☔ மழை 43 ☔

மன்னர்களின் ஈகைதிறன் சங்ககாலம் முழுவதும் புகழப்படுவதில் இருந்து அது ஒரு முக்கிய அரசநெறியாக கருதப்பட்டதைப் புரிந்துகொள்ளலாம். அதே போல நீதி தவறாது ஆட்சிபுரிபவனே உண்மையான அரசன் என்ற கருத்தையும் பல்வேறு சங்கப்பாடல்களில் காணலாம். புறநானூற்றில் உள்ள முன்னூற்றி அறுபத்தேழாம் பாடலில் நல்ல செயல்கள் செய்யும் அரசனுக்கு இறவாப்புகழ் வாய்க்கும் என்று கூறப்பட்டதிலிருந்து நல்ல செயல்களும் நீதி தவறாமையும் ஒரு முக்கிய அரசநெறியாக கொள்ளப்பட்டது என்பது தெளிவாகிறது.

அட்லாண்டிஸ் ஸ்டூடியோ…

“ரியா சலீமாவோட பிரெக்னென்சி போட்டோஷூட்ட நீயும் ஆகாஷும் மெரினால வச்சு முடிச்சிடுங்கடி… எனக்கு என்னவோ மைண்ட் ஒரு மாதிரி அப்செட்டா இருக்கு… ஃபினிஷிங் நான் பாத்துக்கிறேன்” என்று சோர்வாய் கூறிவிட்டு தனது சுழல் நாற்காலியில் சாய்ந்து கொண்டாள் சாருலதா.

மேகமலையிலிருந்து திரும்பிய தினத்திலிருந்து இந்த மனச்சோர்வு அவளைப் படுத்தி எடுக்கிறது. எதனால் இப்படி என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைத் தான் அவள் முன்வைப்பாள். அது என்னவென்றால் விமானத்தில் சென்னைக்குத் திரும்பும் போது அவளைப் புறக்கணித்துவிட்டு பிரியாவுடன் அரட்டை அடித்த இந்திரஜித் மட்டுமே!

அவன் அவளுடன் பேசினால் தனக்கு ஏன் எரிச்சல் மண்டவேண்டும் என எத்தனையோ முறை யோசித்தும் அவளுக்குச் சரியான விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை!

ஒருவேளை தனது நண்பன் தன்னுடன் மட்டுமே பேசவேண்டுமென்ற சிறுபிள்ளைத்தனமான உரிமையுணர்வாக இருக்குமோ? அது தான் உண்மை என்றால் அவனது ரசனைப்பார்வையில் தான் ஏன் தடுமாறுகிறோம்?

கேள்விகள் உதயமானதும் தலையைப் பிடித்துக்கொண்டாள் சாருலதா. பிரியா என்னவென வினவ “ஐ அம் சோ டயர்ட்… நீங்க கிளம்புங்கப்பா” என்றாள் அவள்.

“தனியா மேனேஜ் பண்ணிப்பியா? இல்லனா சுரேஷை விட்டுட்டுப் போகவா?” அக்கறையுடன் வினவினான் ஆகாஷ்.

“ஹேய் ஐ கேன் மேனேஜ்… நீங்க மூனு பேர் போனா தான் பிரெக்னென்சி போட்டோஷூட் நல்லபடியா முடியும்… டோண்ட் ஒரி அபவுட் மீ”

எப்படியோ சமாளித்து மூவரையும் அனுப்பி வைத்தவள் பக்கத்து காபிஷாப்பில் தனக்கு காபி ஆர்டர் செய்துவிட்டு கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து கொண்டாள்.

சில நிமிடங்கள் அமைதியாய் கழிய காபி வரவும் நன்றி கூறி வாங்கிக்கொண்டவள் அதை ஒரு மிடறு அருந்தியபடி மொபைலை நோண்ட ஆரம்பித்தாள்.

இரண்டு மூன்று மிடறுகள் காபி உள்ளே சென்றதும் சோர்வு அகன்றதை போல உணர்ந்தவள் மீண்டும் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.

சாம்பல் வண்ண ஹென்லே டீஷர்ட்டும், ஸ்லிம் ஃபிட் லெவிஸ் ஜீன்சும் அணிந்து உள்ளே வந்த உருவத்தைக் கண்டு மலரத் துடித்த அவளது இதழ்கள் அந்நேரம் பார்த்து விமான சம்பவத்தை நினைவூட்டிய மூளையின் கைங்கரியத்தால் இழுத்துப் பிடித்து ஜிப் போட்டு மூடிக்கொண்டது.

உள்ளே நுழைந்தவனோ சாவகாசமாக நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்துவிட்டு “ஏன் டூ டேய்ஸா கால் பண்ணல?” என்று கேள்வி கேட்க சாருலதா அடைந்த கொதிநிலையில் அவள் கையில் வைத்திருந்த காபி மீண்டும் கொதிக்க ஆரம்பித்தது என்றால் மிகையில்லை.

“ஏன்னு உனக்குத் தெரியாதாடா?” சூடாய் வார்த்தைகளை உதிர்த்த நாவினை காபியால் நனைத்துக் கொண்டாள் இந்திரஜித்தின் தோழி.

“ம்ம்… கொஞ்சமா தெரியும்” பெருவிரல் ஆட்காட்டிவிரல் இரண்டையும் சுருக்கிக் காட்டி அபிநயம் செய்தான் இந்திரஜித்.

“தெரிஞ்சும் ஏன் கேக்குற மேன்? போ, அந்தப் பிரியா பின்னாடியே போ… பிரெக்னென்சி போட்டோஷூட்டுக்காக மெரினாக்கு இப்போ தான் கிளம்புனா”

“ஷப்பா கொஞ்சம் ஏ.சியோட டெம்பரேச்சரை கம்மி பண்ணு… என்ன அனல் அடிக்குது?”

சாருலதா அவனை முறைத்துவிட்டு மிச்சமிருக்கும் காபியை அருந்தியவள் பேப்பர் கப்பை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு தண்ணீரைக் குடிக்க இந்திரஜித் வழக்கம் போல அவளது இந்த வினோத பழக்கத்தைக் கேலி செய்ய ஆரம்பித்தான்.

“எதுக்கு ஹாட்டா காபி குடிக்கணும்? பின்னாடியே கூல் வாட்டரையும் சேர்த்துக் குடிக்கணும்? யூ ஆர் சோ வியர்ட்”

“அப்பிடியா? இருந்துட்டுப் போறேன்… உனக்கென்னவாம்?”

உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு ஸ்டாக் ரூமை நோக்கி சென்றாள் சாருலதா.

“அடியே உன்னை பாக்க வந்தவனை அம்போனு விட்டுட்டு நீ பாட்டுக்குப் போனா என்ன அர்த்தம்?”

கேள்வியைத் தொடுத்தபடி அவளைப் பின் தொடர்ந்தவன் ஸ்டாக் ரூமின் கப்போர்ட்களில் இருந்த உபகரணங்களை ஆராய்ந்தபடி கையில் இருந்த குறிப்பேட்டில் பேனாவால் எழுதிக் கொண்டிருந்தவளின் அருகே சென்று நின்று கொண்டான்.

“ஓ! ஸ்டாக் டீடெய்ல்ஸ் வெரிபிகேசனா? நாட் பேட்… நான் எதாச்சும் ஹெல்ப் பண்ணனுமா?”

“யெஸ்”

“என்ன ஹெல்ப்?”

“இவ்ளோ கிட்ட வந்து நிக்காம அங்க போட்டிருக்குற சோபால உக்காந்தா நல்லா இருக்கும்”

“வாய்ப்பில்லடி… இன்னைக்கு நான் பேச வந்ததை இப்போவே சொல்லிட்டுத் தான் மறுவேலை தான் பாப்பேன்”

அவனது பிடிவாதத்தில் புருவம் சுழித்தவள் “அப்பிடி என்னடா சொல்லப் போற?” என்று அலட்சியமாய் வினவியபடி மீண்டும் கப்போர்ட்களைப் பார்வையிட ஆரம்பித்தாள்.

“நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுற சாரு… நீ சிரிச்சுப் பேசுறப்ப, திட்டுறப்ப, சண்டை போடுறப்ப எனக்குள்ள தவுசண்ட் டைம்ஸ் சந்தோசம் வருது… அதே நேரம் நீ பேசாம முகத்தை திருப்பிக்கிட்டு என்னை அவாய்ட் பண்ணுனா மனசு அப்பிடியே சஹாரா டெசர்ட் போல சந்தோசம் இல்லாம வறண்டு போயிடுது… இதுக்குப் பேர் என்னவா இருக்கும்டி?”

சாருலதா கேலியாக நகைத்தவள் கப்போர்ட்டை பார்த்தபடியே “உனக்கு பைத்தியம் பிடிக்க ஆரம்பிச்சிருக்குனு அர்த்தம் மண்டூகமே” என்றாள் பேனாவை உதட்டுக்கு கொடுத்தபடி.

“அது எப்பிடி நான் மட்டும் பைத்தியம் ஆகி நீ தெளிவா இருக்கலாம்? வா! ரெண்டு பேரும் ஒரே நேரத்துல பைத்தியம் ஆகிடுவோம்” என்ற இந்திரஜித்தின் விரல்கள் அவள் உதடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்த பேனாவைக் கைப்பற்றிக் கொண்டது.

சாருலதா வேலையிலிருந்து கவனம் கலையவும் “பேனாவை குடு ஜித்து… விளையாடுற நேரமா இது?” என்று சிணுங்க

“நான் சீரியசா பேசிட்டிருக்கேன் சாரு… என்னால டூ டேய்ஸா உன்னைத் தாண்டி வேற எதை பத்தியும் யோசிக்க முடியல… என்னோட நெக்ஸ்ட் ரேசுக்கு இன்னும் கொஞ்சநாள் தான் இருக்கு… அதுக்குள்ள இழந்த என்னோட மெண்டல் ஸ்ட்ரென்தை நான் மீட்டே ஆகணும்டி” என்றான் அவன் தீவிரக்குரலில்.

“அதுக்கு நான் என்னடா பண்ணணும்?” புரியாது விழித்தாள் சாருலதா.

இந்திரஜித் தனது தாடையைத் தடவிக் கொண்டான். டீசர்ட்டின் முக்கால் கையை மீண்டும் மீண்டும் மடக்கி விட்டான். சிகையைக் கோதிக் கொண்டான். பின்னர் தலையை உலுக்கிக் கொண்டவன் “ஜஸ்ட் லவ் மீ சாரு” என்றான் நிதானமாக.

சாருலதா அதிர்ச்சியில் வாயைப் பிளந்தவள் “வாட்? லவ் பண்ணணுமா? அதுவும் நான்? ஏன்டா?” என்று கேட்டு வைக்க

“ஏன்னா நான் உன்னை அவ்ளோ பைத்தியக்காரத்தனமா லவ் பண்ணுறேன்டி… சோ நீயும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுனேனா என் மனசு ஃப்ரீ ஆகும்” என்றான் இந்திரஜித்.

சாருலதா மீண்டும் அதிர்ந்தவள் பின்னர் அவன் விளையாடுகிறான் என்று எண்ணியவளாய் “நீ சும்மா ஃப்ராங் பண்ணுற தானே ஜித்து… நீ போய் என்னை எப்பிடி லவ் பண்ணுவ?” என்று கூறியபடி சிரிப்பொன்றை உதிர்க்க அடுத்த வினாடி சிரிப்பை உதிர்த்த இதழ்களைச் சிறை செய்திருந்தான் இந்திரஜித்.

அவனது காதலின் தீவிரத்தைப் புரியவைக்க இதை விட சிறந்த உபாயம் எதுவென அவனுக்குப் புரியவில்லை.

அவனால் சிறைபிடிக்கப்பட்ட இதழுக்குச் சொந்தக்காரி இந்த அதிரடியை எதிர்பார்க்கவில்லை என்பதால் திகைத்துச் சிலையானாள். அவள் நிலையை உணர்ந்து விடுவித்தவன்

“இப்போவாச்சும் நம்பு சாரு… ஐ அம் மேட்லி அண்ட் சீரியஸ்லி லவிங் யூ… முன்ன மாதிரி உன்னை வெறும் ஃப்ரெண்டா மட்டும் என்னால யோசிக்க முடியல… நீ சிரிக்கிறப்ப என்னோட கண்ணு ரசிச்சே தீருவேனு அடம்பிடிக்கிறதயோ, எதேச்சையா உன்னோட கை என் மேல பட்டா ஹார்ட்ல பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிக்கிறதையோ என்னால கன்ட்ரோல் பண்ணவே முடியலடி… இதையெல்லாம் செஞ்சு அடிக்கடி உன்னோட முறைப்ப வாங்கி கட்டுனா கூட மறுபடியும் அதையே திரும்ப திரும்ப செய்யுறேன்… டூ டேய்சா என்னோட மைண்ட் அண்ட் ஹார்ட் ரெண்டையும் ஆக்குபை பண்ணுனது உன்னோட சின்ன சின்ன நினைவுகள் தான் சாரு… ஒருத்திய பத்தி ஃபார்ட்டி எய்ட் ஹவர்சா கேப் விடாம யோசிச்சு குழம்புறதுக்குப் பதிலா அவ கிட்டவே நேரடியா கேட்டுடலாம்னு தான் இங்க வந்தேன்… நான் நல்ல பிள்ளையா தான் இருந்தேன்… நீ தான் இந்த ரெனால்ட் பென்னை வச்சு என்னை டெம்ப்ட் பண்ணி விட்டுட்ட” என்று தனது திடீர் இதழணைப்புக்கான பழியை அவள் மீதே தூக்கிப் போட்டுத் தப்பித்துக் கொண்டான் இந்திரஜித்.

அவள் இன்னும் திகைப்பிலிருந்து மீளாததால் அவனது பேச்சு அனைத்தும் சாருலதாவுக்குள் சிலிர்ப்பை உண்டாக்கியது. இந்திரஜித் அவளை நெருங்கவும் அனிச்சை செயலாய் பின்னோக்கி அவள் கால்கள் செல்ல அவன் பக்கென்று நகைத்தான்.

“பயப்படாத தாயே! இப்போ என்னை எதுவும் டெம்ப்ட் பண்ணல… சோ நான் ஒன்னும் பண்ணிட மாட்டேன்” என்று தோள்களை குலுக்கினான்.

சாருலதா அதிர்ச்சி வடியவும் “இப்போ நீ என்ன தான் சொல்ல வர்ற ஜித்து?” என்று மெதுவாக வினவ

“ஐ லவ் யூ சாரு” என்றவன் அவளது விரல்களைத் தனது விரல்களுடன் கோர்த்துக் கொண்டான்.

“அவசரப்படாம நிதானமா யோசிச்சு நல்ல முடிவா சொல்லு… என் மனசு இப்போ ஃப்ரீ ஆயிடுச்சுப்பா… இனிமே உன்னோட டர்ன்… உனக்கும் என்னைப் போலவே ஃபீல் ஆச்சுனா என் கிட்ட சொல்லு… நீ சொல்லுற நாளுக்காக ஐ வில் வெயிட்… அது வரைக்கும் உன்னைப் பாக்கவோ உன் கூட பேசவோ நான் டிரை பண்ண மாட்டேன்… சரியா?” என்று அவளிடம் கூற சாருலதாவின் சிரம் சரியென அசைந்தது.

மெதுவாய் கோர்த்திருந்த விரல்களை அவன் பிரிக்கவும் அவளுக்குள் ஏதோ ஓர் சோர்வு அலையாய் பரவுவதை உணர்ந்தவள் அவன் புன்னகையுடன் விடைபெற்ற போது தவிப்பாய் உணர்ந்தாள்.

அவன் சென்றுவிட்டதற்கு அடையாளமாய் அந்த அறையைச் சூழ்ந்த வெறுமை விசித்திரமான முறையில் சாருலதாவை சோதிக்கத் துவங்க அவளது மனமோ வரிசையாய் சற்று முன்னர் நடந்ததை அசை போடத் துவங்கியது.

அசை போட்ட மனம் வந்து நின்ற கடைசி நினைவுத்துணுக்கு சாருலதாவை வெட்கப்புன்னகை புரிய வைக்க இந்திரஜித் சிறையெடுத்த இதழ்களை நாணத்துடன் வருடிக்கொண்டாள் அவள்.

இது காதலா என்பதை அவள் அறியாள்! ஆனால் இரு தினங்களாக இருந்த மனச்சோர்வு மந்திரம் போட்டாற்போல மறைந்து போய்விட்டது. இனி அவள் செய்யவேண்டியது தனக்கு இந்திரஜித் மீதிருப்பது நட்பா காதலா என்பதை தீர்மானிக்க வேண்டியது மட்டும் தான்!

***********

ஜஸ்டிஷ் டுடே…

மேனகாவை அழைத்துச் செல்ல வந்திருந்தான் அஸ்வின். வழக்கம் போல நட்பு வட்டாரத்துடன் வெளியே வந்தவள் அவனைக் கண்டதும் தனது மூக்குக்கண்ணாடியைக் கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து வந்திருப்பவன் அஸ்வின் தானா என்பதை உறுதிபடுத்திக் கொண்டாள்.

அவனோ “நான் தான் வந்திருக்கேன்மா… உனக்குச் சந்தேகமே வேண்டாம்” என்று சிரிக்க

“நீ வழக்கமா இப்பிடிலாம் வந்து பிக்கப் பண்ணிக்கிற ஆள் இல்லயே! சொல்லு! எதுவும் பிரச்சனையா? எனக்குத் தெரியாம ஏதாச்சும் குட்டி கலாட்டா பண்ணி மன்னிப்பு கேக்குறதுக்காக இந்தப் பிக்கப் பிளானா?” என சந்தேகமாக வினவினாள் மேனகா.

அஸ்வின் அவள் தலையில் செல்லமாய் தட்டியவன் “அடேங்கப்பா என் மேல உனக்கு எவ்ளோ நல்ல அபிப்பிராயம்? உன் இமேஜினேசனை கண்ட்ரோல் பண்ணிட்டு கார்ல ஏறு மகாராணி” என்றான் கேலியாக.

மேனகா ஸ்ராவணியை நோக்க அவளோ “நீ அஸ்வினோட கிளம்பு மேகி… நான் கொஞ்சம் பீச் வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்றாள் அவள்.

“நானும் வர்றேன் வனி” என்ற மேனகாவை எப்படியோ சமாளித்து அஸ்வினுடன் அனுப்பி வைத்தவளைப் பார்த்தபடி நின்றிருந்தாள் யசோதரா.

ரகுவும் அனுராதாவும் கிளம்பிவிட ஸ்ராவணி தனது காரை எடுக்கச் செல்ல “மேம் நானும் உங்களோட வரவா?” என்று கேட்டாள் அவள்.

ஸ்ராவணி வேண்டாமென மறுக்கப் போக “ப்ளீஸ் ப்ளீஸ்… எனக்குமே பீச்சுக்குப் போனா மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்னு தோணுது… உங்களோட தனியா அவுட்டிங் போய் ரொம்ப நாளாச்சு… வேண்டாம்னு சொல்லாதீங்க மேம்” என்று அடம் பிடித்தாள் யசோதரா.

வேறு வழியின்றி அவளையும் தன்னுடன் வரச் சொல்லிவிட்டு காரைக் கிளப்பினாள் ஸ்ராவணி.

இருவரும் கடற்கரையை அடைந்தது கார்களை ஓரமாக நிறுத்திவிட்டு மணலில் கால் புதைய நடந்தனர்.

தங்களைச் சுற்றி நடமாடும் மனிதர்களை வேடிக்கை பார்த்தவர்களுக்குச் சாமானிய மக்களுக்குக் கிடைக்க கூடிய சின்ன சின்ன சந்தோசங்கள் ஏக்கத்தை உண்டாக்கியது என்னவோ உண்மை!

இம்மாதிரி காற்றாட கடற்கரை மணலில் நடப்பது, அங்கே அமர்ந்து சுண்டல் சாப்பிடுவது, அலைகளில் விளையாடுவது எல்லாம் அவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் அத்தி பூத்தாற்போல அற்ப சொற்பமான நேரங்களில் மட்டுமே வாய்க்கும்!

இன்று கிடைத்த அந்தச் சந்தோசத்தை அனுபவித்தபடியே நடந்தவர்களின் கவனம் அலைகளின் பக்கம் நகர இருவருக்கும் விளையாடும் ஆர்வம் தலை தூக்கியது.

ஸ்ராவணி அவளது ஸ்லிப்பரை கழற்றிவிட்டு அலையை நோக்கி நகர்ந்த கணம் அவளது ஹேண்ட்பேகில் இருந்த மொபைல் சிணுங்கி அவளை அழைத்தது.

தொடுதிரையை உற்றுநோக்கியவள் அழைத்தவன் அபிமன்யூ என்பதால் உடனே எடுத்துப் பேசினாள்.

“நீ இன்னும் வீட்டுக்கு வரலனு அதி சொன்னா… ஆபிஸ் முடிஞ்சு இவ்ளோ நேரம் வெளிய என்ன பண்ணுற வனி?”

எடுத்ததும் விசாரணையை ஆரம்பித்தவனிடம் நிதானமாக பதிலளிக்க ஆரம்பித்தாள் ஸ்ராவணி.

“ஃப்ரெண்டோட பீச்சுக்கு வந்தேன் அபி… இன்னும் டூ ஹவர்ஸ்ல வீட்டுக்கு வந்துடுவேன்”

“டூ ஹவர்ஸ் பீச்சிலயே இருக்கப்போறியா? அதுல்லாம் சேஃப் இல்ல… நீ உடனே வீட்டுக்குக் கிளம்பு”

வேகமாக கட்டளை பிறந்தது அபிமன்யூவிடம். அவனால் கட்டளை இட முடியும். ஆனால் அதை கடைபிடித்தே ஆகவேண்டுமென ஸ்ராவணியைக் கட்டாயப்படுத்த முடியாதல்லவா!

விளைவு தன்னால் குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து தான் வீட்டிற்கு வரமுடியும் என உறுதியாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் ஸ்ராவணி.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்தவாறு யசோதரா நமட்டுச்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள்.

அதை கண்டுகொண்ட ஸ்ராவணி “உனக்குச் சிரிப்பா இருக்குதா? கிட்டத்தட்ட உன் நிலமையும் என்னோடது மாதிரி தானே… நான் பொலிடீசியனோட ஒய்ஃப்னா நீ செலிப்ரிட்டியோட ஒய்ஃப்… இந்த போஸ்டிங்கால நம்ம இழந்த முதல் விசயமே இந்த மாதிரி சுதந்திரமான குட்டி குட்டி ஹேப்பி மொமண்ட்ஸ் தான்” என்றாள்.

யசோதராவாலும் அதை மறுக்க முடியவில்லை. கடந்த சில மாதகாலமாகவே அவர்களுக்கு இருந்த பணிச்சுமையைப் போக்க இப்படி ஏதாவது செய்தால் தான் உண்டு. எனவே முன்னரே தீர்மானித்தபடி அலுக்க அலுக்க அலையில் விளையாடிவிட்டு ஒரு மணிநேரம் கடந்த பிறகு தான் இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

வீட்டை அடைந்த ஸ்ராவணிக்கு கிடைத்த முதல் அதிர்ச்சி அவளுக்கு முன்னரே அங்கே வந்திருந்த அபிமன்யூ. அவனை ஆச்சரியம் ததும்பும் விழிகளால் ஏறிட்டுவிட்டு அவர்களின் அறைக்குச் சென்றவள் உடை மாற்றி முகம் கழுவிவிட்டு வந்த போது அவனும் அறையில் இருந்தான், இனி இப்படி இஷ்டத்திற்கு ஊர் சுற்றக் கூடாது என்ற கட்டளையோடு.

ஸ்ராவணி அசட்டையாய் உச்சு கொட்டவும் “பி சீரியஸ் வனி… நான் ஒன்னும் உன்னை எங்க போனாலும் ப்ளாக் கேட்சோட போனு சொல்லல… ஒர்க் முடிஞ்சதும் அனாவசியமா வெளிய சுத்தாதனு சொல்லுறேன்… நான் சொல்லுறப்ப மட்டும் மண்டைய ஆட்டிட்டு கிடைச்ச கேப்ல நீ பீச், ரெஸ்ட்ராண்ட்னு கிளம்புறது உன்னோட பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கிடும்” என்றான் அக்கறையுடன்.

அவனது அக்கறையில் மனம் நெகிழ்ந்தவள் அவன் கரங்களைப் பற்றி தோளில் சாய்ந்து கொண்டாள்.

“நீ இருக்குறப்ப என்னை யாராலயும் எதுவும் பண்ண முடியாது அபி” என்று உரைத்துவிட்டு அவன் கன்னத்தில் முத்தமிட அபிமன்யூ புன்னகைத்தான்.

“ஓகே ரிப்போர்ட்டர் மேடம்… உங்க வேலை எந்த லெவல்ல இருக்கு?” என்று பேச்சை மாற்றவும் ஸ்ராவணி விலகிக் கொண்டாள்.

“தெரிஞ்சு என்ன பண்ணப்போற? எப்பிடியும் நீ உன் முடிவை மாத்திக்க போறது இல்ல… அப்புறம் என்னடா கேள்வி?” என்று முகத்தைச் சுருக்கிக் கொண்டாள் அவள்.

“புராகிரசனை தெரிஞ்சுக்கிறதுக்காக கேட்டேன்… நீ சொல்லவே இல்லனாலும் எனக்கு எல்லா விசயமும் தெரிஞ்சிடும் பேபி” என்றான் அபிமன்யூ.

கூடவே “சில விசயங்களை நான் என்னோட ஸ்டைல்ல ஹேண்டில் பண்ணுறது தான் வழக்கம் வனி… முக்தி ஃபவுண்டேசனையும் அப்பிடி தான் ஹேண்டில் பண்ணப்போறேன்… நீ இதுக்காக என் மேல வருத்தப்பட்டாலும் நோ யூஸ்” என்று தோளைக் குலுக்கியவனின் பேச்சில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள் ஸ்ராவணி.

வழக்கமாக அலுவல் சம்பந்தப்பட்ட எந்த விசயமாயினும் அதை குடும்பத்தினரிடம் பகிரும் பழக்கம் அபிமன்யூவுக்குக் கிடையாது. முக்தி ஃபவுண்டேசனின் விசயத்தில் அவன் என்ன செய்ய காத்திருக்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை! எனவே இனிமேல் ஸ்ராவணியால் முடிந்தது அபிமன்யூவின் மூளை நேர்வழியில் யோசித்து முக்திக்கு முடிவு கட்டவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பது மட்டுமே!

மழை வரும்☔☔☔