• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அக்கப்போர் அரங்கேற்றம்

Balaji

✍️
Writer
"ஒசக்க செத்த ஒசக்க போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டு புட்டா.....
ஒசக்க செத்த ஒசக்க பாவி இதயத்தை காத்தாடி ஆக்கிப்புட்டா......"
என்று தொலைக்காட்சியில் இனிமை தென்றலாய் பாட்டு ஒலிக்க அதை ரசித்தவாறு அமர்ந்திருந்தாள் ஜோதி.

அவளின் தாய் சரோஜாவோ "ஏன்டி ஜோதி புள்ள.. அந்த ரிமோட்டை இங்கன செத்த தாயேன்.. ****** சீரியல் ஆரம்பிச்சிருக்கும் வெள்ளன்ன வைக்கணும் தாயேன் டி.. ஆத்தி நேரம் ஆகிருச்சு.. என்னடி கையில ரிமோட்டை இறுக்கமா வைச்சுட்டு இருக்கிறவ தா டீ.. "என்று அவள் கையில் அழுத்தமாக பிடித்திருக்கும் ரிமோட்டை பற்றி இழுத்தவாறு பதறினார்.

சரோஜா,எங்கு அவர் பார்க்கும் நாடகம்(மெகாத்தொடர்) ஆரம்பித்து விட போகிறதோ என்ற பதட்டத்தில்
"சரோ.. செத்த நேரம் கம்முன்னு உட்காரு நீன்னு.. இங்கன நாங்க என்ன வெட்டியாவா டீவி பார்த்துட்டு கிடக்குறோம்.. எங்களுக்கும் ஆயிரத்தெட்டு ஜோலி கிடக்குது.. அதெல்லாம் விட்டுட்டு இப்போ பாட்டு கேட்க என்ன காரணம்? எல்லாம் டென்சன் இல்லாம ரிலாக்ஸ் ஆகணுமே தான்.. என்கிட்ட பார்த்து சூதானமா இருந்துக்கோ மா.. இதை மாறி கோக்கு மாக்கான சீரியல் உன்னிய யார் பார்க்க சொன்னா.. நீன்னு எனக்கு பிரியாணி ஆக்கி போடுற வேலையை பாரு போ போ மா.. "என்று விட்டு ஜாலியாக டிவியை பார்க்கலானாள் ஜோதி.

சரோஜா "ஏன்டி கழுதை.. நீ என்னடி என்ன வைய்யிரவ.. அம்புட்டு திமிராகி போச்சா.. இப்போ மட்டும் நீன்னு ரிமோட்ட தரல வையேன் உனக்கு இன்னைக்கு சோறு கிடையாது அவ்ளோ தான்.. "என்று கூற அவளுக்கோ இன்று தாய் செய்து தரேன் என்று கூறிய பிரியாணி நினைவுக்கு வர,அது தான் என்றுணர்ந்து அவரிடம் முறைத்துக்கொண்டே ரிமோட்டை கொடுத்தாள்.

சரோஜா "என்னடி முறைக்கிறவ.. உன்னோட அலப்பறையெல்லாம் அடக்கி வாசி மவளே.. அப்புறம் சோறு கிடைக்காது பார்த்துக்கோ.. "என்றவர் தொலைக்காட்சியில் சேனலை மாற்றி நாடகத்தை வைத்தார்.

அவரை பார்த்து சிணுங்கிய ஜோதியோ "நீன்னு சும்மா டீவி ஆப் பண்ணி கிடக்கும் போதுலாம் சீண்டவே மாட்ட.. நான் பாக்குறேன்னதும் சீரியல் பார்க்கணும் அது பார்க்கணும் சொல்லி ரிமோட்டை வாங்கிக்கிட்ட இதெல்லாம் தப்பு மா.. பார்த்துக்கோ"என்று அவரை முறைத்து விட்டு அவள் அவளுடைய அறைக்கு செல்ல சரியாக அந்த நேரத்தில் அங்கு வந்தாள் அவள் அக்கா வைஷாலி.

வைஷாலியை சரோஜாவும் கணேசனும் சொந்த ஊரிலேயே மணம் முடித்து கொடுத்ததால்,தன் தாய் தந்தையரையும் அடிக்கடி வந்து பார்த்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தாள்.அவ்வாறே வைஷாலி இப்பொழுதும் வந்திருந்தாள்.

நேராக தாயிடம் வந்தவள் ஜோதி எங்கே என்று கேட்க,அவரும் ரூமில் இருப்பதாக கூறினார்.இவளும் அதுவும் நல்லது தான் என்று நினைத்து கொண்டவள் அவளரைக்கு சென்று கதவை தட்டினாள்.

முதலில் தாய் மேல் கொண்ட கோபத்தால் கதவை திறக்காமல் இருந்த ஜோதி,அக்காவின் குரல் கேட்க கதவை திறந்து அவளை உள்ளே அனுமதித்தாள்.

அவளும் சென்று தங்கையை சமாதானம் செய்தவள் "சரி நீன்னு இங்கன வீட்டுலேயே கிடந்து என்ன பண்ண போற.. கோயில்ல ஏதோ சாமிக்கு கல்யாணம் போல.. வாயேன் புள்ள அதையாச்சு போய் பார்த்துட்டு வருவோம்.. "என்று வைஷாலி கேட்க அதுவும் சரி தான் என்று யோசித்த ஜோதியோ "சரி அக்கா நான் வரேன்.. தோ செத்த நேரத்துல கிளம்பிறேன்க்கா.. நீன்னு வெளிய வெயிட் பண்ணு.. "என்று அவளிடம் தன் இசைவை தெரிவித்தாள்.

வைஷாலியும் சரி என்று தலை அசைப்போடு எழுந்தவள் அவளை பார்த்து "ஏய் புள்ள.. கோயில் விஷேஷத்துக்கு போறோம் நல்ல ட்ரெஸா போடு புள்ள.. புடவ பெட்டரு.."என்று கூற 'ஏன் புடவை கட்ட சொல்லுறா'என்று யோசித்தவள் அதை கேட்காது சரி என்றாள்.
இவளும் தன் வேலை முடிந்து விட்டது எந்த சந்தோஷத்தில் வெளியே வந்தாள்.

ஜோதியோ புடவை அணிந்து பூ வைத்து அழகு பதுமையாய் வெளியே வர அவளை பார்த்த சரோஜாவோ "இத்தன அலங்காரம் பண்ணி எங்குட்டு போறீங்க ரெண்டு பேரும்.. "என்று கேட்க ஜோதியோ "எங்கணக்குள்ள ஆயிரம் கிடக்கும்.. உங்கிட்ட அதெல்லாம் சொல்ல அவசியம் இல்ல.. வா அக்கா நம்ம ஜோலிய பார்ப்போம்.. "என்று சரோஜாவை பார்த்து கூறிவிட்டு தன் அக்காவுடன் கிளம்பினாள் ஜோதி.

சரோஜாவாவோ "ரொம்ப சிலுத்துக்கிறவ.. போடி.. "என்று வெளியில் அவளை பார்த்து கூறினாலும் உள்ளே சிரித்து கொண்டார்.

கோயில் வந்து சேர இருவரும் சாமியை சென்று தரிசனம் செய்தனர்.
ஜோதியோ கண்களை மூடி சாமியை வேண்ட,வைஷாலியோ கண்களை சுற்றும் முற்றும் அலைய விட்டாள்.இறுதியாக கண்ணை ஓர் இடத்தில் நிலை நிறுத்தியவள், அவர்களை கண்டதும் புன்னகைத்து விட்டு,தாங்கள் அங்கு வருவதாக செய்கையில் கூறினாள்.

ஜோதி கடவுளை தரிசித்து முடித்து கண்ணை திறந்தவள்,தன் அக்காவிடம் "சாமி கல்யாணம் எங்கன நடக்குதுக்கா.. வாயேன் அங்குட்டு போய் ஓரெட்டு பார்ப்போம்.. "என்று கூப்பிட வைஷாலியோ 'நாம எப்படி இவளை சமாளிச்சு கூட்டிட்டு வரதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருந்தா.. இவளே எல்லாத்துக்கும் எடுத்து கொடுக்கிறாளே.. கடவுளே எல்லாம் உன் ஆசி தான்.. 'என்று நினைத்து கொண்டவள் "வாயேன் போவோம்.. தோ அந்த காணி சைட் தான் மண்டபம் இருக்கு.. "என்று அழைக்க,ஜோதியோ "இல்லையே.. நம்ம ஊரு கோயில் மண்டபம் முருகர் சன்னதி கிட்ட தானே இருக்குது.. "என்று சந்தேகமாக கேட்டாள்.

'ஆத்தி..புள்ள பூச்சு யோசிக்க ஆரம்பிச்சிருச்சு சீக்கிரம் அங்கன கூட்டிட்டு போயிடனும்.. 'என்று நினைத்தவள் "அத அங்குட்டு மாத்திட்டாங்க புள்ள வா வா.. "என்று அவளை அடுத்து பேச விடாது கையை பற்றி அழைத்து சென்றாள்.

ஜோதியோ புரியாமலே அவளோடு வர அங்கே குளத்திற்கு அருகில் தங்கள் தந்தை கணேசன் நிற்பதை பார்த்து மேலும் குழம்பினாள் ஜோதி.

அங்கே சென்று "அப்பா.. இங்கன பாருங்க நம்ம ஜோதிய கூட்டி வந்துட்டேன்.. இதுக்கு மேல உங்க பொறுப்பு பா" என்று கூற கணேசனோ "ஹா.. ஹா.. ஹா.."என்று தன் ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்க்க ஜோதியோ "இந்த மனுஷன் இத மாதிரி சிரிச்சாலே.. ஏதோ வில்லங்கம் செய்து வச்சிருக்காருன்னு அர்த்தம் ஆச்சே..இந்த அக்கா என்னன்னா இதோட என் வேலை முடிஞ்சிடுச்சு என்னை கூட்டி வந்து விட்டுட்டேன் சொல்லுறா அப்போ எல்லாமே நாடகமா.. ஆனா எதுக்கு ' என்று பலவாறு யோசனையில் ஆழ்ந்தாள்.

அவரோ போனை போட்டு "வாங்க.. வாங்க ஜோதி வந்துட்டா.. ஹா.. ஹா.. ஹா.. "என்று மீண்டும் சிரிக்க, ஜோதியோ 'ஆத்தி.. கண்டிப்பா ஏதோ வில்லங்கம் தான்.. 'என்று யோசித்து என்ன நடக்கப்போகிறது என்ற அச்சத்தில் குழம்பி போனாள்.

சிறிது நேரத்தில் வெட்டி சட்டை அணிந்து கம்பீரமாக அங்கே வந்து சேர்ந்தான் சஞ்சய்,ஜோதியின் தாய் மாமன்.

ஜோதியோ "இந்த எக்ஸ்போர்ட்டட் எருமமாட என்னை பார்க்க வைக்க தான் இம்புட்டு சதி திட்டமா! இந்த நாடகமா!" என்று வாய்விட்டே கேட்க கணேசனோ "ஹா..ஹா.. ஹா.. ஆமாம் மா நீ மட்டும் என் மருமவன் கிட்ட முகத்திலே முழிக்க மாட்டேன் சொல்லிட்ட.. அத அப்படியே வா விட முடியும்.. சரின்னு அவனை வீட்டுக்கு வர சொல்லி சமாதானம் பேசலாம் பார்த்தா.. அவன் நீ திட்டுனதுக்கு அப்ரோம் வீட்டுக்கு வரவே சங்கட படுறான்.. அதான் இங்கன கோயில்ல வச்சே உங்க ரெண்டு விவகாரத்த முடிச்சிடலாம் அப்பா பிளான் பண்ணி உன்னையும் மருமவனையும் இங்கன வர வைச்சேன்.. " என்று கூறியவர் பெருமையாக தன் மீசையை முறுக்கிக்கொள்ள ஜோதியோ தலையில் அடித்து கொண்டாள்.
சஞ்சயோ அவளிடம் வந்தவன் "அடியே ஜோதி மா.. ஏதோ அறியாம நீ செய்த சாப்பாட்ட குறை
சொல்லி , உன்ன கட்டிக்கிட்டு என்ன அவஸ்த்த பட போறேனோ வஞ்சுட்டேன்.. அதுக்கு கோவப்பட்டு நீன்னு இந்த மாமனயே வேணாம் சொல்லிட்ட.. நானும் வருந்தி அதுக்கொசரம் எத்தனை வாட்டி உங்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன்.. நீன்னு ஆனா என்னை கண்டுக்கவே இல்ல மூஞ்சிலே முழிக்காத வேற சொல்லிட்ட ஆனா என்னால உன்ன மறக்க முடியல.. இந்த ஒரு வருஷம் மாமன் லண்டன் ல உன்னை நினைச்சே காலத்த ஓட்டுனேன் தெரியுமா.. என்னைய மன்னிச்சுடு ஜோதி மா.. இனி அப்படி உன்னை வையவே மாட்டேன் மா.. "என்று அவள் கையை பற்றி கூறினான்.

இதை பார்த்த கணேசனோ "ஹா.. ஹா.. ஹா.. அதான் அவனே மன்னிப்பு கேட்டானே மன்னிச்சுட வேண்டியது தானே ஜோதி மா.."என்று சிரித்துக்கொண்டே கூற அவரை முறைத்தவள் அவன் கையை உதறி விட்டு "அடேய் எக்ஸ்போர்ட் எரும கூறு கெட்ட ல.. அதான் என் சமையல் பிடிக்கில சொல்லிட்டில அப்ரோம் ஏன் என்னையே பிடிச்சுட்டு தொங்குறவேன்.. உனக்கென்னப்பா லண்டன் மாப்பிள்ள ஆயிரம் பொண்ணுங்க வரும் அதுல எதையாச்சு ஒன்ன பார்த்து கட்டிக்க வேண்டி தானே மறுபடியும் ஏன் எங்கிட்ட வந்த.. "என்று அன்றிருந்த கோபம் குறையாமல் கேட்டாள்.

சஞ்சயோ 'அட லூசே.. உன் சமையல சாப்பிட்டும் உன்ன கட்டிக்க வந்தேன் சந்தோஷ படுடி.. உன் மேல சின்ன வயசுல இருந்தே பாசம் வைச்சுட்டேன் போல டி அதான் உன்னை அப்போவும் விட முடியல.. உனக்கு பதிலா சமைச்சு போட நான் சமைக்கலாம் கத்துக்கிட்டேன் தெரியுமா..'என்று மனதிற்குள் ரத்த கண்ணீர் வடித்தவன் அதை வெளியில் காட்டாது "நான் மன்னிக்கவே முடியாத ரொம்ப பெரிய தப்பு தான் இருந்தாலும் மன்னிப்பு கேட்குறேன் மன்னிச்சுடு மா.. உன் தேவாமிர்த சமையல தப்பா சொன்னது தப்பு தான் மா மன்னிச்சுடு மா.. "என்று கூறி வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

இதை பார்த்த ஜோதியோ சற்று அவன் மேல் இரக்கம் கொண்டு "மாமா.. மாமா.. என்ன மாமா நீன்னு.. மன்னிப்பு லாம் கேட்டு அழுவுற.. என் மாமானா தைரியமா சிங்கங்கணக்கா இருக்க வேணாமா.. நான் அன்னைக்கு சமைச்சது உண்மையாலே கேவலமா தான் இருந்துச்சு மாமா.. ஆனா அத உன் முன்னாடி காட்டிக்க கவுரவ கொரச்சலா தோணுச்சு.. அதான் உன்னைய கல்யாணமே பண்ணிக்க வேனான் சொல்லி விரட்டி வுட்டேன்.. ஆனா உன்னைய ஒரு வருஷம் மூஞ்சிலே முழிக்காத சொன்னது எதுக்கொசரம் தெரியுமா?என் மாமனுக்கு ஆக்கி போடுற அளவுக்காச்சு நான் சமைக்க கத்துக்க தான்.. எனக்கு உன் மேல கோபமே இல்ல மாமா.. நானே நீன்னு ஊருக்கு வந்துட்டே தெரிஞ்சிருந்தா வந்து பார்திருப்பேன்.. ஆனா இந்த அப்பா பண்ண வேலையால கொஞ்சம் எரிச்சல் வரவே அதை உன்கிட்ட காட்டிப்புட்டேன்.. சாரி மாமா"என்று அவனை பார்த்து கூற அவனோ இதை கேட்டு விண்ணில் இறகில்லாமல் பறக்கும் பறவையானான்.

இதை கேட்டதும் அவளை உடனே அணைத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் வைஷாலி.

சஞ்சயோ உடனே"சாரிலாம் எதுக்கு மா.. "என்று கூறி அதற்கு மேல் பேச வர அதை தடுக்குமாறு "ஹா.. ஹா.. ஹா.. என்னோட திட்டம் என்னைக்குமே சுதப்பாது மா.. பார்தேலே என்னோட ராஜ தந்திரத்தை.. "என்று கூறி மீண்டும் மீசையை முறுக்கி கொள்ள மூவருமே சற்று கடுப்பாகினர்.

சஞ்சயோ "இது போதும் இந்த ஒரு வார்த்தை போதும் ஜோதி மா.. எனக்காக இவ்ளோ யோசிச்ச உனக்காக நான் என்ன வேணுமுனாலும் செய்வேன்.. "என்று கூற மீண்டும் கணேசனே "ஹா.. ஹா.. ஹா.. என் பொண்ணுனா கொக்கா.. பார்தேல மாப்பிள்ளை என்னோட வளர்ப்ப "என்று மீண்டும் மீசையை முறுக்கி கொள்ள கடுப்பின் உச்சத்துக்கே சென்ற ஜோதியோ "எனக்காக என்ன வேணுமுனாலும் செய்வேன் சொன்னில மாமா.. இந்த அப்பா வாய்க்கு ஒரு பெரிய டேப்பா வாங்கி ஒட்டு மாமா.. அப்போ தான் நமக்கு கல்யாணம்.. பத்து பிசா பிரயோஜனம் படாத ஒரு அக்கப்போர் நாடகத்தை அரங்கேத்திட்டு இதுல பெரும வேற வேண்டி கிடக்கு இவருக்கு.. அதுவும் அதுவும் அந்த சிரிப்பு அஅஅஅஅஅ.. முடியல என்னால.. இத மாதிரியே செஞ்சிக்கிட்டு ஊரு வம்ப இழுத்துட்டு வந்திருவாரு போல.. "என்று நொந்து போய் பேசியவள் சஞ்சய்க்கான உத்தரவையிட்டாள்.

இதை கேட்ட கணேசனோ "ஹா.. ஹா.. ஹா.. விளையாட்டு பொண்ணு மா நீ.. "என்று அவளை அணைத்து கொள்ள, அவளோ அவரை முறைக்க,அவர்களை பார்த்து சஞ்சய்யும் வைஷாலியும் சிரிக்க,இனிதே நிறைவுற்றது இவர்களின் அக்கப்போர் நாடகத்தின் அரங்கேற்றம்.
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom