• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 17

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம் -17❤️

தனது கடந்த கால பள்ளி நினைவுகளிலே முழ்கி போய் அமர்ந்திருந்தவனின் சிந்தையை களைத்தனர் அவனின் ஆருயிர் நட்பு பட்டாளமான பஞ்ச பாண்ட வானர நண்பர்கள்...
ஆம்!
கார்த்திக் ஆசிரிய பணி மேல் ஆர்வம் கொண்டு இளங்கலை இயற்பியலை தேர்ந்தெடுத்து படிக்க, அவனின் நண்பர்களோ நண்பனை பிரிய மனமின்றி இன்ஜினியரிங் படிக்கவும் விருப்பமின்றி இப்படிப்பை தேர்ந்தெடுக்க; விக்னேஷ் மட்டும் நட்பு கூட்டத்தை விட்டு தனித்து இன்ஜியரிங் சென்றான் ஆயினும் தனது நட்புகூட்டத்திலிருந்து விலகாமல்
தொடர்பில் இருக்கிறான்.

இப்பொழுது பஞ்ச பாண்டவ அணியில் கார்த்திக்குடன் சங்கர் ரவி மற்றும் தினேஷுமே ஒன்றாய் பயணித்து கல்லூரி முதலாமாண்டு முடித்து இரண்டாம் ஆண்டில் அடியெழுத்து வைத்து ஒரு மாதமாக பயணித்துகொண்டிருக்க அவ்வானர படையே கார்த்திக்கின் சிந்தையையும் களைத்தனர்.

"டேய் கார்த்திக், என்னடா மறுபடியும் மலரும் நினைவுகளா; இவன் இப்படிதான்டா எப்போ பார்த்தாலும் ஸ்கூல் லைப்பையே யோசிச்சிட்டு காலேஜ் லைப்பை மிஸ் பண்ணிட்டு இருக்கான்; உனக்கு என்ன தான்டா பிரச்சனை நீ சோகமா இருந்து எங்களையும் சோகமாக்குறதையே வேலையா வைச்சிட்டு சுத்துறீயே இது நியாயமா..???
என ரவி தனது மன ஆதங்கத்தை கார்த்திக்கிடம் கொட்டி மற்றவர்களையும் நியாயம் கேட்க அழைக்க,

அதற்கு கார்த்திக்கோ, "என்னோட பிரச்சனையே அனு தாண்டா; அவளை என்னால மறக்கவே முடியல அவளை மறந்து கடந்து போக போராடுன அத்தனை போராட்டத்துலயுமே தோத்து போயி நிக்குறேன்டா அவளுக்கு என்மேல துளியளவு கூட காதல் இல்லடா சீனியர்ற பாசம் மட்டும் தான் இருக்கு உதவினா தேடி வரா மத்தபடி அவ என்னைய காதலிக்க வாய்ப்பே இல்லடா" என கூறி கண்கலங்கினான்.

இத்தனை நாளில் நண்பர்களிடம் தனது காதலையும் அனுவிடம் கூறியபோது கிடைத்த பதிலையும் சொல்லியே மனம் வருந்தியவனின் வருத்தத்தை உணர்ந்த தினேஷோ கார்த்திக்கை தோளோடு அணைத்து ஆறுதல் கூற துவங்கினான்.

"இங்க பாருடா கார்த்திக், நீ கவலைபடாத என்னைக்காவது ஒருநாள் அவளுக்கு உன்னோட காதல் புரியும்; அப்போ அவ கண்டிப்பா உன்னைய தேடி வருவா நீ எதை நினைச்சும் மனசை போட்டு குழப்பிக்காத சரியா" என கூறி கொண்டிருந்தான்.

தனது மிடில் கிளாஸ் வாழ்வினை கூட சிரித்துகொண்டே கடக்கும் ஆண்களால் காதலை மட்டும் அத்தனை சுலபத்தில் கடக்க முடியாமல் தவிப்பது வாழ்வின் விந்தையோ இல்லையேல் காதலின் விந்தையோ என விடையறியா கேள்வியினை தனது மனதினில் யோசித்து கொண்டே கார்த்திக்கிற்கு தினேஷ் ஆறுதல் கூறிகொண்டிருக்கும் அதே சமயத்தில் அடுத்த வகுப்பிற்கான மணியடிக்க அதனை கேட்க சங்கரின் முகமோ பீதியால் நிரம்பியது.

"அட எருமைகளா, நான்தான் முதல்லயே சொன்னேன்ல டா பிரேக் தொடங்குனதும் கேன்டின் போகலாம்னு இப்போ பாருங்க பிரேக்கே முடிச்சு போச்சு; இனி நான் என்ன பண்ணுவேனோ பப்ஸ் கூட சாப்பிடாம சொட்டை தலையன் கிளாஸை கவனிக்கனுமா நெவர்! இந்த கிளாஸை கட் அடிச்சாச்சும் கேண்டின் போகலாம் ஓகே வா டா" என கூறியபடியே நிமிர்ந்து நண்பர்களை பார்க்க,

அப்பொழுது தனது கண்களை துடைத்துகொண்ட கார்த்திக்கோ தினேஷை பார்த்து கண்ணை காட்ட உடனே தினேஷும் ரவியும் சங்கரை குண்டு கட்டாக கிளாஸிற்கு தூக்கி சென்றனர்.

"டேய், இதெல்லாம் அநியாயம் டா; கொஞ்சநேரம் கேண்டின்க்கு போயிட்டு அப்புறமா கிளாஸ்க்கு போகலாம்னு சொன்னா கேட்காம அந்த சொட்டைதலையன் கிளாஸுக்கு இழுத்திட்டு போறீங்களே இந்த பச்சைமண்ணோட சாபம் உங்களை சும்மா விடாதுடா; என்னைய இறக்கி விடுங்க டா" என ஆர்ப்பாட்டம் செய்து ரகளை செய்து கொண்டிருந்த சங்கரை குண்டுகட்டாக கிளாஸுக்கு இழுத்து சென்ற தினேஷோ,

"டேய், எனக்கு மட்டும் கிளாஸுக்கு போகணும்னு ஆசையா என்ன; எல்லாம் நம்ம கேங் ரீடர்னு இருக்கிற படிப்பாளியால வந்த வினை தான் நம்ம கேண்டின்க்கு போனா இவன் எச் ஓ டி கிட்ட நம்மல மாட்டிவிட்டுருவான்; அப்புறம் நம்மல யார் நினைச்சாலும் காப்பாத்த முடியாது அதனால இப்போ கிளாஸுக்கு போவோம்; அடுத்த பீரியட்ல இவனை கண்வின்ஸ் பண்ணி கேண்டின்க்கு இழுத்திட்டு போவோம் ஓகே யா" என சங்கரை சமாளிக்கும் விதமாய் பொய் கூற பச்சைமண்ணான சங்கரும் அதனை நம்ப துவங்கினான்.

தன் நண்பர்களின் அரட்டைகளை பார்த்து கவலைகளை மறந்து சிரித்துகொண்டே கார்த்திக் நடந்து சென்ற வேளையில் ஒரு பெண்ணின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.

"சீனியர்"

என கேட்ட அக்குரலால் அவனின் உலகமே தன் இயக்கத்தை மறந்து நிற்க கார்த்திக்கின் உறைநிலையை பார்த்த நண்பர்களோ,

"நம்மல கிளாஸுக்கு பார்சல் பண்ணிட்டு இவன் என்ன பீரிஸ்ல நிக்குறான்; டேய் என்னடா ஆச்சு" என கார்த்திக்கை பிடித்து உலுக்க,

அதில் சுய உணர்விற்கு வந்தவனோ சுற்றும் முற்றும் யாரையோ தேட, கண்ணுகெட்டிய தூரம் வரை அவன் தேடலுக்காக பதில் கிடைக்காமல் போனது.

"கார்த்திக், நாங்க கேட்குறதை காதுலயே வாங்காம நீ யார டா தேடிட்டு இருக்க" என ரவி கேட்க,

அதற்கு கார்த்திக்கோ, "ஒண்ணுமில்லடா" என கூறி நடக்க கார்த்திக்கின் எண்ணங்கள் யாவும் அனுவின் நினைவுகளே ஆக்கிரமித்திருந்தனர்.

எங்கோ இருக்கும் உன்னை
நினைத்து நித்தமும் தவிக்கிறேனடி;
என் தவிப்பை போக்கி
இதமளிக்க உன் தரிசனம் கிட்டுமா என எந்நாளும் காத்திருக்கிறேனடி;
அந்த காத்திருப்பின் தாக்கம் தான்
இந்த அழைப்போ..???

என நினைத்து வகுப்பிற்குள் நுழைய அப்பொழுது இவனின் தவிப்பிற்கு காரணமான அக்குரலுக்கு சொந்தகாரியோ ஒரு மரத்தின் பின் ஒளிந்திருந்து தனது சீனியரின் தவிப்பினை ரசித்து கொண்டிருந்தாள்.

"உங்களுக்காக உங்க ஜீனியர் எத்தனை கஷ்டத்தை தாண்டி உங்களை தேடி வந்திருக்கா; அதைபத்தியெல்லாம் கொஞ்சம் கூட தெரியாம காதலே இல்லனு சொல்லிட்டீங்களே சீனியர் இது நியாயமா" என செல்லமாய் கோபித்த அனுவின் எண்ணங்களோ தனது அழகிய கடந்த கால நினைவினை அசைபோட்டு பார்த்தது.

தனது சீனியரை சீனியராய் மட்டுமே நினைத்து கொண்டிருந்த அனுவிற்கு, இசை வகுப்பில் முதல் நாள் தனது விரலோடு விரல் சேர்த்து இசையை உணர்த்திய கார்த்திக்கின் செயலில் ஏதோ ஓர் இனம்புரியாத உணர்வு எழ, அவ்வுணர்வினை மறைத்து ஓடியவளால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்க; அத்தவிப்பின் இறுதியில் அவளின் மனமோ இது காதலென ஆணித்தரமாய் உரைத்ததில் உறைந்து போனாள்.

எந்த ஆணையும் அத்தனை சுலபத்தில் நம்பாதவளான அனு சீனியராய் நினைத்த கார்த்திக்கை நம்பி தன்னை அவன் காதலிக்கவில்லையென என நினைத்தது முதல் அவனிடம் தான் எடுத்துகொள்ளும் அதிகபடியான உரிமையுணர்வு வரை அனைத்தும் அவளின் காதலிற்கு சான்றாக அமைய அதில் தலைசுற்றி போனவளோ ஒரு கட்டத்திற்கு மேல் கார்த்திக்கின் பால் காதல் வயபட்டாள்.

அக்காதலில் சிறகில்லாமல் பறந்தவளுக்கு நிதர்சனம் உரைக்க தனது வாழ்வின் முக்கிய முடிவிலிருந்து அனைத்து நிகழ்விற்கும் தந்தையின் பேச்சை கேட்பவளோ இதற்கும் தனது தந்தையான சத்யமூர்த்தியின் அனுமதி பெறலாமென அவரின் அறை நோக்கி ஓடினாள்.

அங்கே சத்யமூர்த்தியோ தனதறையில் தலையை பிடித்துகொண்டு அமர்ந்துபடியே வினோத்தின் கேஸில் தீலிப்பை தவிர வேறு சாட்சி கிடைக்குமா என குழம்பி கொண்டிருந்தார்.

தந்தையை காண ஆவலாய் வந்த அனுவோ அவரின் நிலையை பார்த்து அங்கிருந்து கிளம்புவதற்காக திரும்ப தன் முன் நிகழாடியதில் தலைநிமிர்ந்த சத்யமூர்த்தியோ மகளை அழைத்து அவளின் வரவிற்கான காரணத்தை கேட்க துவங்கினார்.

"என்னமா, அப்பாவை பார்க்க வந்துட்டு எதுவுமே பேசாம கிளம்பிட்ட ஏதாவது பிரச்சனையா" என மகளை தனது பக்கத்தில் அமர வைத்து அவளின் தலையை ஆதூரமாய் வருடிபடியே வினவ,

அதற்கு அனுவோ, "ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன் ப்பா; ஆனா நீங்க டென்சனா இருந்தீங்களா அதான் கிளம்பிட்டேன்" என கூற,

"அப்படி என்னமா முக்கியமான விஷயம், எதுவா இருந்தாலும் சொல்லு அப்பா நல்லா தான் இருக்கேன்; என்னைய நினைச்சு கவலைபடாம நீ விஷயத்தை சொல்லுமா" என கூறி அனுவின் தலையை வருடிவிட்டார்.

தன் மனநிலையை தந்தையிடம் கூற தயங்கிய அனுவோ தைரியத்தை வரவழைத்து கொண்டு தனது சீனியரின் மேல் கொண்டுள்ள காதலை எடுத்துரைக்க,

அதனை கேட்க சத்யமூர்த்தியின் முகமோ சோகத்தை தத்தெடுத்து கொண்டது.

காதல் என்ற ஒன்று இளைய தலைமுறையினரை ஆட்டுவிப்பதை பற்றி அறியாதவரா இவர்..???
நாள்தோறும் எத்தனை வழக்குகள் காதல் என்ற ஒன்றை மட்டுமே மையமாய் கொண்டு நிகழ்வதை கண்கூடாக கண்டும் அவ்வழக்கை எடுத்து நடத்தி நீதியை வாங்கி தந்துமிருக்கிறார்,

அப்படிபட்டவரான சத்யமூர்த்திக்கு மகளின் காதலை எண்ணி பயமும் பதட்டமும் சூழ்ந்தாலும் அதனை மறைத்து இப்பொழுது தான் காட்டும் வழிகாட்டுதல் மட்டுமே மகளின் வாழ்வை செம்மைபடுத்துமென நினைத்து கொண்டவரோ அனுவிடம் அமைதியாக பேச துவங்கினார்.

"அனு, உனக்கு வந்திருக்கிற காதலை அப்பா தப்புனு சொல்ல மாட்டேன் மா ஆனா இது காதல் தானானு முதல்ல நாம தெளிவா புரிஞ்சுக்கணும்; ஏன்னா இந்த வயசுல காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசமே தெரியாது; அதுனால உன்னைய நான் காதலிக்க வேணாம்னு சொல்லல இந்த காதலை இப்போதைக்கு கொஞ்சம் மறந்துட்டு படிப்புல கவனத்தை செலுத்து, அடுத்த வருஷம் உனக்கு பப்ளிக் எக்ஸாம் இருக்குல அதுக்கு இப்போல இருந்தே தயாராகு,

அதுமட்டுமில்லாம நீ சொல்ற பையனும் இப்போ +2 படிக்கிறானு சொல்ற இப்போ போய் அவன்கிட்ட நீ காதல்னு சொன்னா அவனோட படிப்புமே பாதிக்கபடும்ல; அதுனால இப்போ நீ நல்லா படி அடுத்த வருஷம் ஸடேட் ரேங்க் வாங்கு அப்புறமும் இதே காதல் உனக்கு இருந்துச்சுனா என்கிட்ட வந்து சொல்லு; அப்போ அப்பாவே உன் காதலுக்கு சப்போர்ட் பண்ணுவேன்; ஆனா அதுவரைக்கும் உன் சீனியர்கிட்ட இதைபத்தி ஒரு வார்த்தை கூட சொல்லகூடாது சரியா" என கேட்க,

தந்தையின் பேச்சையே வேதவாக்காக நினைத்து வாழ்பவளான அனுவோ அவரின் பேச்சில் மனம் தெளிந்தவாறு அவரின் கையில் தனது கையை வைத்தபடியே, "கண்டிப்பா அப்பா, நீங்க சொன்னபடியே இதை நான் சீனியர்கிட்டயும் சொல்லாம படிப்புலயும் நல்லா படிச்சு பர்ஸ்ட் ரேங்க் வாங்கிறேன்" என கூறி சத்யமூர்த்திக்கே சத்தியமளிக்க,

அதனை கேட்டு மகிழ்ந்தவரோ சூழலை சகஜமாக்கும் பொருட்டு, "அனு, அப்பா சொன்னபடி நீ ஸ்டேட் பர்ஸ்ட் வாங்குனா மட்டும் தான் உன் காதலுக்கு சப்போர்ட் பண்ணுவேன்; இல்லனா நானே நம்பியாரா மாறி பிரிச்சு விட்டுருவேன் பார்த்துக்கோ" என கிண்டலடிக்க,

அதற்கு அனுவோ, "அட போப்பா, உன்னால நம்பியார் மாதிரி நடிக்க கூட முடியாது நீ பிரிக்க போறீயா சும்மா காமெடி பண்ணாம கேஸை பாருப்பா" என கூறி அவரின் கண்ணத்தில் இதழ் பதித்துவிட்டு ஓடிவிட செல்லும் தனது மகளையே பாசமாய் பார்த்து கொண்டிருந்தவரோ தனக்கு தலைவலியாய் இருக்கும் கேஸை பார்த்து பெருமூச்சு விட்டபடியே குழப்பத்தில் ஆழ்ந்தார்.

தனது தந்தைக்கு அளித்த வாக்கிற்காகவே தனது காதலை துளியும் வெளிகாட்டாத அனுவோ கார்த்திக்கின் காதல் தூதினை எதிர்பாராததால் தடுமாறிட, பின்னர் சுதாரித்து என்றும் 'நீ என் சீனியரே' என்ற கூற்றில் மறைமுகமாக தனது காதலை உணர்த்த கார்த்திக்கிற்கோ அவளின் சீனியர் என்ற அழைப்பு எப்போதோ செல்ல பெயராய் பிரமோஷன் வாங்கியதை அறியாமல் குழம்பியபடியே சென்றவனோ இன்றும் குழம்பி கொண்டிருக்கிறான்.

இவ்வாறாக கடந்த கால சிந்தனையிலிருந்த அனுவோ அதிலிருந்து விடுப்பட்டவாறே தனது மனதில்,

'உன்மேல காதல் வந்ததுக்கு அப்புறமா நான் வேற யாரையுமே சீனியர்னு கூப்பிடவே இல்ல; அது உனக்காக மட்டுமே நான் வைச்சிருக்கிற ஸபெஷல் வார்த்தை அதுனால தான் நீ எப்பயுமே என்னோட சீனியர்னு சொன்னேன்; இந்த சீனியர்ற வார்த்தை தான் என்னைய அண்ணானு கூப்பிடவிடாம தடுத்துச்சு;
இந்த சீனியர்ற வார்த்தை தான் உங்கிட்ட சகஜமா நெருங்க வைச்சிருச்சு; இப்போ அதே வார்த்தை என்னைய ஸ்டேட் ரேங்க் வாங்குற வெறியை தந்து உன்கூடவே பயணிக்க வைச்சிருக்கு; என்னோட உறுதியை பார்த்த அப்பா நீ படிக்கிற காலேஜிலயே எனக்கும் அப்ளிகேஷனை வாங்கி தந்து உன் காதலை நோக்கி பயணிச்சுக்கோனு சொல்லிட்டாரு;
இனி என்னோட காதல்ல இருந்து உங்களால தப்பிக்கவே முடியாது மை டியர் சீனியர் உன்னோட ஜீனியர் உன்னைய தேடி வந்துட்டேன் இனி நாம சேர்ந்தே நம்ம காதலை தேடுவோம்' என நினைத்தபடியே தனது வகுப்பை நோக்கி சிட்டாய் பறந்து சென்றாள் அனு.

💘💘💘💘💘

இங்கு கார்த்திக் தனது நண்பர்களோடு வகுப்பிற்கு சென்றுகொண்டிருக்க அவனை எதேர்ச்சையாக பார்த்த அவனின் இயற்பியல் ஆசிரியரோ கார்த்திக்கை அழைத்தார்.

"கார்த்திக், இப்போ ஒரு சின்ன ஸடாப்ஸ் மீட்டிங் இருக்குபா அதை நான் அட்டண்ட் பண்ண போறேன்; ஆனா இப்போ எனக்கு பர்ஸ்ட் இயர் கிளாஸ் இருக்கு அவனுங்களை கவனிக்காம விட்டா ஏதாவது சேட்டை பண்ணி ஏழரை இழுத்து விட்டுருவாங்க; அதுனால நீ எனக்கு ஒரு உதவி பண்ணேன், கொஞ்சநேரம் நீ அந்த கிளாஸை கவனிச்சிட்டு இருக்கீயா முடிஞ்சா எதையாவது நடத்த கூட செய்; ஆனா ஸ்டூடண்ட்ஸை சத்தம் போடாம மட்டும் பார்த்துக்கோ ப்பா" என கேட்க,

உடனே கார்த்திக்கின் நண்பர்களோ, "டேய், இப்போ ஸடாப்ஸ் மீட்டிங் ஆ அப்போ நம்ம சாரும் மீட்டிங் போயிருப்பாருல; ஐ ஜாலி கார்த்திக் அப்போ நாங்க கிளாஸுக்கு போறோம் நீ உன்னோட ஆசிரிய பணியை பாரு" என கேலிசெய்தபடி அங்கிருந்து வேகமாய் ஓட அவர்களை பார்த்து சிரித்துகொண்டவனோ ஆசிரியரின் கோரிக்கைக்கு சம்மதித்து முதலாம் ஆண்டு வகுப்பிற்குள் அடியெழுத்து வைத்தான்.

அதேசமயம் இங்கே கிளாஸிற்கு சென்ற கார்த்திக்கின் நண்பர்களோ அவர்களின் வகுப்பிலுள்ள சக நண்பர்களை பார்த்து, "என்னடா, நேத்து பிரஸ்சர்ஸ் டே ஜாலியா என்ஜாய் பண்ணிங்களா; உங்களுகென்ன செமயா கலக்கிருப்பீங்க; ஆனா எங்க நிலமை தான் பாவம் கார்த்திக் அக்காவோட நிச்சய ஏற்பாட்டுக்கு எல்லாத்தையும் ரெடி பண்ண போனதுலயே பிஸியாகிட்டோம்" என தினேஷ் சலித்தபடியே கூறிகொண்டு அமர,

அவனின் வகுப்பு தோழனோ அதைவிட சலித்தபடியே, "அட நீ வேற ஏண்டா வயித்தெறிச்சலை கிளப்புற; நேத்து பிரஸ்சர்ஸ் டே ரொம்பவே மொக்கையா போச்சுடா பர்ஸ்ட் இயர்ஸ் ஸ்டூண்ட்ஸும் அவ்ளோ ஈடுபாடு காட்டல; அதுனால செம போர் டா மச்சான், ஆனா நாங்க அப்படி போரடிக்குதேனு யோசிச்சப்போ ஒருத்தி வந்தா பாரு அவளால தான் நேத்து நிகழ்ச்சியே கலைகட்டிருச்சு; அவளே கொஞ்சநேரம் நிகழ்ச்சியை நடத்தி பாட்டு பாடி சூப்பரா டான்ஸ் ஆடினு ஒரு கலக்கு கலக்கி நம்ம மெயின் ஹால்ல நடந்த கொண்டாடத்தை அரைமணி நேரத்துல பட்டைய கிளப்ப வைச்சிட்டா; சரியான அறுந்த வாலுடா அவ; இப்போ அவதான் நம்ம டிபாராட்மெண்ட்லயே பேமஸான பொண்ணு இந்தா இவதாண்டா அந்த அறுந்தவாலு" என கூறிகொண்டே பிரஸ்சர்ஸ் டேவில் எடுக்கபட்ட சில போட்டோகளையும் வீடியோவையும் காட்ட; அதனை கண்ட கார்த்திக்கின் நண்பர்களோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இங்கே கார்த்திக்கிற்கோ வகுப்பில் நுழைந்ததிலிருந்தே ஏதோ வித்தியாசமான உணர்வு தோன்றிகொண்டே இருக்க; ஒருகட்டத்திற்கு மேல் தனது உள்ளுணர்வின் தூண்டலினால் தலையை நிமிர்த்தி கடைசி இருக்கையை பார்த்தவனின் இதயம் தாறுமாறாக துடித்தது.

யாரின் தரிசனத்திற்காக தவமிருந்தானோ...
யாரின் ஓரவிழி பார்வைக்காக,
ஏங்கி தவித்தானோ...
யாரின் மீது தீராத காதல் வைத்து,
பித்தாய் அலைந்தானோ...
யாரின் காதலுக்காக தேடலோடு காத்திருந்தானோ...
அவளே அவன் கண்ணில் தென்பட்டாள்.

தனது அழகிய வதனத்தில் குறும்பு சிரிப்போடும் கண்களில் அதிகபடியான காதலோடும் குறும்பாய் கார்த்திக்கை பார்த்து கண்ணடிக்க மூச்சு விடவே மறந்து கிறங்கி போனான் சீனியர்.

அப்பொழுது கார்த்திக்கை தேடியும் அவனின் காதல் பற்றிய தகவலை தருவதற்காகவும் ஓடி வந்த நண்பர்களின் கண்ணில் இக்காட்சி பட்டுவிட அதனை கண்டு அகம்மகிழ்ந்தவர்களோ இனி நமக்கு இங்கு வேலையில்லை என்ற எண்ணத்தோடு நண்பனின் காதல் கைகூடிவிடுமென்ற நம்பிக்கையோடும் மகிழ்வாய் அங்கிருந்து
கேண்டினை நோக்கி புறப்பட்டனர்.

இங்கு கார்த்திக்கோ உறை நிலையிலிருந்த விடுபடாமல் கண்ணை கூட இமைக்காமல் அனுவையே பார்த்து கொண்டிருக்க; அதனை கண்ட அனுவோ சீனியரை சுய உணர்விற்கு கொண்டு வருவற்காக தன்னை சுற்றும் எவரேனும் கவனிக்கிறார்களா என நோட்டமிட்டு யாரும் தன்னை கண்டு கொள்ளவில்லையென உறுதிபடுத்தி கொண்டவளோ; சீனியரை பார்த்து தனது உதட்டினை குவித்து பறக்கும் முத்தத்தினை தர; அதில் தனது தலையை உலுக்கி சுயநிலைக்கு திரும்பியவனோ அவ்வகுப்பிலிருந்து வேகமாய் வெளியேறிட இவளும் அவனை பின்தொடர்ந்து ஓடினாள்.

அந்த வகுப்பிலிருந்து வெளியேறியவனின் மனமோ கடிவாளமில்லா குதிரையாக தறிகெட்டு ஓட, அதனை அடக்கும் வழியறியாது வேகமாய் ஓடியவனை தடுத்து நிறுத்தினாள் அனு.

"சீனியர், சீனியர் கொஞ்சம் நில்லுங்க சீனியர்; அட நில்லுங்க சீனியர் இப்போ எதுக்கு சீனியர் ரேஸ்ல ஓடுற மாதிரி வேகமா நடக்குறீங்க; உங்களோட ஜீனியர் முழுசா ஒரு வருஷம் கழிச்சு உங்களை பார்க்க வந்திருக்கேன் என்னைய பத்தி ஒரு வார்த்தை கூட விசாரிக்காம இப்படி ஓடுனா என்ன அர்த்தம்; இதெல்லாம் ரொம்ப தப்பு சீனியர்; போங்க உங்களுக்கு என்மேல பாசமே இல்ல" என முகத்தை சுறுக்கி செல்லமாய் கோபித்து கொண்டவளை பார்த்தவனின் மனமோ அவளை இறுக்கி அணைத்து தனது தவிப்பையும் பாசத்தையும் வெளிபடுத்த துடிக்க அவ்வெண்ணத்தை அடக்கிய அக்கள்வனோ தனது தேவதையை கண்களால் களவாட துவங்கினான்.

பள்ளி பருவத்தில் சிறுபெண்ணாய் குறும்புத்தனதோடு வலம் வந்தவளோ; இன்று சுடிதாரில் அழகிய யுவதியாய் தன் மனதினை ஒரே பார்வையில் வீழ்த்திவிடும் பேரழகியாய் மாறி நிற்பதை கண்டவனின் மனமோ; காதல் வானில் சிறகடித்து பறக்க தன் காதல் மனதினை சிரமபட்டு அடக்கியவனோ அவளிடம் தன்னை இயல்பாக காட்டிகொண்டான்.

"அனு, நான் உன்னைய இங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல நீ எப்படி இங்க பிஸிக்ஸ் மேஜர் எடுத்து படிக்க வந்திருக்க; ஸ்கூல் டைம்ல நீ ஏதோ கம்யூட்டர்ல ஹாக்கிங்ல இருந்து எல்லாமே தெரிஞ்சிகிட்டு கம்பியூட்டர் ஸபெஷலிஸ்ட் ஆக போறனு சொன்ன; அப்படி இருக்கும்போது நீ எப்படி இங்க படிக்க வந்த அப்போ உன்னோட கனவு எல்லாம் அவ்ளோதானா" என இப்பொழுதும் அவளின் மேல் அக்கறை கொண்டவனாகவே வினவ,

தன்மேல் என்றும் அக்கறையோடு இருக்கின்ற கார்த்திக்கின் காதலில் கரைந்தவளோ அதனை மறைத்து கொண்டபடியே அவனிடம், "சீனியர் என் கனவு எல்லாம் அப்படியே தான் இருக்கு; ஆனால் அதை அடைய நான் ஒரு டிகிரி முடிச்சிட்டு போனாலும் முடியும்; இப்போதைக்கு என்க்கு குதிரை மாதிரி ஓடுறதுக்கு இன்ட்ரஸ்ட் இல்ல காலேஜ் லைப்பை என்ஜாய் பண்ணனும்னு ஆசைபட்டேன்; அதான் இங்க ஜாயின் பண்ணேன் நீங்களும் இங்க தானே இருக்கீங்க சோ என்ஜாய்மெண்ட்டுக்கு குறையிருக்காதுனு நினைச்சேன்; நீங்க கவலையேபடாதீங்க என்னோட கனவையும் விட மாட்டேன் காதலையும் விட்டு விலக மாட்டேன்" என கூறியவளோ காதலை மட்டும் முணுமுணுத்தபடியே கூற கார்த்திக்கிற்குள் ஆயிரம் யோசனைகளும் இன்ப அதிர்வுகளும் இருந்தபடியால் அவளின் முணுமுணுப்பு சரியாய் பிடிபடாமல் போனது.

அப்பொழுது கார்த்திக்கை நோக்கி கைநீட்டிய அனுவோ, "சீனியர், இப்போ நம்ம ஸ்கூல்ல படிச்ச மாதிரியே ஒண்ணா படிக்க போறோம் அதுனால நீங்க எனக்கு ஸ்கூல்ல உதவி பண்ண மாதிரியே உதவி பண்ணுவீங்களா; நம்ம எப்பயும் போல சீனியர் ஜீனியரா இருக்கலாமா" என
கைநீட்டி வினவ,

அதனை கேட்ட கார்த்திக்கின் மனமோ இங்கிருக்கும் ஏதாவதொரு சுவற்றிலே முட்டிகொள்ளலாமா என யோசித்து கோபத்தினை வெளிகாட்டும் விதமாக காதிலிருந்து புகையாய் வெளியேற துவங்கியது.

கார்த்திக்கை பொருத்தவரையில் சீனியர் என்ற வார்த்தை அவனிற்கு வினையாய் மாறிய வார்த்தையல்லவா; அவளின் அண்ணா என்ற அழைப்பிலிருந்து தப்பித்துகொள்ள சரணடைந்த வார்த்தை அதுவே அவனுக்கு வினையாகி போனது; எலியிடமிருந்து தப்பித்து புலியிடம் சிக்கிய கதையாக சீனியர் என்ற உறவில் துவங்கிய பந்தம் வாழ்வின் இறுதிவரையிலும் சீனியராகவே முடிந்துவிடுமோ என்ற பயமும் பதட்டமும் அன்று அனு நாம் என்றும் சீனியர் ஜீனியரே என சொல்லியதிலேயே பிறந்துவிட, அவள் கூறிய உட்கருத்தை உள்வாங்காமல் தானாய் ஒரு கருத்தை யோசித்து தன் காதல் கைசேரதோ என ஏங்க வைத்த வார்த்தையல்லவா; இப்பொழுது கார்த்திக்கிற்கு எதிரி என்றால் அஃது சீனியர் என்ற ஒற்றை அழைப்பே ஆகும்; ஒரு சொல் ஒருவனை உயிரோடு கொன்றுவிடுமென்ற கூற்றிற்கு சீனியர் என்ற சொல்லை வெறுக்கும் கார்த்திக்கே உதாரணம் அப்படிபட்ட எண்ணமுடையவனை சீனியர் என
அழைத்தால் என்ன செய்வானோ..???

இவ்வாறு தனது சிந்தையில் முழ்கியிருந்தவனோ தன்னையே குறுகுறுவென பார்க்கும் அனுவின் பார்வையில் சுயம்பெற்றவாறு அவளின் கைகளை பிடித்து குலுக்கியபடி, "கண்டிப்பா அனு, நம்ம இங்கயும் சீனியர் ஜீனியரா இருக்கலாம்" என பல்லை கடித்துகொண்டு வாக்களித்தவனோ இந்த உரையாலுக்கு முற்றுபுள்ளி வைக்கும்
பொருட்டு அவளிடம்,

"அனு, இன்னைக்கு ஈவ்னிங் என்னோட அக்காவுக்கு நிச்சயத்தார்த்தம் வைச்சிருக்கோம்; என்னோட பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன் நீயும் வரணும்னு ஆசைபடுறேன் வருவேல" என கண்களில் டண் கணக்கு ஏக்கத்தோடு வினவ அதனை கேட்டதும் ஆயிரம் வாட்ஸ் பல்பாய் முகத்தில் பிரகாசத்தை வெளிபடுத்திய அனுவோ,

"கண்டிப்பா சீனியர், நான் வராமலா சரியான டைமிங்கு வந்து கலக்கிடுறேன்" என வாயெல்லாம் பல்லாக கூற அவளை விசித்திர ஜந்துவை போல பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கார்த்திக்.

ஆனால் அவனின் சிந்தையிலோ ஆயிரம் எண்ணங்கள் நிரம்பி வழிய அவளின் உருவத்தில் மட்டுமல்லாது நடவடிக்கையிலும் பல மாற்றம் இருப்பதாய் உணர்ந்தவனுக்கு அது காதல் என உரைக்காமல் போனது தான் விசித்திரமான விதியின் தந்திரமோ..!!!

கார்த்திக்கிடம் சிரித்து கொண்டே சம்மதித்த அனுவோ தன் மனதிற்குள், 'அனு, உனக்கு பம்பர் ஆஃபர் கிடைச்சிருக்கு டி; கார்த்திக் அக்கா நிச்சயத்துக்கு போயிட்டு உனக்கும் கார்த்திக்கும் நிச்சயம் குறிக்கிற அளவுக்கு பர்பாமன்ஸ் பண்ணிடு; இந்த வாய்ப்பை மட்டும் நழுவ விட்டுறாத; இதை யூஸ் பண்ணி கார்த்திக்கோட மொத்த பேமிலியையும் இம்பிரஸ் பண்ணிடணும் சரியா' என தன் மனதில் நினைத்து கொண்டவளோ அங்கிருந்து குஷியாய் ஓடினாள்.



காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
நிச்சயதார்தத்தில் ஏதேனும்
ட்விஸ்ட் இருக்குமோ.
 

பிரிய நிலா

Well-known member
Member
பாரேன் இந்த அனுப் பிள்ளைய... கார்த்திக்கிற்கு புரியுமா அனுவின் காதல்...
சூப்பர் சிஸ்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி..
 

Nancy mary

✍️
Writer
பாரேன் இந்த அனுப் பிள்ளைய... கார்த்திக்கிற்கு புரியுமா அனுவின் காதல்...
சூப்பர் சிஸ்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி..
ஆமா நமக்கே டிவிஸ்ட் வைக்குறாளே😌
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom