🎵 இசை 12 🎶

“ஒரு பொண்ணுனா நாலு பேசிக் குவாலிபிகேசன் இருக்கணும்னு என் அம்மா வீட்டு சொந்தக்காரங்க பேசி கேள்விப்பட்டிருக்கேன்… அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ப்ளா ப்ளா ப்ளா… ஆனா இந்த நாலு குவாலிபிகேசனால பொண்ணுங்களுக்கு கிடைச்ச நன்மை தான் என்ன? என் கண்ணுக்கு அப்பிடி எந்த நன்மையும் தெரியலப்பா… அதுக்குப் பதிலா தைரியம், தன்னம்பிக்கை, நிமிர்வு, சுயமரியாதை இந்த நாலையும் கத்துக் குடுத்தா அது பொண்ணுங்க தன்னோட வாழ்க்கைல சந்திக்கிற பிரச்சனைகளை ஃபேஸ் பண்ணவாச்சும் உதவும்… Any how, being tame does not mean being feminine.

                                                                                                                                                                –சந்தியா

கே.கே.வில்லா…

உறங்கி கொண்டிருந்த அனுபமா மீது ஒரு கண் வைத்தபடி தங்களின் உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பிரதியுஷா. மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் கொடுத்த மருந்துகளின் விளைவால் அனுபமா உறங்கிவிட நீலகண்டனிடம் மறுநாள் காலையில் விமான பயணச்சீட்டுகளை ஏற்பாடு செய்யுமாறு பிடிவாதமாக உரைத்த பிரதியுஷா யாருடைய பேச்சையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

வைஜெயந்தியும் விக்ரமும் எவ்வளவோ சமாதானம் செய்தார்கள். ஆனால் அவள் கேட்க வேண்டுமே! இந்த விசயத்தில் நீலகண்டனே பிரதியுஷாவின் பிடிவாதத்தின் முன்னே தோற்றுப்போனார்.

இவ்வளவு நிகழ்வுகளையும் பார்த்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்த பத்மஹாசினிக்கு பிரதியுஷாவின் பிடிவாதம் சரியா தவறா என்பதை அனுமானிக்க முடியாத நிலை.

அன்னையின் அறைக்குள் நுழைந்த ஆதித்யனும் ஆதவனும் அவரருகே சென்று அமர்ந்துகொண்டு என்னென்னவோ பேசி அவரைச் சிரிக்கவைக்க முயல அவரோ யோசனைவயப்பட்டவராக அமைதி காத்தார்.

ஆதவன் என்ன செய்வது என்று கைவிரித்த போது “அந்தப் பொண்ணுக்கு நம்ம மேல எவ்ளோ வெறுப்பு?” மெதுவாகப் பேசினார் பத்மஹாசினி.

இரு மகன்களும் முகம் சுருக்கி அவரைப் பார்க்க அவரோ “எனக்குக் கதிர் மேலயும் வசுந்தரா மேலயும் இருந்த வருத்தத்தை சொல்லி சொல்லியே உங்க மனசுல அவங்க கெட்டவங்கங்கிற எண்ணத்தை உருவாக்கிட்டேன் போல” என்று வருத்தமாகப் பேசியவர்

“அந்தப் பொண்ணு சொன்னதுல ஒரு உண்மை இருக்கு… ஈடன் எக்கேடு கெட்டாலும் அவளுக்குக் கவலை இல்ல… அவளுக்கும் நம்மள பிடிக்காது… ஆனாலும் நீலகண்டன் சொன்னதுக்காக அவ இங்க வந்திருக்கா, ஏன்னா கதிர் மேல அவளுக்கு இருக்குற பாசம் அவளை வர வச்சிருக்கு” என்றார்.

“மா நீங்க அவளுக்குச் சப்போர்ட் பண்ணுறீங்களா?” ஆதித்யன் ஆச்சரியத்துடன் கேட்க

“இல்ல ஆதி… உங்கப்பா என்னை வேண்டானு ஒதுக்குனப்போ எனக்கு உங்க ரெண்டு பேரைத் தவிர வேற எதுவும் கண்ணுக்குத் தெரியல… ஈடனை நான் ஒரு பொருட்டாவே நினைக்கல… ஆனா என் வசி மாமா ஈடனை உயிரா நினைச்சவர்… அவருக்காக நான் ஈடன்ல ரொம்ப நாளுக்கு அப்புறம் நுழைஞ்சேன்… இன்னைக்கு கதிருக்காக பிரதியுஷா வந்திருக்கா… அவ்ளோ தான்… அவ சொன்ன மாதிரியே அவளுக்கு ஈடன் மேலயோ நம்ம மேலயோ எந்த அபிமானமும் இல்ல… அந்த அனு சின்னப்பொண்ணு… அவளை கொஞ்சம் கவனமா பாத்திருக்கணும்… தப்பு பண்ணீட்டோம்… அதோட விளைவு ஈடன் நம்ம கையை விட்டு போயிடும் போலயே!” என்றார் வருத்தத்துடன்.

ஆதவன் அன்னையின் கரத்தைப் பற்றி அழுத்தியவன் “வருத்தப்படாதீங்க மாம்… ஆக்சுவலி அந்தப் பொண்ணு டாக்டர் இருக்குறப்போவே கழுத்தை கையை தடவிட்டே இருந்தா… நான் தான் கண்டுக்காம விட்டுட்டேன்… உங்களுக்கே தெரியும்ல, அவரை மாதிரியே எங்க ரெண்டு பேருக்கும் குளோரின் ரேஷ் வரும்னு… அதே போல தான் அவளுக்கும் வந்திருக்கும், சரியாயிடும்னு நினைச்சேன்… அவ ரூம்குள்ள போய் அடைஞ்சத நான் கவனிக்கலம்மா” என்றான்.

இத்தனைக்கும் ஆதித்யன் வாயைத் திறக்கவே இல்லை. பத்மஹாசினி அவனது இறுகிய முகத்தைக் கண்டவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சட்டென எழுந்தவர் “நான் போய் அவ கிட்ட பேசுறேன்” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

ஆதித்யன் மறுக்கும் முன்னர் அவனைத் தடுத்த ஆதவன் “நானும் போய் பாத்துட்டு வர்றேன் ஆதி… இதுல மேஜர் ஃபால்ட் என்னோடது தான்” என்று அவர் பின்னே சென்றான்.

அங்கே பிரதியுஷா அனைத்தையும் எடுத்து வைத்தவள் அறைவாயிலில் நிழலாடவும் யாரென பார்த்தவள் பத்மஹாசினியையும் ஆதவனையும் கண்டதும் என்ன பேசவென தெரியாது விழித்தாள்.

“கொஞ்சம் வெளிய வர்றீயா? உன் கிட்ட நான் பேசணும்”

அறைக்கதவைச் சாத்திவிட்டு இருவரின் பின்னே சென்றவள் அங்கே கிடந்த சோபாவில் அமர்ந்தவர் முன்னே நின்றாள்.

“உக்காரு”

“பரவால்ல… நீங்க சொல்லுங்க”

ஆதவன் அன்னையை அமைதி காக்க சொல்லிவிட்டு “நடந்த இன்சிடெண்ட்ல என்னோட தப்பு தான் அதிகம் உஷா… ஐ அம் ரியலி சாரி” என்று அமைதியாக மன்னிப்பு கேட்கவும் பிரதியுஷா ஆச்சரியத்துடன் கண்களை விரித்தாள்.

See More  நிறம் மாறும் வானம் -3

இரண்டு தினங்கள் காட்டிய அலட்சியத்திற்கு அந்த மன்னிப்பு மருந்து போடுவது போல இருந்தது. இருப்பினும் இன்னொருவனைத் தேடியது அவளது விழிகள். அவன் வர வாய்ப்பில்லை என்றது பிரதியுஷாவின் மனசாட்சி.

அவளை அதிகநேரம் யோசிக்கவிடாது பத்மஹாசினி பேச்சை ஆரம்பித்தார்.

“உங்களை அலட்சியப்படுத்தணும்னு இங்க வரச் சொல்லல… பழைய விசயத்த நியாபகம் வச்சு உங்கள காயப்படுத்தக்கூடாதுனு தான் நான் ஒதுங்கிப்போனேன்… பாத்தும் பாக்காத மாதிரி கடந்தது கூட அதுக்காக தான்… நீ இங்க வந்ததுக்கு ரெண்டு காரணம் சொன்னல்ல… அதே மாதிரி நான் இப்போ உன் கிட்ட இறங்கி வந்து பேசுறதுக்கும் ரெண்டு காரணம் இருக்கு… ஒன்னு என்னோட மாமா ஆசையா உருவாக்குனா ஈடனை நான் கண் மூடுற வரைக்கும் காப்பாத்தணும்… இன்னொன்னு ஈடனை உயிரா நினைக்கிற என் மகன்களோட கனவு கலைஞ்சிடக் கூடாது… இனி உங்களை யாரும் மரியாதை குறைவா நடத்தமாட்டாங்க… இதுக்கு மேல இங்க இருக்குறதும் இந்தியாக்குக் கிளம்புறதும் உன்னோட இஷ்டம்” என்றார் அவர்.

பிரதியுஷா அவர் இறங்கி வந்து பேசியதில் திகைத்தவள் தன்னைப் போல அவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள். அத்துடன் கதிர்காமனின் குடும்பத்தினரை வருந்த வைக்கும் எண்ணம் அவளுக்கும் இல்லை.

அச்சமயம் நீலகண்டன் அங்கே வர அவரிடம் “ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிருந்தீங்கனா அத கேன்சல் பண்ணீடுங்க நீல் அங்கிள்” என்று சொல்ல பத்மஹாசினியின் முகத்தில் அலைக்கழிப்பு மறைந்து நிம்மதி பிறந்தது.

ஆதவன் அவளை நோக்கி புன்னகைக்க நீலகண்டனோ “உன் மனசை மாத்திக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் உஷாம்மா” என்றார் நெகிழ்ச்சியுடன்.

“தேங்க்ஸ் எதுக்கு அங்கிள்? ஈடன் மேல எனக்கு எந்த அக்கறையும் இல்ல தான்…. ஆனா வினோத் மாமா கட்டிக் காப்பாத்துன பிசினஸ் அவரோட குடும்பத்த விட்டுப் போறதுல எனக்கு இஷ்டமில்ல… அதோட அனுவுக்கும் இங்க யாரோட அன்பும் கிடைக்காதுனு புரிஞ்சிருக்கும்… அதனால அவளும் அத எதிர்பாக்க மாட்டா… வந்த வேலை முடிஞ்சதும் என்னோட அவளும் கிளம்பிடுவா… ஆனா அது வரைக்கும் கதிர்காமனோட மகளா அவளுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கும்னு நம்புறேன்… எனக்கு அது போதும் அங்கிள்” என்றாள் பிரதியுஷா.

பத்மஹாசினி முகம் மாற அதைக் கவனித்தவள் “என் வசு அத்தை அன்புங்கிறது மழை மாதிரினு சொல்லுவாங்க… மழை எப்பிடி எல்லா நிலத்தையும் செழிப்பாக்குதோ அதே மாதிரி அன்பு எல்லாரோட மனசையும் வளமாக்கும்ங்கிறது அவங்களோட நம்பிக்கை… ஆனா வளமான நிலத்துல மழை பெய்ஞ்சா தான் பிரயோஜனம்… அலட்சியப்படுத்துற மனுசங்க மேல வைக்கிற அன்பு பாலைவனத்துல பெய்யுற மழை மாதிரி… அதால எந்த பிரயோஜனமும் இல்ல… இது அனுவுக்குப் புரிஞ்சிருக்கும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

நீலகண்டன் கண்ணாடியைக் கழற்றி கண்களை அழுந்த துடைத்துக்கொண்டவர் “இனிமே நிம்மதியா ஷேர் ட்ரான்ஸ்பர் வேலைய கவனிப்போம் தம்பி” என்றார் ஆதவனிடம்.

ஆதவன் வெறுமெனே தலையாட்டியவன் “நீங்க ரொம்ப யோசிக்காதீங்கம்மா… போய் ரெஸ்ட் எடுங்க… ஆதி கிட்ட நான் விசயத்த சொல்லிடுறேன்” என்றான். மூவரும் அங்கிருந்து கீழ்த்தளத்திற்கு செல்ல ஆதித்யன் அவர்களுக்காக காத்திருந்தவன் “என்ன சொல்லுறா அந்த மகாராணி?” என்று எள்ளல் கலந்த கடுப்புடன் கேட்டான்.

பத்மஹாசினி ஆயாசத்துடன் ஆதவனை நோக்க அவனோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல கண் காட்டிவிட்டு ஆதித்யனின் தோளில் கை போட்டு அவனை வெளியே அழைத்துச் சென்றான்.

இருவரும் சிறிய நீச்சல்குளம் அருகே வரவும் ஆதித்யன் தரையை உதைத்து “இந்த ஸ்விம்மிங்பூல் தான் எல்லாத்துக்கும் காரணம்” என்று முகத்தை உர்ரென்று வைத்துக்கொள்ள ஆதவன் அடக்கமாட்டாமல் நகைக்க ஆரம்பித்தான்.

“சிரிக்காத ஆது… நானே அவ இங்க இருந்து போயிட்டானா ஈடன் என்னாகும்னு தெரியாம டென்சன்ல இருக்கேன்”

“ஓ.கே ப்ரோ… முதல்ல டென்சனை விடு… உஷா இங்க இருந்து போகமாட்டேன்னு சொல்லிட்டா… ஐ மீன் ஷேர் ட்ரான்ஸ்பர் நடந்து ஈடன் முழுக்க நமக்கு சொந்தமாகுற வரைக்கும் அவளும் அனுவும் இங்க தான் இருப்பாங்க… இப்போ தான் அம்மா கிட்ட சொன்னா”

ஆதித்யன் கோபம் மட்டுப்பட யோசனையில் புருவம் சுழித்தான்.

“இதுக்கு அவ என்ன கண்டிசன் போட்டா?”

“அவ எந்த கண்டிசனும் போடல… அம்மா தான் இனிமே அவங்கள யாரும் அலட்சியப்படுத்தவோ மரியாதைக்குறைவோ நடத்தவோ மாட்டாங்கனு சொன்னாங்க… நானும் சாரி கேட்டுட்டேன்” என்று ஆதவன் சாதாரணமாகச் சொல்ல ஆதித்யன் அவனை ஊடுருவிப் பார்த்தான்.

See More  🌊 அலை 7 🌊

அந்தப் பார்வையின் அர்த்தம் நீ ஏன் மன்னிப்பு கேட்டாய் என்பதே. அதைப் புரிந்துகொண்ட ஆதவன் தான் கொஞ்சம் அனுபமாவைக் கவனித்திருந்தால் அப்போதே மருத்துவரை அழைத்து அவளுக்குச் சிகிச்சை அளித்திருக்கலாம்; தனது கவனக்குறைவே இதற்கு அடிப்படை என்று சொல்லவும் மௌனமாக அதைக் கேட்டுக்கொண்டான் ஆதித்யன்.

யாரிடமும் பணிந்து போகாத நிமிர்வான என் அன்னையை இறங்கி போய் பேசவைத்துவிட்டாள்; எனது உடன்பிறந்தவனை மன்னிப்பு கேட்க வைத்துவிட்டாள். புத்திசாலி தான்!

ஏளனமாக நினைத்தவன் “அவ கிட்ட மன்னிப்பு கேக்குறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும் ஆது… அவ ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி சாந்தசொரூபி இல்ல… அவளும் அனுவும் ஏர்போர்ட்ல என்ன பண்ணுனாங்க தெரியுமா?” என்று விமானநிலையத்தில் நடந்ததை விளக்கினான்.

அதைக் கேட்டதும் ஆதவனின் கண்கள் கூர்மையுற உதடுகளோ “இன்ட்ரெஸ்டிங்” என்று முணுமுணுத்தது. அவனும் தனக்கும் பிரதியுஷாவுக்கும் நடந்த முதல் சந்திப்பை விளக்க ஆதித்யன் போலியாய் மெச்சி புருவம் உயர்த்தினான்.

“இதுல இருந்தே தெரியலயா, இங்க வந்ததுல இருந்து அமைதியா நடந்துகிட்டது எல்லாம் ட்ராமா… அவ சரியான திமிர் பிடிச்சவடா… எனி ஹவ், சீக்கிரம் ஹென்றி கிட்ட எல்லா ஃபார்மாலிட்டியையும் முடிக்கச் சொல்லணும்” என்று தனது காரியத்தில் கண்ணாக கூறினான்.

கூடவே “உன் கண்ல அவளைப் பாத்ததும் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரியுதே, அதை கொஞ்சம் ஆஃப் பண்ணு… இல்லனா அவளே அந்த பல்பை கல்லெறிஞ்சு உடைச்சிடுவா” என்றான் பூடகமாக.

ஆதவன் அதைக் கேட்டு நமட்டுச்சிரிப்பு சிரிக்கும் போதே ஜெனோலின் வந்துவிட இனி ஆதித்யனின் கவனம் தன் மீது திரும்ப வாய்ப்பில்லை என அறிந்து “ஓகே ப்ரோ… நான் கிளம்புறேன்… நீயும் ஜெனோவுமா சேர்ந்து மிச்ச வேலைய முடிங்க” என்று கிண்டல் செய்தவாறு கிளம்பினான்.

ஜெனோலின் வந்ததும் பூ அலங்காரம் பற்றி பேச ஆரம்பித்தவள் அதை அவளது உதவியாளினி ரோசி வசம் ஒப்படைத்துவிட்டு மேற்பார்வை பார்க்க ஆரம்பித்தாள்.

ஆதித்யன் உதவுகிறேன் என்று செய்த குறும்பில் கண்களைச் சுருக்கியவள் “ஏ.கே ப்ளீஸ்” என்று கெஞ்ச

“நான் உனக்கு ஹெல்ப் தான் பண்ணுறேன் ஜெனோ” என்றான் அவன் கண்களில் விசமம் மின்ன.

“எனக்கு உன்னோட ஹெல்ப் இப்போதைக்கு வேண்டாம்… நீ கிளம்பு” என்றவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டவன் “நோ வே” என்று பிடிவாதம் பிடிக்க ஜெனோலின் அவனைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தவள் அவனை அருகில் கிடந்த நாற்காலியில் அமர வைத்தாள்.

அவனது வலக்கரத்தின் ஆட்காட்டிவிரலை உதட்டில் வைத்துவிட்டு “நான் வேலைய முடிக்கிற வரைக்கும் இந்த இடத்த விட்டு நகரக்கூடாது” என்று கட்டளையிட

“யூ ஆர் ட்ரீட்டிங் மீ லைக் அ சைல்ட் ஜெனோ” என்று குறைபட்டான் ஆதித்யன்.

“பிகாஸ் யூ ஆர் பிஹேவிங் லைக் அ சைல்ட் ஏ.கே” என்று அசராமல் பதிலளித்தாள் அவனது காதலி.

 இருவரது செல்லச்சண்டையின் போது அங்கே வந்து சேர்ந்தாள் பிரதியுஷா. பத்மஹாசினி அளித்த உறுதியில் மனம் சற்று அமைதியுற அனுபமா உறங்குவதைக் கண்ணுற்று விட்டு புல்வெளியில் உலாவலாம் என வந்தவளின் பார்வையில் மலர் அலங்காரம் படவும் அவளது விழிகள் ஜெனோலின் ஜோன்சை தேடியது.

அவள் ஆதித்யனிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டவள் சற்றே சங்கடத்துடன் அவளை நெருங்கினாள்.

“ஹாய் ஜெனோ! ஆர்க்கிட்னா அனுவுக்கு அலர்ஜினு சொன்னேனே… அப்பிடி இருந்தும் யார் அதை வச்சு டெகரேட் பண்ணுனது?” என்று கேட்டபடி வந்தாள் பிரதியுஷா.

அவளது குரலில் தங்கள் செல்லச்சண்டையிலிருந்து வெளியே வந்தனர் ஆதித்யனும் ஜெனோலினும்.

பிரதியுஷா காலையில் பூ அலங்காரம் பற்றி பேசியபோதே ஆர்க்கிட் வேண்டாம் என்று சொன்னதை நினைவு கூர்ந்துவிட்டு

“சாரி மேம்… கடைசி நேரத்துல நடந்த கன்பியூசன்… ஆக்சுவலி நான் ரோசி கிட்ட க்ரீம் கலர் லில்லி வச்சு தான் டெகரேட் பண்ண சொன்னேன்… ஐ அம் ரியலி சாரி” என்று தயக்கத்துடன் பதிலளித்தாள் ஜெனோலின் ஜோன்ஸ்.

பரவாயில்லை என்று சொல்ல பிரதியுஷா வாயெடுத்த தருணத்தில் “நீ சாரி கேக்கவேண்டிய அவசியமில்ல ஜெனோ… முக்கியமா இவ கிட்ட கேக்கவே கூடாது” என்று சொல்லிவிட்டு பிரதியுஷாவை அலட்சியம் வழியும் விழிகளால் வழக்கம் போல துரும்பை பார்ப்பது போல ஏறிட்டான் ஆதித்யன்.

அன்னையும் தமையனும் அவளிடம் இறங்கிப் போய் பேசியதே பிடிக்கவில்லை! இதில் உயிருக்கு உயிரான காதலியை மட்டும் மன்னிப்பு கேட்கவிடுவானா அவன்!

பிரதியுஷா ஆதித்யனின் பேச்சில் கடுப்புடன் முகம் திருப்ப போனவள் ஜெனோலின் கவனிப்பதைக் கண்ணுற்றுவிட்டு தன்னைச் சமனப்படுத்திக் கொண்டாள்.

ஆனாலும் அப்படியே விட மனமின்றி “என் கிட்ட கேட்டு தான் ஆகணும் மிஸ்டர் ஆதித்யன்… ஏன்னா இந்த ஷேரிட்டி ஈவென்ட் உங்களுக்கு மட்டும் முக்கியமானது இல்ல… எனக்கும் தான்… இங்க எனக்கோ அனுவுக்கோ கம்பர்டபிளான சிச்சுவேசன் அமையலனா இடத்தை காலி பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்” என்று அவனுக்குச் சற்றும் குறையாத அலட்சியத்துடன் பதிலளித்தாள் அவள்.

See More  5 - லாக் டவுன்

அப்போது தான் அவர்கள் இருவரின் மரியாதைக்குக் குந்தகம் வராது என பத்மஹாசினி அவளிடம் கூறியது ஆதித்யனுக்கு நியாபகம் வந்தது.

“ஆ ஊனா இத சொல்லி செக் வைக்கிற நீ… எத்தனை நாளுக்குனு நானும் பாக்குறேன்” என கடுப்புடன் முணுமுணுத்த ஆதித்யன் பிரதியுஷாவை நோக்கி கண்களில் ஆர்வம் மின்ன வந்து கொண்டிருந்த ஆதவனைக் கண்டதும் வலுக்கட்டாயமாகப் புன்னகைத்து வைத்தான்.

அவனது புன்னகையைக் கண்டதும் துணுக்குற்ற பிரதியுஷா அதன் காரணம் ஆதவன் என அறிந்ததும் அமைதியானாள்.

ஆதவன் நேரே அவளிடம் வந்தவன் பிரச்சனை முடிந்த நிம்மதியில் வழக்கம் போல சீண்ட ஆரம்பித்தான்.

 “இங்க என்ன பண்ணுறீங்க என்னோட ஒய்ஃப் ப்ளேஸ்ல இருக்குறவங்களே!”

ஆங்கிலத்தில் அவன் சொல்லக் கேட்டதும் பிரதியுஷா வழக்கம் போல திருதிருவென விழிக்க ஜெனோலினோ குறும்பு மின்னும் கண்களால் “ஆது ஆர் யூ சீரியஸ்?” என்று கேட்டுப் புன்னகைக்க ஆதித்யனோ காது கேட்காதவனைப் போல ரோசி செய்த மலர் அலங்காரத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.

பிரதியுஷா ஜெனோலினிடம் “ஹீ இஸ் கிட்டிங் ஜெனோ” என்றாள் அவசரமாக.

ஆனால் ஆதவனின் நமட்டுச்சிரிப்பில் சத்தியமாக தனது பேச்சை ஜெனோலின் நம்பியிருக்க மாட்டாள் என்று நினைத்தவள் “டோன்ட் கால் மீ லைக் தட்… ஒழுங்கா என்னோட நேமை சொல்லிக் கூப்பிடு” என்றாள்.

ஆதவன் அவளின் சுருங்கிய நாசியை நிமிண்டிவிட்டு “ஸ்யூர் பேபி” என்று சொல்ல அவனது கரத்தைத் தட்டிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து ஓடி மறைந்தாள்.

அவள் சென்றதும் “இனிமே நீ உன்னோட வேலைய கவனிக்கலாம் ஜெனோ” என்றான் ஆதவன்.

அவளோ “நீயும் தான் ஆது” என்றாள் கண்கள் கேலியில் பளபளக்க.

ஆதித்யன் அதைக் கவனித்துவிட்டு “அவன் ஏதோ ஸ்டாண்ட்- அப்ல மீட் பண்ணுனத வச்சு கிண்டல் பண்ணுறான் ஜெனோ… டோன்ட் டேக் இட் சீரியஸ்” என்று இருவருக்கும் குட்டு வைத்தவன் ஷேரிட்டி வேலைகளில் ஜெனோலினுக்கு உதவுவதில் மும்முரமானான்.

இரவு மலர் அலங்காரம் முடிவுற்றது. அன்றைய இரவுணவின் போது வைஜெயந்தி பிரதியுஷாவிடம் மன்னிப்பு வேண்ட அவளும் பதிலுக்கு மன்னிப்பு கேட்டாள்.

பத்மஹாசினி அப்போது ஒரு செய்தியை அறிவித்தார். நாளைய ஷேரிட்டி நிகழ்வின் போது அனுபமாவை கதிர்காமனின் மூன்றாவது மகள் என டோனர்கள் முன்னிலையில் அறிவிக்கவிருப்பதே அச்செய்தி.

திடீரென ஏன் இந்த முடிவு என சந்திரமோகன் அதிர இரு பெண்களையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்த போதே எடுத்த முடிவு தான் என்று கூறினார் நீலகண்டன். அதை பத்மஹாசினியும் ஒப்புக்கொள்ள அவரது இரு மகன்களும் கருத்து எதுவும் கூறவில்லை.

அனுபமா பிரதியுஷா அணிந்திருந்த பட்டியாலாவின் ஷார்ட் டாப் நுனியை இழுத்தவள் “அண்ணி எனக்கு எம்பாரசிங்கா இருக்கும்… வேண்டாம் அண்ணி” என்று தயங்க

“இதுல எம்பாரசிங் ஆக என்ன இருக்கு? உன் அப்பா தானே அவர்… இப்போ அனவுன்ஸ் பண்ணுனா தான் சரியா இருக்கும்… அதுவுமில்லாம ஷேர் அலாட்மெண்ட் முடிஞ்சதும் எப்பிடியும் தெரிய போற விசயம் தான்… அதனால நீ பயப்படவேண்டாம்” என்ற பத்மஹாசினியின் குரலில் தெறித்த அழுத்தம் அனைவரையும் வாயை மூடச்செய்துவிட்டது.

சொன்னது போலவே மறுநாள் ஷேரிட்டி நிகழ்வு ஆரம்பித்தது. வந்திருந்த டோனர்கள் முன்னிலையில் அனுபமா ‘அனுபமா கதிர்காமன்’ என அறிமுகப்படுத்தப்பட்டாள்.

பிரதியுஷாவுக்கு அதில் சந்தோசம் தான். அடுத்து ஏலம் எடுக்கும் நிகழ்வில் பழம்பெரும் பொருட்கள் ஏலம் விடப்பட அந்தத் தொகை ஷேரிட்டியின் மேனேஜிங் ட்ரஸ்டி ஆலன் ஜோன்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த ஆலன் ஜோன்ஸ் மற்ற யாரிடமும் பேசாதிருந்தவர் ஜெனோலினிடம் மட்டும் இன்முகத்துடன் பேசினார். இருவருமே ஆலிவர் ஜோன்சின் தூரத்து உறவினர்கள் என்ற முறையில் உரையாடினர்.

அடுத்து ஆலன் ஜோன்ஸ் பேசியது சந்திரமோகனிடம் மட்டுமே. மற்றபடி பத்மஹாசினி மற்றும் அவரது புத்திரச்செல்வங்களிடம் தாமரை இலை தண்ணீரைப் போல நடந்துகொண்டார் அம்மனிதர்.

பிரதியுஷாவை பரந்தாமனின் மகள் என சந்திரமோகன் அறிமுகம் செய்துவைத்ததில் சற்றே அதிர்ந்தவர் பின்னர் புன்னகையுடன் கைகுலுக்கினார். அப்புன்னகையில் சந்தோசம் இல்லை என்பதை பிரதியுஷா புரிந்துகொண்டாலும் சபை நாகரிகத்திற்காக பேசிவைத்தாள்.

இவ்வாறாக கே.கே.வில்லாவில் நிகழ்ந்த கசப்பான சம்பவமும், ஷேரிட்டி நிகழ்வும் இறுதியில் நல்ல விதமான முடிவுடன் நடந்தேறியது.

இசை ஒலிக்கும்🎵🎶🎵