• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 21

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 21


பெண்கள் மூவரும் ஷாப்பிங் செல்வதாக கிளம்பிச் செல்ல ஆனந்த் செல்லும் மனைவியையே பார்த்து கொண்டிருந்தான்.


அவள் தலை மறைந்ததும் இவன் திரும்ப சுரேஷ் விக்ரம் இருவரும் இவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.


அவர்களை பார்த்து முறைக்க முயன்றவன் முடியாமல் சிரித்தான்.


பின் “ஏன்டா உங்களுக்கு என் நிலைமை அவ்வளவு சிரிப்பா இருக்கா?” என ஆனந்த் கேட்க,


"யூ ஆர் கிரேட் டா ஆனந்த் ” என தட்டி கொடுத்தான் விக்ரம்.


தட்டி கொடுத்தவன் கையை தட்டி விட்டவன், "டேய் சிரிக்காம ஏதாச்சும் உருப்படியா ஐடியா குடுங்க டா. சத்தியமா என்னால முடியல. ஒருநாள் தெரியாம குடிச்சுட்டேன்! இல்ல மோந்து பார்த்துட்டேன்! அதுக்காக ரூம் பக்கமே வராம அம்மா ரூம்லே சுத்திட்டு இருக்கா டா"


அதற்கும் சிரித்தவர்களை முறைத்தான்.


"டேய் சும்மா முறைக்காத டா. நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன். இரு யோசிக்கலாம்" என்றான் விக்ரம்.


அப்போது சுரேஷ் மொபைலில் அதே பாடல் ரிங்டோன்,


எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே...



சுரேஷ் மொபைல் அலற, அவன் இருவரையும் பார்த்தான்.


"ஏன்டா எங்க மூஞ்சிய பாக்குற. அட்டென்ட் பண்ணு இல்லை கட் பண்ணு" என விக்ரம் சொல்ல,


"டூ மினிட்ஸ் டா" என சிறிது தள்ளி சென்றான் சுரேஷ்.


இதை விக்ரமிடம் சொல்லலாமா வேண்டாமா என ஆனந்த் யோசிக்க, பேசிக்கொண்டே நடந்தனர் இருவரும்.


விக்ரம் "என்ன யோசனை" என கேட்க,
"போன்" என கூறி ஆனந்த் சொல்லவா வேண்டாமா என யோசிக்க, "என்ன போன் டா" என்றதும், "இல்லை டா போன்ல" என இழுத்தான் ஆனந்த்.


"என்ன டா போன்ல? " என மீண்டும் விக்ரம் கேட்க,


"இல்ல ஜோ..னு போன்ல" என மீண்டும் இழுத்தான்.


இவன் சொல்ற மாதிரி இல்லை ஏன நினைத்தவன், " போன்ல ஜோதியா" என விக்ரம் கேட்க.


"ஹ்ம்ம் ஆமாம் டா" யோசித்து கொண்டே கூறியவன் ஒரு நொடி விட்டு "டேய்ய்" என அதிர்ந்தான்.


அவனை சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் விக்ரம். "உனக்கு தெரியுமா" என்றான் ஆனந்த்.


"ஹ்ம்ம் ஏன் தெரியாம!. பட் இதுங்க வேஸ்ட் டா. எனக்கு தெரிஞ்சு ஒரு வருஷமா போனை தான் கட்டிட்டு இருக்குங்க. அவன் U. S லேர்ந்து வந்தாச்சும் ரெண்டும் மாறும் ஏதாச்சும் சொல்லும்னு பார்த்தால் அவன் என்னடான்னா நம்ம கூடவே சுத்துறான். இவ என்னடான்னா காலேஜ் கரெக்ட் டைம் போய்ட்டு கரெக்ட் டைம் வந்துடுறா. போன்லயே வாழ்ந்துடுவாங்க போல?" என அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க, "ஆ"வென வாயை பிளந்து கேட்டு கொண்டிருந்தான் ஆனந்த்.


"உனக்கு கோபம் இல்லையா டா"


"இப்படிபட்ட மச்சான்ஸ் என்னோட தங்கச்சிங்களுக்கு கிடைச்சிருக்கும் போது நான் ஏன்டா கோபப்படனும்"


மயக்கம் வராத குறை தான் ஆனந்த்திற்கு.


"சீரியஸ்லி உன்னை என்ன சொல்றதுன்னே தெரியல டா" எனக் கட்டிக் கொண்டான் ஆனந்த்.


கூடவே இவனுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இல்லையே என நினைத்து கொண்டான்.


அவனை விலக்கிய விக்ரம் சீரியஸ் முகத்துடன் ஏதோ கூற வர என்ன என கேட்டான் ஆனந்த்.


"ஆனால் மச்சி இவன்கிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும் டா. இவனும் அவகூட இருக்க மாட்டான். நம்மளையும் நம்ம பொண்டாட்டிங்க கூட இருக்க விட மாட்டான். சோ பீ கேர்புல்" என சொல்லவும் அவன் தலையில் தட்டி சிரித்தான் ஆனந்த்.


"சரி நான் லாவியை பார்த்திட்டு வரேன். நீயும் கிளம்பு. அவன் கூட சேராத அப்புறம் நீ ரிது கூட சேர்றது கஷ்டம்" என சிரித்து கொண்டே விக்ரம் கிளம்பவும் சுரேஷ் வந்தான். நண்பர்களை நினைத்து பெருமை கொண்டான் ஆனந்த்.


ஆனந்த் ரிதுவிடம் எப்படி செல்வது என யோசித்து கொண்டிருக்க, சுரேஷ் "மச்சி நான் கொஞ்சம் சீடி வாங்கணும். போய்ட்டு வரவா" என கேட்டான்.


'அடப்பாவி இப்ப தானே டா உங்கள பெருமையா நினச்சு பார்த்தேன். அதுக்குள்ள இப்படி கட் பண்ணி விடுறிங்களே' என நினைத்தவன் சிரிப்புடன் சரி என தலை அசைத்து நகர்ந்தான்.


அவனும் ரிதுவை தேடி சென்றான். "எங்கே போனாள்" என தேடிக் கொண்டிருக்க அவள் ஒரு துணிக் கடையில் நின்றாள்.


அவளுடன் யாரும் இல்லை என்றதும் அவள் அருகில் சென்று நின்றான்.


"உனக்கு பிசிபெளாபாத் புடிக்காதே ஏன் சாப்பிட்ட?" என ஆனந்த் கேட்க, அவன் அருகில் இருப்பதை உணர்ந்தாலும் திரும்பாமல் இருந்தவள் அவன் கேள்வியில் திரும்பி அவன் முகத்தை பார்த்தாள்.


"உனக்கு எப்படி தெரியும்" என்ற கேள்வியை அவள் முகத்தில் படித்தவன்,


"அது ஆபீஸ்ல் நீ தான் அன்னைக்கு சாப்பிடும் போது யாரோ கேட்டதுக்கு சொன்ன" என்றதும் பதில் சொல்லாமல் திரும்பி கொண்டாள்.


அவள் மனதில் கோபம் இல்லை. வருத்தமும் ஆதங்கமும் இருந்தது. போதாகுறைக்கு அவனுக்கு பிடிக்காமல் இந்த திருமணம் நடந்ததாக நினைத்து கொண்டவள் அவனை விட்டு பிரிய வேண்டும் என்பதை மட்டுமே மண்டையில் ஏற்றினாள்.


தான் அவனை விரும்புவதாக அன்று கோபத்தில் உண்மையை உளறி கொட்டியது வேறு அவளைப்படுத்தியது. தன்னை பிடிக்காதவனிடம் போய் இப்படி சொல்லி விட்டோமே என்று.


அவன் எவ்வளவோ பேச முயற்சிக்க ரிது வாய் திறந்தாள் இல்லை. அதிலேயே அவனுக்கு பயம் ஆனது. தன்னை விட்டு செல்ல முடிவு செய்து விட்டாளா என்று.


'ஆனாலும் என்ன நடந்தாலும் உன்னுடன் தான் இருப்பேன்' என்று கருமமே கண்ணாக அவள் தேர்வு செய்யும் உடைகளை பார்த்து கொண்டிருந்தான்.


அவளிடம் முக்கியமாக ஒன்று பேச வேண்டியிருந்தது. ஆனால் அதை சொல்லவும் தைரியம் வேண்டுமே என்றிருந்தது.


யோசித்து கொண்டே அவள் போகும் இடமெல்லாம் போய்க் கொண்டிருந்தான்.


-----------------------


"என்கிட்ட என்ன சொன்னீங்க? இப்ப என்ன செய்யிரிங்க?" என சுரேஷிடம் காய்ந்து கொண்டிருந்தாள் அவனின் ஜோ.


"அடியேய் உனக்கே நல்லாருக்கா! நான் பாட்டுக்கு அவன் கூட போயிருப்பேன்.நீ தானே போன் பண்ணி பாக்கணும் போல இருக்குனு சொன்ன? ".


"நான் சொன்னா பின்னாடியே வந்துடுவீங்களா? ஏதோ.. தோணிச்சு சொன்னேன்" என ஜோ ராகமாய் இழுக்க உருகித் தான் போனான் சுரேஷ்.


பதில் பேசாமல் போகவும் அவன் முகத்தை பார்த்தாள் ஜோதி. அவன் கண்களில் தெரிந்த வித்தியாசம் இவள் கன்னங்களை செம்மையுற செய்தது.


"பேபிமா ரொம்ப கஷ்டம் டி. இதுக்கு தான் நான் உன்ன நேரில் பார்க்கவே பயந்தேன். மனுஷன படுத்துறீயே" என்றான்.


"இப்பவே கல்யாணத்துக்கு பேசிடவா? ஹ்ம்ம் ச்சச்ச வேணாம் காலேஜ் முடிய இன்னும் ஒன் இயர் இருக்கே!" என கேள்வியும் நானே பதிலும் நானே என பேசிக் கொண்டிருந்தான்.


"ஆனந்த் அண்ணா ரிது பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க? " என அவள் பேச்சை மாற்ற,


'ஹ்ம்ம் அதானே பார்த்தேன் முன்ஜாக்கிரதை முத்தம்மா' என மனதில் கொஞ்சிக் கொண்டவன்,


"இன்னும் எதும் டிஸைட் பண்ணல பேபி. எப்பவும் உன்கிட்ட கேட்டு தானே செய்வேன். இது கொஞ்சம் கிரிட்டிகல் கூட. பர்ஸ்ட் ரிது என்ன நினைக்கிறாங்க தெரிஞ்சிக்கலாம். அப்புறம் பிளான் பண்ணலாம்" என கூற அவளும் ஆமோதித்தாள்.


அவன் ஏதோ பேச தயங்க, என்ன என புருவம் உயர்த்தி கேட்டாள் அவள். அவன் U.S சென்ற பின் தினமும் மொபைலில் பேசிக் கொண்டாலும் இப்போது விக்ரம் திருமணத்தில் தான் அவளை நேரில் பார்த்தான்.


சின்ன பெண், சின்ன பெண் என அவன் நினைத்திருந்தவன் லெஹன்காவில் வளைய வந்தவளை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை.


தனியே பேசும் சந்தர்ப்பதில் கூட அன்று பயந்து பயந்து பேசி சென்று விட்டாள்.


இன்றுதான் நேரில் இவ்வளவு தூரம் சாதாரணமாக பேசியது. இந்த நாளை மறக்க முடியாத நாளாகவே கருதினான்.


"ஜோ தப்பா நினைச்சுக்க மாட்டியே" என கேட்க, அவன் இத்தனை பேர் இருக்கும் இடத்தில் என்ன கேட்க போகிறான் என அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.


அவள் முழித்த விதமே அவளின் எண்ணவோட்டத்தை கூற, அவளருகில் வந்தவன் "குட்டி மூளைல ரொம்ப யோசிக்கிற பேபி" என்றவன்,


"நாம ரெண்டு பேரும் செல்ஃபீ எடுத்துக்கலாமா? அது பார்த்தே கல்யாணம் வரைக்கும் சமாளிச்சிடுவேன்" என்றான்.


அவனிடம் எப்போதும் அன்பான பேச்சு மட்டுமே இருக்கும் அவளுக்கு. அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றினால் கூட அந்த நேரத்தில் அவளிடம் பேசுவதை தவிர்த்து விடுவான். அவன் ஏக்கம் அவளுக்கு புரியாமல் இருக்குமா என்ன!


இப்போதும் அவன் மனநிலை புரிந்தது. தனக்காக காத்துக் கொண்டிருப்பவன் அன்பில் நெகிழ்ந்தவள் அவன் அருகே வந்து நிற்க, அந்த சிறு உரசல் உயிர் வரை சிலிர்த்தது.


இதுகூட காதலில் சுகம் தானே!. அவள் அருகே நின்று கொண்டு அவன் மொபைலை பார்த்து புன்னகைக்க, ஜோ அவனை பார்த்து புன்னகைக்க, அவர்களின் அந்த முதல் புகைப்படம் காலம் முழுதும் ரசித்து பார்க்கும் படி இருந்தது.


----------------------------


"லாவி நிஜமா நீ டாக்டர் தானா? " என விக்ரம் கேட்க,


"இல்லை கம்பௌண்ட்டர்" என அவளும் விடாமல் கூறினாள்.


"அதானே பார்த்தேன். நினச்சேன்! நீ டூர் போற மாதிரி எல்லாரையும் கூட்டிட்டு வரும்போதே நினச்சேன்" என அவன் புலம்ப, அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் லாவண்யா.


"பின்ன என்ன லாவி! உனக்காக லீவ் போட்டு வந்தா நீ எல்லாரையும் கூட்டிட்டு தான் போவேன்னு நிக்குற. என்னை பார்த்தால் பாவமா இல்லை" என அவன் அவளிடம் குதிக்க,


"அதான் இப்போ நீங்கள் நான் மட்டும் தானே இருக்கோம்! அப்புறம் என்ன உங்களுக்கு? வீட்ல வயசு பொண்ண வச்சுக்கிட்டு நீங்களும் நானும் சுத்திட்டு இருந்தா அத்தை நம்ம பத்தி என்ன நினைப்பாங்க" என கூற அப்புறம் விக்ரம் நிலைமை சொல்லவா வேண்டும். "சிப்" போட்டு வாயை மூடிக் கொண்டான்.


அடுத்து மிகத் தீவிரமாக விக்ரம் கேட்ட கேள்வியில் "லூசா மாமா நீ!" என சிறிதும் யோசிக்காமல் கத்தியே விட்டாள் லாவண்யா.


அன்பு தொடரும்....
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom