Recent content by மகாசமுத்ரா

 1. அத்தியாயம் - 29&30

  அத்தியாயம் – 29 காரை நிறுத்திவிட்டு யாழிசையின் வீட்டினுள் நுழைந்த போது அந்த வீட்டு ஹாலில் அமர்ந்திருந்த ஜனத்திரளைப் பார்த்து ஒரு வினாடி மூச்சுவிடவும் மறந்தான் பூர்ணவ். “இதென்னடா இவளோ கூட்டம்” என்று நினைத்தவன் ஒரு வித சங்கடத்தோடு உள்ளே வந்தவனுக்குப் பார்க்கும் எந்த முகமும் தெரிந்த முகம் போல்...
 2. அத்தியாயம் - 27&28

  அத்தியாயம் – 27 பூர்ணவ்விற்கும் யாழிசைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது பல வருடங்களாகவே இளையசந்திரன் – யசோதா மற்றும் சிதம்பரம் – மீனாட்சி என நால்வரின் விருப்பமும் முடிவாகவும் இருந்தது. தங்களது விருப்பத்தைப் பதின் பருவத்தில் இருக்கும் பூர்ணவ் யாழிடம் ஏன் சொல்ல வேண்டும்? சில...
 3. அத்தியாயம் - 26

  அத்தியாயம் – 26 காலையிலேயே பூர்ணவ்வும், ஆத்விகாவும் விமான நிலையம் செல்ல தயாராகி இருந்தார்கள். நேற்று பூர்ணவ் வெளிநாடு செல்லப்போவதாக சொன்னதும் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் ஆத்விகாவும் காந்திமதியும். தத்தா காலத்து வீடு வேறு ஆட்டம் கண்டுவிடுமோ என்று பயந்து பூர்ணவ் அவர்களைச்...
 4. அத்தியாயம் - 25

  பூர்ணவ் சந்திரனின் கார் சென்னையை நோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. வந்த போது இருந்த வேகமோ, அட்டகாஷமோ எதையும் காணவில்லை. காரே அமைதியைத் தத்தெடுத்து இருந்தது. அமித்ரா டிரைவருக்குப் பக்கத்துச் சீட்டில் கண் மூடி சாய்ந்து இருக்க, டிரைவர் சீட்டில் இருந்த பூர்ணவ் ரோட்டையும், அமித்ராவையும் என மாறி...
 5. அத்தியாயம் - 24

  அத்தியாயம் – 24 பூர்ணவ்வின் ஆடி கார் திருமண மண்டபத்தின் பார்க்கிங் ஏரியாவில் நிற்க அஞ்சிதாவிற்குப் போனில் அழைப்பு விடுத்தபடி இறங்கினாள் அமித்ரா. தானும் இறங்கிவிட்டு காரை லாக் செய்த பூர்ணவ் சுற்றியும் முற்றியும் பார்த்தான்... ஒரு இருநூறுகார்கள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். கம்மி தான்...
 6. அத்தியாயம் - (18-21) முதல் பாகம் நிறைவு

  தேங்க்யூ...தேங்க்யூ😍 இன்னைக்கு இரண்டாவது பாகம் அப்டேட் பண்ணிருக்கேன் பாருங்க
 7. அத்தியாயம் - 23

  ஆறு வருடங்களுக்கு முன்... “ஹே ஹே ஹே ரிமெம்பர் மீ பார் செஞ்சுரீஸ் அண்ட் ஐ கான்ட் ஸ்டாப் டில் த ஹோல் வோர்ல்ட் நோஸ் மை நேம் பிகாஸ் ஐ வாஸ் ஒன்லி பார்ன் இன்சைட் மை ட்ரீம்ஸ்” உச்ச டெசிபெல்லில் பாடிக் கொண்டிருந்த கார் ஸ்டீரியோவைத தாண்டி சத்தமாகப் பாடிக் கொண்டிருந்த பூர்ணவ் சந்திரனை பார்த்து...
 8. அத்தியாயம் - (18-21) முதல் பாகம் நிறைவு

  அத்தியாயம் - 18 யாழும் எல்லாவற்றையும் விவரமாகக் கேட்டுக் கொண்டு அவர் சென்றவுடன் அன்றைய நாளின் வேலையை தொடங்கினாள். இங்குப் பூர்ணவ் தனது லேப்டாப்பில் வேலை சம்பந்தமாக எதையோ பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு அமித்ராவிடம் இருந்து போன் வந்தது.. “ஹெலோ.. சொல்லு அமித்ரா” “பூர்ணவ் இஸ் எவெரிதிங் ஓகே?”...
 9. அத்தியாயம் - 17

  அமித்ராவின் கையில் இருந்த அமித்ரா மற்றும் பூர்ணவ்வின் முதல் எழுத்துக்களை உடைய ஏ.பி டாட்டூவைப் பார்த்த யாழிசை கதவை சடார் என்று சாத்தி விட்டு வெளியே போய்விட்டாள். இதையெல்லாம் பார்த்த அமித்ரா தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.. அவள் என்ன நினைத்து இங்கே வந்தாள்? இங்கு நடப்பது என்ன...
 10. அத்தியாயம் - 16

  “பேஷன் பேபிரிக்ஸ்” என்று பெரிதாகச் சிமென்ட் பலகை இட்டு இருந்த மூன்று அடுக்குக் கட்டிடத்திற்கு முன் நின்று கொண்டிருந்தாள் யாழிசை. நேராகப் பார்த்தால் மூன்று மாடி மட்டும் தெரிய.. பக்கவாட்டில் உள்ளே தள்ளி பார்த்தால் ரயில் பெட்டி போல் நீண்டு கொண்டே போய்க் கொண்டிருந்தது அக்கட்டிடம்.. இப்பொழுது ஒரு...
 11. அத்தியாயம் - 15

  அத்தியாயம் - 15 பொழுது புலர சில மணி நேரங்கள் இருக்க விழிப்புத் தட்டியது யாழிசைக்கு.. ஹாலில் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள். நான்கு! ‘இங்கேயோ தூங்கிவிட்டோமா?’ அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள். இரவு அழுதத்திற்குத் தலை நன்றாக வலிக்க “ஆ... அப்டியே தூங்கிட்டோமா” என்று முனங்கியவள்...
 12. அத்தியாயம் - 14

  அத்தியாயம் - 14 சௌந்தரின் கைகளில் யாழிசை திணித்து வைத்திருக்கும் சேலைகளைப் பார்த்தபடி “என்ன யாழ்?” என்று கேட்டான் பூர்ணவ். “அது.. இந்தச் சேலைங்கள அண்ணிக்கு எடுத்தேன்.. வாங்கிக்க மாட்டேங்குறாரு” என்று அவள் சொல்ல அவன் பார்வை இப்பொழுது சௌந்தர் மீது பதிந்தது.. அவன் இவனைச் சங்கடத்தோடு பார்க்க...
 13. அத்தியாயம் - 13

  அத்தியாயம் – 13 குளியலறையிலிருந்து டவலை வைத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளிவந்தவன் “பரெஷ் ஆகிட்டு வாடி கீழ போலாம்....” என்றான். “ஐயா ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ண கொஞ்ச நாள் ஆகும்னு சொல்றாரு... டாக்டர் அடவைஸ்சாம்.. அதா..ன் அவ..ர இங்க கூட்டிட்டு வந்து ட்ரீட்..மெண்ட் பாக்கலாமா?.. அவரு பாவம் அங்க...
 14. அத்தியாயம் - 11&12

  நான்கு வருடங்களுக்குப் பிறகும் அந்த அறை அவள் விட்டு சென்றபடியே தான் இருந்தது. எத்தனை எத்தனை ஞாபகங்கள் இந்த அறையில்...! அவளது கண்கள் அவ்வறையை அளந்தன. இவளை இந்நிலையில் கண்ட பூர்ணவ்வின் கண்கள் மின்னின.. வந்துவிட்டாள்!! ஒருவழியாக யாழிசை மீண்டும் அவனிடமே வந்துவிட்டாள் என்று ஆனந்தக் களிப்பில்...
 15. அத்தியாயம் - 9&10

  அத்தியாயம் – 9 திருப்பூர் மாநகரம் அந்த முன் அதிகாலை வேலை ‘சொர்க்கமோ?’ என்று எண்ணும் அளவிற்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. எத்தனையோ நாட்கள் இதே சாலையில் நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் பயணம் செய்திருக்கிறான். ஆனால் இன்று! இந்த இரவு! ஏனோ அவனுக்கு மிகவும் அழகாகத் தெரிந்தது. ஆழ்ந்து மூச்சை இழுத்து...
Top Bottom