• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,848

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே Final தளத்தில் பதிவிட்டாச்சு மக்களே. நாளைக்கு ஈவ்னிங் கதை ரிமூவ் செய்யப்படும். படிக்க விரும்புறவங்க இப்பவே படிச்சிடுங்க... நன்றி!
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌸மலர்-30🌞-final.4210/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    பரிதி தீண்டிய பனிமலரே Pre- final

    “சொல்லுமா தக்ஷி... எதுவும் பிரச்சனையா?”

    “பிரச்சனை எதுவுமில்ல அங்கிள்... ருத்ராவோட அத்தை இன்னைக்கு என் கிட்ட மன்னிப்பு கேட்டாங்க”

    “என்ன சொல்லுறதுனு தெரியல தக்ஷி... இந்த நிலமை அவங்களுக்கு வந்திருக்க வேண்டாம்”

    “நான் அதை சொல்லுறதுக்கு கால் பண்ணலை அங்கிள்... அவங்க எந்தளவுக்கு அம்மாவைப் புரிஞ்சிக்காம வெறுத்தாங்களோ அதுக்குக் கொஞ்சம் கூட குறையாம நானும் அம்மாவை வெறுத்திருக்குறேன்... உங்களையும் அவங்களையும் புரிஞ்சிக்காம எவ்ளோ கஷ்டப்படுத்திருக்குறேன்... கடவுள் அவங்க பண்ணுன தப்புக்கு தண்டனை குடுத்துட்டார்... எனக்கும் அவர் சீக்கிரமா குடுப்பார் அங்கிள்.. அதுக்கு முன்னாடி நானும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுடணும்.. என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்”

    “மன்னிப்பு அது இதுனு ஏன்டா பெரிய வார்த்தை பேசுற? எனக்கும் தேவிக்கும் நீ சின்னக்குழந்தை தான்... உன் மேல எப்பவும் எங்களுக்கு வருத்தம் இருந்ததில்ல தக்ஷி... நீ எங்களோட வந்துடுவ, நம்ம நாலு பேரும் ஒரே குடும்பமா வாழலாம்னு நாங்க ஆசைப்பட்டோம்... அது நடக்காத ஏமாற்றம் மட்டும் தான் எனக்குள்ள இருந்துச்சு... இப்ப அந்த ஏமாற்றமும் மறைஞ்சிடுச்சு... நீ எதை பத்தியும் யோசிக்காம ருத்ரா கூட சந்தோசமா இருக்குறதை நான் பாக்கணும்... அடுத்து ஆரோஹி இருக்குறா... உனக்கு ருத்ரா கிடைச்ச மாதிரி அவளுக்கும் பொறுப்பான அன்பான வாழ்க்கைத்துணை கிடைச்சிட்டா வேற என்ன எனக்கு வேணும் சொல்லு”

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-29🌸-pre-final.4202/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 28

    லலிதாவோ முகம் சுளித்தவராக “சம்பந்தி சம்பந்தினு ரொம்ப தாங்காதிங்கண்ணா... இவர் அப்பிடி பொண்ணுக்கு என்ன பண்ணி கிழிச்சிட்டார்? ருத்ரா காதலிச்சதை சாக்கா வச்சு தக்ஷிய ஃப்ரீயா நம்ம குடும்பத்துல கொண்டு வந்து தள்ளிட்டார்... அது மட்டுமா? மருமகனோட காசுல தொழில் நடத்துறார்... மகளோட புகுந்தவீட்டுல கை நனைக்க கூட யோசிக்கிறவங்க மத்தியில இவர் மருமகனோட உழைப்புல வந்த காசை வச்சு தான் வாழ்க்கையே நடத்துறார்... இதுக்கு இவர் அசிங்கப்படணும்” என்று அவமானப்படுத்தும் எண்ணத்தோடு வார்த்தைகளை வாரியிறைத்தார்.

    தக்ஷிண்யா கோபத்தோடு அவரை நெருங்கியவள் “இது தான் உங்களோட லிமிட்... இதை தாண்டி பேசுனா நல்லா இருக்காது” என்று எச்சரித்தாள்.

    கூடவே “கமல் அங்கிள் ஒன்னும் ருத்ராவோட பணத்துல பொட்டிக்கை ஆரம்பிக்கல... ஹைதராபாத்துல பொட்டிக்கை வித்த பணத்தை என் பேர்லயும் ஆரோஹி பேர்லயும் டெபாசிட் பண்ணி வச்சிருந்தார்... அதை முதலா வச்சு தான் பொட்டிக்கை ஆரம்பிச்சார்... அவர் என்னை ஃப்ரீயா இந்த வீட்டுல தள்ளுனதா சொல்லுறிங்க, ஃப்ரீயா வந்ததுக்கு கைமாறா தான் உங்க மருமகனோட ரிசார்ட்ல சம்பளம் வாங்காம நான் வேலை பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் பேச பிடிக்காமல் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

    “நீ இருக்குற வரைக்கும் இந்த வீட்டுல என் மகனும் மருமகளும் நிம்மதியா வாழவே முடியாது லல்லி... முதல்ல ராஜாவோட வாழ்க்கைய கெடுத்த... இப்ப என் மருமகளோட சுயமரியாதைய கேள்விக்குறியாக்கி அவளை வீட்டை விட்டு துரத்த ப்ளான் பண்ணி என் மகனோட வாழ்க்கைய கெடுக்க நினைக்குற... இனிமே என் முகத்துல முழிக்காத”

    லோகநாதன் கடுகடு முகத்தோடு அங்கிருந்து சென்றுவிட ராஜேந்திரன் கமல்நாத்தை குழந்தைகள் மிதிவண்டி ஓட்டும் இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-28🌸.4192/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 27

    ருத்ரதேவ் யோசனையோடு மாற்றுடைக்காக தனது வார்ட்ரோபைத் திறக்கும் போது ஆடி அசைந்து கீழே விழுந்தது ஒரு வஸ்து.
    குனிந்து அதை எடுத்தவன் மென்மையாகப் புன்னகைத்தான். அது தக்ஷிண்யா அவனுக்காக வாங்கி கொடுத்த ட்ரீம் கேட்சர்.

    “கெட்டக்கனவை மட்டுமில்ல, கெட்ட எண்ணங்களையும் எதிர்மறை விசயங்களையும் கூட ட்ரீம் கேட்சர் தடுக்குமாம்... இதை பெட்ரூம்ல தொங்க விட்டா நம்மளை சுத்தி ஒரு பாசிட்டிவ் வைப் வரும் ருத்ரா”

    “இது உங்களுக்கு நல்ல ட்ரீம்சை வர வைக்கும்... அந்த ட்ரீம்ல நான் மட்டும் தான் வரணும்... வேற யாரும் வரக்கூடாது”

    அவள் செல்லமாக மிரட்டியது ஞாபகம் வர புன்னகை மாறாமல் அதை எடுத்துச் சென்றவன் தங்களது அறையிலிருந்த கண்ணாடி ஜன்னல் அருகே அதை தொங்கவிட்டான்.

    அதிலிருக்கும் பாசிமணிகளும் பறவை இறகுகளும் மெதுவாய் அசைவதை பார்த்தபடி நின்று ரசித்துக்கொண்டிருந்தவன் “எப்ப வந்திங்க ருத்ரா?” என்று குரல் கொடுத்தபடி தக்ஷிண்யா வரவும் திரும்பினான்.

    வந்தவள் தான் வாங்கி கொடுத்த ட்ரீம் கேட்சர் தொங்குவதை பார்த்ததும் விழிமலர்ந்தாள்.

    “இதை நீங்க பத்திரமா வச்சிருக்கீங்களா?”

    அவனருகே வந்தவள் அந்த ட்ரீம் கேட்சரை தொடப் போக அடுத்த கணமே தனது கரத்திலிருந்த மருதாணி நினைவுக்கு வரவும் தொடாமல் நின்றுவிட்டாள்.

    “நீ எனக்குக் குடுத்த எதையும் நான் தொலைக்க மாட்டேன்”
    கனிவாய் பதில் வந்தது ருத்ரதேவிடமிருந்து.

    “உங்க லவ் உண்மைக்கும் க்ரேட்... ஆனா நான் தான் இடையில கிறுக்குத்தனம் பண்ணிட்டேன்ல”

    கூறிவிட்டு உதட்டைப் பிதுக்கியவளை முதல் முறை பார்ப்பவனை போல கூர்ந்து நோக்கினான் அவன்.

    பின்னர் ஏதோ தோன்ற அவளை அணைக்க வர “நோ நோ நோ! ஸ்டாப்... என் கையில மருதாணி இருக்கு... அழிஞ்சிடும்” என்றபடி பின்னால் சென்றாள் தக்ஷிண்யா.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-27🌸.4187/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 26

    “சரியான சேடிஷ்ட்”

    அவள் முணுமுணுப்பது ருத்ரதேவின் காதில் விழவும் “எக்ஸ்யூஸ் மீ?” என்றபடி அவளை நோக்கினான் அவன்.

    “நத்திங்”

    “நீ என்னை சேடிஸ்ட்னு சொன்னது எனக்குக் கேட்டுச்சு... என்ன, ஆக்சிடெண்ட் நினைவுகளா?”

    பள்ளத்தாக்கைக் காட்டி அவன் பேசவும் சுருசுருவென கோபம் மூண்டது அவளுக்குள்.

    “அது தான் கேட்டுச்சுல்ல, நீங்க சரியான கல்நெஞ்சக்காரன்... லவ் பண்ணுறேன்னு பக்கம் பக்கமா டயலாக் பேசுவிங்க... சண்டைனு வந்ததும் என்னை விரோதி மாதிரி ட்ரீட் பண்ணுவிங்க... இதுக்கு நீங்க லவ் பண்ணாமலேயே இருந்திருக்கலாம்”

    “பாட் காலிங் த கெட்டில் ப்ளாக்னு ஒரு இங்க்லீஸ் பழமொழி உண்டு... நீயும் ஒரு காலத்துல என்னை லவ் பண்ணுனவ தானே.. யாரோ ஒருத்தருக்காக என்னை வேண்டாம்னு தூக்கிப் போட்டல்ல... இதையே நான் செஞ்சிருந்தா இந்த உலகம் என்னை என்னென்ன பேசிருக்கும்? லவ்ங்கிற பேர்ல ஒரு பொண்ணு கூட சுத்திட்டு ஏமாத்திட்டான்னு அசிங்கமா பேசிருக்கும் தானே... அதையே நீ பண்ணுனா மட்டும் சுயமரியாதைக்காக வாழ்க்கையைவே இழந்த பொண்ணுனு கை தட்டி பாராட்டும்... நீ செஞ்சதுக்கு முன்னாடி நான் செஞ்சது ஒன்னுமே இல்ல... உன் மேல டன் கணக்குல கோவம் இருந்தும் உனக்கு ஆக்சிடெண்ட்னு சொன்னதும் நான் எவ்ளோ பயந்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்... இந்தப் பள்ளத்தாக்குல இருந்து நீ உயிரோட திரும்புவியா இல்லையானு நான் துடிச்சதுலாம் உனக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல... நீ தான் அடிபட்ட மயக்கத்துல இருந்தியே”

    தக்ஷிண்யாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. அமைதியாய் அந்தச் சரிவை வெறிக்க ஆரம்பித்தாள்.

    பின்னர் நிதானமாக “நான் செஞ்ச சில காரியங்களால உங்களுக்குத் தான் என்னைப் பிடிக்காம போயிடுச்சே... அப்புறம் எதுக்கு காப்பாத்துனிங்க?” என்று கேட்டாள்.

    “என்ன பண்ணுறது? காதலிச்சுத் தொலைச்சுட்டேனே... உனக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கு தக்ஷி... என் அத்தை லலிதானு தெரிஞ்சதும் நீ என்னை வேண்டாம்னு ஒதுக்கிட்ட, உன்னைப் பாக்க வர்றப்ப ரோட்ல கார் இடிச்சு வந்த ரத்த காயத்தைக் கூட நீ கண்டுக்கல... சொல்லப்போனா சண்டை போட்டதும் என்னை விரோதியா நினைச்சது நீ தான்”

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-26🌸.4180/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 25

    ருத்ரதேவ் பெருமூச்சு விட்டவன் “அத்தை பண்ணுனது பெரிய தப்பு தான் தக்ஷி... அதால நீயும் உன்னோட அம்மாவும்..” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே

    “கரெக்சன்... அவங்க என்னோட அம்மா மட்டுமில்ல, உங்களுக்கு மாமியாரும் தான்” என இடையில் வெட்டி திருத்தினாள் தக்ஷிண்யா.

    “சரி! நீயும் என்னோட மாமியாரும் ரொம்ப பாதிக்கப்பட்டிங்க... அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்... பட் லலிதா அத்தைய நீ சொல்லுற மாதிரி ஒரேயடியா ஒதுக்கி தள்ளிட முடியாது தக்ஷி” என்றான் அவன் தீர்மானமாக.

    தக்ஷிண்யாவுக்கு எரிச்சல் மறைந்து கோபம் வந்துவிட்டது.

    “ஏன் முடியாது?” என்றாள் வேகமாக.

    “நம்ம விரல்ல இருக்குற நகம் அளவை மீறி வளர்றப்ப கட் பண்ணலாம்... அதுக்காக நகத்தைப் பிடுங்கி எறிஞ்சிட முடியாது” என ருத்ரதேவிடமிருந்து நிதானமான விளக்கம் வரவும் அந்தக் கோபம் இன்னுமே அதிகரித்தது.

    அதை மறைக்காமல் முகத்திலும் குரலிலும் காட்டியவள்,

    “உங்களோட சோ கால்ட் அத்தை நகம் இல்ல... அவங்க உடம்பை அரிக்குற கேன்சர்... கேன்சர் வந்த பாகத்தை வெட்டி ஆபரேஷன் பண்ணலைனா அது உடம்பையே அழிச்சிடும்” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு காலியான காபி கோப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-25🌸.4167/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 24

    தக்ஷிண்யா அவனது பார்வையைத் தவிர்க்க எண்ண அது முடியாமல் போக “நமக்குள்ள எந்த ஃபைட்டும் இன்னும் முடியல ருத்ரா” என்று ஞாபகப்படுத்தினாள்.

    “எனக்கும் ஞாபகம் இருக்கு டார்லிங்... ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கியா? புருசன் பொண்டாட்டி சண்டை ஒரு ராத்திரியோட சரி... அர்த்தம் புரியுதா?”

    தக்ஷிண்யா அவனது பேச்சின் அர்த்தம் புரிபடவும் “என்னது? இப்பிடி டர்ட்டியா பேசுறதுக்கு உங்களுக்கு ஒரு மாதிரி இல்ல?” என்று கோபமாக கேட்க

    “நீ என் பொண்டாட்டி.. உன் கிட்ட டர்ட்டியா பேசலைனா தான் இந்த சமூகம் என்னை ஒரு மாதிரி பேசும் தக்ஷி... அதுவும் நீ இப்பிடி மருண்டு பாக்குறப்ப கிக்கா இருக்கு” என்று குறும்பாக மொழிந்தவன் இன்னும் நெருங்கினான்.

    தக்ஷிண்யா செய்வதறியாது திகைக்கும் போதே விலகி நின்றவன்

    “போதும் பயப்படாத... இத்தனை நாளா என்னை எவ்ளோ டென்சன் பண்ணுன? அதுக்கு ரெவன்ஜ் எடுத்தேன்... ரிலாக்ஸ் ஆகிடு.... இன்னைக்கு எனக்கும் கொஞ்சம் டயர்டா தான் இருக்கு... சோ ரெஸ்ட் எடுக்கப் போறேன்... நீயும் தூங்கு” என்றபடி உடை மாற்றியவன் படுக்கையின் அடுத்தப்பக்கம் போய் படுத்துக்கொண்டான்.

    தக்ஷிண்யாவும் நிம்மதியென எண்ணி கண்ணை மூட எத்தனிக்க திடீரென ருத்ரதேவ் அவள் புறம் திரும்பிப் படுக்கவும் நகர்ந்து படுக்கப் போனாள்.

    ஆனால் அவளது கரத்தைப் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

    தக்ஷிண்யா திமிறிய போதே “இன்னைக்கு மட்டும் தான் ரெஸ்ட்னு சொன்னேன்... உடனே சினிமா சீரியல்ல வர்ற மாதிரி ஃபர்ஸ்ட் நைட்டை ஒரு வருசம் ரெண்டு வருசம் தள்ளிப் போடலாம்னு நினைச்சுக்காத” என்று அவன் கூற

    “நீங்க சீரியசாவா பேசறிங்க?” என்று கண்களை விரித்துக் கேட்டாள் அவள்.

    “ஆமா! நான் உன்னை பைத்தியமா லவ் பண்ணிருக்குறேன், போதாக்குறையா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கல்யாணம் வேற பண்ணிருக்குறேன்... அப்புறம் எதுக்கும்மா நான் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கணும்?”

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-24🌸.4161/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 23

    “அது எப்பிடி, உனக்கு தேவையில்லனா தூக்கியெறிஞ்சிடுவ, வேணும்னா தூக்கி வச்சு கொஞ்சுவ... என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டேல்ல”

    “இல்ல ருத்ரா... நான் நமக்காகவும் தான் பேசுறேன்”

    “வாவ்! இத்தனை நாள்ல நமக்குங்கிற வார்த்தை உன் வாய்ல இருந்து வரவேல்ல... இப்ப மட்டும் தான் நம்ம லவ் பண்ணுனோம்ங்கிறதே உனக்கு ஞாபகம் வருதா? இதுக்குப் பேர் லவ் இல்லடி, சுயநலம்... நீ என்னை வேண்டாம்னு தூக்கியெறிஞ்சப்ப எனக்கு எவ்ளோ வலிச்சுதுனு தெரியுமா?”

    கோபத்தில் அவன் கொந்தளிப்பதைக் கண்டு தக்ஷிண்யாவின் கண்கள் கலங்கிவிட்டது. நாசி நுனி சிவக்க அழுதபடி தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

    “அழுது சமாளிக்காத தக்ஷி... நான் ஹர்ட் பண்ணுறப்ப உன்னால அழுகைல அந்த வலிய கரைச்சிக்க முடியும்டி... ஆனா என்னால அழவும் முடியாது... ஏன்னா ஆம்பளை அழக்கூடாதுனு எந்த முட்டாளோ சொல்லி வச்சிட்டுப் போயிட்டான்... அவன் என் கையில கிடைச்சா செத்தான்”

    பற்களைக் கடித்தபடி அவன் கூற தக்ஷிண்யாவின் அழுகை இன்னும் அதிகரித்தது.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-23🌸.4150/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 22

    தக்ஷிண்யா அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவள் தான் அங்கே விழுந்ததை அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

    “நான் விழுந்தது கொஞ்சம் கிடைமட்டமான இடம், அங்கயே ரெண்டு மணிநேர போராட்டத்துக்கு அப்புறம் தான் என்னை காப்பாத்த முடிஞ்சுது... நீங்க சொல்லுறது நான் விழுந்த சரிவைத் தாண்டி இருக்குற பள்ளத்தாக்கைப் பத்தி... நீங்க உங்க இடத்துக்கு வர்ற மக்களோட உயிரோட விளையாடுறிங்கனு எனக்குத் தோணுது... இதுக்கு மேல நான் சொல்லுறதுக்கு எதுவுமில்ல”

    “உன்னை மாதிரி சின்ன கம்ஃபர்டபிள் ஜோனுக்குள்ள வாழுறவங்களுக்கு இது பயமா தான் இருக்கும்... சாகணும்னு விதி இருந்தா செருப்பு தடுக்கி விழுந்தா கூட செத்து தான் போவோம்... உன்னோட அட்வைஸை அனுதீப் கிட்ட சொல்லுறதுக்காக பத்திரப்படுத்தி வச்சுக்க... இப்ப கிளம்பலாம்”

    இனிமேல் எனக்கென்ன வந்தது என்ற அலட்சிய பாவனையுடன் அவனைத் தொடர்ந்தாள் தக்ஷிண்யா.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-22🌸.4143/
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom