• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடிக் கிடைத்த செல்வம் – 10

Umanathan

✍️
Writer
தேடிக் கிடைத்த செல்வம் – 10



இருவருக்கும் இடையே இதே நிலை ஒரு வாரமாய் நீடித்தது. ஒரு வரமாய் மிகவும் தாமதமாக வருவதும், வந்த உடனேயே குட் நைட் சொல்லி விட்டு படுப்பதும், அலுவலகத்திலும் முடிந்த அளவு அவளை தவிர்ப்பதுமாக இருந்தான். அவளாகவே எதாவது கேட்டாலும், அலுவலக விஷயமாக இருந்தாள் மட்டுமே அவனிடம் இருந்து பதில் வரும். வேறு ஏதாவது கேட்டால் பதில் ஒன்று தான் "ஷர்விகா பிளீஸ், இப்போ எதுவும் கேட்க வேணாம். நானே உங்கிட்ட சொல்றேன்." இந்த பதிலில் இருந்து எதை கண்டுபிடிப்பது?

இவனுக்கு என்ன தான் பிரச்சினை. பழுகுவதும், நம்பிக்கை ஊட்டுவதும் பின்பு விலகுவதும், சே. எத்தனை முறை தான் ஒருவரை கஷ்டப்படுத்துவது. ஆனால் முன்பு நடந்தது போலும் இல்லை. அப்பொழுது அவன் முகம் இருகி கோபமாக இருக்கும். இப்பொழுது ஒரு சோர்வு தான் காணப்படுகிறது. ஒருவேளை அவனுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? யோசித்துப் பார்த்து குழம்பி போய் பதில் இல்லாமல் நின்றாள் ஷர்விகா.

நல்ல வேளை ஷர்விகாவின் பெற்றோரும் தங்கையும் 2 நாளில் கிளம்பி விட்டனர். இல்லையென்றால் இதை கண்டு கொண்டுங்கெல்வி கேட்டால் என்ன செய்ய முடியும்.

ஆனால் அதே வீட்டினுள் இருக்கும் அவளுடைய மாமனார் மாமியாரின் கவனத்தில் படாமல் இருக்காதே. "என்னம்மா வித்யுத் வீட்டிலேயே இருக்க மாட்டேங்கறான். ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்டார் பார்வதி.

"இல்லை அத்தை. புராஜக்ட்ல ஒரு சின்ன சிக்கல். நானும் செய்யறேன்னு கூட கேட்டேன். ரெண்டு பேரும் ஆபீஸ்ல எதுக்கு, நான் பார்த்துக்கறேன்ன்னு சொல்லிட்டார். அதனால தான்." என்று புன்னகையுடன் கூறி மாமியாரை சமாதானம் செய்தாள். ஆனால் மாமனார் கண்ணில் அவளின் கலக்கம் படாமல் இல்லை.

பிறகு தனியே கேட்டார். "என்னம்மா?"

என்ன என்று தெரிந்தால் தானே சொல்வதற்கு.

"தெரியலையே மாமா." என்று பரிதாபமாக கூறியவளை வருத்தத்துடன் பார்த்து விட்டு சென்றார்.

வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. இனிமேல் கையை கட்டி கொண்டு இருந்தால் சரி வராது என்று விதியுத்திற்காக காத்திருந்தாள். வழக்கம் போலவே தாமதமாக தான் வந்தான். ஷர்விகா தூங்காமல் இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் ஆச்சரியமானவனின் முகம் உடனே கவனமானது.

அவனின் முக மாற்றத்தை கவனித்த ஷர்விகாவிற்கு கோபம் வந்தது. இருந்தாலும் அமைதியாக இருந்தாள்.

"தூங்கலை?" என்று கேட்டவனிடன் "இல்லை" என்று பதில் கூறினாள்.

அப்படியா என்பது போல் தலை ஆடிவிட்டு குளியலறைக்கு சென்று விட்டான். வெளியே வந்ததும் அவனுக்கு அவகாசம் கொடுக்காமல் ஷர்விகா பேசினாள்.

"என்ன தான் பிரச்சினை? ஒரு வாரமா நீங்க சரியில்லை. முகம் கொடுத்து பேசறதில்லை. அத்தையும் மாமாவும் இன்னைக்கு என்கிட்ட வய் விட்டு கேட்டுட்டாங்க. அவங்களுக்கு சந்தேகம் வர ஆரம்பிடிச்சி. நாம ஒன்னா இல்லைதான். ஆனா உங்க ஆம்மாக்காக தானே நடிக்க ஆரம்பிச்சோம். இப்போ என்ன? உங்களுக்கு என்ன தான் பிரச்சினை? ஒவ்வொரு முறையும் பாசம் காட்றதும் அப்புறம் விலகி ஓடறதும். ஏன் இப்படி வதைக்கிறீங்க?" என்று பொங்கி தீர்த்து விட்டாள். அழுவதற்கு கண்ணீர் கூட மிச்சம் இல்லையா அல்லது இந்த நிலை அவளுக்கு பழக்கப் பட்டு விட்டதா என்று தெரியவில்லை, அவளின் முகமும் உணர்ச்சி துடைக்கப் பட்ட ஓவியம் போல் இருந்தது.

அந்த முகம் அவனின் மனதை என்ன செய்ததோ, ஒரு நெடும் மூச்சை இழுத்து விட்டு, "ஷர்வி, ப்ளீஸ் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் விட்டுடு. நான் எல்லாத்தையும் நாளைக்கு சொல்றேன். இந்த பதில் போதாது தான், ஆனால் தயவு செஞ்சு ஒரு நாள் பொறுத்துக்கோ. எந்த முடிவு ஆனாலும்.." என்று தொடங்கிவயன் முகம் என்னவோ நினைத்து கடங்கியது. ஒரு பெரு மூச்சுடன் முணுமுணுப்பாக குட் நைட் என்று சொல்லி விட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான்.

***

ஷர்விகா அடுத்த நாள் காலையில் இருந்து வித்யுத்தை பார்க்கவில்லை. அலுவலகத்திலும் இல்லை. ஏதோ குவாலிட்டி டீமுடன் மீட்டிங் என்று மெயில் மட்டும் அனுப்பி இருந்தான். என்னவாக இருக்கும் என்று மனதில் யோசித்தபடி ஷர்விகா வேளையில் மூழ்கி இருந்தாள். எதுவானாலும் இன்று சொல்வதாய் சொல்லி இருந்தானே. காத்திருக்கலாம் என்று தனக்குள் சொல்லும் போது அவள் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது.

யார் என்று நிமிர்ந்து பார்க்கும் போது ரித்வி உள்ளே வந்து கொண்டு இருந்தாள். "என்ன ஷர்வி போலாமா?" என்று கேட்டபடி.

என்ன என்று புரியாமல் ஷர்விகா பார்த்ததை கண்டு "மறந்துட்டியா? இன்னைக்கு நம்ம டீம் மாயாவோட பிறந்த நாள் ட்ரீட். போன வாரமே சொல்லி இருந்தாளே."

ஷர்விகாவிற்கு அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது. எங்கே போன வாரம் அவளை சுற்றி நடந்த நிகழ்வுகளில் இதை மறந்தே போனாள். கணணியை அனைத்து விட்டு ரித்வியுடன் அலுவலக முன்னறைக்கு வந்தாள். எல்லோரும் வாகனம் வைத்திருப்பவருடன் சேர்ந்து செல்ல முடிவு செய்தனர். ஷர்விகாவும் ரித்வியும் வெங்கட்டுடன் செல்ல ஆயுத்தமானர்கள்.

காரில் செல்ல செல்ல வெங்கட் புராஜக்ட் பற்றி கேட்டார். வெங்கட்டிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் ஏன் கேட்கிறார் என்று தோன்றினாலும் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி வந்தாள் ஷர்விகா.

திடுமென்று "நேத்தைக்கு வித்யுத் என்னை பாக்க வந்தார். உன்னோட விசா என்ன ஆச்சுன்னும் உன்னோட டிராவல் உறுதி ஆகிடிச்சான்னும் கேட்டுட்டு போனார்." என்று கூறினார்.

ஒரு நிமிடம் அந்த செய்தி தந்த அதிர்ச்சியில் உறைந்து போனாள் ஷர்விகா.
"எனக்கும் வித்யுத் கேட்டது அதிர்ச்சி தான். ஏன்னா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எல்லாம் சரியாகிடிச்சின்னு நினைச்சேன்" என்று வெங்கட் கூறிய பின் தான் அதிர்ச்சியை முகத்தில் காட்டி விட்டோமென உணர்ந்தாள். அதிலும் ரித்வி வெங்கட்டின் முகம் வருத்தத்தை காட்டிய போது மிகவும் குறுகி போனாள்.

அதற்குள் ஹோட்டல் வந்து விடவே ஒரு புன்னகையுடன் "இது நாங்கள் ஏற்கனவே பேசினது தான் வெங்கட். புதுசா ஒன்னும் இல்லை." என்று கூறி விட்டு காரிலிருந்து இறங்கியவள் "நீங்க முன்னாடி போங்க, நான் இதோ வந்துடறேன்" என்று கூறி அவள் கண்ணீரை அவர்கள் பார்க்கும் முன் விடுவிடுவென பெண்கள் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

பெரும் மூச்சுகள் எடுத்து விட்டு தன்னை சமன்படுத்தி வெளிய போக யத்தனித்தவள் தன் செல் அழைப்பதை பார்த்து நின்று அதை எடுத்தாள். யாரென்று தெரியாத ஒரு எண். அழைப்பை ஏற்று ஹலோ என்றவள் மறுபுறம் கேட்ட குரலில் திகைத்தாள். என்ன இது எல்லா தொல்லையும் ஒரே நாளில் இவளை சுற்றுகிறது.

மேலே பேச பிரியமற்று "வினு நான் இங்கே பிஸியா இருக்கேன். இப்போ பேச முடியாது" என்று அழைப்பை அணைக்க போனாள்.

"நானும் உங்கிட்ட பேசி நேரத்தை வீணடிக்க கூப்பிடலை. நீ கேட்ட விவாகரத்தை விது கொடுக்க முடிவு செஞ்சிட்டார். நீ எப்படியும் வெளிநாடு போக போறவ தானே. அதனால் விவாகரத்து வாங்கிட்டா அப்புறம் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்க ஈசியா இருக்கும். இதை விது உங்கிட்ட இன்னைக்கு சொல்லுவார்."

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டதாலோ என்னவோ, ஷார்விகாவால் குரல் எழுப்ப இயலவில்லை. முயன்று வாய் திறந்தாள் "வித்யுத் தான் எங்கிட்ட சொல்ல போறாரே. அதுக்கு முன்னாடி நீ ஏன் எனக்கு சொல்ல வேண்டும்."

வினுவின் குரல் கோபத்தோடு வந்தது. "திடும்னு உங்கிட்ட சொல்லி நீ ஏதாவது கலாட்டா செஞ்சா, அதை எப்பிடி தடுப்பது. அதுதான் என்னை முதல்ல உங்கிட்ட சொல்ல சொன்னார். தேவை இல்லாமல் கலாட்டா செஞ்சி விதுவை சங்கடப் படுத்தாதே."

அவள் சொன்ன விதம் ஷர்விகாவின் கோபத்தை கிளரியது. "அந்த அளவுக்கு நான் தாழ்ந்து போகலை."

"சந்தோஷம்." என்று கூறி வினு அழைப்பை அணைத்ததை கூட அறியாமல் திகைத்து நின்றாள் ஷர்விகா.

'எந்த முடிவு ஆனாலும்' என்று நேற்று வித்யுத் கூறியது திரும்ப திரும்ப அவள் நினைவில் வந்தது.

இதற்கு தான் அப்படி சொன்னானா? அப்படி என்ன செய்து விடுவாள் என்று எண்ணினான்? போன முறையும் எந்த பிரச்சினையும் செய்யாமல் தானே பிரிந்து சென்றாள். இப்போது என்ன? பிரிந்து. அவள் மனம் சில்லிட்டது. மீண்டும் அவளால் அவனை பிரிய முடியுமா??

இந்த நிலையில் தான் ரித்வி ஷர்விகாவை பார்த்தாள். நீண்ட நேரமாகியும் ஆளை காணவில்லை என்று தேடி வந்தவள் ஷர்விகாவின் நிலையை பார்த்து முதலில் பயந்து விட்டாள். ஷர்விகாவின் கண்கள் ஒரு சூனியத்தை காட்டின. எங்கே அவளை தொட்டால் பொடி பொடியாக உதிர்ந்து விழுவாளோ எண்ணும்படியாக நின்றாள்.

மெல்ல அருகில் சென்று ஷர்விகாவின் இரு தோள்களையும் மெல்ல பிடித்து, "ஷர்விகா என்ன ஆச்சுபா? ஏன் இப்படி நிக்கற" என்று இதமாக கேட்டாள்.

நிகழ்விற்கு வந்த ஷர்விகா தவிப்புடன் ரித்வியை பார்த்து, "என்னால இங்க இருக்க முடியாது ரித்வி. நான் இப்போ கொஞ்சம் தனியா இருக்கனும். நீ ஏதாச்சும் சொல்லி சமாளிச்சுகறியா?" என்று கேட்டவள் மேலே சொல்ல முடியாமல் தடுமாறினாள். கண்ணீரை அடக்க உதடுகளை கடித்து தவிக்கும் அவளை பார்த்த ரித்வி ஒரு கணம் யோசித்தாள்.

"எங்கே போவ ஷர்வி? உன் வீட்ல எல்லோரும் இருப்பாங்களே?" என்றவள் ஒரு நிமிடம் யோசித்து "என் வீட்டுக்கு போலாம் என் கணவர் வேலை முடிஞ்சு சயங்காலம் தான் வருவார். அங்க போகலாம். நான் எல்லார்கிட்டயும் சொல்லிடறேன். நீ யார்கிட்டயும் பேச வேண்டாம்" என்று கூறி ஷர்விகாவை வெளியே அழைத்து வந்தாள்.

வெளியே வந்த ஷார்விகா முதலில் பார்த்தது ஹோட்டல் உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்த வித்யுத்தை தான். அய்யோ, இவனை இப்போது பார்த்து பேச முடியாதே. எப்படி இங்கிருந்து வெளியே செல்வது என்று கூண்டில் சிக்கிய மானை போல தப்பிக்க வழி தேடினாள்.

கண்கள் அலைப்புற சுற்றும் முற்றும் பார்த்த ஷர்விகாவை தான் வித்யுத் முதலில் பார்த்தான். அவள் அருகே வந்து "என்ன ஆச்சு ஷர்வி. உடம்பு ஏதும் சரி இல்லையா?" என்று இதமாய் கேட்டான்.

அவனின் குரலில் என்ன தோன்றியதோ, ஷர்விகா பொங்கி எழுந்து விட்டாள். "என்னை பத்தி கேக்க நீங்க யாரு. எடுத்த முடிவை சொல்ல தைரியமில்லாம ஒரு பெண்ணோட பின்னாடி ஒளிஞ்சிக்கும் உங்களை பார்க்கவே, சே" என்று பொறுமி தள்ளினாள்.

வித்யுத்தின் முகமும் கோபமாக மாறியது. "நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியலை. எதுவானாலும் தெளிவா சொல்லு. அதையும் சொல்ல காலமும் இடமும் இருக்கு."

காலமும் இடமுமா. ஓ, எங்கே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் இவனின் மானம் போய் விடும் என்று நினைக்கிறானோ?

"தெளிவாத்தானே. கேட்டுகோங்க மிஸ்டர். வித்யுத். நான் உங்களுக்கு டிவோர்ஸ் தர ஒத்துக்கறேன். ஏன் தெரியுமா? ஏன்னா நான் உங்களை இன்னும் மனசார காதலிக்கறேன். அதுக்குத் தான். பைத்தியக்காரத்தனம் தான். இருந்தாலும் இந்த பாழும் மனசுக்கு புரியலையே. வினுகிட்ட சொல்ல தேவையில்லை. இப்போதான் அவ எனக்கு போன் செஞ்சு சொன்னா. இனி என்னால உங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை." என்று கூறியவள் சுற்றி எல்லோரும் பார்ப்பதை கவனிக்காமல் ஹோட்டல் விட்டு வெளியே ஓடி வந்தாள்.

சாலையை கடக்கலாம் என்றால் கண்களில் வழியும் கண்ணீரால் சரியாக பார்க்க கூட முடியவில்லை. ஒரு வேளை வித்யுத் பின்னே வருவானோ என்று எண்ணியவள், உடனே தன்னை நொந்து கொண்டாள். அவனாவது வருவதாவது. தொல்லை விட்டது என்று இருப்பான்.

ஆனால் "ஷர்வி" என்று வித்யுத்தின் குரல் கேட்டதும் பொங்கிய கோபத்தில் "அப்படி கூபிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" என்று வெடித்தவள், திரும்பி சாலையை நோக்கி ஓடினாள்.

இடையில் ஏற்பட்ட தடுமாற்றமோ இல்லை சுற்றி மனதில் இருந்த கனமோ, சாலையில் வந்த காரை அவள் கவனிக்கவில்லை. அவளும் திடுமென சாலையில் இறங்குவாள் என்று அந்த ஓட்டுநர் எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடியில் அடிபட்டு சாலையில் விழுந்தாள்.

இரத்த வெள்ளத்தில் இருந்தவளை பார்த்து ஸ்தம்பித்த வித்யுத் உடனே அவளை நோக்கி ஓடினான். அதிர்ந்து போய் பார்த்தவனை நோக்கி வலியுடன் புன்னகைத்தாள் ஷர்விகா. "இனி விவாகரத்து வாங்கற வேலையும் மிச்சம்." என்றவளை "ஷட் அப். ஷட் அப்." என்று கூறியபடி அவளை தூக்கி கொண்டு தன் காரை நோக்கி ஓடினான். அதற்கு மேல் முடியாது என்பது போல் மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்தாள் ஷர்விகா.
 

Rajam

Well-known member
Member
வித்யுத் செய்யறது
எனக்குப் பிடிக்கவில்லை. அவனால
தான் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கா.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom