அக்கரைச் சீமையிலே - 14

laavans

✍️
Writer
வந்திதாவுக்குத் தனித்திருக்கும் அந்தத் தனிமை மிகவும் பிடித்திருந்தது! காபி கலக்கும் போது சுய அலசலில் ஈடுபட்டிருந்தாள் வந்திதா.ஆதிரனை அவளுக்குப் பிடிக்காமலில்லை. அவள் ஆதிரனை முதன் முதலில் பார்த்தபொழுதே அவன் அவளை ஈர்த்திருந்திருந்தான். அதுவும் முழுமையான அழகால்! புற அழகால் அல்ல. அவன் அழகான குடும்பத்தால்.இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்திதா பெங்களூரு விமான நிலையத்தில் தான் அவன் குடும்பத்தினரைப் பார்த்தாள். வந்திதா படிக்கவென்று கலிபோர்னியா வந்தபொழுது அவளைத் தவிர யாரும் விமான நிலையத்திற்கு வரவில்லை.அவள் பாட்டியை வயதான காலத்தில் அல்லாட வேண்டாம் எனக் கூறிவிட்டாள். அவள் பெரியப்பாவோ தனியாக அவ்வளவு தூரம் சென்று படிக்கப் போகும் பெண்ணிற்கு இங்கிருக்கும் விமான நிலையத்திற்குத் தனித்துச் செல்ல முடியாதா எனக் கேட்டு, யாரும் அவளுடன் செல்லாமல் வீட்டிலிருந்தவாறே வழி அனுப்பிவைத்தனர்.என்ன தான் அவர்கள் முன்னால் தைரியமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் தனித்து விமான நிலையம் நோக்கிப் பயணிக்கும் பொழுது கண்களில் நீர் தளும்பியது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ன என மனங் கலங்கினாள்.விமான நிலையம் அடைந்ததும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு நடக்கும் பொழுது தான் ஆதிரனின் குடும்பம் அவள் கண்களில் பட்டார்கள். அனைவரும் கூட்டமாக நின்று வருவோர் போவோரின் கவனத்தை ஈர்த்தவண்ணம் இருந்தனர்.ஒரு சிலர் வந்திருந்தால் கவனித்திருக்க மாட்டாள். ஆனால் ஒரு குட்டிக் கிராமமே வந்திருக்கும் போல என எண்ணும் அளவுக்கு மனிதர்களைப் பார்த்ததும் தனித்து வந்திருந்தவள் வியந்தாள்.அவள் நினைத்ததை உறுதிபடுத்துவது போல, “ஏம்ப்பா! இப்படி மொத்தக் குடும்பமும் எல்லா இடத்துக்கும் போயிட்டு இருந்தா எல்லோரும் நம்மைக் குட்டிக் கிராமம் வந்துட்டாங்கன்னு கிண்டல் பண்ணாம என்ன செய்வாங்க?” எனச் சீண்டலான குரலில் ஒருவன் பேசுவது அவள் காதில் விழுந்தது. அவன் தான் ஆதிரன் எனப் பின்னர் தெரிந்து கொண்டாள்.“ஆதி! எங்க போனாலும் எல்லோரும் ஒரே குடும்பமா போனாத் தான் சந்தோஷமா இருக்கும். இல்லைன்னா குழந்தைகளை, பெரியவங்களை விட்டுட்டு வந்துட்டோம்.... அவங்க ஒழுங்கா சாபிட்டாங்காளா தூங்கினாங்களா.... இல்லை, குழந்தைங்க குறும்புப் பண்ணாம இருப்பாங்களா... என இருக்கிற சூழ்நிலையை மறந்துட்டு சந்தோசத்தையும் அனுபவிக்காம வீணா மனசு அல்லாடும்.இப்படி எல்லோரும் வெளியே வந்தா குழந்தைகளுக்கும் ஒரே குஷியா இருக்கும் பெரியவங்களுக்கும் உற்சாகமா இருக்கும். வீட்டுக்குள்ளேயே எதுக்கு அவங்களை அடைச்சி வைக்கணும்” எனப் பெரியவர் பதில் தந்தார். அவர் தான் ஆதிரனின் தந்தை என ஊகித்துக் கொண்டாள்.மற்றவர்களின் உரையாடலை ஒட்டுக் கேட்கும் ரகம் இல்லை வந்திதா. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவள். ஆனால் ஒரே குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்ததும் கலங்கியிருந்த மனதுக்கு இதமாக இருந்தது.நின்று அவர்களை ஆசைத் தீரக் கண்களில் பருகிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஆதிரனின் சீண்டலும் அவன் தந்தையின் விளக்கமும், அதுவும் தமிழில் பேசியதும் காதில் விழுந்தது.ஆதிரனின் தந்தை தந்த விளக்கம் வந்திதாவுக்கு சுவாரசியத்தை உண்டு பண்ணியது. அவன் குடும்பத்தாரின் செய்கை அவளுக்கு ஆறுதலாகவும் இருந்தது. மேலே செல்ல நினைத்தாலும் அவள் கால்கள் நின்ற இடத்தில் இருந்து அகலாமல் பசை போட்டு ஒட்டிக் கொண்டன.அவள் பைகளில் எதையோ தேடுவதைப் போல அங்கேயே நின்று கொண்டு மேலும் ஆதிரனின் குடும்பத்தார் நடத்தும் பாசப் போராட்டத்தை நேசத்துடன் கவனித்தாள்.ஆதிரனின் குடும்பத்தார் சின்னவர்களில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை ஒவ்வொருவராக ஆதிரனுக்கு விடை கொடுக்க, ‘அடடா! ஃபிளைட் ஏற ரெண்டு செக்யூரிட்டி லைன்னைத் தாண்டனும் எனத் தெரியாமப் போச்சே’ என ஆதிரன் அவர்களைக் கிண்டல் அடித்தது இன்றும் அவள் நினைவிலிருந்தது.என்ன தான் கிண்டல் அடித்தாலும், ஒவ்வொருத்தரிடமும் தனித் தனியே பிரியா விடைபெற்றுக் கொண்டு தான் அவ்விடத்தை விட்டு அகன்றான் என்பது வேறு விஷயம்.“உடன் பிறப்ஸ்! நான் ஊர்ல இல்லைன்னு அம்மா-அப்பா கிட்டே ஓவரா செல்லம் கொஞ்சாதே சொல்லிட்டேன். ஒழுங்கா உன் குழந்தைகளை மட்டும் கொஞ்சுற வழியைப் பாரு” எனக் கூடப் பிறந்த இரட்டைச் சகோதரியை வம்புக்கு இழுத்து அவள் கண்ணீருடன் முறைத்தது இன்றும் வந்திதாவின் கண்களில் படமாக ஓடியது.ஆதிரனின் அண்ணிகளிடம், “அண்ணீஸ்! நான் போனதும் என்னை ரொம்ப மிஸ் செஞ்சு அழுவாச்சியா அழாதீங்க. நீங்க ம்ம்ம்ன்னு சொன்ன உடனேயே ஓடோடி வந்துடறேன்” என்றான் ஆதிரன்.“அப்போ என்ன சொன்னா ஓடிப் போவீங்க?” என ஒரு அண்ணி சந்தேகம் தெளிவுறக் கேட்டாள். சூழ்நிலையை சகஜமாக்க கேட்கும் கேள்வி என்பது அவள் குரலில் நிரம்பி வழிந்த நேசமே பறைசாற்றியது. ஒட்டுக் கேட்டிருந்த வந்திதாவுக்கே அது புரிந்தது என்றால் ஆதிரனுக்கா புரியாது?“அண்ணி! இப்போ இப்படித் தான் கிண்டல் பண்ணுவீங்க. ஆனா, நான் அந்த சைடு போனவுடனேயே குப்புறப்படுத்துட்டு ஓன்னு அழுவீங்க. நீங்க போன தடவை அப்படிப் பண்ணினதை அண்ணன் வீடியோ எடுத்து எனக்கு அனுப்பிவச்சார்” எனக் கூறி தன் அண்ணனை மாட்டிவிட்டான்.“உனக்கு ஏன்டா ஊருக்குக் கிளம்பறப்போ இந்த நாரதர் வேலை?” என ஒரு அண்ணன் முதுகில் ரெண்டு வைத்ததும், “ப்ரியா! உன்னோட அண்ணி பார் எவ்வளவு பாசமா இருக்காங்க உன் மேலேன்னு சொன்னதை இப்படி மாத்திப் பத்த வைக்கிறான்” எனச் சமாதானம் செய்ததும் ஞாபகம் இருந்தது.“ப்ரீ அண்ணி! நான் அதுக்காகச் சொல்லலை. நீங்களும் அழுதா அப்புறம் அம்மாக்கு யாரு சமாதானம் சொல்லறது?” என ஆதிரன் நெகிழ்ந்ததும், மற்றொரு அண்ணியோ, “நீங்க இல்லாம குழந்தைங்க தான் ரொம்ப ஏங்கிடுவாங்க” என்றாள் தழுதழுத்தவாறே.அப்போ அங்கே வந்த ஒரு வாண்டு, “சித்தப்ஸ்! சீக்கிரம் போய் ஃபிளைட் ஏறுங்க. உங்களை விட்டுட்டுப் போயிடும்” என்றான் மொத்தப் பற்களையும் காட்டி.“இது தான் ஏங்கறதா உங்களுக்கு?” என இன்னொரு அண்ணியிடம் முறைத்தவன், “சித்தப்ஸ் ஊருக்கு போறதுல உங்களுக்கு எல்லாம் அவ்வளவு சந்தோஷமா?” எனக் கேட்டான்.அச்சிறுவனும், “நீங்க ஊருக்குப் போய் எங்களுக்கு டாய்ஸ், சாக்லேட் எல்லாம் வாங்கிட்டு வருவீங்களே. ஃப்ளைட் மிஸ் பண்ணினா எப்படி வாங்கிட்டு வரமுடியும்?” என்று நடைமுறையை எடுத்துரைத்தான்.“நீங்க ஒன்னுமே வாங்கிக் கொடுக்கறதே இல்லையா அண்ணாஸ். இப்படிச் சின்ன பசங்களை கொடுமைப்படுத்தி ஏங்க வைக்கலாமா. டூ பேட்... இந்த சித்தப்ஸ் இல்லைன்னா இவங்க நிலைமை என்னாகறது? ஐயகோ!” என அண்ணன்களிடம் நாடக வசனம் பேசினான்.அதற்குப் பாராட்டாக முதுகில் அடிகளை வஞ்சனையில்லாமல் இரு அண்ணன்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டு தன் அன்னையிடம் நகர்ந்தான்.ஆதிரனின் அன்னை அவன் நெற்றியில் இதழ் பதித்தவாறே, “ஆதிரா! படிக்கறதுக்குப் போகணும்ன்னு அடம் பிடிச்சுப் போன. இப்போ வேலையும் அங்கே தான் பார்க்கணுமாப்பா. இங்கேயே இருக்கக் கூடாதா” எனக் கண்ணீருடன் கேட்டதும்,“அம்மா! உங்ககிட்டே எத்தனை தடவை சொல்லறது என்னை ஆதிரன் எனக் கூப்பிடுங்கன்னு. அது என்னப் பொண்ணு மாதிரி ஆதிரா?” என அவன் தாயின் கேவலுக்கு வேண்டிய பதிலைத் தராமல் குறை கண்டுபிடித்ததும் வந்திதாவின் நினைவில் இப்போதும் புரண்டது.ஆதிரனின் அண்ணன்கள், “அம்மா இதெல்லாம் அநியாயம். உங்க கூடவே ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு குத்துக் கல்லாட்டம் இருக்கோம். எங்களை எல்லாம் விட்டுட்டு வெளிநாடு போயே தீருவேன்னு நிற்கிறவனிடம் உங்கப் பாசத்தைப் பொழியறீங்களே!” எனத் தங்கள் அன்னையிடம் குறைபட்டுக் கொள்ள,“போங்கடா! உங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு. உங்களைப் பார்த்துக்கத் தான் ஒரு ஆளு வந்தாச்சே. ஆனா, ஆதிராக்கு அப்படியா? நான் தானே அவனைக் கவனிச்சுக்கணும்’ என மீண்டும் கண்ணீர் வடித்ததும், அவரின் தாயுள்ளம் படும் வேதனையை உணர்ந்து கண்ணீர் வந்தது. ஆதிரனுக்கு அல்ல! வந்திதாவிற்கு.“அம்மா! டோன்ட் வொர்ரி! நான் வேணா அங்கேயே ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கறேன். பிரச்சனை தீர்ந்துடும்” என ஆதிரன் பதில் சொன்னதும், ஆதிரனின் அன்னைக்குக் கோபம் வந்ததோ இல்லையோ வந்திதாவுக்குச் சுறுசுறுவெனக் கோபம் வந்தது.இப்படி மனபாரம் தாங்காமல் அழுபவரிடம் கிண்டலடிக்கிறானே என நினைத்துத் தான். ஆனால் அவள் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் அவன் அன்னை, “டேய் படவா! இப்பவே உனக்குக் கல்யாணம் கேட்குதா? அப்படி எல்லாம் எங்களுக்குத் தெரியாம பண்ணின... பிச்சிப்போடுவேன் பிச்சி’ என்றார் ஒரு விரலில் எச்சரிக்கை விடுத்து, கண்களை உருட்டியவாறு.“அப்போ உங்களுக்குத் தெரிஞ்சே கேட்கிறேன். நீங்க எனக்கு முத்தம் தந்ததைப் பொறாமையோட அங்கே ஒரு பொண்ணுப் பார்த்துட்டு, ‘நீங்க மட்டும் எப்படி முத்தம் தரலாம்? நானும் தருவேன்’னு வந்து லைன்ல நிக்கறா. அவளுக்கு எந்தக் கன்னத்தைக் காட்டட்டும்?” என்றான் படுதீவிரமாக.அவன் கேலியை உணர்ந்த அவன் அன்னை, “எந்தக் கன்னத்தை வேணா காட்டு. ஆனா, வலிக்குதுன்னு இந்த அம்மாகிட்டே வந்து அழக் கூடாது சொல்லிட்டேன்” என்றார் புன்னகையுடன்.“இது நல்ல அம்மாக்கு அழகு! இப்படிச் சிரிச்சு வழியனுப்பறதை விட்டுட்டு அழுமூஞ்சி அழகம்மா மாதிரி இருந்தா உங்கச் சின்னப் பையனோட பெரிய மனசு தாங்காது” என அவரின் நெற்றியில் தன் மண்டையை வைத்து ஒரு முட்டு முட்டி அவரை மேலும் மலரச் செய்தான்.ஆதிரன் தன் குடும்பத்தாரைக் கேலி என்ற போர்வையில் சமாதானம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து நெகிழ்ந்தாள் வந்திதா.ஆதிரன், அவன் குடும்பத்தினரிடம் இருந்து விடைபெற்று அகலும் முன்னால் அவன் பாட்டியைப் பார்த்து, “வரேன் எங் லேடி. ரொம்ப வெயில்ல அலையாதீங்க அப்புறம் உங்க முகப் பொலிவு கெட்டுடும்” எனக் கிண்டலடித்து,அவரின், “படவா ராஸ்கல்... கிளம்பறப்போ கூட உன்னோட குசும்பு குறையலையே” என்ற பாராட்டையும் அள்ளிக் கொண்டு தான் நகர்ந்தான்.அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வந்திதாவிற்கோ தானும் அந்த குடும்பத்தில் ஓர் அங்கமாகிவிட்டதைப் போல இருந்தது.‘பேச்சுக்கே இப்படி என்றால் தினம் தினம் இவர்களுடன் பொழுதைக் கழிக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? அன்பு வெள்ளத்தில் அல்லவா சிக்கி மூழ்கிவிடுவோம்’ எனத் தோன்றும் அளவுக்கு அவர்களின் அன்னியோன்யம் பிடித்திருந்தது.எந்நேரமும் பாசமும் நேசமும் புரள, அன்பும் அரவணைப்பும் தவழ என வாழ்வதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டு தன் வழி(லி)யில் பயணித்தாள்.சிங்கப்பூர் போய் சேரும் வரை ஆதிரனின் குடும்பம் தந்த இதமான சூட்டில் குளிர் காய்ந்து அந்த கதகதப்பில் முழுவதுமாக முடங்கிக் கொண்டாள்.மறுபடியும் சிங்கப்பூரில் விமான ஏறியப் பின்னர் தன் பக்கத்து இருக்கையில் இருந்த ஆதிரனைப் பார்த்ததும் அவள் மனம் கும்மாளமிட்டது. ஏதோ அவன் குடும்பத்தில் அவளும் ஒரு அங்கமாகிவிட்டதைப் போல!வந்திதா ஆதிரனிடம் நட்பை வளர்த்துக் கொள்ள விரும்பி அவனுடன் பேச, ஆதிரனோ எப்போதும் போல அவன் இயற்கைக் குணத்தைக் காட்டினான். ஆதிரன் அப்படித் தான் எனத் தெரிந்ததால் அதை சகித்துக் கொண்டாள்.ஆனால், நேரம் ஆக ஆகத் தான் அவளுக்கு ஒன்று புரிந்தது. ஆதிரன், அவன் குடும்பத்தாரிடம் காட்டிய சீண்டலில் ஒட்டிக் கொண்டிருந்த நேசமும், பாசமும், அரவணைப்பும் இவளைச் சீண்டும் பொழுது சுத்தமாக இல்லை என்று.அதை உணர்ந்து காயப்பட்டுப் பரிதவித்தாள். அந்தத் தவிப்புடனே அவள் தன் மாய உலகில் இருந்தும் தூக்கி வெளியே எறியப்பட்டாள்!வந்திதாவுக்கு ஆதிரன் மேல் எதிர்பார்ப்பு மிகுந்திருந்ததால் ஏமாற்றமும் மிகுந்திருந்தது. அவளின் ஏமாற்றத்துடன் இயலாமையும் சேர்ந்து கொள்ள, தொட்டதற்கெல்லாம் ஆதிரன் மேல் கோபமாக வெடிக்க வைத்தது.கண்ணீர் ஒருத்தரை பலவீனமாக்கும் எனப் புரிந்துத் தன் கண்ணீரைக் கோபமாக மாற்றி அதைக் கேடயமாகவும் ஆக்கிக் கொண்டாள்.இப்பொழுது என்னவென்றால், இரண்டு வருடங்களுக்கு முன்னால் வந்திதா எதிர்பார்த்திருந்த அந்த நேசத்தைத் தருகிறேன் அதுவும் நட்புடன் சேர்த்து மனைவி என்ற உரிமையையும் தருகிறேன். வருகிறாயா என ஆதிரன் வந்திருக்கிறான்.ஆதிரனை நம்புவதா வேண்டாமா என்ற கேள்வி அவளைக் குடைந்தது. கேள்விக்குப் பதிலாக இவன் குடும்பத்தை வைத்துப் பார்த்தால் நம்பலாம் எனத் தோன்றுகிறது என்றது அவளின் ஆசை கொண்ட மனது!இப்படித் தான் வந்திதா பூட்டியிருந்த தன் மனதை நம்மிடம் திறந்து காட்டியது!
 
வணக்கம்.
அக்கரைச் சீமையிலே-பதிநான்காவது அத்தியாயம் படித்தேன்.

ஆதிரனின் குடும்பம் சிறப்பு.
நல்லதொரு குடும்பம்
பல்கலைக்கழகம் 👌

ஒருவழியா இப்பதான் வந்திதா மனசுல என்ன இருக்குன்னு தெரியுது.
 

laavans

✍️
Writer
வணக்கம்.
அக்கரைச் சீமையிலே-பதிநான்காவது அத்தியாயம் படித்தேன்.

ஆதிரனின் குடும்பம் சிறப்பு.
நல்லதொரு குடும்பம்
பல்கலைக்கழகம் 👌

ஒருவழியா இப்பதான் வந்திதா மனசுல என்ன இருக்குன்னு தெரியுது.
தொடர்ந்து நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி. இனி எல்லாம் சுகமே. 🙏 🙏 :love:
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom