சிந்தையில் பதிந்த சித்திரமே – 23
அத்தியாயம் – 23 “நயனிமா கிளம்பிட்டியா?” என்று கேட்டபடி படுக்கையறைக்குள் நுழைந்தான் கதிர்நிலவன். “கிளம்பிட்டேன் கதிர், இதோ வர்றேன்…” என்ற நயனிகாவோ கிளம்பித் தயாராக இருந்தாலும் வெளியே செல்லாமல் ஜன்னல் அருகில் நின்று வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். “அங்கே என்ன பார்க்கிற? எக்ஸாமுக்கு லேட் ஆகுது…” என்றபடி அவள் அருகில் வந்து வெளியே எட்டிப் பார்த்தான். வெளியே யாருமில்லை. ஆனால் அவள் பார்வையோ எதிர்வீடான தன் அன்னையின் வீட்டுப் பக்கம் இருந்தது. அவளின் பின்னால் நின்று […]