லாக் டவுன் – 18
லாக் டவுன் ஆர்த்தி ரவி அத்தியாயம் 18: இருவரும் மாடி வீட்டின் பின் பக்கமாக நின்றிருந்தார்கள். மொட்டை மாடிக்கு இன்னும் ஒரு சுற்றுப் படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகளின் பக்கவாட்டில் பிச்சிப்பூக்கொடி பின்னல்களாகப் பின்னிப் படர்ந்து கிடந்தது. கொடிப்பந்தலைத் தாங்கிப் பிடிக்க இரண்டு கம்பங்கள் புதிதாக முளைத்திருந்தன. நன்றாகப் பராமரிக்கப்படுகிற கொடியில் மொக்குகள் விரவிக் கிடந்தன. பிச்சிப்பூவின் வாசனை மூக்குத் துவாரங்களில் நுழைந்து இதயத்தில் காதலைப் பரப்பியது. இரவின் தனிமையும் பனிக் காற்றின் தழுவலும்… இரசித்து […]