• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 15

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம்-15❤️

பள்ளி வளாகமே அதிர்ந்து நடுங்கும்படியாக மாணவர்களின் உற்சாக கூக்குரலும் ஆரவாரமும் விண்ணை எட்ட,
போட்டிகளும் ஒவ்வொன்றாக ஆரம்பமானது.

ஒவ்வொரு போட்டிக்காகவும் மாணவர்கள் தனித்தனியாக பிரிந்து செல்ல முதல் போட்டியாக ரங்கோலி, ஓவியம், பொது அறிவு மற்றும் கவிதை போட்டி என நான்கு போட்டிகளும் வெவ்வேறு இடத்தில் நடைபெறுவதாய் அறிவிப்பு வர அப்போட்டிக்கு பெயழித்த மாணவர்கள் பங்கேற்க மற்ற போட்டிக்கான மாணவர்களும் பார்வையானரான மாணவர்களும் கரகோசம் எழுப்பி உற்சாக ஆரவாரமிட்டனர்.

இதனிடையே சங்கர் தன்னை சுற்றியுள்ள உணவு ஸடாலை கவனிக்ககூடாதென கட்டுகோப்பாய் மனதை ஒருநிலைபடுத்த தினேஷோ அவனின் நிலையை எண்ணி வயிறு குலுங்க சிரித்தான்.

அதனை கண்டு கோபம் கொண்ட சங்கரோ, "டேய், என் நிலமையை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா நானே சாப்பாடு போட்டிக்காக இப்போவே வயிறை காய போடுறேன் ஆனா நீ என்னனா என்னைய ஊக்கபடுத்தாம சிரிச்சு கிண்டல் பண்ற இதெல்லாம் நல்லா இல்லை பார்த்துக்கோ" என கூற அதற்கு தினேஷோ,

"மச்சி, இவனுங்க நடத்துற சாப்பாடு போட்டிக்கு நீ சாப்பிட வேண்டியது வெறும் பண்ணும் வாழைபழமும் தான்; இதை திண்ண ஏண்டா பட்டினி கிடக்கணும் உன்னால இதைகூட சாப்பிட முடியாதா என்ன; மலையையே மல்லாக்க முழுங்குறவன் டா நீ, இதுக்கு போய் கலங்கலாமா" என கூற,

அவனின் பேச்சின் தெளிந்தவனோ, "நீ சொல்றதும் சரிதாண்டா; இப்போ பாரு எல்லா ஸ்டாலையும் எப்படி வெளுத்து கட்டிட்டு வரேன்னு பாரு" என கூறி ஓட,

"டேய், நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் டா; நீ அதிகமா சாப்பிட்டா பண்ணு கூட திங்க முடியாது நில்லுடா" என கத்தி கொண்டே தினேஷும் அவன் அளவில்லாமல் சாப்பிட கூடாதென பின்னாடியே ஓடினான்.

அங்கு கார்த்திக்கிடம் வந்த அவனின் வகுப்பு மாணவி பீரித்தியோ, "கார்த்திக், இப்போ நடந்த ரங்கோலில நான்தான் ஜெயிக்க போறேன் நினைக்கிறேன் ஏண்ணா என்னோட ரங்கோலி அளவுக்கு வேற யாருமே பெஸ்ட்டா பண்ணல தெரியுமா" என அவளின் பெருமையை பறைசாற்றியே கார்த்திக்கின் மனதில் இடம் பிடிக்க நினைக்க,

அப்பொழுது சரியாக அங்கே வந்த அனுவோ, "சீனியர், ரங்கோலி போட்டியில நான் நல்லா பண்ணிட்டேனே இதுல நான் ஜெயிப்பேனானு தெரியல ஆனா இதுவும் புது வகையான அனுபவமா இருந்துச்சு" என உற்சாகமாய் கூறிகொண்டே கார்த்திக்கை அங்கிருந்து இழுத்து செல்ல இதனை பார்த்த பீரித்திக்கு கோபம் ஏக்கர் கணக்கில் நிரம்பி வழிந்தது.

பீரித்திக்கு மட்டுமல்ல அப்பள்ளியிலிருந்த நிறைய பெண்களுக்கு கார்த்திக்கே கனவு நாயகனாக திகழ, மேலும் பள்ளியில் பல பொறுப்புகள் அவனிடம் ஒப்படைக்கபடுவதாலும் அவனிடம் நட்புறவாடவும் காதல் வலை வீசவும் தோழிகள் பலரும் காத்திருக்க கார்த்திக்கிற்கோ இத்தகவல்கள் ஏதும் அறியாது தனது படிப்பிலே கவனமாய் இருப்பான்.

ஆனால் அனுவின் தரிசனத்திற்கு பிறகு பள்ளியில் பல இடங்களில் இவர்களை ஒன்றாய் பார்த்த மாணவிகளுக்கு அனுவின் மேல் பொறாமையும் கார்த்திக்கின் காதல் கிடைக்காதா என்ற ஏக்கமும் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்தும் அதுபோலவே பீரித்திக்கும் குத்த விதியோ அவளின் தலையிலே கொட்டி நீ குருப் ஆர்டிஸ்ட் என நினைவுபடுத்தி வழியனுப்பியது.

இன்டர் ஸ்கூல் காம்படிசன் என்றாலே கார்த்திக் பள்ளிக்கு என்றும் போட்டியாய் திகழ்வது ஒரு தனியார் ஆண்கள் பள்ளி தான் அதுபோலவே இன்று நடைபெறும் எல்லா போட்டியிலும் அப்பள்ளியும் சளைக்காமல் போட்டி போட்டு பங்கேற்றனர்.

ரங்கோலியில் கூட பெண்களுக்கே சவால் விடும் வகையில் போட்டியிட்டவர்களோ அனைத்திலும் வெற்றியடைய தீயாய் முன்னேறினர்.

அவர்களின் அக்கினி முயற்சிக்கு முன்னே டேவிட் குழுவினர் சட்னியாகி கொண்டிருக்க, கார்த்திக்கின் நண்பர்களோ பள்ளி மானம் காக்க அயராது உழைத்தனர்.

கவிதை மழையில் தூரலாய் ரசிக்க வைத்த ஆண்கள் பள்ளிக்கு இணையாக ரவியும் சாரலாய் கவிமழை பொழிய பொது அறிவில் விக்னேஷும் சவால் விட்டு வீழ்த்த ஆண்கள் பள்ளிக்கு வெற்றி என்ற பேராசை தலைக்கேறி மதம் கொண்ட களிறாய் போட்டியிட்டனர்.

உணவு போட்டியில் வயிறு மூட்ட திண்ற சங்கரோ நெஞ்சடைக்க உணவினை அள்ளி தெளிக்க அவனுக்கு இணையான பயில்வானான ஆண்கள் பள்ளி மாணவனோ அசால்டாய் போட்டியை வெற்றி பெற பார்த்தான்.

"சங்கர், உன்னால முடியும் டா விட்டுறாத ஸ்கூல் மானத்தை காப்பாத்திடு" என தினேஷ் கத்த பள்ளி தலைமையாசிரியலிருந்து ஆசிரியர்கள் வரை வேண்டுதல்களோடு காத்திருக்க,

தனது கடைசி துண்டு பண்ணை வாயில் திணித்து வெற்றி வாகை சூடினான் சங்கர்.

எல்லா போட்டிகளும் நிறைவுற்று முடிவை நிர்ணயிக்கும் போட்டியான பாட்டு போட்டி வர கார்த்திக் குழுவும் ஆண்கள் பள்ளியும் டேவிட் குழுவும் தேர்வாக கார்த்திக் குழுவில் அனுவும் இருந்தாள்.

ஆம்! அனைத்து போட்டியிலும் இடம்பெற பெயரளித்தபோது பாட்டு போட்டியில் அனுவோடு சேர்ந்து பாடுவதாய் கார்த்திக் பெயரளிக்க அனுவோ தனது விடாமுயற்சியால் பங்கேற்ற நான்கு போட்டியிலும் வெற்றியடைந்து முடிவு போட்டிக்கு வந்தடைந்தாள்.

இப்பொழுது பாட்டு போட்டிக்கான அறிவிப்பு துவங்க டேவிட் குழு அனைத்து போட்டியிலும் தத்தளித்து வந்ததால் சோர்ந்து போய் மேடையேறினர்.

தங்களுடைய பள்ளி மாணவர்களை விரட்டியடித்தால் வெற்றி பெறலாம் என எண்ணிய எண்ணத்தில் பேரிடியை இறக்கிய ஆண்கள் பள்ளியோ இவர்களுக்கு தக்க பதிலடியும் தந்ததில் வெகுவாய் சோர்ந்து போய் பாட ஆரம்பிக்க,

அதற்கடுத்த நொடியே தக்காளி முட்டையால் அம்மேடை அலங்கரிக்கபட்டது எல்லாமே ஜீயான் கேங்கான டேவிட் கேங்கின் கொடூரமான குரல் வளத்தின் மகிமைக்கு கிடைத்த பரிசாகும்.

பாட்டு போட்டியை பொறுத்தவரை மாணவர்கள் அதிகபட்சம் இரண்டு பாடலும் குறைந்தபட்சம் ஒரு பாடலும் பாடலாம்.

அவ்வகையில் ஆண்கள் குழு மேடையேறி கர்நாடக இசையிலிருந்து இன்று டிரண்டிங்கில் இருக்கும் சினிமா பாடல் வரை என இரண்டு பாடல்கள் பாடி பார்வையாளர்களிலிருந்து நடுவர்கள் வரை அனைவரையும் கட்டிபோட, அனைத்து மாணவர்களும் கார்த்திக்கின் குழுவினை விட இக்குழுவே வெற்றி பெறும்
என உறுதியாய் நம்பினர்.

கார்த்திக் இதனை கண்டு சோர்வுறாமல் நண்பர்களோடும் அனுவோடும் மேடையேற பார்வையாளர்களின் பக்கமிருந்து எதிர்ப்பு குரலே அதிகம் ஒலித்தது.
இத்தனை இக்கட்டையும் தாண்டி பாட தயாராக ரவி கிடாரும் சங்கர் பியானோவும் தினேஷ் புல்லாங்குழலும் விக்னேஷ் டிரம்ஸ் எனவும் எடுத்துகொண்டு தயாராக அனுவும் கார்த்திக்கும் பாடுவதற்காக மைக்கோடு தயாராகினர்.

கார்த்திக் கர்நாடக சங்கிதமெல்லாம் பாட வேண்டாமென முடிவெடுத்து
தனது சொந்த முயற்சியால் தங்கள் உணர்வுகளை குவித்து பாடல் வரிகளை அனுவோடு சேர்ந்து எழுதி அதையே பாடலாம் என முடிவெடுத்தனர்.

அவ்வகையில் இவர்களே எழுதிய பாடலை கார்த்திக்கும் அனுவும் மாறி மாறி பாடி இசை மழையை பார்வையாளர்களை நனைக்க ஆரம்பித்தனர்.

உன் படபடக்கும் பட்டாம்பூச்சி விழியால்,
என் இதயத்தை சிறைபிடித்த மாயவள் நீயோ..!!!
சொல் எனும் தூரிகையால்
என் இதயத்தை உன் வசமாக்கிய
கள்வனே நீதானோ..!!!
சொல் எனும் ஆயுதத்தால் வில்லென்ற
புருவத்தை உயர்த்தி,
மனதினை இதமாய் தீண்டிய
தூரிகையானவள் நீயோ..!!!

காதலே தேடலாய்
தேடலும் அழகானதே..!!!

என்னவள் நீயோ...
என்னவன் நீதானோ...
என் உயிரெழுத்தாய் உயிரில்
நிறைந்தவள் நீயோ...
என் மெய்யெழுத்தாய் மெய்யோடு
கலந்திருப்பது நீதானோ...
என் காதலுக்கு ஜீவனளிக்கும்
அனுவானவள் நீயோ...
நம் காதலுக்கு ஜீவனளிக்கும்
ஒளியான கார்த்திகை நீதானோ..!!!

காதலே தேடலாய்
தேடலும் சுகமானதே..!!!

என் காதல் தேடலுக்கு
முடிவு நீயோ...
நம் காதல் தேடலுக்கு
முடிவிலி நீதானோ...
உன்னை நித்தமும் தேடும்
தேடலாய் நானிருக்க...
உன்னை தேடவைக்கும் ஜீவனாய்
நான் துணையிருக்க...
என் காதலின் தேடலாய்
வாழ்விற்கு நிறைவளிக்க பிறந்தவளே...
நம் காதலின் தேடலாய்
வாழ்வினை அழகாக்க
பிறந்தவனே...
காதலின் தேடலை,
காலம் முழுவதும்
தேடிடுவோமா எனதுயிரே...???

காதலே தேடலாய்
தேடலும் நிறைவானதே..!!!


கார்த்திக்கும் அனுவும் பாடலை மாறி மாறி பாடி காதலே தேடலாய் என இணைந்தும் பாடிட மாணவர்கள் முதலில் இவர்களின் பாடலை வேண்டாவெறுப்பாக கேட்டாலும் பாடலில் வரிகளும் அவர்களின் குரல் வளமும் இசையும் அங்குள்ள அனைவர் மனதையும் கட்டி போட்டு ஆட்டி படைத்தது.

அதன் விளைவாக பாடல் முடிந்துபிறகும் சிறிது நேரம் நிசப்தம் பரவிட பின்னர் எழுந்த கரகோசத்தால் அகிலமே ஆட்டம் கண்டு அக்கரகோசம் நிற்கவே பல நிமிடங்களானது.

இதனை கண்ட கார்த்திக்கின் குழு மகிழ்ச்சியில் தீக்குமுக்காட ஆண்கள் பள்ளியோ கோபமாய் அவ்விடத்தை விட்டு செல்ல கார்த்திக் அனுவின் கைகளை பிடித்துகொள்ள அனுவோ கார்த்திக்கையே பார்த்து கொண்டிருந்தாள்.

தங்களது வாழ்வில் விதியாட போகும் சதிராட்டத்தை கார்த்திக்கும் அனுவும் உணர்ந்திருந்தால் இன்றே அனைத்திற்கும் முற்றிபுள்ளியோ ஆரம்பபுள்ளியோ வைத்திருப்பார்களோ என்னவோ இனி விதியின் செயலை எவராலும் தடுக்க இயலாது.

💘💘💘💘💘

கோர்ட் வளாகம் வழக்கம் போல பரபரப்பாக காட்சியளித்தாலும் பலரின் முகத்தில் நம்பிக்கை ரேகைகள் மறைந்து சோக ரேகைகளே பரவியிருந்தது.

அனிதாவின் கற்பழிப்பு வழக்கிற்கு எதிரான சென்னை மாநகரில் பல போராட்டங்களும் நீதி வேண்டுமென்ற கோஷங்களும் ஒருபுறம் எழுப்பபட்டாலும் தகுந்த ஆதாரங்கள் இல்லாததாலும் இது கற்பழிப்பு வழக்கே அல்ல என ஜோடிக்கபட்டதாலும் மக்களின் மனமும் சோர்வுற ஊடக பார்வையும் சற்று தளர்ந்து போக இன்று நிச்சயம் தீர்ப்பு வழக்கபடுமென நம்ப தகுந்த வட்டாரத்தின் பேச்சினால் சாமானிய மக்களில் இருந்து ஊடகத்துறை வரை அனைவரும் அக்கோர்ட் வளாகத்தில் சூழ்ந்திருந்தனர்.

அப்பொழுது சேகர் ஐ பி எஸ்ஸும் நம்பிக்கை இழந்த முகபாவத்தோடு அவருக்கிருந்த பெரிய முக்கிய கேஸிலிருந்து விடுபட்டு இக்கேஸுற்காக இறங்கி வந்தது தவறோ என்ற சிந்தையில் நிற்க,

அவருக்கெதிரே வேதாச்சலமும் நாகலிங்கமும் நக்கலாய் புன்னகைத்து பேசிகொண்டிருக்க சத்யமூர்த்தியோ சலனமில்லா முகத்தோடு வேதாச்சலத்திற்கு பின்னால் இருந்து கோர்ட்டிற்குள் நுழையும் கவியையும் நேசனையும் பார்த்து கொண்டிருந்தார்.

அப்பொழுது கோர்ட் துவங்கும் நேரம் நெருங்க அனைவரும் வேகமாய் உள்ளே செல்ல வேதாச்சலமோ, "சார், வேதத்தின்படி நடக்குற என் வாதத்துக்கு சாதகமா தான் தீர்ப்பு வரும் நீங்க கவலையேபடாதீங்க" என கூற நாகலிங்கம் மிகுந்த நம்பிக்கையோடு அங்கிருந்த இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தார்.

நீதிபதிக்கு மரியாதை செலுத்தியபடியே தன் வாதத்தை துவங்கிய சத்யமூர்த்தியோ தீலிப்பிடம், "தீலிப், அனிதாவோட கொலை வழக்கு சம்மதமா போலிஸ் ஸ்கூல்ல விசாரிக்க வந்தப்போ நீதான வினோத்தோட காதலை சொல்லி அவன் மேல யூகத்தை திருப்பிவிட்ட இப்போ அது எந்தளவுக்கு உண்மைனு சொல்ல முடியுமா" என கேட்க,

உடனே தீலிப்போ தலைகுனித்தபடியே நாகலிங்கத்தை ஓரக்கண்ணால் பார்க்க

அவரின் திமிர் புன்னகையில் மிரண்டவனோ சத்யாவிடம், "சார், எனக்கும் வினோத்துக்கும் சின்ன பிரச்சனை சார்; அதுல எழுந்த கோபத்தால வினோத்தை பழிவாங்க அன்னைக்கு அப்படி பேசிட்டேன் சார்; இப்போ என்னோட தப்பு எனக்கு புரிஞ்சிருச்சு என்னைய மன்னிச்சிருங்க சார்" என கையெழுத்து கும்பிட்டு அழுக,

அவனின் மனக்கண் முன் பெற்றோர்கள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய அடியாட்களின் செயலே நினைவில் வர குடும்பத்திற்காக நீதியை துறந்திருந்தான்.

தீலிப்பின் பேச்சில் உச்சகட்ட கோபமடைந்த சேகர் ஐ பி எஸ்ஸோ தனது கையாளாகாத நிலையினை எண்ணி நொந்து கொள்ள சத்யமூர்த்தி தீலிப்பை செல்லுமாறு பணித்தார்.

இதனையெல்லாம் கண்ட வேதாச்சலமோ, "யுவர் ஹானர், இப்போ இந்த கேஸுல தெளிவா தெரிஞ்சு போச்சு; வினோத் மேலயும் அவன் நண்பர்கள் மேலயும் இவ்வழக்கு ஜோடிக்கபட்டிருக்குனு எங்கயோ விபத்தா நிகழ்ந்த மரணத்துக்கு அப்பாவி வினோத்துக்கு தண்டனை வாங்கி தர முயற்சிக்குறாங்க; அதுனால இதுக்கு சரியான தீர்ப்பை வழங்கி இத்தனை நாளா வினோத்துக்கும் அவனோட நண்பர்களுக்கும் குடுத்த மன அழுத்ததிற்கும் சரியான முடிவு சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்" என கூறி அமர செல்ல,

உடனே சத்யமூர்த்தியோ, "யுவர் ஹானர், எதிர் தரப்பு வக்கீல் சொன்னது போல இது கேஸுக்கான தீர்ப்பு சொல்ல வேண்டிய தருணமல்ல திருப்புமுனையா மாற வேண்டிய தருணம்" என கூறிகொண்டே,

தனது பைலில் வைத்திருந்த பெண்டிரைவ் ஆதாரத்தினை நீதிபதியிடம் சமர்பிக்க,

அதனை பார்த்து வேதாவோ இதென்னடா புது பிரச்சனை என‌ குழம்பியிருக்க அவரின் அலட்சியமே அவருக்கு எதிரான வேலாயுதமாய் உயர்ந்து நின்றது.

'ச்சே, ஆதாரத்தை பத்தி முன்கூட்டியே கோர்ட்ல சொல்லனும்ற ருல்ஸால சத்யமூர்த்தி சமர்பிக்க போற ஆதாரங்களை முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு காய் நகர்த்துற நாம இப்போ இதை எப்படி மிஸ் பண்ணோம்; அவருகிட்ட இனி ஒண்ணுமே இல்லனு அலட்சியமா இருந்தா புதுசா ஒண்ணை கொண்டு வந்திருக்காரே; இனி என்னாகுமோ' என மனதிற்குள் எண்ணிகொண்டு மிரள,

சத்யா அளித்த பென்டிரைவ் ஆதாரத்தினை நீதிபதி பார்க்க அக்காட்சி அங்குள்ள அனைவரின் பார்வைக்கும் விருந்தானது.

அதில் வினோத் அனிதாவின் மேல் ஆசீட் ஊத்துவது போல காட்சிகள் ஓட வீடியோவில் அவள் அலறலை பார்க்கும் அனைவரின் நெஞ்சும் பதற அனிதாவின் பெற்றோர் கதறி அழுதனர்.

"அய்யோ அனிதா" என அனிதாவின் தாயார் கதறியபடியே அங்குள்ள காவலர்களையும் தாண்டி வினோத்தை நெருங்கி ஆத்திரம் தீரும் வரை தன் பலம் மொத்தத்தையும் சேர்த்து அடிக்க,

இதனை கண்ட நீதிபதியும் அவரின் மனதினை கல்லாக்கிகொண்டு ஆடர் என கூற அக்கோர்ட் வளாகத்திலுள்ள அனைவரும் அவர்களின் நிலையை பார்த்து கண்ணீரால் கரைந்தனர்.

இந்த வீடியோவில் மூலமாக அனிதாவின் கற்பழிக்கபட்ட நிலையும் வினோத்தின் செயலும் பின் மக்கள் சத்தத்தின் ஓடுவதும் சரியாய் பதிவாகியிருக்க இதை வைத்தே நடந்த உண்மைகளும் தெரிய வந்து கேஸிற்க்காக முக்கிய ஆதாரமாய் அமைந்தது.

அதனை கண்ட சேகர் ஐ பி எஸ் பிரமிக்க நாகலிங்க குழு அதிர்ச்சியில் திகைக்க வினோத்தின் குழுவோ பயத்தில் நடுங்கியது.

சத்யமூர்த்தி நீதிபதியிடம், "நீதிபதி அவர்களே, சம்பவம் நடந்தப்போ இரண்டு காலேஜ் ஸ்டூடண்ட் அந்த வழியா வீட்டிற்கு செல்லும்போது அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு இந்த வீடியோவை பதிவு செஞ்சாங்க; இப்போ சம்மந்தபட்டவங்களும் கோர்ட்டுக்கு வந்திருக்காங்க அவங்களை நான் விசாரிக்கலாமா" என கேட்க,

"எஸ் புரோசிட்" என நீதிபதியின் கூற்றிற்கிணங்க கவியும் நேசனும் விசாரணை கூண்டிலேறி நின்றனர்.

சத்யமூர்த்தி நேசனிடம், "நீங்க வழக்கமா அந்த வழியில தான் வீட்டுக்கு போவீங்களா..???
அனிதாவோட அலறல் சத்தமும் அசம்பாவிதமும் பார்க்கும்போது போலிஸுக்கு தகவல் தரணும்னு தோணலயா..???
உங்க கண்ணு முன்னாடி இப்படி ஒரு அநியாயம் நடக்குறப்போ அதை தடுக்காம ஏன் வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்தீங்கனு தெரிஞ்சுக்கலாமா..???
என சரமாரியாக கேள்விகளை கேட்க,

அதற்கு நேசனோ, "சார், நானும் இவளும் பிரண்ட்ஸ்; அன்னைக்கு ஒரு சின்ன சண்டை அதுனால பாதை மாறி வேற வழியில வந்துட்டோம்; அப்போதான் அலறல் சத்தம் கேட்டு போய் பார்த்தோம், அங்க அனிதாவோட நிலையை பார்த்து அதிர்ச்சியில இருந்துட்டு அப்புறமா தான் சுய உணர்வு வந்து அவங்களை விரட்டுனோம்...

ஆனா இதுக்கு நடுவுல தெரியாம வேற ஏதோ காரணத்துக்காக வைச்சிருந்த பட்டன் கேமரால இதெல்லாம் ரெக்கார்ட் ஆகிருச்சு;
போலிஸுக்கு போகாம இவ்ளோ நாளா ஆதாரத்தை கொண்டு வராததுக்கு காரணமே நார்மலான மிடில் கிளாஸ் பயம் தான் சார்; பெரிய இடத்து ஆளுங்க கூட மோதுனா நமக்கு தான் பிரச்சனைனு விலக நினைச்சேன்; ஆனா இவதான் அனிதாவுக்கு நீதி கிடைக்கணும்னு கேட்டா சார் அதான் தைரியமா வந்துட்டோம்" என கூற சராசரி மக்களின் மனநிலையையும் தயக்கங்களையும் நீதிமன்றம் தெளிவாய் உணர்ந்து கொண்டது.

பிறகு கவியிடமும் விசாரிக்க முதலில் அவள் பயத்தில் நடுங்குனாலும் நேசனின் துணையால் பதில்களை கூறினாள்.

பின்னர் சத்யமூர்த்தியோ நீதிபதியிடம், "யூவர் ஹானர், சாட்சிகளோட அடிப்படையிலயும் கொலையை நேரில் கண்டவர்களின் பேச்சின்படியும் இதுவரை கேஸ் பயணித்ததின் அடிப்படையிலும் வினோத் அனிதாவை ஒருதலையாக காதலித்து அக்காதல் தோல்வி தந்த விரக்தியில் தனது பழைய நண்பர்களோடு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறான்,

தனது தந்தையின் செல்வாக்கிலும் மிரட்டலிலும் பயந்து கேஸ் நிலைக்காதென்ற தைரியத்தில் மிதப்பாய் சுற்றி கேஸிற்கான ஆதாரத்தையும் அழித்துள்ளனர்,

அதில் உச்சகட்ட கொடுமையே போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டையே மாற்றியது தான்; ஆதலால் குற்றவாளியான வினோத் மற்றும் அவனின் நண்பர்களுக்கு அதிகபட்ச தண்டனை தருமாறும் குற்றவாளிக்கு உதவிய காரணத்தினால் நாகலிங்கம் மருதநாயத்திற்கு தகுந்த தண்டனையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்" என கூறி முடிக்க

அப்பொழுது நீதிபதி, "வேதாசலம் நீங்க ஏதாவது குறுக்கு விசாரணை பண்ண விரும்புறீங்களா" என கேட்க,

"இல்ல மை லார்ட்" என தயங்கியவாறே கூறிபடி நாற்காலியில் அமர நேசனையும் கவியையும் அனுப்பி வைத்துவிட்டு,

நீதிபதி கேஸிற்கான தீர்ப்பு எழுதிய பின்னர் அதனை வாசிக்க துவங்கினார்.

"ஒரு பெண்ணின் மரணத்தில் ஆரம்பித்த கேஸ் சமூகத்திற்கே பெரிய கேள்விக்குறியை முன்வைத்திருக்கிறது; இளைய சமுதாயத்தின் மனநிலையை பறைசாற்றும் வகையில் அமைந்த இவ்வழக்கிற்கு சரியான தண்டனை வழங்கினாலே இனி இப்படிபட்ட குற்றங்களும் குறைக்கபடும்; ஆதலால் இக்கோர்ட் குற்றம் சாட்டபட்ட வினோத் மற்றும் அவனின் நண்பர்களுக்கு ஐபிசி செக்ஷன் 302கீழ் ஆயுள் தண்டனையும் குற்றத்துக்கு உடனிருந்த நாகலிங்கம் மற்றும் மருதநாயகம் இன்னும் சிலருக்கு 2 மாத சிறை தண்டனையோடு இருபதாயிரம் அபராதமும் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டை மாற்றி கூறிய டாக்டருக்கு அவரின் வேலையை விட்டு நீக்கவும் இந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது" என கூறிய நீதிபதியோ தனது தீர்ப்பினை கூறி முடிக்க,

அதனை கேட்க அனைவரும் நீதி ஜெயித்து விட்டதால் உற்சாக கூக்குரலிட்டு ஆரவாரமிட்டனர்.

நீதிபதி வெளியேறியவுடனே சேகர் ஐ பி எஸ் ஓடிவந்து சத்யாவை கட்டி கொண்டபடி, "என்னால நம்பவே முடியல சார்; மேஜிக் மாதிரி எல்லாமே நொடியில மாறிடுச்சு; ஆனா இப்படி ஒரு மாற்று வழியிருக்குனு என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கலாம்ல எங்க நம்ம கஷ்டத்துக்கு பலனில்லாம போயிடுமோனு பயந்துட்டேன்" என கூற,

அதற்கு சத்யமூர்த்தியோ, "சார், நான் இதை ஏற்கெனவே சொல்லிருந்தா நீங்க கெத்தா இருந்து எதிரிகளுக்கு துப்பு தந்திருப்பீங்க; இந்த தடவை சின்ன அலட்சியம் கூட நடந்திடகூடாதுனு தான் நானே சோகமா முகத்தை வைச்சுகிட்டு சுத்துனேன்" என கூறி சிரித்தார்.

அப்பொழுது அனிதாவின் பெற்றோரான பாண்டியும் அவரின் மனைவியும் சத்யமூர்த்தியின் காலில் விழுக அதில் பதறிய சத்யாவோ அவர்களை எழுப்பிவிட்டு கடிந்துகொண்டார்.

"அட என்னங்க நீங்க, இதெல்லாம் எங்க கடமை தான் இதுக்கு போய் கால்ல விழுந்துட்டு இருக்கீங்க" என கேட்க அதற்கு பாண்டியோ,

"ஐயா, இந்த கேஸுல நீங்க பேசுன மாதிரி நிறைய ஏமாற்று வேலை நடந்திருக்கு; ஆனா அதையெல்லாம் தாண்டி நீங்க சோர்ந்து போகாம ஜெயிச்சு தந்தீருக்கீங்க பாருங்க இதுபோதும்ய்யா எங்களுக்கு இதுவே போதும்யா அதுக்கு தாய்யா நன்றி சொன்னோம்" என கையெழுத்து கும்பிட,

அங்கே வினோத்தையும் அவனின் நண்பர்களையும் காவல் துறை விலங்கிட்டு இழுத்து சென்றது.

ஆனால் வினோத்தோ திமிரியபடி, "அப்பா அப்பா பிளிஸ் என்னைய காப்பாத்துங்க, உங்களுக்கு புழுக்க வேலை பார்க்குற எச்சைங்க எல்லாம் என்னைய இழுத்துட்டு போறாங்க பீளிஸ் காப்பாத்துங்க ப்பா" என கத்த,

மகனின் கத்தலையும் பொருட்படுத்தாது பிரம்மை பிடித்தவரை போல நாகலிங்கம் அமர்ந்திருக்க காவல் துறையை சேர்ந்த இன்ஸ்பெக்டரோ வினோத்தின் பேச்சிற்கு வாயிலேயே இரண்டடி போட்டு இழுத்து செல்ல கோர்டிலிருந்து வெளியேறிய நேசன் மற்றும் கவியை ஊடகத்துறை வளைத்து பிடித்து கேள்வி கேட்க அதனை கண்ட அவர்களின் குடும்பமோ தனது பிள்ளைகளின் தைரியத்தை கண்டு சிலிர்த்து போயினர்.

இங்கு சத்யமூர்த்தி நீதி வென்ற சந்தோஷத்தோடு நிம்மதியாய் தன்னறை நோக்கி விரைய நாகலிங்கம் பித்துபிடித்தவராய் அமர்ந்திருக்கையிலே மருதநாயகம் தோளில் ஆதரவாய் கைவைத்து நம்பிக்கையளித்தார்.

சேகர் ஐ பி எஸ்ஸோ சிறைச்சாலைக்கு வினோத்தும் அவனின் நண்பர்களும் பத்திரமாக செல்கிறார்களா என பார்க்க பின் தொடர்ந்தார்.

அப்பொழுது சேகரின் போன் அடிக்க அதனை எடுத்து பேசியவரோ அதிர்ச்சியில் ஜீப்பை நிறுத்திபடி, "உங்க யாருக்கும் ஒண்ணும் ஆகலயே; ஓகே ஓகே நான் பக்கத்துல தான் இருக்கேன் வரேன்" என கூறி விரைய,

அங்கே சிறிது தூரத்தில் வினோத்தும் அவனின் நண்பர்களும் சென்ற காவல் வாகனமே தீக்கிரையாகி உடல்கள் எல்லாம் கருகி சாம்பலும் மிஞ்சாது போன நிலமையில் இருந்தது.

அதனை பார்த்துகொண்டிருந்த சேகரை நெறுங்கிய போலிஸும், "சார், நாங்க ரொம்ப பசியா இருக்கேனு டீ குடிக்க வண்டியை இங்க நிப்பாட்டி வைச்சிட்டு ரோட் கிராஸ் பண்ணி போனோம் சார்; ஆனா கொஞ்ச நேரத்துல வண்டி வெடிச்சு சிதறிடுச்சு சார் பாம் எல்லாம் இல்ல ஏதோ பிரச்சனை போல சார்" என கூற நீதி தேவனே நீதி எழுதிவிட்டாரென்ற மிதப்பில் சேகர் ஐ பி எஸ் மிதக்க அங்கே ஒரு உருவம் இவர்களின் பேச்சை கேட்டுகொண்டு இளக்கார புன்னகையோடு பைக்கை எடுத்துகொண்டு சென்றது.


காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
சூப்பர்.
நீதி வென்றது.
வினோத்துக்கு இறுதி முடிவு கட்டியது செம.
அனு,காரத்திக். பிரியும் நேரமா.
 

பிரிய நிலா

Well-known member
Member
கார்த்திக் அண்ட் அனுக்கு இடையில் சண்டை பிரிவு வரப்போகுதா..
கண்டிப்பா அனுதான் எதாவது பிரச்சனை பண்ணுவா. கார்த்திக் கண்டிப்பா புருஞ்சு நடந்துக்கறவன்...

செம சிஸ்.. நீதி வாங்கிக் கொடுத்தாச்சு...
வினோத் அண்ட் டீம்க்கு சரியான தண்டனை. வண்டியில் பறந்தது யார்...
 

Nancy mary

✍️
Writer
சூப்பர்.
நீதி வென்றது.
வினோத்துக்கு இறுதி முடிவு கட்டியது செம.
அனு,காரத்திக். பிரியும் நேரமா.
காதலின் நிலை என்னாகும்னு பொறுத்திருந்து தெரிஞ்சிக்கலாம்🤗🤗🤗
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
 

Nancy mary

✍️
Writer
கார்த்திக் அண்ட் அனுக்கு இடையில் சண்டை பிரிவு வரப்போகுதா..
கண்டிப்பா அனுதான் எதாவது பிரச்சனை பண்ணுவா. கார்த்திக் கண்டிப்பா புருஞ்சு நடந்துக்கறவன்...

செம சிஸ்.. நீதி வாங்கிக் கொடுத்தாச்சு...
வினோத் அண்ட் டீம்க்கு சரியான தண்டனை. வண்டியில் பறந்தது யார்...
இவங்களோட காதலின் நிலை என்னாகும்னு காத்திருந்து தெரிஞ்சிப்போம்🤗🤗🤗
அதானே யாரா இருக்கும்🤔🤔🤔
அதையும் சீக்கிரமே தெரிஞ்சிப்போம்😉
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
சரியான நீதி சகி... இவன் ஜெயிலுக்கு போனாலும் நாகலிங்கம் எப்டியாச்சும் வெளிய எடுத்துடுவாரு.. அவனை ஒரேயடியா மேல அனுப்பி வச்ச அந்த உருவம் யாரா இருக்கும்? நேசன் கவிய சமாதானப்படுத்துனப்ப நான் கூட அவனை பயந்தாங்கொள்ளினு நினைச்சேன்... ஆனா கடைசில அவனோட பென்ட்ரைவ் தான் அனிதாக்கு நீதி வாங்கி குடுத்திருக்கு... கார்த்திக் அனு பிரிஞ்சா என்னவாகும்?

ஜீயான் கேங்கோட குரல் வளத்தால தக்காளியும் முட்டையும் வேஸ்ட் ஆயிடுச்சே😂😂😂

சகி அந்தப் பாட்டுப்போட்டில பாடுன பாட்டு நீங்க எழுதுனதா? ரொம்ப நல்லா இருக்கு😍😍
 

Nancy mary

✍️
Writer
சரியான நீதி சகி... இவன் ஜெயிலுக்கு போனாலும் நாகலிங்கம் எப்டியாச்சும் வெளிய எடுத்துடுவாரு.. அவனை ஒரேயடியா மேல அனுப்பி வச்ச அந்த உருவம் யாரா இருக்கும்? நேசன் கவிய சமாதானப்படுத்துனப்ப நான் கூட அவனை பயந்தாங்கொள்ளினு நினைச்சேன்... ஆனா கடைசில அவனோட பென்ட்ரைவ் தான் அனிதாக்கு நீதி வாங்கி குடுத்திருக்கு... கார்த்திக் அனு பிரிஞ்சா என்னவாகும்?

ஜீயான் கேங்கோட குரல் வளத்தால தக்காளியும் முட்டையும் வேஸ்ட் ஆயிடுச்சே😂😂😂

சகி அந்தப் பாட்டுப்போட்டில பாடுன பாட்டு நீங்க எழுதுனதா? ரொம்ப நல்லா இருக்கு😍😍
ஆமா கடைசியா நீதி ஜெயிச்சிருச்சுல😌
ஆமா சகி அது நானே பாட்டு எழுதுனதும் நானே டூயட் பாட வைச்சதும் நானே😍😍😍❤️❤️❤️❤️❤️
ரொம்ப நன்றி சகி😍😍😍😍❤️❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom