• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,866

Profile posts Latest activity Postings About

  • மெய் நிகரா பூங்கொடியே - 12

    “இப்ப சொல்லுங்கப்பா... சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீசோட ஷேர்ஸ் பத்தி பேசலாமா?”
    நர்மதாவுக்குச் சிரிப்பு வந்தது. விடாக்கண்டனான மகனுக்கும் கொடாக்கண்டனான கணவருக்கும் இடையே நடைபெறப்போகும் வாக்குவாதங்களை காணும் பொறுமை அவருக்கு இல்லை.
    “நீங்க பேசிட்டிருங்க... எனக்கு டயர்டா இருக்கு” என அங்கிருந்து ஜகா வாங்கினார் அவர்.
    அவர் சென்றதும் தந்தையும் மகனும் பேச ஆரம்பித்தார்கள்.
    “நீங்க என் கிட்ட ஷேர்ஸை ஒப்படைக்கலைனாலும் நயனிய கன்சிடர் பண்ணுங்க... சந்தீப் ஷேர்ஹோல்டரா இருக்க கூட எலிஜிபிளிட்டி இல்லாதவனா ஆகிட்டான்”
    “உனக்கு ஏன் அவன் மேல இவ்ளோ கோவம் கிரிஷ்?”
    ஆனந்த்சாகருக்குக் கடந்த நான்காண்டுகளாக இருக்கும் சந்தேகத்தைக் கேட்டேவிட்டார்.
    கிருஷ்ணராஜசாகர் கோணலாகச் சிரித்தவன் “அவன் மேல எனக்கு என்ன கோவம் டாட்? சொந்தமா யோசிக்காம யாரோ ஆட்டிவைக்கிறதுக்கு ஆடுறவன் மேல எனக்குப் பரிதாபம் தான் வருது... அவனை ஆட்டிவைக்கிறவ நிஹாரிகா... யூ.எஸ்கு அவங்க ட்ரீட்மெண்டுக்காக போகலப்பா” என்றான்.
    ஆனந்த்சாகர் அதிர்ந்து போனார். சற்று முன்னர் கூறியிருந்தால் நம்பியிருக்கமாட்டார். பேரனைக் கண்ணில் கண்ட மகிழ்ச்சியில் இருப்பவருக்கு மூத்தமகனின் வார்த்தைகள் மீது நம்பிக்கை பிறந்தது.
    “எப்பிடி சொல்லுற கிரிஷ்? உன் கிட்ட சந்தீப் பேசுனானா?” என வினவினார்.
    “அவன் கிட்ட தேவையில்லாம பேசலப்பா... நயனிய பாக்குறதுக்காக அவனும் அவன் ஒய்பும் அவளோட வீட்டுக்குப் போனப்ப அந்தப் பொண்ணு லூஸ் டாக் விட்டுட்டா... அதை நயனி எனக்குக் கால் பண்ணி சொன்னா”
    “என்ன சொன்னா நிஹாரிகா?”
    “சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்கு சந்தீப்பை ராஜா ஆக்குறதுக்கு அவ போராடுறாளாம்... அதுக்குத் தான் யூ.எஸ் வந்தோம்னு பேச்சுவாக்குல உளறிட்டானு நயனி சொல்லுறாப்பா... நீங்க என்னை நம்பலைனா பரவால்ல, நயனிய நம்புவிங்க தானே?”
    ஆனந்த்சாகர் நெற்றியின் தசைகள் சுருங்க புருவங்கள் சுழிக்க யோசனையில் ஆழ்வதைப் பார்த்துவிட்டு கொளுத்திப்போட்ட விவகாரம் மெதுவாக பற்றி எரியப்போகிறது என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர். உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் போதும் காரியம் சாதிக்க நினைக்கும் போது மட்டும் ‘டாட்’ இல்லாமல் ‘அப்பா’ என்பான் அவன்.
    யோசிக்கட்டும்! யோசித்து சாகர் குழுமத்திற்கு தலைமை தாங்க ஏற்றவன் யாரென முடிவெடுக்கட்டும்! எப்படியும் தனக்குச் சாதகமாகத் தான் அவர் முடிவெடுக்கவேண்டும்!
    இறுமாப்பும் கர்வமுமாக எண்ணிக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-12.5148/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 11
    “எப்படியாச்சும் சம்மதிக்க வை இப்ராஹிம்... இன்னைக்கு ஈவ்னிங் வரைக்கும் டைம் இருக்கு”
    பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு பின்னர் அமைதி காக்க முடியாமல் வாய் விட்டு கேட்டார் நர்மதா.
    “எதுக்காக ரெஸ்ட்லெஸ்சா இருக்க கிரிஷ்?”
    கிருஷ்ணராஜசாகர் அன்னையைப் பார்த்த பார்வையில் நம்பிக்கை இல்லை.
    “முடிஞ்சதும் சொல்லுறேன்மா”
    “அப்ப ஏதோ தப்பு செய்யுற”
    நெற்றியைத் தடவிக்கொண்டான் அவன்.
    “ஐ அம் நாட் அ கிட்... சரி எது தப்பு எதுனு எனக்குத் தெரியும்”
    “யூ ஆர் ரைட்... நவ் யூ ஆர் தி ஃபாதர் ஆப் அ கிட்... ஆனா இப்பவும் உன் குணத்துல எந்த சேஞ்சும் இல்ல... சரி எது தப்பு எதுனு நீ யோசிக்க மாட்ட... உனக்கு எது சரி எது தப்புனு மட்டும் தான் யோசிப்ப”
    “நான் ஏன் மாறணும்னு நினைக்கிறிங்கம்மா? சீரியஸ்லி, மாற வேண்டிய அளவுக்கு நான் ஒன்னும் வில்லன் இல்ல”
    நர்மதாவுக்கு அயர்வாக இருந்தது. அது என்னவோ உண்மை. அவரது மகன் ஒன்றும் கொடுமைகள் செய்யும் அரக்கன் இல்லை. ஆனால் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி காரியம் சாதிக்கவல்லவன். அவனை எந்த விதத்தில் சேர்ப்பது என்பது இந்நாள் வரை நர்மதாவுக்கு விடை தெரியாத கேள்வி.
    நினைத்தது நடக்கவேண்டுமென்பதற்காக தார்மீக அன்பைக் கூட கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்படுவது நல்ல மனிதனுக்கு அழகல்லவே. இதை எடுத்துக் கூறினால் நான் நல்லவன் அல்ல என்பான்.
    இப்போது என்ன அனர்த்தம் செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. தாய்மணம் பதறுவது மைந்தனுக்காக இல்லை, ஒருகாலத்தில் மருமகளாக இருந்தவளுக்காக.
    அம்ரித்தைத் தன்னோடு அழைத்துச் செல்லும் முடிவில் இருப்பவன் இப்ராஹிமை எதற்காகவோ அனுப்பி வைத்துவிட்டு அலைப்புறுதலோடு உலாவுவதே அதற்கு சாட்சி.
    பெருமூச்சுவிட்டவர் “உனக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு எனக்கு அறிவு இல்ல கிரிஷ்... பட் உன்னால இன்னொரு தடவை நித்திலா கஷ்டப்படக்கூடாது” என கறாராக முடித்தார்.
    கிருஷ்ணராஜசாகர் அன்னையின் கண்டிப்பு தொனியில் அலைக்கழிப்பு அகன்று புன்னகைத்தான்.
    “அவ மேல இவ்ளோ பாசம் இருக்குல்ல... ஏன் நேர்ல மீட் பண்ண யோசிக்கிறிங்க?”
    “எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு அவளை நான் மீட் பண்ணுவேன்? அவ பெத்தப்பிள்ளைய பிடுங்கலாம்னு காத்திக்கிட்டிருக்கிறவனோட அம்மா நான்... இது தான் நீ மகனை வளர்த்த லெட்சணமானு அவ கேட்டா என் முகத்தை எங்க கொண்டு போய் வச்சுக்கிறது?”
    காட்டமாகக் கேட்டார் நர்மதா.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-11.5144/
    மெய் நிகரா பூங்கொடியே - 10

    “இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ளைட்ல நானும் அம்மாவும் சென்னைக்குக் கிளம்புறோம்... அதான் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்”
    நித்திலா எவ்வளவோ மறைக்க முயன்றும் அவளது வதனத்தில் நிம்மதியான சிரிப்பு மலர்ந்தது. கிருஷ்ணராஜசாகர் அதை கண்டுகொண்டான்.
    அலட்சியபாவனை ஒன்று அவனது உடல்மொழியில் தெரிந்தது.
    “ரொம்ப சந்தோசப்பட்டுக்காத... ஐ வில் பி பேக்... அப்பிடி திரும்பி வர்றப்ப நான் அம்ருவ என் கூட அழைச்சிட்டுப் போயிடுவேன்... நீயே அவனை என் கூட அனுப்பி வைப்ப”
    அவனது அலட்சியத்தில் அவள் எரிச்சலுற்ற போது “நித்தி” என்றபடி வந்து சேர்ந்தான் விக்ரம். அவனோடு வந்த அம்ரித் கிருஷ்ணராஜசாகரைப் பார்த்ததும் “டாடி” என உற்சாகக்கூவலோடு அவனை இடையோடு கட்டிக்கொண்டான். கைகளில் அவன் வாங்கிக்கொடுத்த டேப் இருந்தது.
    கிருஷ்ணராஜசாகர் மகனின் சிகையை வருடி நெற்றியில் முத்தமிட்டபோதே நித்திலா விக்ரமிடம் கண்களால் சைகை காட்டியதை கவனித்தான்.
    விக்ரமின் கையில் மருத்துவமனையின் கோப்பு ஒன்று இருந்தது. நித்திலா செய்த சைகையை அவன் கவனிக்கவில்லை.
    ‘கெட்வெல் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிட்டல்’
    “இன்னும் பயாப்சி ரிப்போர்ட் வரல நித்தி” என்றான் அவன்.
    பயாப்சி என்றதும் கிருஷ்ணராஜசாகரின் புருவம் சுழித்துக்கொள்ள நித்திலாவோ அவனுக்கு எதுவும் தெரிந்துவிடக்கூடாதே என பரிதவிப்போடு விக்ரமின் கையைப் பற்றினாள்.
    “அங்க போய் பேசலாம்”
    அவனைத் தன்னோடு இழுத்துச்சென்றவளைக் காணும் போது கிருஷ்ணராஜசாகர் அசவுகரியமாக உணர்ந்தான்.
    மெதுவாக மைந்தனிடம் எங்கே போனீர்கள் என விசாரிக்க ஆரம்பித்தான்.
    “விக்கி அங்கிள் டாக்டர் அங்கிளைப் பாக்க போனாங்க... நானும் கூடப்போனேன்”
    “எதுக்கு டாக்டர் அங்கிளைப் பாக்க போனிங்க?”
    “நித்திம்மாக்கு லெக் பெய்ன்... அதுக்கு டாக்டர் அங்கிள் தானே மருந்து குடுப்பாங்க”
    கால்வலி என்றதுமே கிருஷ்ணராஜசாகருக்கு எதுவோ புரிந்தது.
    ஒருவேளை மீண்டும் நித்திலாவுக்கு?
    சேச்சே! அப்படி எல்லாம் இருக்காது என்றது மனம்.
    ஒருவேளை அப்படி இருந்தால் உனக்கு நல்லது தானே? குயுக்தியாய் கூறியது மூளை.
    கூடவே ஆனந்த்சாகரின் ஒதுக்கம், நிஹாரிகாவின் இரகசியத்திட்டம், சாகர் குழுமத்தின் எதிர்காலம் என அடுத்தடுத்து காரணங்களை அடுக்கியது அந்தப் பொல்லாத மூளை.
    முடிவில் கோணல் சிரிப்பை உதிர்த்தவன் மைந்தனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
    “டாடி இன்னைக்கு ஈவ்னிங் சென்னைக்குக் கிளம்புறேன் குட்டி”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-10.5139/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 9

    “சூப்பரா இருக்கு டாடி... நீங்களும் இங்கயே இருங்க ப்ளீஸ்”
    “இல்லடா குட்டி... அப்பாக்கு நிறைய வேலை இருக்கு”
    என்ன வேலை? என்னை குழி தோண்டி புதைக்க ஏதாவது யோசிக்கும் வேலையாக இருக்குமென குதர்க்கமாக கறுவிக்கொண்டாள் நித்திலா.
    “குட் பாயா விளையாடு... டாடி கிளம்புறேன்... உங்கம்மா கிட்ட சொல்லிடு... இப்ப டாடிக்கு உம்மா குடு பாப்போம்”
    அம்ரித் முத்தமிட்டிருப்பான் போல.
    “ஹவ் ஸ்வீட் யூ ஆர்”
    கிருஷ்ணராஜசாகர் மைந்தனைக் கொஞ்சியது நித்திலாவுக்குக் கேட்டது.
    இவனுக்குக் கொஞ்சக்கூட தெரியுமா? ஆச்சரியக்கேள்வி ஒன்று எழுந்தது அவளுக்குள். அவனோடு வாழ்ந்த நாட்களில் ஒருமுறை கூட இப்படியெல்லாம் அவளை கிருஷ்ணராஜசாகர் கொஞ்சியதில்லை. கிண்டலும் கேலியுமாக தானே அவர்களின் உறவு கடந்து போனது.
    “பை டாடி”
    ஷூ கால்களின் தட் தட் சத்தம் வெளியே செல்வது கேட்டது. நித்திலா மெதுவாக கதவைத் திறந்தாள். ப்ளேஸ்டேசனில் விளையாடும் மும்முரத்தில் அம்ரித் அவளை மறந்துவிட்டான்.
    நித்திலாவின் தாய்மனதினால் அதை தாங்க முடியவில்லை. அவனருகே சென்று அமர்ந்தவள் “அம்ரு சாப்பிடுறியா?” என்று கேட்கவும் கேமிங் கண்ட்ரோலரை வைத்துவிட்டு அன்னையை அணைத்துக்கொண்டான்.
    “டாடி எனக்குனு எவ்ளோ வாங்கிக் குடுத்திருக்காங்க பாருங்க” என பெருமிதமாக அனைத்தையும் காட்டினான்.
    “நல்லா இருக்குடா... இப்ப விளையாடுனது போதும்... சாப்பிட்டுட்டு தூங்கணும்ல”
    “சரி நித்திம்மா”
    ஒரேயடியாக கிருஷ்ணராஜசாகரின் மந்திரத்தில் மகன் மயங்கிவிடவில்லை என்ற நிம்மதியோடு அனைத்தையும் ஆப் செய்தவள் தான் வாங்கிய க்ளைடர் ஸ்கூட்டரை அவனிடம் காட்டினாள்.
    ப்ளேஸ்டேசனை பார்த்த போது உண்டான அதே சந்தோசம் இப்போதும் அம்ரித்தின் முகத்தில் தோன்றியது.
    “எனக்குப் பிடிச்ச பேபி பிங் கலர்”
    க்ளைடர் ஸ்கூட்டரை வாங்கிக்கொண்டான் அம்ரித். ஹெல்மெட்டை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அதை ஓட்டி விளையாட ஆரம்பித்தான்.
    குழந்தைகளுக்கு விலைச்சீட்டு பற்றியெல்லாம் அக்கறை கிடையாது என்பதை அப்போது புரிந்துகொண்டாள் நித்திலா.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-9.5130/
    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே - 8
    “அம்ரு குட்டிக்கு ப்ளேஸ்டேசன் வேணுமா?”
    அவன் கேட்டதும் அம்ரித்தின் கண்கள் ஆசையில் விரிந்தன. அடுத்த நொடியே தொய்வும் அடைந்தன.
    “வேண்டாம் டாடி”
    சோகமாக பதிலளித்தான் அவன்.
    “ஏன்டா குட்டி? இப்ப தானே அம்மா வாங்கி தரமாட்டேன்னு சொன்னதா பாட்டி கிட்ட பேசிட்டிருந்த”
    “நித்திம்மா யார் கிட்டவும் எதுவும் கேட்டு வாங்கக்கூடாதுனு சொல்லிருக்காங்க”
    கிருஷ்ணராஜசாகருக்கு எரிச்சல் வந்தாலும் அது நல்ல பழக்கம் தானே என்று சமாதானமடைந்தான்.
    தான் ஒன்றும் யாரோ அல்லவே!
    “மத்தவங்க கிட்ட வாங்கக்கூடாதுடா... நான் உன் டாடி தானே”
    மகனைச் சமாதானம் செய்தவன் ஒருவழியாக ப்ளேஸ்டேசன் வாங்குவதற்கு சம்மதிக்கவும் வைத்தான். கூடவே டேப் ஒன்றும் வாங்கித் தருவதாக கூறினான்.
    “டேப் எனக்கு யூஸ் பண்ண தெரியாதே?”
    கைகளை விரித்து அவன் கூறவும் அவனது முன்னுச்சி சிகையைக் கலைத்துவிட்டான் கிருஷ்ணராஜசாகர்.
    “நான் சொல்லித் தர்றேன்டா குட்டி... அதுல நீ ரோமா டயானா பாக்கலாம்... சரியா?”
    “சரி டாடி... லவ் யூ”
    தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான் அம்ரித். கிருஷ்ணராஜசாகருக்குச் சொல்லவொண்ணா ஆனந்தம். உடனே இப்ராஹிமிடம் சோனி ப்ளேஸ்டேசன், 4K கேமிங் மானிட்டரை வாங்கி நித்திலாவின் வீட்டில் சேர்ப்பித்துவிடும்படி கட்டளையிட்டான்.
    சந்தோசத்தில் அம்ரித்தின் வதனம் பூரிக்க அதில் கிருஷ்ணராஜசாகருக்கு இனம்புரியா சந்தோசம். ஆனால் நர்மதாவுக்கு இது சரியாகப்படவில்லை.
    “நித்திலா கிட்ட கேக்காம இதெல்லாம் வாங்கணுமா கிரிஷ்?”
    “என் பையன் ஆசைப்பட்டதுலாம் அவனுக்குக் கிடைக்கணும்மா... அவனோட அம்மா மாதிரி அப்பா ஒன்னும் மாச சம்பளத்துக்கு வேலை பாக்குறவன் இல்ல... அவளை மாதிரி பட்ஜெட் போட்டு ஒவ்வொரு செலவும் இழுபறியா நிக்கிற நிலமையும் எனக்கு இல்ல... குழந்தை ஆசைப்பட்டதை வாங்கிக் குடுக்க யூஸ் ஆகாத பணம் எதுக்கும்மா?”
    “நித்திலா வாங்கி குடுக்காததுக்கு பணத்தை தவிர வேற காரணம் இருக்காதுனு நீ நம்புறியா?”
    “ஆப்வியஸ்லிமா... அவ வாங்குற சம்பளத்துல என் பிள்ளைக்கு குவாலிட்டியா நாலு ட்ரஸ் கூட வாங்கித் தர முடியாது”
    கர்வத்தோடு எரிச்சலும் கலந்து ஒலித்த கிருஷ்ணராஜசாகரின் குரலில் நர்மதா அயர்ந்து போனார்.
    எதையும் மனதில் வைக்காமல் நியாயவாதியாக நித்திலா அம்ரித்தை அனுப்பி வைத்திருக்கிறாள். அதற்கு நாமும் நியாயம் செய்யவேண்டுமல்லவா? ஆனால் மைந்தன் வழக்கம் போல தந்திரமாக யோசிக்கிறான்.
    அம்ரித் சிறுவன். அவன் ஆசைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் அன்னையை விட ஆசைப்படுவதை எல்லாம் நிறைவேற்றுகிற தந்தையே பெரிது என அவன் நினைத்துவிட்டால்?
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-8.5120/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 7
    ஜாலியா இரு நயனி... இன்னும் எத்தனை வருசம் வாழ்க்கைனு தெரியாம மரணபயத்தோட வாழுறதை விட இப்பிடி பாசிட்டிவா லைஃபை அப்ரோச் பண்ணணும்... அதுக்காக ஃபேமிலி, ப்ரதர்ஸ் எல்லாரையும் விட்டுட்டு இப்பிடி தனியா இருக்கணுமா நயனி? வாழுற வரைக்கும அவங்க கூட சேர்ந்து சந்தோசமா இருக்கலாமே?”
    அவளுக்காக சந்தோசப்படுவது நடித்து சந்தடி சாக்கில் குத்திக் காட்டிய நிஹாரிகாவை ஏளனமாகப் பார்த்தாள் ஸ்ரீநயனி. கொட்டுவது தேளின் இயல்பு என்று தெரிந்த பிறகு அதிர்ச்சியடையவோ கோபப்படவோ என்ன இருக்கிறது!
    மனதில் நஞ்சை வைத்துக்கொண்டு நாவில் தேனைத் தடவி பேசுபவளுக்குப் பதிலடி கொடுக்காவிட்டால் அது தனக்கு இழுக்கு என சிலிர்த்துக்கொண்ட ஸ்ரீநயனி கொடுத்த பதிலடியில் சகோதரர்களையும் இடித்துரைக்க தவறவில்லை.
    “என்ன ஃபேமிலி, என்ன ப்ரதர்ஸ்? ஒருத்தன் பொண்டாட்டிய வச்சு வாழத் தெரியாதவன், இன்னொருத்தன் பொண்டாட்டிதாசன்... இவனுங்க ரெண்டு பேரையும் கன்ட்ரோல் பண்ணாம உங்க இஷ்டத்துக்கு இருங்கடாப்பானு விட்டுட்டு அக்கடானு வேற வேலைய கவனிக்கிற பேரண்ட்ஸ்... எவ்ளோ அற்புதமான குடும்பம்ல? இந்தக் குடும்பத்தோட சேர்ந்து வாழுறதுக்கு நான் தனியா வாழ்றது பெட்டர்”
    வஞ்சப்புகழ்ச்சியணியில் கைதேர்ந்தவள் என நிரூபித்தாள் ஸ்ரீநயனி.
    “நயனி” சந்தீப்பின் குரல் உயர்ந்தது.
    உடனே விருட்டென இருக்கையிலிருந்து எழுந்தாள்.
    “கோவம் வருதா? நியாயப்படி நீ கோவப்பட வேண்டியது உன் பொண்டாட்டி மேல... நான் வாழப்போற நாள் கம்மினு இங்க வந்ததுல இருந்து ரெண்டு தடவை இன்டேரக்டா சொல்லிட்டா இவ... அதை நீ கவனிச்சிருக்க மாட்டல்ல... நீ எப்ப தான் இவளோட ஹிடன் மோட்டிவை புரிஞ்சிக்க போறண்ணா? இவ உன்னை ஒன்னுமில்லாம ஆக்குறதுக்கு முன்னாடி சுதாரிச்சிக்க”
    கூடப்பிறந்த தமையனை எச்சரித்தாள் ஸ்ரீநயனி. சந்தீப்பின் முகம் சோர்ந்துவிட்டது.
    “ஏன் எல்லாரும் இவளைக் குறை சொல்லுறிங்க? சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்துல இருந்து வந்தவங்கிறதுக்காகவா? அன்னைக்கு கிரிஷ் என் ஒய்பை தப்பா பேசுனான்... இன்னைக்கு நீ... உங்களுக்கு இவளைப் பாத்தா பாவமா இல்ல?”
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-7.5111/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 6
    பந்தபாசங்கள் வெற்றிக்குத் தடையென நம்புபவனுக்குத் திடீரென அம்ரித் மீது அளவற்ற அன்பு பொங்குவதற்கு இரத்தச் சொந்தத்தைத் தாண்டி வலுவான காரணம் இருக்கவேண்டுமென அவள் நம்பினாள்.
    ஒருவேளை மாமியார் கண்டித்திருப்பாரோ? வாய்ப்பிருக்கிறது. நர்மதாவுக்குத் தன்னைக் கண்ட போது உண்டான ஆற்றாமையை நித்திலாவும் பார்த்தாளே! அவர் தான் கிருஷ்ணராஜசாகரிடம் அம்ரித் குறித்து பேசியிருக்க வேண்டும்.
    அன்னையும் மகனுமாகச் சேர்ந்து அம்ரித்தைத் தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ? அர்த்தமற்ற பயம் தோன்றிய அடுத்த நொடியே மறைந்தும் போனது.
    நித்திலாவைப் பற்றி நன்கு அறிந்தவர் நர்மதா. கிருஷ்ணராஜசாகரிடம் நித்திலா மறைத்த இரகசியங்கள் கூட நர்மதாவுக்குத் தெரியும். அப்படி இருக்கையில் கட்டாயம் தன்னையும் அம்ரித்தையும் அவர் பிரிக்க நினைத்திருக்க மாட்டார்.
    அப்படி என்றால் கிருஷ்ணராஜசாகரின் பிடிவாதத்திற்கு என்ன தான் காரணம்? தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது நித்திலாவிற்கு.
    இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் தனக்குப் பைத்தியம் பிடிப்பது நிச்சயமென கிருஷ்ணராஜசாகரைப் பற்றிய சிந்தனைகளை ஓரங்கட்டிவிட்டு உறங்குவதற்காக அவளது அறைக்குள் போக கதவைத் திறந்தவள் கிசுகிசுப்பான குரலில் அம்ரித் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை கேட்டாள்.
    “அப்ப நிஜமாவே அவர் என்னோட டாடியா?”
    விக்ரமிடம் பேசிக்கொண்டிருப்பான் போல என்றெண்ணி உள்ளே வந்தவளைப் பார்த்ததும் டெலிபோன் ரிசீவரை படக்கென வைத்தான் அம்ரித்.
    நித்திலா ஆச்சரியத்துடன் மைந்தனை பார்த்தவாறு படுக்கையை ஒழுங்குப்படுத்தினாள்.
    “விக்கி அங்கிள் கிட்ட தானே பேசுன? ஏன் நான் வந்ததும் போனை வச்சிட்ட?”
    “அது… அங்கிள் என்னோட டாடிய பத்தி சொன்னாரா, உங்களுக்குப் பிடிக்காதுனு போனை வைச்சிட்டேன் நித்திம்மா”
    “உன்னோட டாடியா?”
    நித்திலா கேள்வியாக நோக்கியதும் தலையைக் குனிந்துகொண்டே ஆமென்பது போல ஆட்டினான் அவன்.
    “ஏன் அம்மாக்குத் தெரியாம அங்கிளுக்குக் கால் பண்ணுன?”
    “உனக்கு டாடிய பிடிக்காதுல்ல நித்திம்மா”
    தயக்கத்துடன் அவன் இழுக்கவும் நித்திலாவுக்குத் திக்கென்றது. மூன்று வயதில் உன் மகன் திருத்தமாகப் பேசுகிறானே என மற்றவர்கள் புகழும்போது வந்த கர்வமெல்லாம் இப்போது அவன் தயங்கி நிற்கையில் மொத்தமாக வடிந்து போனது.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-6.5096/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 5

    “என் கிட்ட இருந்து அம்ருவை பிரிக்க பாத்திங்கனா நான் மனுசியா இருக்கமாட்டேன் சாகர்”

    மெல்லிய எரிச்சல் தீவிரமாகி “லுக்! உன்னோட சினிமா டயலாக்ஸை நீயே வச்சுக்க... நான் ஒன்னும் உன்னையும் அவனையும் பிரிக்க வரல... அவனுக்கு நான் யார்னு தெரியணும்... நேத்து நான் தான் அவனோட டாடினு சொன்னதுக்கு நீ சொல்லாம என்னை டாடினு கூப்பிடமாட்டேன்னு சொல்லிட்டு ஓடுனான்... அதான் இன்னைக்கு உன்னை வச்சே அவனுக்கு நான் யார்னு சொல்ல வைக்க வந்திருக்கேன்” என்றான்.

    நித்திலா முடியாதென்பது போல நிற்க விக்ரம் கண்களால் கிளம்புகிறேன் என்றான்.

    போகாதே என கண்களை விரித்து தலையை மறுப்பாக அசைத்தவளின் சைகைமொழியை விக்ரம் கண்டுகொண்டானோ இல்லையோ கிருஷ்ணராஜசாகர் புரிந்துகொண்டான்.

    “நாகரிகமான மனுசன்... அதான் சொல்லிட்டுக் கிளம்புறார்... சிலரை மாதிரி சொல்லாம கொள்ளாம ஓடி மறையுற பழக்கம் அவருக்கு இல்ல போல”

    குற்றம் சாட்டும் குரலில் அவன் கூறவும் நித்திலா கடுப்பானாள்.

    “அடுத்தவங்களைக் குறை சொல்லுறதுக்கு முன்னாடி நம்ம மேல என்ன தப்பிருக்குனு அனலைஸ் பண்ணி பாக்கணும்”

    இருவரும் மாறி மாறி சாடிக்கொள்வதை வேடிக்கை பார்க்க விரும்பாதவனாக விக்ரம் மத்தியஸ்தம் பேச வந்தான்.

    “நித்தி ப்ளீஸ்! அம்ரு உங்க ரெண்டு பேரையும் பாத்துட்டிருக்கான்... சார் நீங்களும் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்”

    “என் பையனுக்கு நான் யார்னு இவ சொல்லட்டும்... அவன் கூட ரெண்டு வார்த்தை பேசிட்டுக் கிளம்பிடுவேன்”

    பிடிவாதமாக நின்றான் கிருஷ்ணராஜசாகர்.

    மெய் நிகரா பூங்கொடியே - 4
    அவனைத் தன்னோடு அழைத்துச் செல்ல மாபெரும் தடையாக நித்திலா இருப்பாள் என்பதில் கிருஷ்ணராஜசாகருக்கு எந்த ஐயமும் இல்லை. அவளைச் சரிகட்டுவது அவ்வளவு எளிதில்லை.
    நான்காண்டுகளுக்கு முன்னர் திருமணத்திற்கு அவளைச் சம்மதிக்க வைக்க ஒரு துருப்புச்சீட்டு இருந்தது. எப்போது அவனது வாழ்க்கையை விட்டு நித்திலா விலகினாளோ அப்போதே அந்த துருப்புச்சீட்டுக்கு மதிப்பளிக்கும் மடமையைத் தூக்கியெறிந்துவிட்டாள்.
    இனி அதனால் பயனில்லை. புதிதாக எதையாவது யோசிக்க வேண்டும். அவன் சிந்தனையில் ஆழ்ந்த போதே பின்னே யாரோ வரும் அரவம் கேட்டது.
    திரும்பிப் பார்த்தவன் வந்தவர் அன்னை என்றதும் அதிருப்தியாய் பார்த்தான்.
    “ஏன் குளிர்ல வர்றிங்கம்மா? கூப்பிட்டிருந்தா நானே உங்க ரூமுக்கு வந்திருப்பேன்”
    கடிந்துகொண்டாலும் அவர் அமர இருக்கையை நகர்த்தினான்.
    நர்மதா சால்வையைச் சரி செய்தபடி அமர்ந்தவர் அம்ரித் விவகாரத்தில் அவனுடைய நிலைபாடு என்னவென வினவினார்.
    “இங்க இருந்து போறப்ப அம்ரித் நம்ம கூட வருவான்”
    “நித்திலா?”
    “மகன் வேணும்னா அவளும் வருவாம்மா... அவளை வெத்தலை பாக்கு வச்சுல்லாம் அழைக்க முடியாது”
    மகனின் குரலில் மண்டிய எரிச்சலால் பதபதைத்தது தாயுள்ளம். இன்னும் மனையாளுக்கு வாழ்க்கையில் இருக்கும் முக்கியத்துவம் இவனுக்குப் புரியவில்லையே என்ற ஆதங்கம்.
    “இது ரொம்ப தப்பான மைண்ட் செட் கிரிஷ்... உனக்கு நான் எப்பிடி முக்கியமோ அதே மாதிரி தான் நித்திலாவுக்கு அவளோட மகன் முக்கியம்”
    “அவன் என்னோட மகன்”
    வேகமாகத் திருத்தினான் அவன்.
    “கபேல அவனைப் பாக்கலனா இப்பிடி ஒரு மகன் இருக்குறது உனக்குத் தெரிஞ்சிருக்குமாப்பா? உரிமையா என் மகன்னு சொல்லுறதுலாம் சரி... அவனைப் பெத்தவளைப் பத்தி நீ யோசிக்கலையே”
    “அதான் சொல்லிட்டேன்ல, அம்ரித் முக்கியம்னா அவ வருவா”
    “நான் குளிர்ல வந்ததுக்கு அவ்ளோ டென்சன் ஆனல்ல, அம்மாக்கு குளிர் ஒத்துக்காதுனதும் உனக்குத் துடிக்குதுல்ல, அதே மாதிரி அம்ரித்துக்கும் அவனோட அம்மா முக்கியம்”
    விடாக்கண்டனாக இருக்கும் மைந்தனின் மனதில் என்ன திட்டம் ஓடுகிறதென புரியாமல் விழித்த நர்மதா அவன் பாணியிலேயே மடக்கினார்.
    “இப்ப என்ன தான் சொல்ல வர்றிங்கம்மா?”
    “அந்தக் குழந்தைக்கு இப்ப வரைக்கும் தாயும் தகப்பனுமா இருக்கிறவளை வேதனைப்படுத்தி தான் அவனை நம்ம கூட அழைச்சிட்டு வரணும்னா அவன் வரவே வேண்டாம்... உன் பாசத்தைப் புரிஞ்சிக்கிட்டு நித்திலா அவளாவே விருப்பப்பட்டு வரணும்... இல்லனா அவங்க இங்கயே சந்தோசமா வாழ்ந்துட்டுப் போகட்டும் கிரிஷ்”
    கிருஷ்ணராஜசாகர் மௌனமாக நின்றான்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-4.5085/
    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே - 3

    “நாலு வருசத்துக்கு முன்னாடி நம்ம ஃபைல் பண்ணுன மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசனை ஜட்ஜ் ரிஜெக்ட் பண்ணிட்டார்... ஏன்னா ஆறு மாசத்துக்கு அப்புறம் வந்த ஹியரிங்குக்கு நீ அப்பியர் ஆகல... சோ, இப்பவும் நீ மிசஸ் கிருஷ்ணராஜசாகர் தான்.. அப்பிடி இருக்கிறப்ப நீ இன்னொருத்தரை எப்பிடி மேரேஜ் பண்ணிக்க முடியும்?”
    மிகவும் இலகுவாக கேட்டபடி நாற்காலியில் சாய்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டான். நித்திலா என்ற ஒருத்தியைக் கண்டுகொள்ளாமல் மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.
    நித்திலா கைகளால் தலையைத் தாங்கியபடி அமர்ந்தாள்.
    அடுத்த திங்களன்று அவளும் விக்ரமும் மணமுடிக்கவிருக்கின்றனர். இந்த நேரத்தில் அவள் இன்னும் திருமதி கிருஷ்ணராஜசாகர் என்கிறான் இவன்.
    என்னை ஏன் இத்தகைய இக்கட்டில் மாட்டிவிட்டு ரசிக்கிறாய் ஆண்டவா?
    மெதுவாக தலையை உயர்த்தியவள் “இத்தனை வருசம் இல்லாம இப்ப இதை என் கண்ணுல காட்டுறதுக்கு என்ன காரணம் சாகர்?” என்று கேட்டாள்.
    மொபைலில் இருந்து கவனத்தை அவள் புறம் திருப்பினான்.
    “நீ இப்பிடி தவிப்பா சாகர்னு சொல்லுறப்ப உள்ளுக்குள்ள என்னமோ உருகுது... இன்னொருத்தன் பொண்டாட்டியா ஆகிட்டனா இந்த உருகல் மறுகலை எல்லாம் ரசிக்க முடியாதுல்ல”
    நித்திலாவுக்குள் சுருசுருவென கோபம் மூண்டது. சீற்றத்துடன் அவனை ஏறிட்டாள்.
    அவனோ உனது கோபமெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை எனும் பாவனையோடு அமர்ந்திருந்தான் சற்று திமிராக.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-3.5076/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom