• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 1 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – 1​

அந்த திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது.

ப்ரத்யுஷா வெட்ஸ் ஆதர்ஷ்

என்ற பெயர் பலகை வாசலில் வரவேற்றது. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ... மங்கலப் பாட்டு நாதஸ்வரத்தில் இசைக்க வந்திருந்த அனைவரின் ஆசியுடன் மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டினான். பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர் மணமக்கள். தொடர்ந்து சடங்குகள் நடைபெற ஒருபுறம் பந்தி பரிமாறப்பட்டது. ஓரளவு கூட்டம் கலைந்தபின் மதிய விருந்து முடிந்து மணமக்கள் ஓய்வெடுக்க மாலை வரவேற்பும் முடிந்தது. இரவிற்கான ஏற்பாடுகள் மணமகளின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இடைவெளியில் இருவரின் அறிமுகம் பார்த்து விடலாம்.

ஆதர்ஷ் 28 வயது. தந்தை சிறு வயதிலேயே இறந்து விட தாய் கமலா வளர்த்து ஆளாக்கினார். படிப்பு B.E. MBA .. MNC ஒன்றில் பெரிய பதவியில் இருக்கிறான். ஒரு தங்கை வித்யா. சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது.

ப்ரத்யுஷா வயது 24 . படிப்பு B.S.C , ஹாஸ்பிடல் நிர்வாகம் பற்றி டிப்ளோமா முடித்து ஒரு மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் அட்மின் பிரவில் பணிபுரிகிறாள். இரு தங்கைகள். ஒருத்தி யு.ஜி கடைசி வருடமும், சின்னவள் இரண்டாம் வருடமும் படித்து வருகிறார்கள்.

ப்ரத்யுஷா ஆதர்ஷ் திருமணம் திடீரென்று 15 நாட்களில் முடிவானது. தீடிர் திருமணம் ஆனாலும் எந்த விதத்திலும் குறையில்லாமல் நடந்தது. இவர்கள் நல்ல நேரம் ஒரு கட்சி மீட்டிங்கிற்காக புக் செய்த மண்டபம், தீடீரென்று ரத்து ஆகவே, இவர்களுக்கு கிடைத்தது. ஒரளவு பெரிய மண்டபமே.

மற்ற ஏற்பாடுகள் கான்ட்ராக்ட்டில் விடப்பட்டதால், தங்கள் ஷாப்பிங் வேலை மட்டுமே இவர்கள் பொறுப்பாக இருந்தது.

நிற்க நேரம் இல்லாமல் ஓடி , இதோ திருமணமும் நல்லபடியாக முடிந்தது.

மணமக்கள் தனிமையில் சந்திக்கும் நேரம் வர, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆதர்ஷ் முதலில்,

“ப்ரத்யுஷா , உன்னை ப்ரயு என்று அழைக்கலாமா?”

அவள் சரி எனவும், “உன்னிடம் நான் சில விஷயங்கள் பேச வேண்டும். நீ முதலில் உட்கார்” என்று வசதியாக அவளை கட்டிலில் அமர வைத்தவன், தானும் அவளருகில் அமர்ந்து,

“நம் திருமணம் திடிரென்று நடந்தது. அதனால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நான் முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேன்” என்று கூறியவன், தந்தை சிறு வயதிலேயே இறந்தது தன் தாய் தன்னையும், தங்கையையும் வளர்த்தது, தன்னுடைய படிப்பு, வேலை, சமீபத்தில் நடந்த தன் தங்கையின் திருமணம் வரை சொல்லியவன்,

“ப்ரயு நான் இப்போது திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. ஆனால் எங்கள் கம்பெனி என்னை நார்வே அனுப்ப முடிவு செய்துள்ளார்கள். முதலில் அம்மாவையும் அங்கே அழைத்துச் செல்லலாம் என்று தான் எண்ணினேன். அங்கே உள்ள என் சக அலுவலர்கள் குடும்பத்தினரை அங்கே அழைத்து வர வேண்டாம் என்றும் அங்கு உள்ள தட்பவெப்ப நிலையை நம் இந்தியர்கள் அதிலும் வயதானவர்களால் சமாளிக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.

என் தங்கைக்கு திருமணம் ஆகி நிறைய நாட்கள் ஆகியிருந்தால் கூட நான் அம்மாவை அங்கே பார்த்துக் கொள்ள சொல்லி அனுப்பியிருப்பேன். ஆனால் அவளே இப்போதுதான் திருமணம் முடிந்து புகுந்த வீடு சென்றுள்ளாள். அவள் பழகவே இன்னும் நாளாகும் எனும் போது அம்மாவை அங்கே விடுவது கஷ்டம்.

அதனால்தான் இப்போது நான் திருமணம் முடித்து உன்னையும் அம்மாவையும் இங்கேயே விட்டுச் செல்கிறேன். எனக்குப் புரிகிறது இது தவறு தான். இந்த வெளிநாட்டு வாய்ப்பைத் தள்ளிப் போடலாமே என்று நீ நினைக்கலாம். ஆனால் இது பதவி உயர்வோடு கூடிய மாறுதல். என் திறமைக்கும் ஒரு சவால் போல. அதனால் இதை நான் ஒத்துக் கொண்டு போயாக வேண்டிய சூழ்நிலை. ஒரு மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகும் நான் திரும்பி வர. இதெல்லாம் உன் அப்பாவிடம் சொல்லித் தான் பெண் கேட்டேன். உனக்கும் சம்மதம் என்றார்.

திருமணம் நிச்சயம் செய்த போது நேரில் உன்னிடம் பேச முடியவில்லை. இப்போது விளக்க வேண்டியது என் கடமை. அதனால்தான் சொல்லி விட்டேன். இனி உனக்கு என்னிடம் கேட்க வேண்டியதை நீ கேளு.”

“இதெல்லாம் என்னிடம் ஏற்கனவே சொல்லி விட்டார்கள். ஆனால் எனக்கு வேலைக்குப் போக விருப்பம். உங்கள் அம்மா தனியாக இருப்பதால் அது முடியுமா என்று உங்களிடம் கேட்கிறேன்."

அது பிரச்சினையில்லை ப்ரத்யு. நாங்கள் இங்கே இருந்தாலும் பகலில் அம்மா தனியாகத் தானே இருப்பார்கள். மேலும் நான் கூறுவது அம்மாவை பொறுப்பாக பார்த்துக் கொள்ளத்தானே தவிர நீ முழுமையாக அம்மாவோடே இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல. உன்னால் முடிந்தால் அம்மாவை இரவுகளில் தனியாக விடாமல் பார்த்துக் கொள். அது போதும் .” என்றவன், “வேறு..?”

“நீங்கள் எப்போது கிளம்ப வேண்டும்?

“இன்னும் பத்து நாட்களில்” என்றவன் “நாளையிலிருந்து நமக்கு நிற்க நேரமிருக்காது. இன்னும் ஐந்து நாட்கள் நான் அலுவலகம் வேறு செல்ல வேண்டும். பிறகு பேக்கிங்கிற்கும், உனக்கும் அம்மாவிற்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் நேரம் சரியாக இருக்கும். அதனால் நாம் இரவுகளில் மட்டும்தான் சந்திக்க முடியும். நாளை காலை நான் உன்னை நம் வீட்டில் விட்டு விட்டு அலுவலகம் சென்று விடுவேன்.” என்று கூறியவன்.. சற்றுத் தயங்கி

“ப்ரத்யும்மா, வந்து.. நமக்குள் இப்போது எதுவும் வேண்டாம். ஏனென்றால் நான் உடனே ஊருக்கு கிளம்பி விடுவேன். பிறகு இருவரும் ஏங்கி விடுவோம். நடுவிலும் என்னால் எப்படி வரமுடியும் என்று தெரியவில்லை. அதனால் .. இந்த காலகட்டத்தை நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் சரியா? நீ என்ன சொல்கிறாய்?” என்று வினவ,

வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்தபடி “ஹ்ம்.” என்றவள் கீழே படுக்கையை விரிக்கப் போனவளை தடுத்து “மேடம்.. நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்றேன். நீ கீழே படுத்தால் எப்படி முடியும்? நீ என்னோடு தூங்கு. “ என்று அவளை இழுத்து தன் மீது அணைத்தவன், பிறகு நெற்றியில் முத்தமிட்டு “தூங்கு..“ என்று அவளை அணைத்தபடி படுத்தான். ப்ரத்யுஷாவும் அவன் அணைப்பில் அடங்கி உறங்கினாள்.

மறுநாள் காலை முறைப்படி தன் புகுந்த வீடு சென்ற ப்ரத்யுஷா, அங்கே சற்று நேரத்தில் அவள் கணவன் ஆபீஸ் கிளம்பி விட தன் மாமியார், நாத்தனாரோடு இயல்பாக இருந்தாள்.

அவள் கணவன் கூறியபடி நாட்கள் ஜெட் வேகத்தில் நகர்ந்தன. அவன் அலுவலக வேலை ஒருபுறம், அவனுடைய ஷாப்பிங் ஒருபுறம் என்று நடக்க, இடையில் வீட்டிற்கு, தங்கைக்கு, தன் மனைவிக்கு தேவையானது என்று அவன் எல்லா பக்கமும் பறந்தான். இதனிடையே விசா இன்டர்வியூ, மெடிகல் செக்கப் என்று வேறு அலைய நேர்ந்தது.

அவனின் நிலை உணர்ந்து, ப்ரத்யுஷா அவன் டென்ஷனைக் குறைக்க தன்னாலான உதவிகள் செய்தாள். அவன் உடல்நிலையும் பார்த்துக் கொண்டாள்.

எல்லாம் முடிந்து அவன் கிளம்பும் நாளும் வந்தது. காலையிலேயே அவன் தங்கை வீட்டில், ப்ரத்யுஷா வீட்டில் எல்லோரும் வந்து விட அவர்களுக்குத் தனிமையே கிடைக்காமல் இருந்தது. ப்ரத்யுவின் கண்ணில் அவ்வப்போது கண்ணீர் அணை கட்ட, அவனறியாமல் மறைத்தாள். அவள் மறைத்தாலும் அவள் நிலை உணர்ந்த அவள் கணவனோ உள்ளுக்குள் இறுகினான்.

கிடைத்த சில நிமிட தனிமைகளில், அவளை அணைத்து, முத்தமிட்டு சமாதானப் படுத்தினான். நள்ளிரவு விமானம் என்பதால், இரவு உணவு முடித்த பின் கிளம்பினார். லக்கேஜை டிக்கியில் ஏற்றி விட்டு மற்றவர்கள் விடைபெற அவன் தாயும், மனைவியும் மட்டும் அவனோடு விமான நிலையம் வரை கிளம்பினர். எல்லோரும் வெளியே சென்று விட கடைசியாக வீட்டைப் பூட்ட நின்ற ப்ரத்யுஷாவை உள்ளே இழுத்து நீண்ட இதழ் முத்தத்தை அளித்தான் அவள் கணவன்.

ஏர்போர்ட் சென்று அவன் இமிக்ரேஷன் செக் செல்லும் வரையில் ஆதர்ஷ் தன் மனைவியின் கையை விடவில்லை. கிளம்பும்போது தன் அம்மாவையும் மனைவியையும் ஒருவரைஒருவர் பார்த்து கொள்ளவும், கவனமாக இருக்குமாறும் கிட்டத்தட்ட 1௦௦ முறையாவது சொல்லி விடை பெற்றான்.

ஏர்போர்ட்டிலிருந்து வீடு வந்த பிரத்யுஷாவும் அவள் மாமியாரும் தங்கள் அறைக்கு சென்றனர். அவனை வழியனுப்பி வைக்கும் வரை கட்டுபடுத்திய கண்ணீர் இப்போது வழிந்து ஓடியது. வெறும் பத்து நாட்கள் மட்டுமே தன் கணவனோடு பழகியிருந்தாலும் , ஜென்ம பந்தம் போல் தோன்றியது.

அவன் அந்த அறையில் தனக்காக செய்திருந்த வசதிகளை பார்த்தாள். ஒரு இன்டர்நெட் வசதியோடு கூடிய கம்ப்யூட்டர், புது செல் போன், மேலும் சில பரிசுகள் எல்லாம் பார்த்தாள். நல்ல படியாக அவன் ஊர் சேர கடவுளை வேண்டி கொண்டு அழுகையினோடு படுத்தாள்.

தன் தாயின் வீட்டில் உள்ளது போல் இங்கே இருக்க முடியாது என்பதால், தன் தினசரி வேலைகளை மாற்றிக் கொள்ள முடிவு செய்தாள்.

மறுநாள் காலை நேரத்தில் எழுந்தவள் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்து தான் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் சென்றாள்.

- தொடரும் -
 

Baby

Active member
Member
என்னங்கடா இது ஆரம்பத்திலயே ஹீரோ ஹீரோயினிக்கு கல்யாணம் னு பாத்தா நாலு வருஷம் பிரிக்க பிளான் போட்ருக்கீங்க... டூ பேட்....
 

Gandhimathi Pandian

New member
Member
ஏன் ஆர்த்தரே இப்பத்தான் அவுங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கு உடனே பிரிக்கிறிங்களே
 

பிரிய நிலா

Well-known member
Member
புரிதல் உள்ள மனைவி... ஆதர்ஷ் கொடுத்து வைத்தவன்...
பார்க்கலாம் இந்த புரிதல் இறுதிவரை இருக்குமா என்று..
அழகான ஆரம்பம் சிஸ்..
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom