• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 20

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம் -20❤️

(PRE FINAL)

கார்த்திக்கிற்கு அனுவின் செயல் பெரும் இன்ப அதிர்ச்சியாய் இருக்க தான் காண்பது கனவா இல்லை நினைவா என்னும் குழப்பத்தில் சிக்கி தவித்தவனோ அதிலிருந்து மீளமுடியா நிலையில் உறைந்து போயிருந்தான்.

அப்பொழுது அந்நிகழ்வு நிஜம் என உணர்த்தும்படியாக நண்பர்கள் எழுப்பிய கூச்சலிலும் அனுவின் இறுகிய அணைப்பிலும் உண்மை நிலவரத்தினை உணர்த்தவனோ,

தனது கைவிட்டு சென்றதாய் எண்ணிய பொக்கிஷம் மீண்டும் கிடைத்த மகிழ்வோடும் இனி அதனை இழக்க மாட்டேனென்ற உறுதியோடும் அனுவை இறுக்கி அணைத்து கொண்டான்.

கார்த்திக்கின் செயலை கண்ட நண்பர்களோ அதிர்ச்சியில் வாயை பிளக்க உடனே தினேஷோ, "மச்சி, இன்னும் கொஞ்சநேரம் நம்ம இங்க இருந்தோம்னு வையேன் அப்புறம் இவனோட காதலுக்கு நம்மல வாட்ச்மேனா மாத்துனாலும் மாத்திடுவான்; அதுனால இவனுங்க டூயட் பாடிட்டு கிளம்பட்டும் நம்ம நடையை கட்டிடுவோமா" என கேட்க அதனை கேட்டு சிரித்த மற்ற நண்பர்களும் அங்கிருந்து நைசாக நழுவினர்.

இங்கு கார்த்திக்கோ சிறிது நேரத்திற்கு பிறகு தனது சுற்றுபுறத்தை உணர்ந்தபடியே அனுவை தன்னிடமிருந்து விலக்க,

அதுவரை காதலில் திளைத்திருந்தவளின் மனதினை படமெடுத்து காட்டுவதை போல அகத்தின் மறைந்திருந்த காதலின் அழகு முகத்தில் செவ்வானமாய் ஜொலித்தது.

அதனை கண்டு புன்னகைத்த கார்த்திக்கோ அனுவை அழைத்துகொண்டு அருகிருந்த ரெஸ்டாரண்டிற்கு சென்றான்.

அங்கு சென்றவனோ காதலர்களை காதலில் லயிக்க செய்யும் காபியை நாடாமல் காதலியின் மனம் லயிக்கும் லெமன் ஜீஸினை ஆடர் செய்ய,

அதனை கவனித்த அனுவோ, "சீனியர், எனக்கு லெமன் ஜீஸ் பிடிக்கும்றதை நீங்க இன்னும் மறக்கலயா" என கேட்க,

அதற்கு கார்த்திக்கோ, "உன் விழியசைவை கூட நினைவிலிருந்து நீங்காமல் பாதுகாக்கும் நான் உன் விருப்பத்தை மறப்பேனா" என கண்ணடித்து வினவிட இதனை கேட்ட அனுவோ கார்த்திக்கின் காதலில் மொத்தமாய் கரைய துவங்கினாள்.

அவனின் காதலில் மொத்தமாய் உருகிய அனுவின் காதல் ஆராய்ச்சியில் அனுஅனுவாய் இறங்க துவங்கினான் கார்த்திக்.

"அதுசரி அனு, நீ எப்ப இருந்து என்னைய காதலிக்கிற, என்மேலுள்ள காதலை நீ எப்போ உணர்ந்த; எல்லாத்தையும் கொஞ்சம் தெளிவா சொல்றீயா தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு" என கன்னத்தில் கைவைத்து கொண்டு குறும்பாய் வினவிட,

அதற்கு அனுவோ அழகாய் முறுவலித்தபடியே தனது மனதின் ஆழமாய் புதைந்த காதல் பக்கங்களை
புரட்ட துவங்கினாள்.

அவளின் காதலை விவரித்த அதேநொடி கார்த்திக்கின் முகமெங்கும் பல்வேறு முகபாவங்களை தத்தெடுத்துகொள்ள, இறுதியில் அவனின் மனமோ காதலுக்காக காத்திருந்து தந்தையின் நம்பிக்கையும் பெற்ற அனுவின் காதலை எண்ணி பிரமிப்பால் நெகிழ்ந்தது.

அதே மகிழ்வோடு அனுவின் கையை பிடித்தவனோ, "உன்னோட காதல் கிடைக்காதானு எத்தனை நாள் ஏங்கி தவிச்சிருக்கேனு தெரியுமா அனு, என்னைகாவது நீ என்னைய தேடி வர மாட்டீயானு ஒவ்வொரு நொடியும் காத்திருந்தேன்; உன்னை கட்டாயபடுத்தி காதலை வரவைக்காம என் உணர்வால நீ காதலை உணரணும்னு நினைச்சேன்; என் ஆசைபடியே நீயும் காதலிக்க ஆரம்பிச்சிட்ட இப்போ இந்த உலகத்துலயே சந்தோஷமான ஆளுனா அது நானா தான் இருப்பேன்" என உணர்ச்சிபிடியில் காதலோடு பேச,

அவனின உணர்வுபூர்வமான மனநிலையை மாற்றும் பொருட்டு அனுவோ, "ஆனா நான் உங்கமேல ரொம்பவே கோபமா இருக்கேன் சீனியர், உங்க பின்னாடியே காதலோட சுத்தி வர என்னைய விட்டுட்டு மாமா பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கீங்க; இதுல உங்க பிரண்ட்ஸும் அதை உறுதிபடுத்துற மாதிரி பேசுறாங்க இதுதான் நீங்க என்மேல வைச்ச காதலா" என கேலி கலந்த கோபத்தோடு கேட்க,

அதனை கேட்டு சிரித்தவனோ, "அட லூசே, என்னோட மனசுல எப்பயுமே நீ மட்டும் தான் நிரந்தரமா இருப்ப; அவ சும்மா என்னைய வம்பிழுக்க சுத்துறா இவனுங்களும் என்னைய கலாய்க்க இப்படி பேசுனாங்க; அதையெல்லாம் உண்மைனு நம்பிடுவீயா, ஆனா ஒண்ணுடி என் காதலுக்கு எதிரிங்க வெளியில இருந்து வர வேணாம் பிரண்ட்ஸுற பேர்ல கூடவே இருக்கானுங்க; எப்பயும் ஏதாவது எடக்குமடக்கா பேசி நமக்குள்ள சண்டை இழுத்து விடுறதையே பொழப்பா வைச்சிருக்கானுங்க" என நொந்தபடி கேலியாய் பேசிட,

அதனை கேட்ட அனுவோ வாய்விட்டு சிரிக்க அச்சிரிப்பில் கார்த்திக்கும் கலந்து கொண்டான்.

அப்பொழுது இவர்கள் ஆடர் செய்த லெமன் ஜீஸும் வந்துவிட அதனை குடித்த கார்த்திக்கோ அனுவிடம், "அதுசரி அனு, உன் அப்பா மனசுல நான் இடம் பிடிச்ச மாதிரி என் குடும்பத்துல இருக்கிறவங்க மனசுலயும் நீ இடம்பிடிக்க வேணாமா; அதுக்காக நம்ம ஒரு விஷயம் பண்ணுவோமா; நாளைக்கு நமக்கு லீவ் தான அதுனால நீ என் வீட்டுக்கு வந்து எல்லாரோடயும் பழகி எல்லாரையும் இம்பிரஸ் பண்ணுறீயா" என கேட்க,

அதற்கு அனுவோ, "சீனியர், நீங்க ரொம்பவே லேட்டு போங்க; நான் எல்லாம் உங்க அக்காவோட நிச்சயத்துலயே எல்லாரையும் இம்பிரஸ் பண்ணிட்டேன்; என்ன ஒண்ணு உங்க அக்கா தான் அவங்க ஆளை சைட்டிக்கிறதுல என்னைய கவனிக்காம போயிட்டாங்க இல்லனா அவங்களையும் அப்போவே கரெக்ட் பண்ணிருப்பேன்; அதுனால என்ன நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்து எல்லாரையும் அசத்திடுறேன்" என கூறி கண்ணடிக்க,

அவளின் பேச்சை கேட்டு ஆச்சர்யபட்டவனோ, "அடிப்பாவி, நீ என்னைய மட்டும் தான் இம்பிரஸ் பண்ணி காதலிக்க வைச்சனு பார்த்தா குடும்பத்தையே இம்பிரஸ் பண்ணிருக்கீயே சரியான கேடி பொண்ணுடி நீ; கண்டிப்பா அக்காவுக்காக மட்டுமாவது வீட்டுக்கு வா சரியா" என கேட்க அதற்கு வேகமாய் தலையாட்டிய அனுவின் தலையில் செல்லமாய் கொட்டியவனோ அவளை அங்கிருந்து அழைத்து செல்ல,

இவர்களின் காதலில் தித்தித்த இயற்கையோ அச்சூழலை மேலும் தித்திப்பாக்க மழையினை பொழிந்திட, அம்மழையோடு காதல் மழையிலும் நனைந்தவர்கள் அச்சூழலை ரசித்தபடி காதல் கீதம் பாடியவாறே கைகோர்த்து நடை பயின்றனர்.

💘💘💘💘💘

இங்கு சத்யமூர்த்தியோ டூர் சென்று திரும்பாத மகளின் வரவிற்காக தவித்து கொண்டிருக்க, அப்பொழுது அவருக்கு சேகர் ஐ பி எஸ்ஸிடமிருந்து அழைப்பு வந்தது.

அதனை ஏற்ற சத்யாவை உடனே சந்திக்க வேண்டுமென சேகர் ஐ பி எஸ் கேட்டுக்கொள்ள அதன்படி சேகர் ஐ பி எஸ்ஸின் வீட்டிற்கே சென்ற சத்யாவோ அவரிடம் தன்னை வரவைத்தற்கான காரணத்தை வினவினார்.

"சார், ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு வர சொன்னீங்களே என்ன விஷயம் சார்" என சத்யமூர்த்தி சேகர் ஐ பி எஸ்ஸிடம் கேட்க,

அதற்கு சேகரோ, "அது ஒண்ணுமில்ல சத்யா சார், நம்ம இரண்டு பேருமே ஒண்ணா சேர்ந்து போராடுன வினோத் கேஸ் விஷயமா தான் பேச கூப்பிட்டேன்" என கூறியவரோ சிறிதுநேர தயக்கத்திற்கு பிறகு மனதினை திடபடுத்திகொண்டு பேச துவங்கினார்.

"எனக்கு வினோத்தோட இறப்பு ஆரம்பத்துல நிம்மதியா இருந்தாலும் அது சம்மதமா கொஞ்சநாள்லயே பல சந்தேகங்கள் வர ஆரம்பிச்சிச்சு; அதை உறுதிபடுத்துற மாதிரி வினோத்தோட இறுதி சடங்குல மினிஸ்டர் தம்பியும் காளியும் கொஞ்ச நேரம் காணாம போனாங்க; அதுனால இந்த மரணத்தை பத்தி நான் அன்அபிசியலா விசாரிக்கலாம்னு முடிவு பண்ணி விசாரிச்சப்போ தான் வினோத் உயிரோட இருக்கிற விஷயமே தெரிய வந்துச்சு" என கூற,

அதனை கேட்டு அதிர்ந்த சத்யாவோ, "என்ன சார் சொல்றீங்க, இது எப்படி சாத்தியமாகும்; அவன் உயிரோட இருக்கானா, எங்க இருக்கா சார்; அதை எப்படி நீங்க கண்டுபிடிச்சீங்க" என
கேள்வி மேல் கேள்வி கேட்க,

அதற்கு பொறுமையாய் விளக்கமளித்த சேகரோ, "சார், நான் சொன்னமாதிரி மருதநாயகமும் காளியும் சேர்ந்து தான் சதி பண்ணிருக்காங்க; அவங்க வினோத்தோட அடையாளத்தையே மாத்தி வெளிநாட்டுக்கு தப்பிக்க வைச்சிட்டு அவன் இறந்து போன மாதிரி ரிப்போர்ட்டையும் மாத்திட்டாங்க; இதுக்கு போலிஸ்ல இருந்தும் யாரோ சப்போர்ட் பண்ணிருக்காங்க; இது சம்மந்தமா எனக்கு ஒரு குளு கிடைச்சிருக்கு அதைவைச்சு தான் அடுத்து மூவ் பண்ண போறேன்; அதுக்கு உங்க உதவியும் தேவைபடுது அதான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்றேன்" என கூறியவரோ மேலும்,

"இந்த விஷயம் சம்மந்தமா ஒரு மூணு நாள் நான் இங்க இருக்க மாட்டேன் சார், எப்படியாவது இந்த தடவை வினோத்தை பிடிச்சு தண்டனை வாங்கி தந்திடணும்; இதுல அந்த மாஸ்டர் மைண்ட் வேற எனக்கு ஒருபக்கம் பெரிய குடச்சலா இருக்கான் எல்லாத்தையும் எப்படி சமாளிப்பேனோ தெரியல சார்" என புலம்பிட,

அப்பொழுது அவருக்கு ஆறுதல் கூறிய சத்யமூர்த்தியோ, "உங்களுக்கு நான் என்ன உதவி சார் பண்ண முடியும்; இது சம்மந்தமா என்ன க்ளு கிடைச்சிருக்கு" என வினவிட,

அதற்கு சேகர் ஐ பி எஸ்ஸோ, "நான் கேட்கிற உதவி என்னனா, வினோத்தை ஜெயிலுக்கு கூட்டிட்டு போன போலிஸ் வேன் வெடிச்சு அதுல போன குற்றவாளிங்க இறந்துட்டாங்க, இதைபத்தி நீங்க கோர்ட்ல பொதுநல வழக்கு பைல் பண்ண முடியுமா; அதன்மூலமா அந்த விபத்து கேஸ் எந்த நிலைமையில இருக்குனு கேட்டும் இதுமாதிரி திரும்ப நடக்ககூடாதுனு வலியுறுத்துற மாதிரியும் பொது நல வழக்கு பதிவு பண்ண முடியுமானு பாருங்க; அது முடியும்னா நான் சொல்லும்போது நீங்க பொதுநல வழக்கு போடுங்க; அப்போ என்கிட்ட இதைபத்தி விசாரிக்க சொல்லி ஆடர் போடுவாங்க, அதைவைச்சு நம்ம அடுத்து மூவ் பண்ணலாம்" என சேகர் ஐ பி எஸ் சத்யமூர்த்தியிடம் உதவி கேட்க,

அவரின் ஆலோசனை சரியாக இருப்பதால் சத்யமூர்த்தியும் உதவி செய்ய சம்மதித்தார்.

அப்பொழுது சேகர் ஐ பி எஸ்ஸிடம் இவ்வழக்கில் கிடைத்த குளுவை பற்றி கேட்க,

அதற்கு அவரோ, "எனக்கு மருதநாயகத்து மேல எழுந்த சந்தேகத்தால அவரையும் காளியையும் எல்லா வகையிலயும் கண்காணிச்சு அவங்க போன் கால்ஸை கூட டிரேஸ் பண்ணேன்; ஆனா அவங்க ரொம்பவே கிரிமினலா சேட்டிலைட் போனை யூஸ் பண்ணிகிட்டு தகவல்களை பரிமாறிகிறதும் பேசிக்கிறதுமா இருந்திருக்காங்க; ஆனா எப்பயுமே திருட்டுதனம் பண்றவங்க ஏதாவது ஒரு தடயத்தை விட்டுட்டு போவாங்கல பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்னு சொல்லுறமாதிரி இவங்களும் மாட்டிகிட்டாங்க" என கூற,

அதனை கேட்டு ஆச்சர்யபட்ட சத்யமூர்த்தியை பார்த்தபடியே மேலும் தனது பேச்சினை தொடர்ந்தார்.

"ஒருநாள் வினோத் நல்ல போதையில காசு கேக்குறதுக்காக மருதநாயகத்துக்கு போன் பண்ணிருந்தான், அவனோட கெட்ட நேரம் அதை அவன் நார்மலான கால்லா பண்ணிட்டான்; அவங்களோட போன் கால்ஸை டிராக் பண்ணுறது வேஸ்ட்னு தெரிஞ்சாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அதை விடாம தொடர்ந்து செஞ்சிட்டு இருந்தேன் அப்படிதான் அவங்க பேசுனதை கிளியரா கேட்க முடிஞ்சது; அதுமூலமா வினோத் இப்போ மறைஞ்சிருக்கிற இடமும் தெரிஞ்சிடுச்சு"

"ஆமா சார், இப்போ வினோத் மலேசியாவுல தான் இருக்கான்; அவனை பிடிக்க மலேசியன் போலிஸ்கிட்டயும் உதவி கேட்டிருக்கேன் அவங்க உதவி செய்ய சம்மதிச்சா அடுத்த நிமிசமே அவனை பிடிச்சு சட்டபடி தண்டிச்சிடலாம்" என கூற

அவரின் பேச்சை கேட்ட சத்யமூர்த்திக்கும் சிறிது நம்பிக்கை பிறக்க வினோத்தை தண்டித்துவிட வாய்ப்பிருக்கிறதென எண்ணி மன உறுதியோடு இருந்தார்.

💘💘💘💘💘

இங்கு மலேசியாவில் வினோத் அவனிற்காக ஏற்படுத்தி தந்த சொகுசு பங்களாவில் சந்தோஷமாய் விசிலடித்தபடியே தொலைகாட்சியில் ஓடும் பாடலை ரசித்து கொண்டிருந்தவனோ மருதநாயகத்திற்கு
போன் செய்தான்.

"சித்தப்பா, எனக்கு இப்போ அவசரமா செலவுக்கு பணம் தேவைபடுது அதுனால நீங்க உடனே எனக்கு ஒரு லட்சம் மலேசியன் ரிங்கட் அனுப்பி வைங்க" என கேட்க அதனை கேட்டு அதிர்ச்சியான மருதநாயகமோ,

"டேய், உன் மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க; கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான உனக்கு தேவையான பணத்துல இருந்து எல்லாத்துக்குமே ஏற்பாடு பண்ணேன்; இப்போ என்னனா மறுபடியும் வேணும்னு கேட்குற அதுக்குள்ள எல்லாத்தையும் காலி பண்ணிட்டீயா" என சீற்றமாய் சீற,

அதனை கேட்ட வினோத்தோ, "இங்க பாரு சித்தப்பு, நீ அனுப்புற பணத்தையெல்லாம் என்னால கொஞ்சநாள் கூட தாக்குபிடிக்க முடிய மாட்டேங்குது; இதுல மறுபடியும் கேட்டா திட்டுற ஒழுங்கா எனக்கு பணத்தை அனுப்பிவிடு; இல்லனா நான் என்ன பண்ணுவேனே தெரியாது" என்று கூறி மிரட்டினான்.

வினோத்தின் மிரட்டலை கேட்டு கோபமடைந்தவரோ, "இப்போ தாண்டா தெரியுது உன்னோட அப்பன் உன்னால பிரச்சனை வரப்போ எல்லாம் ஏன் விலகிடுறான்னு அவனுக்கு அவனோட அரசியல் வாழ்க்கை தான் முக்கியம் அதுமட்டும் இல்லாம நீ இடத்தை குடுத்தா மடத்தை கேக்குற ஆளு அதான் உன்னைய என்கிட்ட பார்த்துக்க சொல்லி தண்ணீ தெளிச்சு விட்டுட்டான் போல" என கூறியவரோ வேறு வழியில்லாததால் அவனின் பேச்சிற்கு சம்மதித்தார்.

"சரிடா, நான் உனக்காக பணத்தை அனுப்புறேன் ஆனா அதுக்கு கொஞ்சம் டைமாகும் அதுவரை இப்போ நான் உனக்காக உச்சகட்ட போதையை ஏத்துற போதை பொருளை நீ கேட்டதுக்காக கஷ்டபட்டு தில்லுமுல்லு பண்ணி அனுப்பி வைச்சிருக்கேன்; அதை வைச்சு என்ஜாய் பண்ணு சரியா" என சிரித்துகொண்டே கூற,

அதனை கேட்டவனின மனதின் சந்தோஷமோ எல்லையை கடந்தது.

"வாவ் சித்தப்பு, நீங்க உண்மையாவே வேற லெவல் போங்க எவ்ளோ கிரிமலா தில்லுமுல்லு பண்ணி எல்லாத்தையும் பக்காவா முடிக்கிறீங்க; என்னோட மிக பெரிய ஆசையே எதிர்காலத்துல உங்களை மாதிரி கிரிமினலா நடந்துகிட்டு பெரிய ஆளா ஆகுறது தான்; கண்டிப்பா நான் அப்படிபட்ட நிலைக்கு முன்னேறி காட்டுவேன்" என கூறி சபதமெடுத்தவாறே போனை கட் செய்ய அப்பொழுது தீடிரென காலிங் பெல் அடித்தது.

அதனை கேட்டவனோ "என்னதிது இப்போதான் சித்தப்பு நமக்கு தேவையானதை அனுப்பி வைச்சிருக்கிறதா சொன்னாரு அதுக்குள்ள காலிங் பெல் அடிக்குது அவ்ளோ பாஸ்டாவா டெலிவர் ஆகுது இப்படி வேகமா டெலிவர் ஆகுறதா இருந்தா செமயா இருக்குமே" என குதூகலித்தவாறே வாசலுக்கு சென்று கதவினை திறக்க போக அங்கு அவனுக்கான ஆபத்து வழிமேல் விழி வைத்து காத்திருந்தது.



காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
வினோத் உயிரோடு இருக்கானா.
அப்போ மறுபடி அவனை எப்படி பிடித்தது தண்டனை வாங்கி கொடுக்க.
தண்டனை கூடாது.
கொன்று விடனும்.
 

பிரிய நிலா

Well-known member
Member
சூப்பர் சிஸ்... கார்த்திக் இப்போ தானே காலேஜ் அதுக்குள்ள இப்படி டெவலப் ஆயிட்டான்.. கலக்குறான் பையன்..

ப்ரீ பைனலா.. கதை முடியப் போகுதா..
 

Nancy mary

✍️
Writer
வினோத் உயிரோடு இருக்கானா.
அப்போ மறுபடி அவனை எப்படி பிடித்தது தண்டனை வாங்கி கொடுக்க.
தண்டனை கூடாது.
கொன்று விடனும்.
ஓகே சகி சிறப்பா தரமா பண்ணிடலாம்🤗
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
 

Nancy mary

✍️
Writer
சூப்பர் சிஸ்... கார்த்திக் இப்போ தானே காலேஜ் அதுக்குள்ள இப்படி டெவலப் ஆயிட்டான்.. கலக்குறான் பையன்..

ப்ரீ பைனலா.. கதை முடியப் போகுதா..
ஆமா சகி அடுத்த எபியோட கதையை மொத்தமா முடியுது எபிலாக் கிடையாது😅😅🏃🏃🏃
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
ஆமா சகி அடுத்த எபியோட கதையை மொத்தமா முடியுது எபிலாக் கிடையாது😅😅🏃🏃🏃
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
சீக்கிரமா முடியற பீல் வருது.. எபிலாக் இல்லைனா அடுத்த கதையை சீக்கிரமா தொடங்கனும்... டீல் ஓ.கேவா..
 

Nancy mary

✍️
Writer
சீக்கிரமா முடியற பீல் வருது.. எபிலாக் இல்லைனா அடுத்த கதையை சீக்கிரமா தொடங்கனும்... டீல் ஓ.கேவா..
ஆத்தி இந்த டீலுக்கு நான் வரல😳🏃🏃🏃
என்னோட இரண்டாவது கதை இப்போதான் எழுதிட்டு இருக்கேன் அது எப்போ ரீலிஸ் ஆகும்னு எனக்கே தெரியல😅😅😅😅😅
 

பிரிய நிலா

Well-known member
Member
ஆத்தி இந்த டீலுக்கு நான் வரல😳🏃🏃🏃
என்னோட இரண்டாவது கதை இப்போதான் எழுதிட்டு இருக்கேன் அது எப்போ ரீலிஸ் ஆகும்னு எனக்கே தெரியல😅😅😅😅😅
ஐயோ சிஸ் ஓடாதீங்க... எழுதிட்டு இருக்க கதையோட சீக்கிரமா என்ட்ரி கொடுங்க.... மீ பாவம்...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom