள் பார்வையிலேயே ஒருவரை ஒருவர் மகிழ்ச்சி கொள்ள, அரவிந்த் தாரிணியோ தங்கள் சின்ன சின்ன தீண்டல்கள் மூலம் மகிழ்ச்சி கொண்டனர்,

பிரத்யாவிற்கு தன் கணவனை தேடியது இவர்கள் திருமணதிற்கு பின் தங்கள் வீட்டில் நடக்கும் முதல் மற்றும் முக்கியமான நிகழ்ச்சி இதற்கு அவரால் வர முடியவில்லையே என வருத்தமாக இருந்தது

நிச்சயதார்த்தம் கொஞ்ச நேரத்தில் நடைபெற இருக்கும் போது, ப்ரத்யா வீட்டினரை அழைத்த அருண் , அரவிந்தின் அம்மா,

“அம்மா, ப்ரத்யா நான் சொல்றேன்னு என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்ல. இந்த நிச்சயதார்த்தம் முடியும் வரை நீ எதாவது ஒரு அறையில் இருந்துக்கோ. மேடைக்கு வரக் கூடாது “

எல்லோரும் அதிர்ந்து விழித்தனர். முதலில் சுதாரித்த அருண், அரவிந்த் இருவரும்

“அம்மா, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பேசறீங்க ?” என வினவ,

“இல்லைடா. ப்ரத்யவோட புருஷன் வெளிநாட்டுலே இருக்கறது தெரியும் ஆனால் அவர் நினைச்ச உடனே வர முடியாதாமே. காண்ட்ராக்ட்லே போய் இருக்கிறாராமே. உங்க ரெண்டு பேர் கல்யாணம், நிச்சயம் இதெல்லாம் பார்க்கும் போது அவளுக்கு அவ புருஷன் நினைப்பு வரும் எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது நாம மட்டும் இப்படி இருக்கோமேன்னு மனசு கஷ்டப்படும். உங்க கல்யாணத்துலே அவ கஷ்டத்தோட நடமாடிக்கிட்டு இருந்தா, உங்க சந்தோஷத்தை அது பாதிக்கும். அதுக்குதான் சொல்றேன்.”

“ஏம்மா, கொஞ்சமாவது அறிவோட பேசறீங்களா? அவங்க வரலைன்னால் எங்க மனைவிங்க மனசு கஷ்டப்படுமே அது பரவாயில்லையா? “

“அது அப்படியில்லடா. இப்போ அவங்க கண் முன்னாலே இவ நடமாடிக்கிட்டு இருந்தா எல்லாருக்கும் கஷ்டம் அவங்க வரலைன்னால் அந்த ஒரு கஷ்டத்தோட போய்டும். இது எல்லாம் நானா சொல்லலே நம்ம சொந்தக்காரங்க சொல்றாங்க அதோட அவங்க பிரத்யவோட நாத்தனார் வீட்டுக்கரங்க அவங்களே அப்படி சொல்லும் போது எனக்கு இன்னும் பயமாயிருக்கு. என்னை பத்தி உங்களுக்கே தெரியும் எனக்கு உங்க ரெண்டு பேர் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் வேற எதுவும் தேவையில்லை. “

இடையில் பிரத்யாவின் அப்பா “சம்பந்தி அம்மா, இப்போ நிச்சயதார்த்தம் முடியட்டும். கல்யாணத்தை மாப்பிள்ளை வரும் போது வச்சுக்கலாம்”

“அதுக்குதான் வழி இல்லை. போலேவே அவர் நாலு வருஷம் கழிச்சு வர்ற வரைக்கும் என் பசங்களுக்கு கல்யாணம் முடியாமல் இருக்கனுமா?”

“ஏம்மா, எல்லாம் சொல்லிதானே பெண் பார்க்க வந்தீங்க?”

“அப்போ மாப்பிள்ளை வெளி நாட்டுலே இருக்காருன்னு சொன்னீங்க. ஆனால் இப்படி இவ்ளோ நாளாகும்ன்னு சொல்லலையே. கல்யாணம் வரும்போது வந்துருவார்ன்னு நினச்சேன்”

“இப்போ என்னதான் சொல்றீங்க?”

அதற்குள் அங்கே நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தையை பார்த்த பவித்ரா, தாரிணி தங்கள் அக்காவின் அருகில் சென்றவர்கள்,

“அப்பா, இன்னும் வரவே வராத உறவுகளுக்காக எங்களோட பிறந்து வளர்ந்த எங்க அக்காவ விட்டு கொடுக்க முடியாது”

அதற்கு அந்த அம்மாவோ “அப்போ இப்போ நிச்சயதார்த்தம் நடக்காது “ என்று கூற எல்லோரும் அதிர்ந்து விழித்தனர்.

-தொடரும் -
 

Rajam

Well-known member
Member
அக்காவா
கல்யாணமா.
எதை தீர்மானிப்பார்கள்.
உஷா பாவம்.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom