• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - மூன்று - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் - மூன்று
மூன்று மாதங்கள் போன விதம் ஆதர்ஷ், ப்ரயு இருவருக்கும் தெரியவில்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் மாமியார் மெச்சும் மருமகள் என்றில்லா விட்டாலும், குறை சொல்ல முடியாத படி இருவரின் நடவடிக்கைகளும் இருந்தன.

ஆதர்ஷின் அம்மா அனாவசியமாக பிரத்யுவின் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை .

பிரத்யுஷாவும் தன் மாமியாரிடம் எந்தெந்த விஷயங்களில் அவருடைய உதவியோ, ஆலோசனையோ தேவையோ கேட்டு செய்ய வேண்டியதை செய்தாள்.

திருமணத்திற்கு பின் முதல் மாதம் சம்பளம் வந்தது. அது பேங்கில் கிரெடிட் ஆவதால், அன்று மாலை வந்தவுடன் தன் மாமியாரிடம்,

“அத்தை. இன்று எனக்கு சம்பளம் பாங்கில் போட்டு விட்டார்கள். நாளை வரும்போது நான் எடுத்து வருகிறேன்” என்றாள்.

“சந்தோஷம். நீ ஆதியிடம் கேட்டு என்ன செய்ய வேண்டுமோ செய்.” என்றார்.

“சரி அத்தை.”

அன்று இரவு, வழக்கம் போல் ஆதி தன் மனைவியிடம் பேச சேட்டில் வந்தான்.

“ஹாய். டார்லிங். இன்னிக்கு எப்படி போச்சு ?”

“வழக்கம் போல் தான். அப்புறம் இன்னிக்கு எனக்கு பே டே. சாலரி க்ரெடிட் ஆயிடுச்சு .

“வெல். அப்போ ட்ரீட். எங்கே ?”

அவள் வாட்ஸ்ஆப் சேட் எமோஜியில் உள்ள கேக், கோக் பிச்சர் எல்லாம் அனுப்பி விட்டாள்.

“ஹே. இது. கள்ளாட்டம். ட்ரீட் கேட்டா ஸ்மைலி அனுப்புற?”

“அப்புறம் நார்வேக்கு கேக் அனுப்பினா. அது ஊசிப் போயி நூடுல்சா தான் வரும்” என்று சொல்ல, அவன் சிரித்தான்.

“சரி. என்னோட சாலரிக்கு எதுவும் பிளான் வச்சிருக்கீங்களா? நான் என்ன பண்ணனும்?”

“ஏன்? வீட்டு செலவுக்கு என்னோட அக்கௌண்டில் இருந்து அம்மா அக்கௌன்ட்க்கு பணம் அனுப்பிட்டேனே.”

“நீங்க வித்யா கல்யாணம், இந்த வீடு லோன் இதுக்கு எதுவும் கட்டனுமா? இதையும் நாம யூஸ் பண்ணிக்கலாமே .

“இல்லமா. அது வேண்டாம். என்னோட சாலரிலே ஏற்கனவே இதெல்லாம் .ஈ.எம்.ஐ.யா போட்டுட்டேன். நம்ம வீட்டு செலவும் இதுல சேர்ந்துரும். சோ உன்னோட சாலரி நீயே மானேஜ் பண்ணிக்கோ .”

“நீங்க அந்த லோன்லாம் சரி பண்ண தானே இந்த அப்ரோட் ஆப்ஷன் ஏத்துக்க காரணம். அதான் இந்த பணமும் சேர்த்தா சீக்கிரம் லோன் கட்டிட்டு , இந்தியா திரும்பிரலாமே. “

“ஹே. அது ஒரு காரணம் தான். நான் அங்கே இருந்தாலும் இத சீக்கிரம் முடிச்சிடலாம். ஆனால் இந்த ஆப்பர்சுனிட்டி என்னோட கேரியர்க்கும் சவால். அதுதான் ஒத்துகிட்டேன். இது ஒரு 6 மாசம் முன்னாலே பேசின விஷயம். ஆனால் வித்யா கல்யாணம் எதிர்பாராத ஒன்று. நல்ல இடம் வரும்போது எனக்கு தள்ளிபோட மனசில்லாம அவ கல்யாணம் பேசி முடிச்சிட்டோம்.

அதுலேர்ந்து ஒரு மாசத்துக்குள்ளே இந்த வேலை வரவும், அம்மாவை தனியா விட முடியாமல் நம்ம கல்யாணம் முடிஞ்சுது. அதுக்கு முன்னாடியே நான் இந்த லோன் விஷயம் எல்லாம் பிளான் பண்ணி முடிச்சுட்டேன். சோ . உன் சம்பளத்த அப்படியே வச்சுக்கோ. இதுக்கு முன்னாடி உன் சம்பளத்த என்ன பண்ணுவ?”

“அப்பா அத சேவிங்க்ஸ் போட்டு வச்சுக்கோன்னு சொல்வார். ஆனால் நான் சண்டை போட்டு அவருக்கு பாதி சம்பளம் கொடுப்பேன். அப்புறம் ரெண்டு வருஷம் என் படிப்புக்கு வாங்கின லோன் அடைச்ட்டு, இப்போ தங்கச்சிங்க ரெண்டு பேர்லயும் கொஞ்சம் போட்டு வச்சுருக்கேன். “

“இப்போவும் நீ அதே கண்டினியு பண்ணு, எனக்கும் தெரியும். ஒரு பொண்ணு கல்யாணம்னா எவ்வளவு செலவு ஆகும்னு. அதோட உன் தங்கச்சிங்க பேர்லே போட்ட பணத்தையும் போட்டு வா. அவங்க எதிர்காலத்திற்கு யூஸ் பண்ணிக்கலாம். “

“tதாங்க்ஸ். நானும் அதுதான் நினைச்சேன். ஆனால் உங்ககிட்ட கேட்டு அவங்களுக்கும் கொடுக்கலாம்னு.”

“சரி . இவ்ளோ நேரமா சீரியஸ் மேட்டர் பேசிட்டு இருக்கோமே. கொஞ்சம் கூலா ஏதாவது பேசலாமா?”

“என்ன பேசணுமாம்?”

“நீ என்னை ஆதர்ஷ், ஆதி ஏதாவது பேர் சொல்லி கூப்பிடலாம்லே. மொட்டையா ஹாய்னு மட்டும் சொல்றியே?”

“உங்ககிட்ட தானே பேசுறேன். அதுக்கு ஏன் பேர் சொல்லணும்.? அதுவும் வீடியோ சேட்லே பேசுறதுக்கு “ என்றபடி அவனுக்கு அழகு காண்பித்தாள்.

“அந்த . அழகு காண்பிக்கற உதட்ட அப்படியே” என்று முடிக்காமல் விட்டான். இதற்கு மேல் ஆதியின் பேச்சுக்கள் கொஞ்சம் அந்தரங்கமாக இருக்கவும், சமாளிக்க முடியாமல்,

“ஒ.கே. நான் கட் பண்றேன். குட் நைட் .” என்றாள்

“அதானே. கொஞ்சம் பேசிட்டா உடனே கட் பண்ணிடுவியே. சரி . சரி . குட் நைட். & நைட் கனவுலே நான் சொன்னதெல்லாம் நடக்கட்டும்” என்று வைத்தான்.

பிரத்யுவும் முகம் சிவக்க போனை வைத்தவள், சிரித்து கொண்டே படுக்க சென்றாள்.

அங்கே போய் கொஞ்சம் வேலை செட்டில் ஆனவுடன், அங்கே காண்பவற்றை அவளோடு பகிர்ந்து கொள்பவன், சில சமயங்களில் இது போலவும் பேசுவதுண்டு. அவள் படுத்தவுடன் அவள் போனில் .குட் நைட் மெசேஜோடு ஒரு வீடியோ லிங்க் அனுப்பினான். தினமும் அவன் செய்வது . அதுதான். அவனுக்கும், அவளுக்குமாய் பிடித்த பாடலை லிங்க் செய்து அவள் மொபைலுக்கு அனுப்புவான். இன்றைய பாடல்

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா​

யுவிற்கு பாரதியார் பாடல் அதுவும் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலில் மிகவும் பிடிக்கும். இதை போன்ற பாடல்களை ஆதர்ஷ் அவளுக்கு அனுப்புவான்

அவர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தது போல், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இந்த கால கட்டத்தை உபயோகபடுத்திக் கொண்டனர்.

பிரத்யுவிற்கு அவள் மனத்திலும் தன் வீட்டிற்கு பணம் கொடுக்கும் யோசனை இருந்தாலும், அவன் சீக்கிரம் வர இந்த பணம் உதவுமானால், நாம் பிறகு கூட அப்பா, அம்மாவிற்கு செய்து கொள்ளலாமே. என்ற எண்ணமே.

என்னதான் இருவரும் தங்களை சமாதானபடுத்திக் கொண்டிருந்தாலும், சில சமயங்களில் தங்களை மீறி தங்கள் துணையை தேடுகின்றது. அதனால்தான் அவள் கேட்டாள். அவன் சொல்லிய பதில் அவளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மற்றொரு புறம் அவன் எப்படியும் அந்த கான்ட்ராக்ட் முடிந்துதான் வருவான் என்று புரிந்தது. ஒரு பெருமூச்சுடன் படுத்தாள்.

மறுநாள் காலை தன் அத்தையிடம் ஆதி பேசியதை சொல்ல, அவர் முகம் சற்று வாடினார் போல் காணப்பட்டது.

“என்ன அத்தை. இதில் உங்களுக்கு எதுவும் பிடிக்கவில்லையா? “

“அப்படியெல்லாம் இல்லைமா. என்னதான் பிள்ளை வெளிநாட்டில் இருப்பது பெருமை என்றாலும், அவன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று இருக்கிறது. உன்னை அங்கே அனுப்ப சொல்லலாம் என்றாலும், அவனே கூறியது போல் நான் தனியாக இருக்க வேண்டும்.

நீ சொன்னது போல் எல்லா பணத்தையும் போட்டு அவனை சீக்கிரம் வரவழைக்க முடியுமோ என்று யோசித்தேன். ஆனால் அவன் அப்படி முடியாது என்றது . வருத்தம் தான். “

“கவலை படாதீர்கள் அத்தை. அவர் காண்ட்ராக்ட்டில் போனாலும், அவர் டார்கெட் அடிப்படையில் தான் சென்றிருக்கிறார். அதனால் அவர் அதை சீக்கிரம் அடைய நாம் வேண்டிக் கொள்வோம்” என்றாள் ப்ரத்யு.

“ஹ்ம்ம். சரிதான். நீ அவன் சொன்னது போல் செய்துவிடு. இந்த வாரம் நான் வித்யாவை பார்க்க போகும்போது, நீயும் உன் அப்பா வீட்டிற்கு சென்று வந்து விடு“ என்றார்

அவளும் மகிழ்ச்சியுடன் சரி என்றாள். மூன்று மாதங்களாக இதே போல் செய்து கொண்டிருந்தார்கள்.

மூன்றாம் மாதம் இருவரும் அவரவர் சென்று வந்தவர்கள், அந்த வாரம் கமலா தன் மகள் வீட்டிற்கு சென்று வந்தவள், முகம் முழுவதும் பூரிப்பாக இருந்தது.

ப்ரத்யு . “என்ன அத்தை. ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?”

“வித்யா, இன்னிக்கு நான் போன போது ஒரே வாந்தி, மயக்கமா இருந்தா. அநேகமா விசேஷமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். நாளைக்கு டாக்டர்கிட்ட போய் கன்பார்ம் பண்ண சொல்லிருக்கேன். நல்ல விஷயமா இருக்கணும் கடவுளே.” என்றார்.

“நிச்சயம் நல்ல விஷயம்தான் இருக்கும் அத்தை. “ என்றபடி தங்கள் வேலையை பார்த்தனர்.

மறுநாள் காலை .ப்ரத்யு ஹாஸ்பிடல் கிளம்பும் போது . “ப்ரத்யுஷா .பகல்ல ஆதிகிட்ட பேசறதுன்னா எப்படின்னு சொல்லியிருக்கனாம்மா?”

“ஆமாம் அத்தை. ஏன் பேச போறீங்களா ?”

“அதான். வித்யாகிட்டேர்ந்து தகவல் வந்தவுடனே பேசலாமேன்னு நினைச்சேன்.”

“சரி. அத்தை . இதோ அவர் போன் நம்பர் எழுதிருக்கேன் . நீங்க நம்ம லேன்ட் லைன் லேர்ந்து போன் பண்ணுங்க. அவர் எடுக்க மாட்டார். ஆனா ஒரு பத்து . பதினைந்து நிமிஷத்திலே கூப்பிடுவார்.”

“சரிம்மா . நீ கிளம்பு”

அவள் சென்றவுடன் . மதியம் 12 மணி வாக்கில் வித்யாவிடமிருந்து அவள் கன்சீவ் ஆகியிருப்பதாக போன் வந்தது.

அவளிடம் பேசிவிட்டு, தன் மகனுக்கு அழைத்து அவன் போன் வர காத்திருந்தார். அவன் அழைக்கவும்,

“ஆதி. “ என்றார்.

“என்னம்மா . இந்த நேரத்தில் பண்ணிருக்கீங்க. நல்லாருக்கீங்கல்ல .” என்று கேட்டான்.

“நான் நல்லாத்தான் இருக்கேன் பா. ஒரு சந்தோஷமான விஷயம். அதுதான் உனக்கு உடனே சொல்லணும்னு கூப்பிட்டேன்.”

“சொல்லுங்கம்மா”

“நீ மாமாவாக போறப்பா ,.”

“ஒஹ். .சந்தோஷம் அம்மா. நான் உடனே மாப்பிள்ளைக் கிட்டயும், வித்யா கிட்டயும் பேசறேன்.” என்றவன். மேலும் தன் அன்னையிடம் பேசி விட்டு வைத்தான்.

உடனே தங்கைக்கும், அவள் கணவருக்கும் அழைத்து பேசி விட்டு வைத்தவன். பிரயுவின் நினைவு வரவே . அவளுக்கு கால் பண்ணினான்.

“ஹே. ப்ரயு . “ என்றவன்,

“ஹே. சர்ப்ரைஸ். இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க.. கண்டுபுடிச்சிட்டேன். அத்தை போன் பண்ணாங்களா? வித்யாவிற்கு கன்பார்ம் பண்ணிட்டாங்களா?” என்று கேட்டாள்.

“கொஞ்சம் மூச்சு விட்டு பேசு செல்லம். எஸ். அம்மா போன் பண்ணாங்க .நீ சொல்லவே இல்லே .”

“அத்தை . நேத்து சொன்னங்க. சரி கன்பார்ம் ஆகட்டும்னு வெயிட் பண்ணேன்.”

“ரொம்ப ஹாப்பியா . இருக்கு . நான் மாமா ஆகிட்டேன். வித்யா , மாப்பிள்ளை கிட்டயும் பேசிட்டேன் . உன்கிட்டயும் பேசணும் போலே இருந்தது . சரிடா. நான் வைக்கிறேன். ஹ்ம்ம். நைட் பேசலாம்” என்று வைத்தான்.

பிரத்யுஷா போனை வைத்ததும் பிரியா அவளிடம் வந்து , “ஹே. என்ன அதிசயமா இந்த டைம் உனக்கு கால் வந்திருக்கு?”

“என் நாத்தனார் கன்சீவ் ஆயிருக்கா. அத்தை போன் பண்ணி சொல்லிருக்காங்க. அதான் அவங்க கிட்ட பேசிட்டு, அப்படியே என்கிட்டயும் பேசினாரு”

“ஓகே. ஆனால் இங்கேர்ந்து அவங்க வெளிநாட்டுலே இருக்குற பையனுக்கு பேசிருக்காங்க. உன்கிட்ட இன்னும் சொல்லலே போலே ?”

“இதுலே என்னடி? எனக்குதான் இன்னிக்கு செக்கப் போறங்கனு தெரியுமேன்னு ன் நினைச்சுருப்பாங்க?”

“அது சரிதான். உன் கிட்டயும் சொல்லிருக்கலாமே.”

பிரத்யாவிற்கு கொஞ்சம் வருத்தம் தான். நேற்று தான் வித்யா சொல்லலே. இன்னிக்காவது அவள் போன் பண்ணிருக்கலாமே என்று. ஆனால் அதை பெரிது படுத்தாமல், அன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன் அவளிடம் பேசினாள். அவள் ஹெல்த் பார்த்துக் கொள்ள சொன்னாள். ஆனால் வித்யா பட்டும் படாமலும் பேசியது போல் இருந்தது.

அன்று இரவு ஆதியிடம் பேசும்போது “என்னடா முகம் டல் அடிக்குது” என்றான்.

அவனை ஆச்சர்யமாக பார்த்தவாறே “உங்களுக்கு எப்படி தெரியுது?. எனக்கு ஒன்னும் வித்தியாசமா தெரியலேயே?” என்றாள் .

“நீ என்னிடம் பேசிக் கொண்டிருந்தாலும். உள்ளுக்குள் ஏதோ யோசித்து கொண்டிருப்பது . உன் பேச்சில் தெரியுது ? அதான் கேட்டேன்.”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பா. வித்யாவிடம் இன்று மாலை பேசினேன் . ஏதோ கொஞ்சம் டல்லா பேசின மாதிரி இருந்தது. அதான் எதுவும் பிரச்சினயோன்னு நினைச்சேன். அத்தை கிட்டேயும் கேட்டேன் . அவங்க ஒருவேளை வாமிட் எடுத்து டயர்ட் ஆகியிருப்பன்னாங்க. அது மனசுக்குள்ளே ஓட்டிட்டு இருந்தது.”

“ஹே. நீ கவலைபடாதே . நான் பேசும் போது சந்தோஷமா பேசினாளே . அம்மா சொன்னதுதான் இருக்கும்.” என்றவன் சில ஜோக்ஸ் சொல்லி அவளை சிரிக்க வைத்தான்.

அந்த வார விடுமுறையில் வித்யாவை நேரில் சென்று பார்த்து வர எண்ணி, அவளும் , மாமியாருமாக சென்றார்கள்.

அவள் இருவரையும் வரவேற்றாலும் , அவள் முகத்தில் மலர்ச்சியில்லை . எல்லோரும் இருக்கும் போது எப்படி கேட்பது என்று இருவரும் தயங்கினார்கள்.

ஆனால் சற்று நேரத்தில் வித்யா அத்தையே பேச்சுவாக்கில் என்ன பிரச்சினை என்று சொல்லி விட்டார்கள்.

அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பிரத்யாவின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
 

Rajam

Well-known member
Member
வித்யாவுக்கு என்ன பிரச்சனை.
அது பிரத்யாவ எப்படி பாதிக்கும்.
 

Gandhimathi Pandian

New member
Member
வித்யா வாழ்வில் என்ன பிரச்சனை ஆதியில்லாமல் பிரத்யாஅதை எப்படி சாமளிக்க போறா
 

பிரிய நிலா

Well-known member
Member
என்ன சிஸ் இப்படி ஒரு செக் வச்சுட்டீங்க. அப்படி என்ன வித்யாவுக்கு பிரச்சனை.
அதனால பிரத்யூக்கு என்ன மாற்றம் வருது..
மாற்றம் நல்ல மாற்றமா...?
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom