அத்தியாயம் - ஒன்பது - அன்பே உந்தன் சஞ்சாரமே | Ezhilanbu Novels/Nandhavanam

அத்தியாயம் - ஒன்பது - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அன்று இரவு ஆதியோடு பேசி வைத்த ப்ரயுவின் மனம் சமாதனம் அடைய மறுத்தது அவளுக்கு நன்றாக தெரியும் ஆதியிடம் கடையில் நடந்த விஷயத்தை சொன்னால், அவன் வித்யா மாமியார் மேல் மட்டுமில்லாமல், தன் அம்மா, தங்கையிடம் கூட கோபப்படுவான்

ஆதியை பொறுத்தவரை அவன் ப்ரயுவை மிகவும் நேசிப்பவன். அருகில் இருந்தால் அவளை நன்றாக பார்த்துக் கொள்வான். இதை ப்ரயு நன்றாக புரிந்து கொண்டிருந்தாள்.

ஆனால் ப்ரயுவிற்குதான் மனம் கேட்கவில்லை. என்னதான் இருந்தாலும் ஆதி ஒரே பிள்ளை அவன் தாயை பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டும் இல்லாமல், அவன் தங்கைக்கும் அவன்தான் ஆதரவு. இன்றைக்கு தனக்காக பேசி, அவர்களோடு சண்டை இட்டால், நாளைக்கு அவர்கள் முகம் பார்க்க வேண்டும். அதனால் ஆதி தன்னால் வருத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

தான் ஆதியோடு வாழப் போகும் காலம் நிறைய இருக்கிறது. மிஞ்சி போனால் மூன்று வருடங்கள் இவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆதி வந்து விட்டால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதை எண்ணியே ப்ரயு தன்னை சமாதானப்டுதிக் கொண்டாள்.

அங்கே ஆதியோ ப்ரயுவின் நினைவாக இருந்தான். அன்று காலை அவளை போட்டோவில் பார்த்தவுடன் தோன்றிய உணர்வுகள், அவள் தனக்காக அனுப்பிய பரிசுகள் அவனுக்கு அவள் எவ்வளவு தன்னை தேடுகிறாள் என்று உணர்ந்தான்.

தன் அன்னை சொன்னது வித்யா மாமியார் பேசியதை மட்டுமே அதற்கு தன் அம்மா, தங்கை எப்படி ரியாக்ட் செய்திருப்பார்கள் என்று அவனுக்கு தெரியும்.

ஆதியின் தங்கையும், தாயும் அடிப்படையில் நல்லவர்கள்தான். அவன் அம்மா சிறு வயதிலேயே தன் கணவனை இழந்து, தனியாக பிள்ளைகளை வளர்த்ததால், கொஞ்சம் இந்த சமுதாயத்திற்கு பயப்படுவார்கள்.

மேலும் ஆதியின் கல்யாணம் வரை, தங்கள் வீட்டில் ஏதாவதொரு பெரிய முடிவு எடுக்க வேண்டுமென்றால், ஆதியின் அப்பா வகை உறவுகளோடு கலந்து பேசிவிட்டுதான் செய்வார். அவர் செய்வதில் சிறு தவறு இருந்தாலும் அவர்கள் அதிகமாக குத்திக் காட்டுவதோடு, அப்பா இல்லாமல் வளர்ந்தவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று வேறு சொல்வார்கள்.

அதனால்தான் வித்யா மாமியார் வேண்டும் என்றே செய்கிறார்கள் என்று தெரிந்தும் , தன் அன்னை பிரத்யாவை வருத்தப்பட வைக்கிறார் என்று அவனுக்கு தெரியும். இது எல்லாம் ப்ரத்யாவும் புரிந்து கொள்வாள் என்று ஆதி நினைத்து இருந்தான். மறுநாள் வேலைக்கு சென்ற ப்ரத்யாவை பிரியா கேலி செய்தபடி இருந்தாள்.

“என்ன மேடம் போட்டோ பார்த்துட்டு அண்ணாவோட பதில் என்ன ? அநேகமா சீக்கிரமே உன்னை பார்க்க கிளம்பி வருவார்னு நினைக்கிறேன் ”

“ஏய் உன்னை என்ன செய்யறது? சும்மா ஒட்டாதே. எப்படியும் அங்கே போய் ஒரு வருடமாவது ஆனால் தான் அவர் லீவ் போட்டு வர முடியும்.”

“சரி சரி நடந்தது என்ன ? அதை சொல்லு? “

“எதை பத்தி கேட்குற?”

“ஹ்ம்ம் அசோகர் மரம் நட்டார்ன்னு நாம 5 ம் கிளாஸ் லே படிச்சோமே அதை பத்தி கேட்குறேன் நல்ல வந்துடும்டி வாயிலே. அண்ணா என்ன சொன்னார்னு கேட்குறேன்? அப்புறம் நேத்திக்கு கடைக்கு போயிட்டு வந்தியே? பர்சேஸ் எல்லாம் முடிச்சிட்டயா?”

“எல்லாம் முடிஞ்சுது என்ன கொஞ்சம் வித்யா மாமியார் செலவ ஏத்தி விட்டுடாங்க அப்புறம் நான் அத சமாளிச்சிட்டேன்”

“ஒஹ் குட். “

“உங்க அண்ணா நான் அனுப்பின கிப்ட் பிடிச்சுதுன்னு சொன்னார்”

“ஏண்டி சென்சார் மேட்டர் எதுவும் பேசலையா?”

“அதுதான் சென்சார்ன்னு சொல்லிட்டியே அப்புறம் அத எதுக்கு கேட்டுட்டு இருக்க?”

“ஹி ஹி எல்லாம் கொஞ்சம் பொது அறிவ வளர்த்துக்கதான்”

“அம்மா தாயே உனக்கு இருக்கற அறிவே போதும் இதுக்கு மேலே வளர்ந்தா உலகம் தாங்காது. பாவம் பிழைச்சு போகட்டும் . .விட்டுடு”

“சரி சரி ஏதோ நீ கெஞ்சி கேட்குற அதுனால விடறேன்.போ”

“அடிங்க. நான் கெஞ்சறேனா” என்று அவளை விளையாட்டாக அடித்தாள் ப்ரத்யா.

நேற்றைய மனநிலை சற்று மாறியது அவளுக்கு

பிரத்யாவின் தினசரி நடவடிக்கைகள் எந்த மாறுதலும் இல்லாமல் சென்றது. அந்த வார விடுமுறையில் பிரத்யாவின் அம்மா, அப்பா இருவரும் அவள் வீட்டிற்கு வந்தனர். மாதம் ஒரு முறை நேரில் சென்று நலம் விசாரிப்பார்கள். வாரம் ஒரு முறை ப்ரத்யா மாமியார்க்கு பேசி விடுவார்கள்.

ப்ரத்யா மாமியாரும் அவர்களிடம் இயல்பாக பேசுவார். அவரின் குணங்கள் மாறுவது வித்யா விஷயத்தில் மட்டும் தான். அவளுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதே மற்றபடி அவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவரே.

ப்ரத்யா அம்மா அவரிடம்,

“சம்பந்தி அம்மா , பிரத்யாவின் தங்கை பவித்ராவிற்கு ஒரு வரன் வந்திருக்கு. “

“நல்ல விஷயம் தான் அவள் படிப்பு முடிந்து விட்டதா?”

“இந்த மாதத்தோடு முடிகிறது நம் சொந்தக்காரர் ஒருவரின் மூலம் வந்தது. மாப்பிள்ளை வீட்டில் கேட்ட போது, நல்ல தெரிந்த இடம் என்பதால் நம்மை முன்னிறுத்தி பேசியிருக்கிறார். உடனே பொருத்தம் பார்த்து அவர்கள் பதில் சொல்லி விட்டார்கள்”

“சந்தோஷம் பொருத்தம் இருக்குன்னா பண்ணலாமே சம்பந்தி”

“அதுலே என்ன விஷயம்னா அந்த அம்மாவிற்கு இரண்டு பையன்கள் இரண்டு பேரும் பவித்ரா , பவதாரிணி போல் ஒரு வருட இடைவெளி பவித்ரா ஜாதகத்தில் குடும்ப விவரம் பார்த்தவர்கள், இப்போ பவதாரிணியை அவர்கள் இரண்டாவது பையனுக்கு கேட்கிறார்கள்”

“ஒஹ் ஆனால் இன்னும் சின்னவளுக்கு படிப்பு முடியவில்லை இல்லையா ?”

“ஆமாம் அதுதான் யோசனையாக இருக்கிறது போட்டோ பார்த்து விட்டு பிடித்திருக்கிறது என்று விட்டார்கள் இனி நேரில் பெண் பார்க்க வருகிறோம் என்கிறர்கள்.”

“சரி வரட்டும் பேசி பாருங்கள். ஒத்து வந்தால் முடித்து விடுங்க. காலா காலத்திலே செய்தால் உங்கள் பொறுப்பு குறையும் “ என்றவர்,

“ப்ரத்யா நீ அவங்களோடு பேசி கொண்டிரு நான் எதாவது லேசாக டிபன் செய்கிறேன்” என்று சென்று விட்டார். அதில் எல்லாம் அவரை எந்த குறையும் சொல்ல முடியாது இங்கிதம் அறிந்து நடப்பவர்தான்

ப்ரத்யா “என்ன அப்பா ? இரண்டு பேருக்கும் என்றால் உங்களால் முடியுமா?”

“அதான் யோசனையா இருக்கு இந்த வாரம் அவர்கள் நேரில் வரும்போது பேசிக் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.”

மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் கொடுத்ததைச் சாப்பிட்டுக் கிளம்பினார்கள்

கிளம்பும் போது “சம்பந்தி அம்மா, நீங்களும் பிரத்யாவும் இந்த ஞாயிறு கிழமை வந்து விடுங்கள் அவர்களிடம் நேரில் பேசி, பையனையும் பார்க்கலாம்” என்றார்.

“நான் எதற்கு ? பெண் பார்க்கும் நிகழ்ச்சி தானே ப்ரத்யா வரட்டும். பிறகு விசேஷங்கள் வரும் போது கலந்து கொள்ளலாம்” என்று முடித்தார்.

“முடிந்தால் வரப் பாருங்கள் . நாங்கள் இன்றே நம் மாப்பிள்ளையிடமும் பேசி விடுகிறோம்,’ என்று கிளம்பினார்கள்.

அன்று இரவு ப்ரயு பேசும் போது

“ அப்பா, அம்மா வந்தார்கள் ஆதிப்பா” என்றாள்

“என் கிட்டயும் பேசினாங்கடா”

“ஹ்ம்ம். வர்ற பையன் வீட்டுக்காரங்க கிட்ட பேசி பார்க்கணும். ரெண்டு கல்யாணம் இப்போ பண்ண முடியாதுன்னு.”

“ஏண்டா நல்ல இடமா இருந்தா பேசி முடிக்க சொல்லு பிரயும்மா உங்க அப்பா, அம்மா பொறுப்பும் நல்ல விதமா முடியும் ஆனால் உன் ரெண்டு தங்கச்சிகளுக்கும் பையன பிடிச்சிருந்தா மட்டும் மேற்கொண்டு ப்ரோசீட் பண்ணுங்க”

“ஹ்ம்ம்.”

“ரெண்டு கல்யாணமும் ஒரே நேரத்திலே முடியாதுன்னா, சின்னவளுக்கு நிச்சயம் பண்ணிட்டு ஒரு வருஷம் கழிச்சு பண்ணுங்க. நல்ல இடமா இருந்தா விட வேண்டாம்.”

“நீங்க சொல்றது சரிதான் அவங்க கிட்ட பேசி பார்க்கிறோம் ” என்று முடித்தவள் வேறு பேச்சை ஆரம்பிக்க, வழக்கம் போல் அவளிடம் வம்பு செய்துவிட்டு வைத்தான் ஆதி.

அந்த வாரம் ஞாயிறு அன்று காலையிலேயே அவளை அனுப்பி விட்டார் அவள் மாமியார்.

தன் வீட்டிற்கு சென்று, பெற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தவள், தன் தங்கைகளின் அலங்காரத்திற்கும் உதவி செய்தாள்.

மாலை மூன்று மணி அளவில் அவர்கள் வர, முதலில் உபசாரங்கள் முடிந்து, பெண் அழைத்து வர சொல்ல , இருவரும் அழைத்து வர பட்டனர்

வந்திருந்த பையன்கள் இருவருக்கும் பெண்ணை பிடித்து போக, தங்கள் சம்மதத்தை பெற்றோரிடம் கூறினர்.

பிரயுவின் தங்கைகளும் தங்கள் விருப்பத்தை ஜாடையாக பிரயுவிடம் கூற, அப்போது பையனின் அப்பா,

“சார், உங்கள் பெண்கள் இருவரோடும், என் பிள்ளைகள் தனியாக பேசட்டும் அதற்குள் நாம் பெரியவர்கள் பேசி விடலாம்” என்றார்.

அவர் மனைவிக்கு அதில் அதிகம் பிடித்தம் இல்லாதது போல் இருந்தது ஆனால் மறுத்து ஒன்றும் சொல்ல வில்லை.

இருவரையும் தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு அனுப்பினர். அந்த காலத்தில் கட்டிய வீடு அவர்கள் வீட்டை சுற்றி மரங்கள் இருந்ததால் மாடியில் நிழலாக தான் இருக்கும்.

இரு ஜோடிகளும் மாடிக்கு செல்ல, கீழே பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

பவித்ராவின் ஜோடியான அருண் அவளிடம்,

“ஹாய் நான் அருண் xxxx கம்பனியில் HR executive ஆகா இருக்கிறேன்” என்று தன்னுடைய விவரங்கள் கூறினேன் அவளை பற்றிய விவரங்களும் கேட்டு கொண்டான்.

“பவித்ரா நான் ஒருமையில் கூப்பிடலாமா?” என்று கேட்க, அவள் சம்மதமாக தலையசைத்தாள்.

“பவி, உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

அவள் தலையசைக்கவும், “நீ பதில் சொல்லு”

“பிடிச்சுருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் “ என்றவுடன், அவள் கையை பற்றி முத்தமிட்டான்.

அவர்களுக்கு எதிர்புறத்தில், டாங்க் பின் புறம் பேசிக் கொண்டிருந்த பவதாரிணி யின் ஜோடியான அரவிந்த்

“ஹலோ நான் இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கலை அம்மா தீடிர்நு தான் சொன்னங்க சோ என்னை பத்தின விவரவங்கள் சொல்றேன் பிடிச்சிருந்தா நாம ப்ரோசீட் பண்ணலாம்” என,

அவன் பேச்சில் கவரப்பட்ட தாரிணியும் அவனிடம் சம்மதம் சொன்னாள்.

இங்கே அவர்கள் பேசிக் கொண்டிருந்த அரை மணி நேரத்தில், நால்வரும் தங்கள் விருப்பு , வெறுப்புகளை பகிர்ந்து கொண்டதோடு அவர்கள் ஜோடி ஜோடியாக selfie வேறு எடுத்து கொண்டனர். நால்வரின் என்னும் அவரவர் ஜோடிகளின் மொபைலில் இடம் பெற்றது.

கீழே, சிறியவர்கள் சென்ற பின்,

“இப்போதான் மூத்த பொண்ணு கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் தான் ஆகுது. இவங்க ரெண்டு பேரும் படிச்சுட்டு இருக்காங்க. பவித்ராவது முடிக்க போறா சின்னவளுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு. ஆனால் எங்க சொந்தக்காரர் உங்கள பத்தியும். உங்க குடும்பம் பத்தியும் ரொம்ப நல்லா சொன்னார். அதான் நாங்க பவி ஜாதகம் கொடுத்தோம்.” என்றார்.

அப்போ மாப்பிள்ளைகளின் அம்மா “நானும் சின்னவனுக்கு இப்போ பண்றதா நினைக்கலை. ஆனால் எனக்கு பெண்கள் கிடையாது இந்த ரெண்டு பசங்க தான் காலம் முழுக்க இவங்க ரெண்டும் பேரும் தான் எங்களுக்கும், அவங்க ரெண்டு பேருக்கும் ஆதரவு. நான் முதல்ல இப்படியெல்லாம் நினைக்கல உங்க குடும்ப விவரத்தை பார்த்த பிறகுதான், ஒரே குடும்பத்திலே பெண் எடுத்தா, அக்கா, தங்கச்சிங்க ஒத்துமையா இருப்பாங்க. குடும்பத்தை பிரிக்க மாட்டங்கன்னுதான் கேட்டோம். வயசும் சரி, மத்த விஷயங்களும் எல்லாம் பொருத்தம் இருக்கவே முடிக்கலாம்னு ஆசை படறோம்” என்றார்.

“சரிதான். ஆனால் தாரிணி படிப்பு .? ஒன்று செய்யலாம் தாரிணிக்கும் உங்க ரெண்டாவது பையனுக்கும் நிச்சயம் பண்ணிட்டு ஒரு வருஷம் கழித்து கல்யாணம் பண்ணலாமா?” என்று கேட்க,

“அவள் டிகிரி தானே பண்றா கல்யாணம் பண்ணிட்டு தபால் மூலம் தொடரட்டும்” என்றார்.

“இது விஷயம் நான் என் பொண்ணுங்க கிட்ட கேட்கணும்”

“நீங்க கேட்டுச் சொல்லுங்க ஆனால் இங்கே வர வரைக்கும் நினைக்கல, இப்போ தோணுது. என் ரெண்டு பசங்களுக்கும் இதே மாதிரி பெண்களையே முடிக்கலாம்ன்னு. அதனால் நடந்தா ரெண்டு கல்யாணமும் ஒரே நேரத்தில் தான் நடக்கும்.” அவர் சொல்லி கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து இறங்கி வந்த நால்வர் பார்வையும் சந்தோஷத்தோடு சந்தித்துக் கொண்டது.

இதை யோசனையாக பார்த்தாள் ப்ரத்யா.

அவர்கள் “நீங்கள் கலந்து பேசி விட்டு தகவல் சொல்லுங்கள் ” என்று விட்டு கிளம்பினர்.

அவர்கள் சென்றவுடன் ப்ரத்யா அம்மா, அப்பா யோசனையோடு அமர, அவர்கள் அருகில் சென்ற பவி, தாரிணி இருவரும் “என்ன அப்பா?” என்று கேட்டனர்.

அவர்கள் கூறியதை கூற, பவி, தாரிணி முகங்கள் மாறியது ஒன்றும் சொல்லாமல் தங்கள் அறைக்கு சென்றனர்.

அவர்கள் பின்னோடு சென்ற ப்ரத்யா, இருவரிடத்திலும் தனி தனியாக வினவ, இருவரும் ஒரே போல் மாப்பிள்ளைகளை பிடித்த விஷயத்தோடு, அவர்கள் மொபைல் போட்டோ எடுத்ததை பற்றிக் கூறினர். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, போனில் sms வர ஆரம்பித்தது. அவர்கள் நம்பருக்கு பிக்சராக இரு ஜோடிகளும் எடுத்துக் கொண்ட போட்டோ வர என்ன செய்ய என முழித்தனர்

சற்று யோசித்த ப்ரத்யா தன் தந்தையிடம் “அப்பா. கல்யாணம் இருவருக்கும் முடித்து விடலாம் “ என்றாள்.

“ஏம்மா? எனக்கு கொஞ்சம் யோசிக்கலாம் என்று தோன்றுகிறது”

“ஆனால் என் தங்கைகளும், அந்த பசங்களும் யோசிக்கும் கட்டத்தை தாண்டி விட்டார்கள் இனிமேல் நாம் மறுத்தால் நால்வருக்கும் வருத்தம் தான். மிஞ்சும் நீங்கள் இப்போதே அவர்களிடம் சரி என்று விடுங்கள்” என்றாள்.

-தொடரும் -
 

Rajam

Well-known member
Member
கல்யாணத்திற்கு முன்னாள் ஜோடியா
போட்டோ எடுத்தது தப்பு இல்லையா.
கல்யாணம் ஆனால் சரி.
இல்லைனா பிரச்சனை வராதா.
பிரத்யு சரியா தங்கைகளை புரிஞ்சுண்டா ஶ்ரீ
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom