• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 22

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 22


"பேசாமல் ஜோதிக்கு ஒரு பையனை பார்த்து கட்டி வச்சிடுவோமா" என அவன் பிரச்சனையில் விக்ரம் கூற,


"லூசா மாமா நீ" என லாவண்யா கேட்ட விதத்திலும் சத்தத்திலும் சிலர் அவர்களையே பார்த்து கொண்டு நின்றனர்.


அந்த பேன்சி ஷாப்பில் இருந்து அவளை வெளியே இழுத்து வந்தான் விக்ரம்.


"ஐயோ ஏன் லாவி அப்படி கத்தின? எல்லாரும் என்னை எப்படி பார்த்தாங்க தெரியுமா" என கோபம் போல கேட்க,


"பின்ன என்ன பேசுறீங்க நீங்கள்? படிக்கிற பொண்ண?" என அவளும் திருப்பி கேட்டாள்.


'பின்ன இவன் பாட்டுக்கு எதாவது செய்து வைத்தால் சுரேஷை யார் சமாளிப்பது' என்ற பயம் அவளுக்கு.


'படிக்கிற பொண்ணா! அவ இப்போ என்ன பண்ணிட்டு இருக்கானு எனக்கு தானே தெரியும்' என அவன் முணுமுணுக்க, அதை சட்டை செய்யாமல்


"நேரமாகிடுச்சி இப்ப கிளம்பினா பீச் போக சரியா இருக்கும்" என முன்னே நடக்க இவனும் பின்னே சென்றான் வாடிய முகத்துடன்.


ஆக மொத்தம் சுரேஷ் ஜோவின் காதல் நாலா புறமும் ஒருவர் அறியாமல் ஒருவர் தெரிந்து தான் வைத்திருந்தனர்.


முதல் தளத்தில் அனைவரும் கூடிட சுரேஷ் மற்றும் ஜோதி தனித்தனியாய் வந்து நல்ல பிள்ளையாய் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.


"ஆ.."என்ற அலறலில் அனைவரும் விக்ரம் புறம் திரும்ப,


"ஒன்னும் இல்ல! எறும்பு கடிச்சிருக்கும். எல்லாரும் முன்னாடி போங்க நாங்க வர்றோம்" என பெண்களை அனுப்பினான் ஆனந்த்.


ஆனந்த் விக்ரம் காலை ஓங்கி மிதித்திருந்தான்.


"ஏன் பக்கி மிதிச்ச" வலியில் காலை நொண்டிக் கொண்டே கேட்டான் விக்ரம்.


"எனக்கு ஐடியா குடுக்க சொன்னா நீ மட்டும் ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு வர்ற.. அதான் மிதிச்சேன்" என்றவனை விக்ரம் கொலைவெறியில் பார்க்க சிரிப்புடன் அவர்களை பார்த்துக் கொண்டு வந்தான் சுரேஷ்.


மேலும் விக்ரம் ஏற்கனவே இருந்த எரிச்சலில், "நான் ரொமான்ஸ் பண்ணினத நீ பார்த்தியா டா? நீ பார்த்தியா" என அவன் பாய,


"டேய் என்ன டா சின்ன பசங்க மாதிரி சண்டை போட்டுட்டு! கார்ல போய்ட்டு பேசிக்கலாம் வாங்க டா" என முன்னே சென்றான் சுரேஷ்.


"டேய் ரொமான்ஸ் பண்ணினது நானோ நீயோ இல்லை டா! இந்த பூனையும் பால் குடிக்குமானு நினைச்சோமே அவனே தான் டா. இன்னும் அந்த மூட்லேர்ந்து வெளில வராம சிரிச்சிட்டே போறான் பாரேன்" என சுரேஷை கைகட்டினான் விக்ரம்.


சுரேஷ் நடந்து கொள்வது ஆனந்திற்கு ஆச்சர்யமாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்க, அவர்களை புரிந்து கொண்ட விக்ரம் மேல் இன்னும் இன்னும் பாசமும் மகிழ்ச்சியும் கூடியது ஆனந்திற்கு.


மேலும் ஏதோ விக்ரம் கூற வர அதை கவனிக்காமல், "இப்போ எனக்கு ஐடியா குடுப்பியா மாட்டியா?" என்றான் ஆனந்த்.


"இவன் ஒருத்தன்! சந்தைக்கு போகணும் அம்மா வையும்! காசு குடுனு சொன்னதே சொல்லிட்டு இருக்கான். இப்ப என்ன டா! உனக்கு ஐடியா தானே வேணும். சொல்றேன் நல்லா கேட்டுக்கோ" என்றதும் சீரியஸ்ஸான முகத்துடன் கவனித்தவனை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு,


"உன்கிட்ட பேசணும் ரிதுனு சொல்லு. என்னனு கேட்பா, கேட்காட்டியும் கேட்க வை. அவ என்னனு கேட்டதும் டக்குனு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுடு. ப்ரோப்லேம் சால்வ்டு" என்றவனை எற இறங்க பார்த்து முறைத்தான் ஆனந்த்.


"ஏன்டா முறைக்கிற இப்படி முறைச்சாலாம் வேலைக்கு ஆகாது. உனக்கு சர்ரென்டர் ஆக தெரில" என அவன் உளறிக் கொண்டே வர,


"மூடிட்டு போ. உன்கிட்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும்" என தலையில் அடித்து கொண்டே சென்றான் ஆனந்த்.


பீச் செல்ல அனைவரும் கிளம்பி பின்
விக்ரம் மற்றும் ஜோதி வண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஆனந்த் காரில் அனைவரும் சென்றனர்.


நான் டிரைவ் பண்றேன் என சுரேஷ் சொல்ல ஆனந்த் அவன் அருகில் அமர்ந்து கொண்டான். பின் சீட்டில் லாவண்யா அருகில் விக்ரம் அமர அடுத்ததாக ஜோதி பின் ரிது அமர்ந்து கொண்டாள்.


சுரேஷ் கண்ணாடியை திருப்பி ஜோவை சைட் அடித்து வர ஆனந்த் ரிதுவை எப்படி அம்மா அறையில் இருந்து வெளியேற்ற என யோசனையில் அமர்ந்தான்.


எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த விக்ரம் மூளையில் திடீரென பல்பு எரிய,


"லாவி அங்க நீ என்ன சொன்ன?" என கேட்க, புரிந்த விதமாய் உதட்டினுள் சிரித்தாலும் காட்டிக் கொள்ளவில்லை லாவண்யா.


"நான் ஒன்னும் சொல்லலை" என்றவளிடம்,


"ஹேய் கள்ளி நீ என்னை மாமானு சொன்ன! எனக்கு கேட்டுச்சு. ச்ச அதை விட்டுட்டு லூசு மாதிரி புலம்ப வச்சுட்டியே? உன்னை" என அவளை இன்னும் நெருங்க,


"ஷ்ஷ்! எல்லாரும் இருக்காங்க. அமைதியா வாங்க " என அடக்கினாள்.


"வீட்டுக்கு வா உன்னை பார்த்துக்கிறேன்" என அவனும் மகிழ்வுடன் அவளின் கை பிடித்தவாறு அமர்ந்து கொண்டான்.


வாரநாள் என்பதால் பீச் அவ்வளவாக கூட்டம் இல்லாமல் அலைகள் ஆர்ப்பரித்து கொண்டிருந்தது.


லாவண்யா ஜோதி இருவரும் அலையில் விளையாட அவர்களை வேடிக்கை பார்த்த ரிதுவையும் அழைத்தும் அவள் செல்ல மறுத்தாள்.


விக்ரம் "உனக்கு தான் அலை புடிக்குமே டா. ஜோதியும் நீயும் இங்கே தானே அடிக்கடி வருவீங்க! போய்ட்டு வா" என்க, மறுத்தவளை இழுத்து சென்றாள் ஜோதி.


ஆண்கள் மூவரின் எண்ணங்களோ அவரவர் துணைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் வெவ்வேறு யோசனைகளில் இருந்தது.


அந்த நாள் மறக்க முடியாத அழகான நாளாக அமைந்தது அனைவருக்கும்.


விக்ரம், ஜோதி வண்டியை ஆனந்த் தெரிந்தவர்கள் மூலம் வீட்டிற்க்கு எடுத்து வர சொல்லிவிட நேரே விக்ரம் வீட்டிற்கு சென்றனர் ஆனந்த் காரில்.


சுரேஷ் தானே டிரைவ் செய்வதாக சொல்லி அவனே ஏறிக் கொண்டான்.


விக்ரம் வீட்டிற்கு வரவும் வீட்டிற்குள் அழைக்க, ஆனந்த் "ஆல்ரெடி லேட் டா" என கூறி மறுத்துவிட்டான்.


விக்ரம் லாவண்யா ஜோதி மூவரும் இறங்கிக் கொள்ள அவர்களுடன் ரிதுவும் இறங்கினாள். அதில் விக்ரம் நிஜமாகவே அதிர்ந்து விட்டான்.


"நீ ஆனந்த் கூட கிளம்பு டா" என விக்ரம் தான் கூறினான்.


"இல்லைண்ணா..." என மறுத்து பேசும் முன் சுரேஷ்,


"டேய் நீ ரிதுவை கூட்டிட்டு போ. நான் போய்க்கிறேன்" என அவனும் இறங்கினான்.


'எப்படியும் தவிர்த்து விடலாம்' என்பது ரிதுவின் எண்ணம்.


"யாரும் இறங்க வேண்டாம் உன்னை ட்ரோப் செய்துட்டு நாங்க கிளம்புறோம்" என சுரேஷிடம் ரிதுவையும் சேர்த்து அவன் கூற தவிர்க்க முடியாது என புரிந்து போனது ரிதுவிற்கு.


ரிதுவும் ஏறிக் கொள்ள அடுத்து சுரேஷ் வீட்டிற்கு சென்றனர்.


சுரேஷ் வீட்டில் ட்ரோப் செய்ய அவன் வீட்டை பார்த்த ரிது கண்களை விரித்தாள். ஆனந்த் வீட்டை விட பல மடங்கு பெரிது.


"உள்ளே வாங்க சிஸ். சும்மா பார்த்துட்டு போகலாம்" என அழைக்க ஆனந்த் மறுக்கும் முன்,


"ரிது பர்ஸ்ட் டைம் வர்றாங்க. சோ கண்டிப்பா வரணும்" என அன்பு கட்டளையிட ஆனந்த் மறுக்காமல் புன்னகையுடன் இறங்கினான்.


ரிதுவும் அவனின் 'சிஸ்' பிடித்து போக உள்ளே நுழைந்தாள்.


"டேய் நீ ரிதுக்கு வீட்டை சுத்தி காட்டு. நான் காஃபி எடுத்துட்டு வரேன்" சுரேஷ்.


"நான் காபி போடறேன்" என்றவளை மறுத்து சுரேஷ் உள்ளே செல்ல, ஆனந்த் அவளை மேலே அழைத்து சென்றான்.


வீட்டை பார்த்து ஆச்சர்யப்பட்டவள், "சுரேஷ் அண்ணாக்கு ரிலேஷன் யாரும் இல்லையா? ஏன் தனியாக இருகாங்க?" என்று பேச்சை ஆரம்பித்தாள்.


"அவனோட அம்மா அப்பா லவ் மேரேஜ் டா. வீட்ல சம்மதிக்கலை சோ அப்படியே தனியாக இருந்துட்டாங்க. அவங்க அம்மா ரொம்ப பிரண்ட்லி டைப் ரிது. சுரேஷ்க்கு எல்லாமே அவங்க தான். இங்கேயே அவனுக்கு பிசினஸ் எல்லாம் இருக்கு. காலேஜ் முடிஞ்சதும் இந்த வீட்ல தனியா இருக்க புடிக்காம பாஃரின் போய்ட்டான். இப்ப கூட விக்ரம் மேரேஜ்காக தான் வந்துருக்கான் போல" என கூறினான்.


"விக்ரம் அண்ணா மேரேஜ்காக தான் சுரேஷ் வந்துருக்காங்கனு அவங்களே உங்ககிட்ட சொன்னாங்களா?".


"சொல்லலை தான். ஆனால் எவ்வளவோ டைம் நாங்க கூப்பிட்டும் வராதவன் இப்போது வந்திருக்கான்னா அதுக்காக தானே இருக்கும்" என அவன் கூற,


"ஏன் சுரேஷ் அண்ணா தன்னோட மேரேஜ்காக கூட வந்திருக்கலாம்ல" என்றாள்.


"என்ன சொல்ற ரிது?" என்றவன் யோசிக்க ஆரம்பித்தான்.


'இவள் தெரிஞ்சு பேசறாளா? தெரியாம பேசறாளா? ஒருவேளை ஜோதி இவகிட்ட சொலிருக்குமோ' என பலவாறு குழம்பினான்.


அவள் ஏதும் சொல்லாமல் தோள் சிறு குலுக்கலுடன் கீழே சென்று விட்டாள்.


சுரேஷ் கொடுத்த காபியை வாங்கி கொண்டவள், "தேங்க்ஸ் அண்ணா" என்று விட்டு,


"நீங்கள் கண்டிப்பா திரும்பவும் ஆன்சைட் போயே ஆகணுமா? இங்கேயே இருக்கலாமே எங்களோட?" என்றாள்.


'இதை நாம கேட்காம விட்டுட்டோமே' என்று வருந்தினான் ஆனந்த். (நீ எதை தான் டா கேட்ருக்க?)


"நான் திரும்பவும் அங்கே போறேன்னு யார் சொன்னா?" என அவன் சிரிப்புடன் கூற,


"சோ பிளான்னோட தான் வந்திருக்கிங்க போல" என விளையாட்டு போலவே அழுத்தமாக கேட்டாள்.


"சோ ஹாப்பி டா மச்சி" என அவனை அணைத்து கொண்டான் ஆனந்த்.


"அப்பாவோட பிசினஸ் பாத்துக்கலாம்னு நினைக்கிறேன் டா" என கூறியவனை சந்தோசத்துடன் பார்த்தனர் இருவரும்.


சிறிது நிமிடங்கள் பேசிவிட்டு இருவரும் கிளம்பினர்.


இருவரும் உள்ளே ஒன்றாக வருவதை பார்த்த சுகன்யா மனம் குளிர்ந்தது.
வேறு எந்த கோபமும் பிடிவாதமும் இப்போது அவரிடம் இல்லை.


ரிது அவர்கள் அறைக்கு சென்றுவிட, ஆனந்த் "ஹாய் அம்மா" என்று கூறி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து அவர் மடியில் தலை சாய்த்து கொண்டான்.


அவன் முகத்தில் இருந்த குதூகலம் அவரையும் தொற்றி கொண்டது.


ஆனாலும் அவன் இன்னும் விளக்கம் தரவில்லையே! கோபம் இல்லை தான் ஆனாலும் வேண்டுமென்றே அந்த கேள்வியை கேட்டார்.


அன்பு தொடரும்..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom